Published:Updated:

#UnionBudget2021: மக்கள் மீதான வரிச்சுமை குறையுமா... ரியல் எஸ்டேட் துறையின் எதிர்பார்ப்புகள் என்ன?

Real Estate (Representational Image)
News
Real Estate (Representational Image)

வீடு வாங்குபவர்கள் சுமார் 38 சதவிகிதம் வரைக்கும் வரி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் மேல் இருக்கிற வரிச் சுமையை இந்த பட்ஜெட்டில் குறைக்கலாம்.

கோவிட் 19 பரவல் மற்றும் லாக்டெளன் காரணமாகப் பல்வேறு தொழில்துறைகளும் நலிந்துவிட்ட இந்த நேரத்தில் 2021-22-ம் வருடத்துக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. ரியல் எஸ்டேட் துறையில், அரசு எப்படிப்பட்ட விஷயங்களை அறிவித்தால், அல்லது என்னென்ன சலுகைகள் வழங்கினால் அந்தத் துறை செழிப்பாக மாறும் என்பது பற்றி ரியல் எஸ்டேட் துறை அமைப்பான கிரெடாய்யின் முன்னாள் தேசியச் செயலாளர் மற்றும் அக்‌ஷயா பிரைவேட் லிமிடெட்டின் சேர்மன் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியுமான சிட்டிபாபு சொல்கிறார்.

சிட்டிபாபு
சிட்டிபாபு

``இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 8 சதவிகித பங்களிப்பை ரியல் எஸ்டேட் துறை வழங்கி வருகிறது. இன்றைக்கு ஒருவர் வீடு வாங்கினால் அதற்கு அவர்கள் செலவழிக்கிற தொகையில் 35 சதவிகிதத்தில் இருந்து 38 சதவிகிதம் வரை அரசாங்கத்துக்கு வரியாகச் செல்கிறது. தவிர, கோவிட் காரணமாக எல்லா துறைகளிலும் உற்பத்தி குறைய, விளைவு வீடு கட்டுவதற்கான பொருள்களின் விலை அதிகரித்திருக்கிறது. கூடவே, வீடு கட்டுகிற புலம்பெயர் தொழிலாளர்களின் கூலியும் அதிகரித்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் மத்திய பட்ஜெட் அறிவிக்கப்படவிருக்கிறது. இந்த பட்ஜெட் ஒரு தொழில் துறையையோ, குறிப்பிட்ட நிறுவனங்களையோ உயர்த்தாமல், ரியல் எஸ்டேட்டில் வேலை வாய்ப்பை அதிகரித்தால், இந்திய பொருளாதாரத்துக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்களிப்பை அதிகப்படுத்தலாம்.

Real estate
Real estate

சாலைகள் அமைத்தல், அணைகள் கட்டுதல், துறைமுகம் மற்றும் ஏர்போர்ட் உள்ளிட்ட நாட்டுக்கு அவசியமான கட்டுமானப் பணிகளில் அரசு முதலீடு செய்தால், மூலப்பொருள்களை சப்ளை செய்கிற நிறுவனங்கள் வளரும். பொருள்களின் உற்பத்தி அதிகரிக்கும். கூடவே இவற்றை உற்பத்தி செய்பவர்களுக்கும் கட்டுமானப் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். இதனால் பொது மக்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். இந்த பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் இருந்தால் நல்லது. இவற்றைச் செய்தாலே ஜி.டி.பி-யின் பங்களிப்பின் சதவிகிதம் அதிகரிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீடு வாங்குபவர்கள் சுமார் 38 சதவிகிதம் வரைக்கும் வரி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் மேல் இருக்கிற வரிச் சுமையை இந்த பட்ஜெட்டில் குறைக்கலாம். அடுத்தது, சொத்து பதிவுக்கான முத்திரைக் கட்டணம் குறைத்தல். தற்போது பல மாநிலங்களிலும் இதைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இது மத்திய அரசுக்கு உட்பட்டது கிடையாது என்றாலும், இதை எல்லா மாநிலங்களிலும் ஒரே அளவில் இருக்க மத்திய அரசு வலியுறுத்தலாம்.

Rupees
Rupees
Photo by rupixen.com on Unsplash

கடைசியாக ஒரு விஷயம். ரியல் எஸ்டேட்டில் கம்ப்ளீட்டட் புராஜெக்ட் சர்ட்டிஃபிகேட் இருக்கிற, அதாவது முழுதாகக் கட்டிய பிறகு, விற்பனை செய்யப்படுகிற வீடுகளுக்கு ஜி.எஸ்.டி கிடையாது. கட்டிக்கொண்டிருக்கிற வீடுகளை வாங்கினால் 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும். அதனால், வீடு வாங்க விரும்புபவர்கள் அனைவரும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்கவே விரும்புகிறார்கள். ஆனால், எல்லோருக்கும் அப்படி கிடைக்காது. முழுமையாகக் கட்டிய வீடுகளை வாங்கினால், ஜி.எஸ்.டி செலுத்த தேவையில்லை என்றாலும் இந்த வகை வீடுகள் நிச்சயம் விலை அதிகமாகத்தான் இருக்கும். அதனால், முழுமையாகக் கட்டப்படாத வீடுகளுக்கும் இந்த பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி விலக்கு அளிக்க வேண்டும். அடுத்த 2 வருடங்களுக்கு இந்த விலக்கு அளித்தால்கூட போதும். நாட்டின் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் இதை மத்திய அரசு திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.’’