Published:Updated:

பட்ஜெட் 2020: கடந்த 10 ஆண்டுகளின் பட்ஜெட் தொகையும், நிதி பற்றாக் குறையும்! #VikatanInfographics

பட்ஜெட்
பட்ஜெட்

நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க, வருவாயைப் பெருக்க வேண்டும் அல்லது செலவினங்களைக் குறைக்க வேண்டும். செலவினங்களைக் குறைத்தால் நாட்டின் முன்னேற்றத்தில் தடை ஏற்படலாம்.

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் உச்சரிக்கப்படும் முக்கியமான இரண்டு வார்த்தைகள், நிதி பற்றாக்குறை. நிதிப் பற்றாக்குறை என்பது ஒரு நாட்டின் மொத்த வருவாய்க்கும் செலவினத்திற்கும் இடையே உள்ள இடைவெளியாகும்.

வருமான வரி மூலம் இந்திய அரசுக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு? #Budget2020

இந்த நிதிப் பற்றாக்குறையை அரசாங்கம் புதிய கடன்கள் வாங்குவது மூலமாகச் சரிசெய்துகொள்ளும். இவ்வாறு வாங்கும் புதிய கடன்கள், நாட்டின் கட்டுமானத்தை மேம்படுத்துவதற்காகச் செலவிடப்பட்டால், அதில் எவ்வித பிரச்னையும் இருக்காது. அவ்வாறு அல்லாமல் அன்றாட செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டால், அது நமது நாட்டின் நிதி மேலாண்மையில் உள்ள சிக்கலைக் குறிக்கும். நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வருவாயைப் பெருக்க வேண்டும் அல்லது செலவினங்களைக் குறைக்க வேண்டும். செலவினங்களைக் குறைத்தால் நாட்டின் முன்னேற்றத்தில் தடை ஏற்படலாம்.

10 ஆண்டுகளின் பட்ஜெட் தொகை
10 ஆண்டுகளின் பட்ஜெட் தொகை
Vikatan Infographics

ஒரு நாட்டின் நிதிப் பற்றாக்குறை, அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% வரை இருக்கலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த 2019-20-ம் நிதியாண்டில் நமது நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.3 சதவிகிதத்துக்குள் இருக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், இந்த நிதியாண்டில் நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலமாகப் பெறப்படும் வருமானம், மதிப்பிடப்பட்டதற்கும் குறைவாக உள்ளதால், நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டதால், அரசாங்கத்தின் மொத்த வருமானம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வரவிருக்கும் பட்ஜெட் அறிவிப்பில் நிதிப் பற்றாக்குறை 3.7% வரை இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

10 ஆண்டுகளின் நிதிப் பற்றாகுறை
10 ஆண்டுகளின் நிதிப் பற்றாகுறை
Vikatan Infographics
அடுத்த கட்டுரைக்கு