Published:Updated:

பரிந்துரை: இந்த வாரம்... வருமான வரிச்சலுகை

வருமான வரிச்சலுகை
பிரீமியம் ஸ்டோரி
வருமான வரிச்சலுகை

‘ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம் வருமான வரிச்சலுகை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பொருளாதார நிபுணர் வ.நாகப்பன்.

பரிந்துரை: இந்த வாரம்... வருமான வரிச்சலுகை

‘ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம் வருமான வரிச்சலுகை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பொருளாதார நிபுணர் வ.நாகப்பன்.

Published:Updated:
வருமான வரிச்சலுகை
பிரீமியம் ஸ்டோரி
வருமான வரிச்சலுகை

மாதச்சம்பளமோ, வியாபாரத்தில் கிடைக்கும் வருமானமோ, அதற்கு வரி கட்ட வேண்டியது நமது கடமை. அதேபோல வரிக்கழிவுகளுக்கான வாய்ப்புகளையும் அரசு தரும் சலுகைகளையும்கூடத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

வரிக்கழிவுக்கான முதன்மையான திட்டங்கள்

வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின்படி, வேலை பார்ப்பவர்களுக்கு பி.எஃப், பிசினஸில் இருப்பவர்களுக்கு பி.பி.எஃப் திட்டங்கள் வரிக்கழிவுக்கு உதவுகின்றன. அதே பிரிவின்படி, இருவருக்கும் பொதுவாக, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் மூலம் முதலீடு செய்யும்

இ.எல்.எஸ்.எஸ் (ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம்) வரிக்கழிவுக்கு உதவுகிறது. இந்த இரண்டு திட்டங்கள்தான் வரிக்கழிவுக்கு ஏற்ற நல்ல திட்டங்கள்.

பரிந்துரை: இந்த வாரம்... வருமான வரிச்சலுகை

‘Exempt-Exempt-Exempt (EEE)’ என்னும் வகையில் முதலீடு, முதலீட்டுப் பெருக்கம், முதிர்வு என்கிற முறைகளில் மூன்று வரிச்சலுகைகள் இந்தத் திட்டங்களில் உண்டு.

1. பி.எஃப், பி.பி.எஃப் திட்டங்களில் முதலீட்டுக்கு ரூ.1.5 லட்சம்வரை வரிக்கழிவு உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2. பி.எஃப், பி.பி.எஃப் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம், இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் கிடைக்கும் டிவிடென்ட் ஆகியவற்றுக்கு வருமான வரி கிடையாது.

3. பி.எஃப், பி.பி.எஃப் முதலீடுகளின் முதிர்வுத்தொகையை எடுக்கும்போது முதிர்வுத்தொகை+வட்டி வருமானத்துக்கும் வருமான வரிச்சலுகை உண்டு. இ.எல்.எஸ்.எஸ் திட்டத்தில் மூன்றாண்டுகளுக்குப் பின்னர் எடுத்தால், ஆதாயத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்வரை வரிவிலக்கு உண்டு. அதற்கு மேற்பட்ட ஆதாயத்துக்கு 10% வரி கட்ட வேண்டும்.

பி.எஃப், பி.பி.எஃப் இரண்டும் நீண்ட கால முதலீடுகள். பி.பி.எஃப் 15 ஆண்டுத் திட்டம். இதில் ஆறு ஆண்டுகளிலிருந்து கடன் பெறலாம். இ.எல்.எஸ்.எஸ் என்பது மூன்று ஆண்டுத் திட்டம். ஓரளவு ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள், 45 வயதுக்குக் குறைந்தவர்கள், இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் பி.பி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

பி.பி .எஃப்

பி.பி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்வதாக இருந்தால் ஏப்ரல் மாதத்திலேயே கையிலிருக்கும் பெருந்தொகையை மொத்தமாக முதலீடு செய்யலாம். எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ அப்போதெல்லாமும்கூட முதலீடு செய்யுங்கள். நீங்கள் முதலீடு செய்த நாளிலிருந்து வட்டி கணக்கிடுவது தொடங்கும். 15 ஆண்டுகளின் இறுதியில் கிடைக்கும் முதிர்வுத்தொகை+வட்டி இரண்டுக்கும் வரிச்சலுகை உண்டு.

