Published:Updated:

சாமானியனை ஏமாற்றிய பட்ஜெட்!

சாமானியனை ஏமாற்றிய பட்ஜெட்!

சாமானியனை ஏமாற்றிய பட்ஜெட்!

சாமானியனை ஏமாற்றிய பட்ஜெட்!

Published:Updated:
சாமானியனை ஏமாற்றிய பட்ஜெட்!
##~##

பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஸ்டார் நடிகர் ஒருவரின் திரைப்படம், தியேட்டருக்கு வந்து  ஃப்ளாப் ஆவதைப்போல நடந்து முடிந்திருக்கிறது மத்திய பட்ஜெட்! ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும். பொருளாதார மந்தநிலை ஒருபக்கம் நிலவினாலும், ஒரு வருடத்தில் பொதுத் தேர்தல் வருவதால் சாமானிய மக்களை சந்தோஷப்படுத்தப் பல அறிவிப்புகள் வரும் என பல எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் பொய்யாக்கிவிட்டது இந்த பட்ஜெட். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொருளாதார ஆய்வறிக்கை!    

பிப்ரவரி 27, 2013-ல் சமர்ப்பிக்கப்பட்ட 2012-13-ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை, இந்த நிதி ஆண்டில் இந்தியா 5 சதவிகித வளர்ச்சி அடையும் என தெரிவித்தது. 2012-13 பட்ஜெட்டில் 7 சதவிகிதத்திற்கு மேல் வளர்ச்சி பெறும் என்ற எதிர்பார்ப்புடன் ஆரம்பித்து 5 சதவிகித வளர்ச்சியைத்தான் அடையும் என்ற செய்தி நம் பொருளாதாரச் சிக்கலை வெளிச்சம் போட்டு காட்டியது.

இந்த வருடம் நுகர்வுத் தேவை, முதலீட்டுத் தேவை ஆகியவை குறைவாக இருந்ததற்கு காரணம், பணஅளிப்பை குறைப்பதற்காக அதிக வட்டி விகிதம் வைத்திருக்கும் ஆர்.பி.ஐ.தான் காரணம் என்று பழி போடுகிறது இவ்வாய்வறிக்கை. மேலும், உலகப் பொருளாதார மந்தநிலையும், அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கு வதில் உள்ள சிக்கலும் காரணங்களாகக் காட்டியுள்ளன.

சாமானியனை ஏமாற்றிய பட்ஜெட்!

சேமிப்புக் குறைந்து, குறிப்பாக நிதிச் சார்ந்த சொத்து (financial asset) சேமிப்பு குறைந்திருப்பதை இவ்வாய்வறிக்கை சுட்டிக்காட்டி, தங்கம் போன்ற ஃபிஸிக்கல் சொத்துக்களில் சேமிப்பு அதிகரிப்பதைக்  காட்டுகிறது. எனவே, அதிக வட்டி விகிதம் நிலவினாலும், மக்கள் நிதி ஆவணச் சொத்துக்களிலிருந்து பெறும் உண்மையான வட்டி/வருவாய் (Real return)  குறைவாக இருப்பதாகவே கருதுகின்றனர். இதனால் நாட்டில் முதலீடு படிப்படியாக குறைந்து வந்திருக்கிறது. முதலீட்டை உயர்த்துவது நம் முதல் கடமை என்கிறது பொருளாதார ஆய்வறிக்கை.

சாமானியனை ஏமாற்றிய பட்ஜெட்!

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 5.2 சதவிகிதமாக இருப்பதினால், சேமிப்பின் பெரும்பகுதி அரசுக் கடனாகச் செல்வதாலும், முதலீட்டுத் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவே நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.

