கொரோனா என்ற கொடிய அரக்கன் பிடியிலிருந்து தொழில் துறை மெள்ள மீண்டுவருகிறது. புதிய நம்பிக்கைகளுடன் 2021-ம் ஆண்டு பிறந்துள்ளது. வருகிற 29-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 1-ம் தேதி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், விரைவில் தாக்கல் செய்யப்பட விருக்கும் பட்ஜெட்டில் தொழில் துறையினர் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிய கோவையில் இருக்கும் சில முக்கியமான தொழில் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்துக் கேட்டோம்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் (டேக்ட்) கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸை நாம் முதலில் சந்தித்தோம். அவர் சொன்னதாவது...

“இப்போதைய நெருக்கடியான சூழ்நிலை யிலும்கூட மூலப்பொருள் களுக்கு 18-28% ஜி.எஸ்.டி வரி விதிக்கிறார்கள். அதை 5 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும். மூலப்பொருள்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஜாப் ஆர்டர்களுக்கு ஜி.எஸ்.டி-யிலிருந்து விலக்க அளிக்க வேண்டும்.

சாலையோர வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் தனிக்கடன் திட்டத்தை அறிவித்தனர். அதேபோல, ஜாப் ஆர்டர் அடிப்படையில் குறுந்தொழில் செய்துவரும் நிறுவனங்களுக்கு, வங்கி பரிவர்த்தனை அடிப்படையில் தனிக்கடன் திட்டத்தை அறிவிக்க வேண்டும். கோவையில் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனத்தை உருவாக்க வேண்டும். தொழிலை நம்பித்தான் வங்கிகளில் பலர் கடன் வாங்கியிருக்கிறோம்.

ஆனால், அடுத்தடுத்த நெருக்கடி யால் அதிக சிரமத்தில் உள்ளோம். எனவே, அரசாங்கம் அனைத்து விதமான கடன்களுக்கும் ஆறு மாதங்களுக்கு வட்டியை மட்டும் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த நெருக்கடி சூழ்நிலையில், தவணையைக் கட்டவில்லை என்றால், வங்கிகள் ஜப்தி நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன. குறைந்த பட்சம் ஓராண்டுக்காவது, குறு சிறு நிறுவனங்களுக்கு இதுபோன்று ஜப்தி நடவடிக்கைகளைத் தள்ளி வைக்க வேண்டும். மேலும், கோவையில் குறுந்தொழில் பேட்டை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் (கொடிசியா) தலைவர் ரமேஷ் பாபு சொன்னதாவது...

“மூலப்பொருள்கள் விலை உயர்வுதான் சிக்கலாக இருக்கிறது. இதனால் பழைய பணி மூலதனம் (Working Capital) பத்தாது. இப்போதிருக்கும் 20% பணி மூலதனத்தை 40 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். அதை வங்கிகள் மூலம் உடனடியாக அமல்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து பணம் வருவதில் தாமதமாகிறது. அதை விரைந்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை விமான நிலையம் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அந்தப் பணிகள் முடிந்தவுடன், விமான நிலையத்தை விரைவாக விரிவாக்கம் செய்து கொடுக்க வேண்டும். மேலும், ரிங் ரோடு அமைப்பது போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். கோவை, சேலம் பகுதிகளை மத்திய அரசு தொழில் துறை காரிடர் (Industrial corridor) என அறிவிக்க வேண்டும். வருமானவரி செலுத்துவதில் சலுகைகள் அல்லது கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் எங்களது கோரிக்கைகளை அனுப்பியுள்ளோம்” என்றார்.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) பொதுச்செயலாளர் செல்வராஜு சொன்னதாவது...

“ஏற்றுமதியில் இரண்டுவிதமான வரிகள் உள்ளன. இதனால் போட்டியில் ஸ்திரதன்மை இல்லை. அந்த வரிகளை எல்லாம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். இதையடுத்து, இந்த ஜனவரியிலிருந்து RoDTEP (Remission of Duties and Taxes on Export Product) புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கு உரிய நிதி ஒதுக்கி அனைத்து ஜவுளிப் பொருள் ஏற்றுமதிக்கான வரியை திருப்பிக் கொடுக்க வேண்டும்.

தற்போது ஒட்டுமொத்த ஜவளித்துறையும் ஸ்தம்பித்துள்ளது. 2016-ம் ஆண்டு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதிக்கு ரூ.17,822 கோடி ஒதுக்கினர். அவற்றில் ரூ.2,500 கோடிதான் பெறப்பட்டுள்ளது. பழைய திட்டங்களுக்கே ரூ.12,000 கோடி பாக்கி இருக்கிறது. இதனால், மானியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. பயங்கர நிதிச்சுமை நிலவுகிறது. எனவே, தொழில்நுட்ப மேம்பாட்டு நிதிக்கு நிலுவையில் உள்ள தொகை ஒதுக்க வேண்டும்.

உலககில் பருத்தி விளைவதில் 35% நம்மிடமே இருக்கிறது. ஆனால், நம் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக இருக்கிறது. ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா போன்ற நாடுகள் அதிகளவு பருத்தி உற்பத்தி செய்கின்றன. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பருத்தி அபிவிருத்திக்கு என்று தனித் திட்டங்கள் இல்லை. எனவே, தொழில்நுட்பத்தை மேம்படுத்த பெரிய அளவில் நிதி ஒதுக்கித் தர வேண்டும்” என்றார்.