Published:Updated:

மத்திய பட்ஜெட் 2021: பி.எஃப் வட்டிக்கு வருமான வரி... யாருக்கு பாதிப்பு? - விளக்கம்

Investment (Representational Image)

இந்தப் புதிய விதியின்படி கட்டாய சந்தா மற்றும் விரும்பித் செலுத்தும் வி.பி.எஃப் இரண்டின் கூட்டுத் தொகை மாதம் ஒன்றுக்கு ரூ.20,833 என்ற வரம்பைத் தாண்டுவோரின் வட்டி மட்டுமே வரிக்கு உட்படும்.

மத்திய பட்ஜெட் 2021: பி.எஃப் வட்டிக்கு வருமான வரி... யாருக்கு பாதிப்பு? - விளக்கம்

இந்தப் புதிய விதியின்படி கட்டாய சந்தா மற்றும் விரும்பித் செலுத்தும் வி.பி.எஃப் இரண்டின் கூட்டுத் தொகை மாதம் ஒன்றுக்கு ரூ.20,833 என்ற வரம்பைத் தாண்டுவோரின் வட்டி மட்டுமே வரிக்கு உட்படும்.

Published:Updated:
Investment (Representational Image)

ஏராளமான எதிர்பார்ப்புகள், எண்ணற்ற கணிப்புகளிடையே பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரி தொடர்பாக வெளியிட்ட பொதுவான அறிவிப்பு மூன்றே மூன்றுதான். இந்த மூன்றுமே வட்டியோடு தொடர்புடையவைதான். அதாவது:

* பென்ஷன் மற்றும் வட்டி வருமானம் மட்டும் கொண்ட 75 வயதாகிய மூத்த குடியினர் வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டியதில்லை.

* 35 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட வீடு வாங்க அல்லது கட்டுவதற்கான கடனுக்கு 31.03.2021 வரை தரப்பட்டிருந்த கூடுதல் 1.5 லட்சம் ரூபாய் வட்டிச் சலுகை 31.03.2022 வரை நீட்டிப்பு.

* பிராவிடண்ட் ஃபண்டில் (பி.எஃப்) ஊழியர் செலுத்தும் தொகை ஒரு நிதியாண்டில் 2.5 லட்சம் ரூபாயைத் தாண்டினால் அதன் மீதான வட்டிக்கு வருமான வரி உண்டு.

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

யாருக்கு ?

இம்மூன்றில் பெரிதும் கவனிக்கப்பட்டது பிராவிடண்ட் ஃபண்ட் வட்டிக்கு வருமான வரி என்பதுதான். பிராவிடண்ட் ஃபண்ட் நான்கு வகை.

- சட்டப்பூர்வ பி.எஃப் (Statutory PF)

- அங்கீகரிக்கப்பட்ட பி.எஃப் (Recognised PF)

- அங்கீகாரமற்ற பி.எஃப் (Non Recognised PF) மற்றும்

- பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட்

இந்த நான்கில் அங்கீகரிக்கப்பட்ட பிராவிடண்ட் ஃபண்டுக்குத்தான் வட்டியானது வரிக்கு உட்படுகிறது.

அதாவது, ஊழியரின் ஆண்டுச் சந்தா 2.5 லட்சத்துக்கு மேற்படும் இனங்களில் அங்கீகரிக்கப்பட்ட பிராவிடண்ட் ஃபண்ட் என்பது இ.பி.எஃப் எனப்படும் எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்டைத்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வருமான வரித்துறை ஆணையத்தின் (Commissonarate of Income Tax) அங்கீகாரம் பெற்று தொடங்கப்படுவதால் இது அங்கீகரிக்கப்பட்ட பி.எஃப் ஆக உள்ளது. அரசுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சுரங்கத் தொழிலகங்கள், பண்னைகள் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் இ.பி.எஃப் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் மாதம்தோறும் செலுத்தும் 12 சதவிகித கட்டாய சந்தா மற்றும் விருப்பச் சந்தா (Voluntary PF) ஆகிய இரண்டின் கூட்டுத் தொகை ஒரு நிதியாண்டில் 2.5 லட்சத்தைத் தாண்டும் பட்சத்தில் அதற்கான வட்டி வரிக்கு உட்படும் என்பதே தற்போதைய அறிவிப்பு.