இந்தியாவில் வேலை வாய்ப்பு உயர்ந்தாலும், அந்த வேலை வாய்ப்பில் பெரும்பகுதி குறைந்த வருமானம் தரக்கூடிய திறனில்லா வேலை வாய்ப்புகளாகவே உள்ளன. எனவே, நாட்டில் இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

பொருளாதார மந்தநிலையில் நம் ஏற்றுமதி குறைந்து, அதேநேரத்தில் இறக்குமதி குறையாமல் இருப்பதினால், நடப்புக் கணக்கு பற்றாக்குறை உயர்ந்துகொண்டே போவதும் நம் முன் உள்ள மிகப் பெரிய பொருளாதாரப் பிரச்னை என்று பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட் டுள்ளது. இது மட்டுமல்லாமல், நேரடி வரி விதிப்பு முறை (டி.டி.சி), சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி), உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்படவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட் 2013-14

சிதம்பரத்தின் பட்ஜெட் உரை மிகவும் சுருக்கமானதாக அமைந்தது. பொருளாதாரத்தைப் பற்றி பெரிய ஆராய்ச்சி எல்லாம் அதில் இல்லை. 'பொருளாதார வளர்ச்சியும் அதனால் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து வளர்ச்சியில் பங்குகொள்ள செய்வ தும், சுற்றுச்சூழலை குலைக்காத வளர்ச்சியும் நம் முக்கிய குறிக்கோள்’ என்று கூறி, 12-வது திட்ட செலவினை 96 சதவிகிதமாக குறைத்துள்ளதாக கூறினார் நம் நிதி அமைச்சர். ஆகவே, ஐந்தாண்டுத் திட்டங்கள் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தாது என்ற உறுதியான முடிவுடன்தான் பட்ஜெட் 2013-14 வரையறுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பதும், பெரிய அளவில் வரி வருவாயைத் திரட்ட முடியாத சூழலில், செலவுகளைக் குறைத்து, குறிப்பாக திட்டச் செலவுகளை குறைப்பதுதான் ஒரே வழி என்பது பட்ஜெட் கணக்கைப் பார்த்தால் தெரிகிறது.

சாமானியனை ஏமாற்றிய பட்ஜெட்!
சாமானியனை ஏமாற்றிய பட்ஜெட்!

நிதி ஆதாரங்களைத் திரட்டுவது!

அரசின் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதில் மத்திய அரசு பெரிய அளவில் முனைப்பு காட்டவில்லை. 2012-13-ல் மொத்த நிதி வருவாயில் 29 சதவிகிதமாக இருந்த அரசு கடன், 2013-14-ல் 27 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே, பெரிய அளவில் அரசு தன் சொந்த வரி மற்றும் வரி அல்லாத வருவாய்களை ஈட்ட முயற்சிக்கவில்லை.  

ரூ. 1 கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் மீது கூடுதல் சர்சார்ஜ் விதிப்பு, செல்போன்,  குளிரூட்டப்பட்ட உணவகம், ஆட்டோமொபைல் இறக்குமதி என பல பொருட்கள்/பணிகள் மீது வரி விகிதங்கள் உயர்த்தப்பட்டும்; சேவை வரி கட்டாத சிறு நிறுவனங்களுக்கு அபராதம் இல்லாமல் வரி கட்டத் திட்டம் என பல வரி பற்றிய அறிவிப்புகள் இருந்தாலும், 2013-14-ல் கூடுதலாக ரூ.18,000 கோடி மட்டுமே வரி வருவாய் வரும் என கணக்கிடப்பட்டுள்ளது. நிதி வருவாய் ஈட்டுவதில் அரசுக்கு உள்ள இயலாமையை இது காட்டுகிறது. ஜி.எஸ்.டி., டி.டி.சி. போன்ற வரி விதிப்பு முறைகளை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக இருப்பதாகத் தெரியவில்லை.

பொதுச் செலவுகள்!

திட்டச் செலவுகளைக் குறைப்பது மத்திய அரசுக்கு கைவந்த கலை. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் (2007-12) செலவுகள் 14 சதவிகிதம் குறைக்கப்பட்டது, அதனின் செயல்திறனை வெகுவாகப் பாதித்துள்ளது. இந்தத் திட்டச் செலவு குறைப்புகள் 12-வது திட்ட காலத்திலும் தொடர்கிறது.

