Published:Updated:

தங்க நகை, சுற்றுலா நோ... இன்ஷூரன்ஸ் ஓகே! - சிக்கலான நேரம்... சிறப்பான திட்டம்!

ஃபேமிலி பட்ஜெட்
பிரீமியம் ஸ்டோரி
ஃபேமிலி பட்ஜெட்

தனிநபர் கடனை வீட்டுக்கே தேடிவந்து கொடுத்தாலும் வாங்கக்கூடிய நேரமல்ல இது!

தங்க நகை, சுற்றுலா நோ... இன்ஷூரன்ஸ் ஓகே! - சிக்கலான நேரம்... சிறப்பான திட்டம்!

தனிநபர் கடனை வீட்டுக்கே தேடிவந்து கொடுத்தாலும் வாங்கக்கூடிய நேரமல்ல இது!

Published:Updated:
ஃபேமிலி பட்ஜெட்
பிரீமியம் ஸ்டோரி
ஃபேமிலி பட்ஜெட்
டந்த மூன்று மாதங்களாக கொரோனா நோய்த் தொற்றால் உலகப் பொருளாதாரம் துவண்டுபோய்க் கிடக்கிறது.

நூற்றாண்டைக் கடந்த நிறுவனங்கள்கூட தங்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடுகின்றன. அதனால் சம்பளப் பிடித்தம், ஆட்குறைப்பு ஆகிய நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.

பட்ஜெட்
பட்ஜெட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவையெல்லாம் மாதச் சம்பளக்காரர்களின் வாழ்க்கையிலும், அவர்களின் பட்ஜெட்டிலும் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. வருமானக் குறைவு அல்லது வருமானமின்மை இவை இரண்டுமே நிம்மதியாகச் சென்றுகொண்டிருந்த ஒரு குடும்பத்தில் மோசமான நிலையை ஏற்படுத்திவிடும். இப்படிப்பட்ட சூழலில், `குடும்பப் பொருளாதாரத்தைச் சிறப்பாக வைத்திருக்க என்னென்ன விஷயங்களை மனதில்கொண்டு பட்ஜெட்டைப் போட வேண்டும்?’ என்று நிதி ஆலோசகர் ரேணு மகேஸ்வரியிடம் கேட்டோம்.

“லாக்டௌன் காலத்திலோ அல்லது லாக்டௌனுக்குப் பிறகோ, பணவரவு இருக்கிறதோ இல்லையோ... முதலில் பீதியடைவதைத் தவிர்க்க வேண்டும். அது நிலைமையை மோசமாக்கிவிடக்கூடும். அமைதியாக அமர்ந்து சிந்திக்க வேண்டும். வேலையில் இருந்தால், அதிலிருந்து வரவிருக்கும் வருமானம் எவ்வளவு என்று தெரிந்துகொண்டு அதற்கேற்ப திட்டமிட வேண்டும். வேலையிழப்பு ஏற்பட்டவர்கள் கைவசம் இருக்கும் பணம் எவ்வளவு என்று கணக்கிட வேண்டும். வருமான இழப்பு ஏற்பட்டவர்கள் சேமிப்புகளைப் பயன்படுத்த இது சரியான தருணம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அனைவரும் அடுத்த ஓர் ஆண்டுக்கான திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். அதில் நம் அன்றாடச் செலவுகள், அவசியம் செலுத்த வேண்டிய கடன் தொகை, குழந்தைகளுக்குச் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் ஆகியவற்றைக் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும். இந்த ஓராண்டில் அநாவசியமான பொருள்கள் எதையும் வாங்குவதற்காகச் செலவு செய்ய வேண்டாம். உதாரணமாக, ‘இருக்கும் வாஷிங் மெஷினை மாற்றுகிறேன்’, ‘ஃப்ரிட்ஜில் ஹையர் எண்ட் வாங்கப்போகிறேன்’, ‘நகைகளை வாங்குகிறேன்’ என்று கிளம்ப வேண்டாம்.

தங்க நகை, சுற்றுலா நோ... இன்ஷூரன்ஸ் ஓகே! - சிக்கலான நேரம்... சிறப்பான திட்டம்!

பெரிய பட்ஜெட் பொருள்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கையில் பணமிருந்தாலும், அவற்றை வாங்குவதை ஒத்திப்போடுவது நல்லது. எந்தக் காரணம் கொண்டும் இவற்றை தவணைகளில் வாங்கவே கூடாது. அதே நேரத்தில், அலுவலகம் சென்றுவர பைக் போன்ற அத்தியாவசியத் தேவை யிருந்தால் நிச்சயம் வாங்கலாம், தவறில்லை.

வீட்டுக் கடன் இஎம்ஐ-களைச் செலுத்த அரசு ஆகஸ்ட் வரை சலுகை அளித்துள்ளது. வருமான இழப்புக்குள்ளானவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனாலும் கையில் பணம் வைத்திருப்பவர்கள் அதைப் பயன்படுத்துவதைவிட செலுத்திவிடுவது சிறந்தது. இதன் மூலம் கூடுதல் வட்டிச் சுமையைத் தவிர்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் பங்கு சார்ந்த மற்றும் கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது, நிதி ஆலோசகர்களிடமிருந்து ஆலோசனை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. உங்களால் கொஞ்சம்கூட ரிஸ்க் எடுக்க முடியாது எனில், பாதுகாப்பான முதலீடுகளான வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் அல்லது அஞ்சலக ஆர்.டி போன்ற திட்டங்களை நாடுவதே நல்லது.

