Published:Updated:

`இந்த பட்ஜெட் உங்களை எப்படி பாதிக்கும்?' - அலசுகிறது நாணயம் விகடனின் ஆன்லைன் நிகழ்ச்சி

பட்ஜெட்டும் நீங்களும்
பட்ஜெட்டும் நீங்களும்

பேராசிரியர், நடிகர், பட்டிமன்ற நடுவர் கு.ஞானசம்பந்தன் வீட்டு பட்ஜெட் பற்றி தனக்கே உரிய பிரத்யேக நகைச்சுவை பாணியில் பேசவிருக்கிறார்.

நாணயம் விகடன் மற்றும் இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்றான ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் `பட்ஜெட்டும் நீங்களும்' என்ற நிகழ்ச்சி பிப்ரவரி 7-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை ஆன்லைனில் நடைபெறவுள்ளது.

பட்ஜெட்டும் நீங்களும்
பட்ஜெட்டும் நீங்களும்

இந்த நிகழ்வில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். மேலும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கே.எஸ்.ராவ், முதலீட்டாளர் கல்வி உதவி துணைத் தலைவர் எஸ்.குருராஜ், தமிழ்நாடு பிரிவு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோரும் பேசுகிறார்கள்.

பதிவு செய்ய: https://bit.ly/2IX53S2

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, வருமான வரி போன்றவற்றுக்கு என்ன சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அதனால், முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம், என்ன இழப்பு என்பது குறித்து நிதிச்சந்தை நிபுணர்கள் அலசுகிறார்கள்.

பட்ஜெட்டும் நீங்களும்
பட்ஜெட்டும் நீங்களும்

பேராசிரியர், நடிகர், பட்டிமன்ற நடுவர் கு.ஞானசம்பந்தன் வீட்டு பட்ஜெட் பற்றி தனக்கே உரிய பிரத்யேக நகைச்சுவை பாணியில் பேசவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்! முன்பதிவு மட்டும் அவசியம்.

பதிவு செய்ய: https://bit.ly/2IX53S2

அடுத்த கட்டுரைக்கு