பட்ஜெட் உரையில் துவக்கத்தில் 12-வது ஐந்தாண்டுத் திட்டச் செலவுகள் மிக அதிகமாகவே கணக்கிடப்பட்டதாகவும், அதனால்தான் 96 சத விகிதமாகக் குறைத்துள்ளதாகவும் சிதம்பரம் கூறினார்.

2012-13-ல் 5.2 லட்சம் கோடியிருந்த திட்டச் செலவுகள், திருத்திய மதிப்பீட்டில் ரூ. 4.2 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. 2013-14 திட்டச் செலவு ரூ. 5.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று நிதி அமைச்சர் கூறினாலும், 2013-14 கடைசியில்தான் திட்டச் செலவுகள் முழுமையாக செலவு செய்யப்பட்டதா என்று தெரியும். 2013-14-ல் மொத்தச் செலவில் திட்டச் செலவுகள் 21 சதவிகிதமாகக் குறைந்திருப்பது (கடந்த ஆண்டு 2012-13-ல் 22 சதவிகிதமாக இருந்தது!) பொருளாதார வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள்/முயற்சிகள் குறைவாக உள்ளதையே இது காட்டுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் இல்லாமல் நம் பொருளாதாரம் எவ்வாறு 6.1 - 6.7 சதவிகித வளர்ச்சியை 2013-14-ல் அடைய முடியும் என்கிற கேள்விக்குப் பதில் இல்லை.

கல்வி, சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு போன்ற துறைகளில் புதிய திட்டங்கள் இல்லை. விவசாயம், நீர் மேலாண்மை ஆகிய துறைகளில் அதிக நிதி ஒதுக்கீடு இருந்தாலும், இவற்றை செயல்படுத்துவதில் அரசு முனைப்புடன் இருக்குமா அல்லது செலவுகளைக் குறைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உணவுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், அரசின் திட்டமில்லாதச் செலவுகள் உயரும். அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதில் குழப்பங்கள் உண்டு. தமிழகம் போன்ற மாநிலங்கள் இதற்கு ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினைப் பெருக்கும் நோக்கத்தோடு திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடும், ஜவுளித் துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கும் டெல்லி-மும்பை, மும்பை-பெங்களூரு, பெங்களூரு-சென்னை, தொழில்தடங்கள் என பல திட்டங்கள் இருந்தாலும், இவை அனைத்தும் அடுத்த ஒரேவருடத்தில் நிறைவேற்றப்பட முடியாது. எனவே, அரசின் திட்டங்கள் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதாக இல்லை.

பற்றாக்குறை!

நிதி அமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் அறிவிப்புக்கு முன்னரே 2013-14-ல் நிதிப் பற்றாக்குறை நாட்டு உற்பத்தியில் 4.8 சதவிகிதமான இருப்பதுபோல் பட்ஜெட் வடிவமைக்கப்படும் என்று கூறினார். அதுபோலவே, பட்ஜெட் கணக்கும் காட்டப்பட்டுள்ளது. 2012-13 நிதிப் பற்றாக்குறை ரூ. 5.2 லட்சம் கோடி. ஆனால், 2013-14-ல் எதிர்பார்க்கப்பட்ட மொத்த உற்பத்தியில் 4.8 சதவிகிதம். நாம் ஏற்கெனவே அரசின் திட்டங்கள், வளர்ச்சியை ஏற்படுத்துவதாக இல்லை என்று கூறியிருந்தோம்.

எனவே, 2013-14-ல் நாட்டின் வளர்ச்சி குறைவாக இருந்தால், நிதிப் பற்றாக்குறை அதிகமாகவே இருக்கும். ஆகவே, பட்ஜெட் 2013-14 புதிய வரி விதிப்புகள் இல்லாமல் புதிய வளர்ச்சித் திட்டங்கள் இல்லாத, பொருளாதாரத்தில் சேமிப்பை, முதலீட்டை ஊக்குவிக்காத, ஒரு மந்தமான பட்ஜெட்டாக உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism