Published:Updated:

பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்... நாளை மாலை சென்னையில் நடைபெறுகிறது..!

பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்
News
பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்

நாணயம் விகடன் வார இதழ், சரித்திரம் படைத்த பிசினஸ் சாதனையாளர்களுக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக `பிசினஸ் ஸ்டார் அவார்டு' வழங்கும் நிகழ்ச்சி 2017-ம் ஆண்டு முதலே நடைபெற்றுவருகிறது.

பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்... நாளை மாலை சென்னையில் நடைபெறுகிறது..!

நாணயம் விகடன் வார இதழ், சரித்திரம் படைத்த பிசினஸ் சாதனையாளர்களுக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக `பிசினஸ் ஸ்டார் அவார்டு' வழங்கும் நிகழ்ச்சி 2017-ம் ஆண்டு முதலே நடைபெற்றுவருகிறது.

Published:Updated:
பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்
News
பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்

நாணயம் விகடன் நடத்தும் பிசினஸ் ஸ்டார் அவார்டு நிகழ்ச்சி நாளை வெள்ளிக்கிழமை 16.12.2022 அன்று மாலை சென்னையில் நடைபெறவிருக்கிறது.

நாணயம் விகடன் வார இதழ், சரித்திரம் படைத்த பிசினஸ் சாதனையாளர்களுக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக பிசினஸ் ஸ்டார் அவார்டு வழங்கும் நிகழ்ச்சி 2017-ம் ஆண்டு முதலே நடைபெற்றுவருகிறது.

பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்
பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், எலான் மஸ்க் என உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர்களின் சாதனைகளை நாம் பேசுகிறோம். இந்திய அளவில் பெரும் தொழிலதிபர்களின் சாதனைகளையும் நாம் பேசத் தவறியதில்லை. ஆனால், தமிழ்நாட்டிலும் பல முக்கியமான பிசினஸ்மேன்கள் உருவாகி, நம் நாட்டின் பொருளாதாரத்தை மிகப் பெரிய அளவில் உயர்த்தி இருக்கிறார்கள்; இன்றும் உயர்த்தி வருகிறார்கள். அது மாதிரியான தொழில்முனைவோர்களைப் பாராட்டி கெளரவிப்பதற்காகவே இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு, ஏழு முக்கியமான பிரிவுகளில் முக்கியமான தொழிலதிபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. செல்ஃப்மேட் ஆன்ட்ரபிரினர் அவார்டு, பிசினஸ் மென்டார் அவார்டு, பிசினஸ் மென்டார் அவார்டு (இன்ஸ்ட்டிடியூஷன்), பிசினஸ் பீனிக்ஸ் அவார்டு, பிசினஸ் கார்ப்பரேட் கான்சியஸ்னஸ் அவார்டு, பிசினஸ் இன்னோவேஷன் அவார்டு, பிசினஸ் ரைசிங் ஸ்டார் அவார்டு, ஸ்டார்ட் அப் சேம்பியன் அவார்டு என ஏழு கேட்டகிரியில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

கடந்த ஆண்டுகளில் சுந்தரம் பாசர்னஸ் நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் கிருஷ்ணா, ஜி.ஆர்.டி நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன், முருகப்பா குருப் நிறுவனத்தின் தலைவர் எம்.எம்.முருகப்பன், டி.டி.கே குருப் நிறுவனத்தின் தலைவர் ஜகந்நாதன், கே.பி.ஆர் நிறுவனத்தின் தலைவர் கே.பி.ராமசாமி, சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தின் தலைவர் செளந்தர்ராஜன், பொன்ப்யூர் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொன்னுசுவாமி, கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன், ஃப்ரெஸ்டெஸ்க் நிறுவனத்தின் சி.இ.ஓ க்ரிஷ் மாத்ருபூதம், கிஷ்ஃப்ளோ நிறுவனத்தின் சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம் உட்பட பலரும் இந்த விருதைப் பெற்று, கெளரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்
பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்

இந்த ஆண்டு ஏழு கேட்டகிரிகளில் ஏழு முக்கியமான தொழிலதிபர்கள் கெளரவிக்கப்பட இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை விருந்தினராக வருகை தந்து, சிறப்புரை ஆற்றவிருக்கிறார்.

சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன். கவின்கேர் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சி.கே.ரங்கநாதன் `Thriving in the VUCA World’ என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றவிருக்கிறார்.

இந்த ஆண்டும் நடக்கவிருக்கும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் முக்கியமான ஸ்பான்சராக உள்ளது. செரோ சர்ட்ஸ் & ட்ரவுசர்ஸ் நிறுவனம் அசோசியேட் ஸ்பான்சராகவும், நெக்ஸ்ட் நிறுவனம் அவுட்டோர் பார்ட்னராகவும் இருக்கின்றன.