Published:Updated:

உங்கள் கணவர் / மனைவி அதிகம் செலவு செய்பவரா... அதை இப்படியும் மாற்றலாம்! 

உங்கள் கணவர் அல்லது மனைவி ஷாப்பிங் செய்வதில் கைகளைக் கட்டமுடியாதவர் எனில், சில வழிமுறைகளைப் பின்பற்றினால் அந்தப் பழக்கத்தை மாற்றிவிடலாம்.

செலவு
செலவு

தீபாவளி ஷாப்பிங் என்று கூறி, இரண்டு மாதங்களாக பர்சேஸ் பண்ணிக்கொண்டிருக்கிறார், ராமுவின் மனைவி. பணத்தை சிக்கனத்துடன் செலவுசெய்ய வேண்டும் என்ற கொள்கை உடைய ராமு, மனைவியின் செலவழிப்பைக் கண்டு மனக் குழப்பத்தில், விழி பிதுங்கியுள்ளார்.

Shopping
Shopping

இங்கே இப்படி என்றால், பிரியா வீட்டில் வேறு கதை, ஒன் ப்ளஸ் ஸ்மார்ட்போன் வாங்கி ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், ஆப்பிள் 11 மாடல் வாங்கப்போகிறேன் என்று ஒற்றைக் காலில் நிற்கும் கணவனை எப்படிச் சமாளிப்பது? என்ற குழப்பத்தில் உள்ளார். இவ்வாறு இணையின் அதீத செலவழிப்பால் பலரும் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

இது, பல குடும்பங்களில் மனக்கசப்பை ஏற்படுத்தி, மணமுறிவு வரை வந்துவிடுகிறது. இதைத் தொடக்கத்திலேயே பேசித்தீர்த்தால், மேலதிகப் பிரச்னைகள் வராமல் தடுக்கலாம். எனவே, செலவழிக்கும் முறையை மாற்றுவதற்கு சில டிப்ஸ்!    

online shopping
online shopping

முதலில், உங்கள் இணையுடன் பணப் புழக்கத்தைப் பற்றி பேசுங்கள், அவர்களின் கருத்துக்கு செவிமடுங்கள். அவர், தூண்டுதலால் செலவழிப்பவர் (Impulsive spender) என்று நீங்கள் கண்டுபிடித்தால், கத்தி கூப்பாடுபோடாதீர்கள்.

Vikatan

அவரைக் குற்றவாளி போல் பார்க்காமல், அன்புடன் நிலைமையை விளக்குங்கள். இதைவிட முக்கியம், அந்தப் பழக்கத்திற்கான காரணத்தை அறிதல், மனப்பதற்றம் உள்ளவர்கள் (Anxiety), தன்னம்பிக்கை குறைவாக உள்ளவர்கள், பாதுகாப்பின்மையை உணர்பவர்கள்கூட இவ்வாறு அதிகம் செலவழிக்கலாம்.

காரணத்தை அறிந்த பிறகு, ஒரே நாளில் உன்னை மாற்றுகிறேன் பார் என்று கூறி பிரச்னையை விலைக்கு வாங்காமல், பொறுமையுடன் இருவரும் கலந்தாலோசிப்பதே இதற்கான தீர்வு.

Credit card
Credit card

மாதாந்திர வரவு செலவுகளை இணையுடன் பகிருங்கள். இது, எழுத்து வடிவமாக இருத்தல் வேண்டும். இதன்மூலம் செலவுகள், முதலீடுகள், நீங்கலாக கையில் எவ்வளவு நிதி உள்ளது என்பதை அறிய முடியும். இதுவே உங்களுக்குள் ஒரு பொறுப்பை உருவாக்கும். நிதி இலக்கு இருப்பது அவசியம்.

ஆன்லைன் ஷாப்பிங்கில் விழாக்கால தள்ளுபடி: செய்வதும், செய்யக் கூடாததும்..! #CheckList

உதாரணமாக, சொந்த வீடு வாங்குவது, குழந்தையின் படிப்பு, எதிர்பாராத செலவுகள், மருத்துவச் செலவு, முதுமைக் கால செலவு போன்றவற்றுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது, அதிகம் செலவழிக்க நேர்ந்தால், குழந்தையின் படிப்பு கண்முன் வந்து நிற்கும், தங்களை மாற்றிக்கொள்வார்கள்.

பல குடும்பங்களில், கணவன் வங்கிக் கணக்கில் பணம் எடுத்தால், மனைவிக்கு குறுஞ்செய்தி வரும். மனைவி எடுத்தால் கணவனுக்கு வரும். அதை வைத்து ஏன்? எதற்கு? என்று பல நாள்கள் பிரச்னை நடக்கும்.

Impluse buying
Impluse buying

இதைத் தவிர்ப்பது எப்படி? வங்கிக் கணக்கு தனியாக இருப்பது நல்லதா அல்லது ஜாயின்ட் அக்கவுன்ட் நல்லதா?

தனி மற்றும்  கூட்டு வங்கிக் கணக்கு இரண்டுமே மிக அவசியம்தான். கூட்டுக் கணக்கில், இருவரின் சம்பளத்தின் பெரும் பகுதி அல்லது வியாபார லாபத்தில் பெரும் பகுதியைப் போட்டுவைக்க வேண்டும். இதன்மூலம் வீட்டுத் தேவைகளை இந்தக் கணக்கிலிருந்து பூர்த்திசெய்யலாம்.

தனி வங்கிக் கணக்கில், மீதி உள்ள பணத்தைப் போட்டு, மிக அத்தியாவசிய செலவுகளுக்குப் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்தால், இணை என்ன செலவு செய்கிறார்கள்? என்ற சந்தேகமும் அதை அடிக்கடி சரிபார்க்க வேண்டும் என்ற தொல்லையும் நீங்கும்.

ஷாப்பிங் செல்கிறீர்கள் என்றால், என்னென்ன வாங்க வேண்டும் என்று பட்டியலை வைத்துக் கொள்ளுங்கள். மிக முக்கியமாக, கிரெடிட் கார்டை வீட்டில் வைத்துவிட்டுச் செல்லுங்கள்.
ஷாப்பிங்
ஷாப்பிங்

பணம் தேவையான அளவு மட்டுமே எடுத்துச்செல்ல வேண்டும். இதுவே, உங்கள் இணை அதிகம் செலவழிப்பதைத் தடுக்கும். இணையத்தில் உங்கள் இணை ஷாப்பிங் செய்வதையும் குறைக்க வேண்டும்.

மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றினாலே, உங்கள் இணையை ஒரு 'பட்ஜெட் நபராக' மாற்ற முடியும். இல்லை பாஸ், என்ன பண்ணாலும் மாறமாட்டேன் என்கிறார்களே... என்பவர்களுக்கு, நீங்கள் ஒரு நிதிநிலை ஆலோசகரை இருவருமே அணுக வேண்டும். அவரிடம், உங்கள் வரவு- செலவைக் கூறினால், அதற்கு ஏற்ப அவர்கள் ஒரு நிதிநிலை திட்டம் அளிப்பார்.

Online shopping
Online shopping

அதை நீங்கள் பின்பற்றலாம். மேலும் மனப்பதற்றம், தன்னம்பிக்கை இன்மை ஆகியன, அதிகம் செலவழிப்பதற்குக் காரணமாக இருந்தால், மனநல ஆலோசகரை அணுகுவது நல்லது.

திட்டமிடாத பயணங்களில், பல இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். திட்டமிட்ட பயணங்கள் மனமகிழ்வைத் தரும். அதேபோல்தான் வாழ்க்கைப் பயணமும். திட்டமிட்டு வாழ்ந்தால், வாழ்க்கை பயணம் இனிதாகும்.   

இப்படித்தான் இருக்கணும் குடும்ப பட்ஜெட்!