இ.எல்.எஸ்.எஸ்

இ.எல்.எஸ்.எஸ் முதலீட்டையும் எப்போது வேண்டுமானாலும் பணம் கிடைக்கும்போதெல்லாம் செய்யலாம். ஆனால் எஸ்.ஐ.பி தவணை முறையில் மாதந்தோறும் முதலீடு செய்வது நல்லது. மாதம் ஐந்நூறு ரூபாய்கூட முதலீடு செய்யலாம். பொதுவாக இ.எல்.எஸ்.எஸ் திட்டம், மியூச்சுவல் ஃபண்டிலுள்ள மற்ற திட்டங்களைவிட நன்றாகச் செயல்படக்கூடியது. ஏனெனில், இதில் மூன்றாண்டுக்கால லாக்-இன் பீரியட் இருப்பதால் பங்குச்சந்தை எப்படியிருந்தாலும் பணத்தை வெளியே எடுக்காமல் தொடர்வோம். அப்படித் தொடரும்போது நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம். ஐந்தாண்டு வங்கி வைப்பு நிதி, பி. பி.எஃப் போன்ற முதலீட்டுத் திட்டங்களோடு ஒப்பிடுகையில், இ.எல்.எஸ்.எஸ் திட்டம்தான் குறைந்த லாக் இன் கொண்ட (மூன்று ஆண்டுகள்) திட்டமாகும்.

பரிந்துரை: இந்த வாரம்... வருமான வரிச்சலுகை

வீட்டுக்கடன்

வீட்டுக்கடன் திரும்பக் கட்டும் தொகையில் அசல் (80சி ரூ.1.5 லட்சம்) மற்றும் வட்டிக்கு (24 பிரிவு ரூ. 2 லட்சம்) வரிச்சலுகை உண்டு. வீட்டுக் கடனுக்கு நீண்ட காலக் கணக்கில் தவணை செலுத்துவது குறித்து அச்சப்படத் தேவையில்லை. அது பயனுள்ளதாகவே இருக்கும். பணவீக்க வளர்ச்சியோடு ஒப்பிடும்போது காலம் செல்லச் செல்ல நாம் கட்டும் தவணை த்தொகையின் உண்மையான மதிப்பு குறைவானதாக இருக்கும். கடனைக் கட்டுவது எளிதாக இருக்கும். அதே வீட்டி லிருந்து வாடகை கிடைக்கும்ப ட்சத்தில், வாடகைத் தொகை அதிகரித்துக் கொண்டே செல்வது நமக்கு லாபகரமானதாக இருக்கும்.

இன்ஷூரன்ஸ் வரிச்சலுகை

இன்ஷூரன்ஸைப் பொறுத்த வரை எல்லோருக்குமே ஆயுள் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கட்டாயம் இருக்க வேண்டும். ஆயுள் காப்பீட்டுக்குக் கட்டும் பிரீமியத்துக்கு 80சி பிரிவின் கீழ் வரிச்சலுகை ரூ. 1.5 லட்சம் வரைக்கும் உண்டு. ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு வருமான வரிச்சட்டம் 80டி பிரிவின்படி ஆண்டுக்கு 25,000 ரூபாய்வரை வரிச்சலுகை உண்டு. ஆனால், வரிச்சலுகைக்காக இன்ஷூரன்ஸ் எடுக்காமல் வாழ்க்கைப் பாதுகாப்புக்காக எடுப்பது நல்லது.

இந்த முதலீட்டு முறைகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்தினால் வரிச்சலுகை பெறலாம்.