ஃபேமிலி பட்ஜெட்
ஃபேமிலி பட்ஜெட்

வருமானம் குறைவாக இருக்கும் இந்த நிலையில், கடன் வாங்கும் எண்ணம் பலருக்கும் வந்துவிடலாம். ‘உங்களுக்குக் கடன் தரத் தயாராக இருக்கிறோம், வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று உங்களுக்கு அடிக்கடி போன் செய்து, ஆசையைத் தூண்டலாம். தனிநபர் கடனைத் தேடிவந்து கொடுத்தாலும் வாங்கக்கூடிய நேரமல்ல இது. இந்தக் கடன்களுக்கு வட்டி அதிகம் வசூலிப்பார்கள் என்பதுடன், வாங்கிய கடனைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், வட்டிக்கு மேல் வட்டி செலுத்த வேண்டிய நிலைக்கு ஆட்பட வேண்டியிருக்கும். எனவே, உயிர்காக்கும் சூழ்நிலையைத் தவிர்த்த வேறு எந்தக் காரணத்துக்காகவும் புதிய கடன் பெறவே கூடாது.

ஃபேமிலி பட்ஜெட்
ஃபேமிலி பட்ஜெட்

இந்தச் சமயத்தில் மட்டுமல்ல, காப்பீடு என்பது அனைத்துக் குடும்பங்களுக்கும் எப்போதும் இருப்பது அவசியம். இதில், உயிர்க் காப்பீட்டுக்குத் தேவையான டேர்ம் இன்ஷுரன்ஸைப் போதுமான அளவுக்குக் கட்டாயம் எடுக்க வேண்டும். இந்த டேர்ம் பாலிசியை இதுவரை எடுக்கவில்லையென்றால், இனியாவது எடுப்பது அவசியம். மருத்துவக் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியத்தையும் இந்தக் கஷ்டமான காலத்திலும் முன்னுரிமை தந்து செலுத்திவிடுவது அவசியம். `யூலிப்’ (ULIP) என்றழைக்கப்படும் முதலீட்டுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டங்களைத் தவிர்க்கலாம்.

இந்த ஓராண்டில் சுற்றுலா, காஸ்ட்லியான உணவகங்கள், அதிக விலையுள்ள ஆடைகள் வாங்குதல் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் மிகவும் அவசியமானது. ஓராண்டுக்குள் கொரோனா பிரச்னை முடிவுக்குவந்து, நாம் இயல்புநிலைக்குத் திரும்பும்வரை இவற்றையெல்லாம் வீட்டுச் செலவுகளுக்கான பட்ஜெட் போடும்போது கட்டாயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார் ரேணு மகேஸ்வரி.

இவர் சொல்கிறபடி இனி நாம் நடப்போமா?

குடும்பத் தலைவியும், தலைவரும் குழந்தைகளிடம் கடைப்பிடிக்க வேண்டியவை!

1. முதலில் உங்களின் தற்போதைய பொருளாதார நிலை என்ன என்று முடிவு செய்துகொள்ளுங்கள்.

a) சம்பளக் குறைப்பு / வேலையிழப்பு காரணமாக மோசமடைதல்.

b) வரும் வருமானம் அவசியச் செலவுகளுக்குப் போதுமான நிலை.

c) சேமிப்புகள் மற்றும் நிலையான வருவாயால் கவலையில்லாத நிலை.

இந்த மூன்றில் நீங்கள் யார் என்பதை முடிவு செய்து, அதற்கேற்ப திட்டமிடல்களைச் செய்யலாம்.

2. வரும் மாதங்களில் எவ்வளவு வருமானத்தை உங்களால் ஈட்ட முடியும் என்பதைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

3. கட்டாயச் செலவுகளைப் பட்டியலிடுங்கள். மளிகை, வாடகை, மொபைல் பில், மின்சாரக் கட்டணம், மருத்துவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கான பணத்தைத் தனித்தனியாக ஒதுக்கிவைத்துவிடுங்கள். வாடகைப் பணத்தை வீட்டின் சொந்தக்காரர் கேட்கும் வரை காத்திருக்காமல், நீங்களே கொண்டுபோய் கொடுத்துவிடுவது நல்லது. வாடகைக்கென வைத்திருக்கும் பணம் செலவாகிவிட்டால், பிற்பாடு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.

4. தேவையற்ற செலவுகளைக் குறையுங்கள்.

5. செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் பயனுள்ளதுதானா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

6. இதுவரை சேமிப்பு என்று எதுவும் இல்லாமலிருந்தால், இந்த நெருக்கடியிலும் எதிர்காலத்துக்கென கொஞ்சம் பணத்தைச் சேர்க்கத் தொடங்குங்கள். உதாரணமாக, இதுவரை அலுவலகம் சென்றுவர போக்குவரத்துச் செலவு என்று ஒன்று இருந்திருக்கும். இப்போது வொர்க் ஃப்ரம் ஹோமில் அது மிச்சமாகும். அது எவ்வளவு என்று கணக்கிட்டு அதைச் சேமிக்கலாம்.

7. இதுவரை உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மருத்துவக் காப்பீடு இல்லாமலிருந்தால் உடனடியாக முதலில் அதை ஒரு செலவாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

8. போதுமான அளவு பணம் கையிருப்பு இருப்பதை உறுதி செய்துகொண்ட பின்னர் முதலீடுகளை மேற்கொள்ளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism