Published:Updated:

வருமான வரி மூலம் இந்திய அரசுக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு? #Budget2020

வருமான வரி
வருமான வரி

2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 5 சதவிகிதம் வருமான வரி செலுத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக வருமான வரி வருவாயை அதிகரிக்கச் செய்வதில் மத்திய அரசு தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறது. தற்போதைய நிலையில், 2.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கட்டவேண்டிய அவசியம் இல்லை.

வருமான வரி
வருமான வரி

2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 5 சதவிகிதம் வருமான வரி செலுத்தி வருகின்றனர்.

2020-2021-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வருகிற பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். மத்திய அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை உள்ளதால், இந்த நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு இலக்குகளில் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் உள்ளது.

வருமான வரிச் சலுகை... கடைசி நேர முதலீடுகள்... அவசரம் வேண்டாம்! #financialplanning #budget2020

வருமான வரி தொடர்பாக வருமான வரித்துறை (Incometaxindia.gov.in) வெளியிட்டுள்ள தகவலில், 2011-2012 முதல் தற்போது வரை வருமான வரியின் வளர்ச்சிகள்.

வருமான வரி வளர்ச்சி
வருமான வரி வளர்ச்சி

2018-2019-ல் இந்தியாவில் 8.4 கோடி பேர் வருமான வரியைச் செலுத்தியுள்ளனர். இதன் மூலமாக ரூ.5,29,000 கோடி வருமான வரி பெறப்பட்டுள்ளது.

2014 -2015 முதல் 2018-2019 வரை வருமான வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை.
வருமான வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை
வருமான வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை
வருமான வரியில் நேரடியாக வரி வசூல் செய்யப்பட்ட தொகை.
நேரடி வரி வசூல்
நேரடி வரி வசூல்

வருமான வரி செலுத்துவோர்கள், குறிப்பிட்ட தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் செலுத்த வேண்டும் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.

அடுத்த கட்டுரைக்கு