EPFO
EPFO

இ.பி.எஃப் நிறுவனத்தில் சேராமல் விதிவிலக்கு பெற்று தமது ஊழியர்களின் பி.எஃப் கணக்கை தாமே நிர்வகிக்கும் (Exempted Establishment) நிறுவன ஊழியர்களின் பி.எஃப் சந்தாவுக்கும் தற்போதைய வட்டிக்கு வரி என்ற அறிவிப்பு பொருந்தும்.

ஜி.பி.எஃப், சி.பி.எஃப் போன்ற பிராவிடண்ட் ஃபண்டுகளுக்கு தற்போதைய வட்டிக்கு வரி அறிவிப்பு பொருந்தாது. இது புதியதல்ல

ஏதோ, இந்த அறிவிப்புக்குப் பிறகுதான் இ.பி.எஃப் டெபாசிட்டுக்கு தரப்படும் வட்டியானது வரிக்கு உட்படப்போகிறது என்பதல்ல. இ.பி.எஃப் வட்டிக்கு வரி உண்டு என்பது இன்று வரை அமலில்தான் உள்ளது. ஆனால், நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியாமல் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வரம்பு புதிது... வரி பழையது

அங்கீகரிக்கப்பட்ட பிராவிடண்ட் ஃபண்டுக்கு அதாவது, இ.பி.எஃப்க்கு அனுமதிக்கப்படும் வட்டி விகிதம் 12 சதவிகிதத்துக்கு மேற்பட்டால் வட்டிக்கு வரி கட்ட வேண்டும் என்பது 31.08.2010 வரை இருந்து வந்த விதி. ஆனால், வட்டி விகிதம் அந்த அளவுக்கு உயரவே இல்லை. எனவே, வட்டி கட்ட வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை.

எனவே, 01.10.2010 முதல் வட்டிக்கான விதி மாற்றப்பட்டது. அதன்படி இ பிஎஃப்க்கான வட்டி விகிதம் 9.5 சதவிகிதத்துக்கு மேற்பட்டால் அந்த வட்டி சம்பள வருமானமாகக் கணக்கிடப்படும் மற்றும் வரிக்கு உட்படும் என்ற விதி நாளது தேதி வரை அமலில் உள்ளது.

ஆனால், வட்டி விகிதம் உயரவே இல்லை. எனவே, இப்போது வரிக்கான வரம்பை வட்டி விகிதத்தின் மேல் நிர்ணயிக்காமல் செலுத்தப்படும் சந்தாவுக்கான வரம்பு மீது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதியின்படி கட்டாய சந்தா மற்றும் விரும்பித் செலுத்தும் வி.பி.எஃப் இரண்டின் கூட்டுத் தொகை மாதம் ஒன்றுக்கு ரூ.20,833 என்ற வரம்பைத் தாண்டுவோரின் வட்டி மட்டுமே வரிக்கு உட்படும். மற்ற இ.பி.எஃப் தாரர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
AP Photo / Manish Swarup

மாற்று வழி

இ.பி.எஃப்-ல் 12% சந்தா கட்டாயம். எனவே, தவிர்க்க முடியாது. அதே சமயம் இ.பி.எஃப் மட்டுமே ஓய்வுக் காலத்துக்கு போதுமானதாக இருக்காது. எனவே, வி.பி.எஃப் செலுத்த முடிந்தவர்கள் அந்தத் தொகையை பி.பி.எஃப் கணக்கில் செலுத்த ஆரம்பிப்பது மாற்று வழியாக அமையும். ஆனால், இதில் வட்டி வருமானம் சிறிது குறைவாக இருக்கும். வட்டிக்கு வரி கட்ட வேண்டியதில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism