‘‘வயதும் அனுபவமும்தான் தலைமைப் பணியை ஏற்க அடிப்படையானத் தகுதியாக முன்பு இருந்தது. ஆனால், இன்றைக்குப் பட்டப்படிப்பு முடித்தவுடனே தலைமைப் பொறுப்புக்கு வருபவர்கள் ஏராளம். உலக அளவில் வெற்றிகரமாகச் செயல்பட்ட தலைவர்களை உற்றுநோக்கி, அவர்களுடைய குணாதிசயங்களை ஆய்வு செய்து, அதில் இருந்து 60 குணாதிசயங்களைக் கண்டறிந்து இருக்கிறார்கள். இதில் எட்டு குணாதிசயங்கள் பொதுவாக இருக்கின்றன. இதற்கும் வயதுக்கும் சம்பந்தமே இல்லை. இந்தக் குணாதிசயங்களை ஒவ்வொரு பணியாளரும் மேம்படுத்திக் கொண்டால் தலைமைப் பணியைச் சிறந்த முறையில் கையாளலாம்’’ என்கிறார் ் தலைமைப் பணிக்கான சர்வதேச அமைப்பின் சான்றிதழ் பெற்றப் பயிற்சியாளராக இருக்கும் சிவக்குமார். இன்றைய இளைஞர்கள் தலைமைப் பணிக்கு சரியான முறையில் திட்டமிடவும், அதற்கான திறன்களை வளர்த்துக்கொள்ளவும் தேவையான வழிகளைச் சொல்கிறார் அவர்.

மாற்றங்களுக்கேற்ப செயல்படுதல்

‘‘தலைமைப் பணியில் இருப்பவர்களுக்கு, பல்வேறு திட்டங்களைப் பிரச்னையே இல்லாமல் செயல்படுத்தக் கூடிய திறன் இருக்கவேண்டும். தலைமைப்பணியில் இருப்பவர்கள், தன்னுடைய வளர்ச்சியை மட்டும் பெரிதாக நினைக்காமல், தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களின் பணிக்கான தேவைகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து அந்தத் திறன்களை வளர்க்க ஊக்குவிக்க வேண்டும். இது தலைமைப் பணியில் இருப்பவரின் மீது ஈர்ப்பினை உருவாக்கும்.

மாற்றங்களைக் கடைப்பிடிப்பதில் முதல் நபராக இருக்கவேண்டும். நிறுவனத்தில் ஏதேனும் புதுமையைக் கொண்டுவரும்போது அதை வரவேற்று செயல்படுத்துவதில் முதல் நபராக இருக்க வேண்டும். நிறுவனத்தில் ஒரு புதிய விஷயத்தை செய்துகாட்டி அதனை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். இதன் மூலம் மற்றவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விளங்க முடியும்.

குழுவுக்குத் தூண்டுகோல்

பெரும்பாலான நிறுவனங்களில், வேலையில் இருந்து விலகுபவர்கள், நிறுவனம் பிடிக்கவில்லை என்று வேலையை விட்டுச் செல்வதில்லை. மேலாளர்களைப் பிடிக்கவில்லை என்று சொல்லியே 80% பேர் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார்கள். 20% பேர் மட்டுமே சம்பள உயர்வு மற்றும் இதர காரணங்களுக்காக வேலையை விட்டு விலகுகிறார்கள். இதற்குக் காரணம், தலைமைப் பண்பைச் சரியாகப் பயன்படுத்தாததுதான். 10 வருடம், 20 வருட அனுபவம் உள்ளவர்கள், உடன் பணியாற்று பவர்களுடன் பெரிய பிணைப்பு எதுவும் இல்லாமல் இருப்பார்கள். இவர்களைப் பணியில் இருக்கும் பெரும்பாலானோருக்குப் பிடிப்பதில்லை. பணியில் இருப்பவர்களுடன் சகஜமாக கலந்து பழகும் பழக்கம் இருக்கவேண்டும். அப்போதுதான் குழுவினை எளிதாக அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்ல முடியும்.

உறவுநிலையில் சரிசமம்

தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், ஊழியர்களுக்கு இடையே நல்லுறவைப் பேண வேண்டும். பணியாளர்களில் ஒரு சிலருக்கு ஆதரவாகவும், ஒரு சிலருக்கு எதிராகவும் செயல்படக் கூடாது. இதனால் நல்ல நிலையில் உள்ள பணியாளர்களிடையே உறவில் விரிசல் உருவாகும். இதனைத் தவிர்க்க, அலுவலக அளவிலும், பணியாளர்கள் மத்தியிலும் சரிசமமாகப் பழகவேண்டும். இது தலைமைப் பணியில் இருப்பவர்களுக்கு மிகவும் அவசியம்.

ஆழமாக உற்றுநோக்குதல்

எந்தவொரு விஷயத்தையும் பிரித்துப் பார்த்து ஆழமாக உற்றுநோக்கும் திறன், தலைமைப்பதவியில் இருப்பவர்களுக்கு அவசியம் இருக்கவேண்டும். சின்னச் சின்ன விஷயங்களை கூடக் கவனமாகப் பார்த்து, என்னென்ன விஷயங்கள் சொல்லப்படுகின்றன என்றும், என்னென்ன விஷயங்கள் சொல்லாமல் மறைந்து இருக்கின்றன, என்றும் அலசி ஆராய்ந்து, அனைத்தையும் கண்டுபிடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பிரச்னைக்கு எளிய தீர்வு

தலைமைப் பணியில் இருப்பவர்கள், பிரச்னைக்கு எப்படித் தீர்வு காண்கிறார்கள், அவர்களிடம் அந்தத் திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை முக்கியமாகக் கவனிக்கிறார் கள். ஒரு பிரச்னைக்கு எந்தெந்த வகையில் தீர்வுக் காணலாம் என்று சிந்தித்துச் செயல்படவேண்டும். கொஞ்சம் யோசித்தாலே பல பிரச்னைகளுக்கு எளிய முறையில் தீர்வு கண்டறிய முடியும். ஆனால், அந்த விஷயத்தை உள்வாங்கவே மறுத்து, முடிவெடுப்பதற்குக் காலம் தாழ்த்துவது, முடிவெடுக்கும் கடமையில் இருந்து தப்பிக்க நினைக்கும்போதுதான் பிரச்னைப் பெரிதாகும்.

இடர்மேலாண்மை & பகுப்பாய்வுத் திறன்

நிறுவனத்தில் அவ்வப்போது எதிர்பாராத வகையில் இடர்கள் வரும். அந்த இடர்களை எப்படிக் கையாளுவது, அந்த இடர்களின் பின்புலத்தை அறிந்து, அதனை எவ்வாறு முறியடிப்பது, இடர்கள் வந்தபோதிலும் நிறுவனத்தில் எந்தவிதமான தேக்கநிலையும், பின்னடைவும் வராமல், ஏற்கெனவே நடந்து வரும் பணிக்குத் தடங்கல் இல்லாமல் செயல்படும் வகை யில், திட்டமிட்டுக் கையாள வேண்டும். பிரச்னை எப்போது வந்தாலும், அதை உரிய முறையில் பகுப்பாய்வு செய்து, சரியான தீர்வைக் கண்டறிய வேண்டும். இதற்கானத் திறனை சரியாக வளர்த்துக் கொண்டால் மட்டுமே தலைமைப் பணியில் தொடர்ந்து இருக்க முடியும்.

நுண்ணறிவைப் பயன்படுத்துங்கள்

எந்தப் பிரச்னை வந்தாலும் முதலில் பதற்றப் படாமல் எதிர்கொள்ளவேண்டும். பதற்றமான சமயத்தில் நிதானத்தை இழந்துவிடக் கூடாது. இதற்கு நம்முடைய மனதைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். பிரச்னையை எதிர்கொள்ள புத்தியை எந்த அளவுக்குப் பயன்படுத்துவது என்று யோசிப்பதில் தெளிவாக இருக்கவேண்டும். இவ்வாறு செயல்படும்போது எதிர்வரும் பிரச்னைகள் பலவற்றைத் தவிர்க்கலாம்.

இடமறிந்து செயல்படுதல்

நிகழ்வுகளுக்கும், இடத்துக்கும் தகுந்தாற்போல் தலைமைப் பண்பைப் பயன்படுத்துவது பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுத் தரும். தேவைக்குத் தகுந்தாற்போல் செயல்படவேண்டும். அதுவே வெற்றிகரமாகச் செயல்படுவதற்கு வழிவகுக்கும்.

பணியாளர் மேலாண்மை

தலைமைப் பணியில் இருப்பவர்களுடன் பணியாளர்கள் சேர்ந்து வேலை பார்க்க விரும்புகிற நிலையை அவர்கள் உருவாக்கவேண்டும். அவரிடம் வேலை செய்தால் நிறையக் கற்றுக்கொள்ளலாம் என்று நிலையை ஏற்படுத்த வேண்டும். தன்னுடன் வேலை செய்தால், நெகிழ்வுத் தன்மையுடன் (Flexibility), வசதியாகவும் (Comfortable) இருக்கலாம் என்பதை உணர வைத்தாலே போதும், எல்லோரும் தலைமைக்காக வேலை செய்யத் தொடங்கிவிடுவார்கள். இதனால் தலைமைப் பதவியில் இருப்பவர்களின் புகழ் பரவுவதுடன் உற்பத்தியும் பெருகும்.

தொடர்பியல் திறன்

நல்ல தலைமைப் பண்பு வேண்டும் என்றால் தொடர்புகொள்ளும் திறன் அதிக அளவில் இருக்க வேண்டும். பணியாளர்களிடமிருந்து எளிதில் தகவலையும், மேம்பாட்டுக்கான ஆலோசனை களையும் பெறுகிற மாதிரி அவர்களுடன் நெருங்கிய உறவை வைத்திருக்க வேண்டும். தலைமைப் பணியில் இருப்பவர்களும் உடனுக்குடன் தகவலை பணியாளர்களுக்குத் தெரிவிக்கவேண்டும். தனது நிறுவனம் குறித்த விஷயங்களை, பொது இடங்களில் எளிதாக சொல்லவும் தெரிந்திருக்கவேண்டும்.

இந்தப் பத்து திறனையும் சரியான முறையில் ஒருவர் தொடர்ந்து பின்பற்றினால் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறுவது எளிதாக இருக்கும். இது தவிர, கதை சொல்லல் (Story Telling), சூழல் அமைப்பினை (context setting) உள்வாங்கி அதற்குத் தகுந்தாற்போல் செல்வது, தங்களுடைய துறையில் என்ன நடக்கிறது (key trends) என்பதைக் கவனிப்பது போன்ற திறன்களும் இருப்பது அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக, பலருடன் உரையாடும் திறமையும் கொண்டிருக்கவேண்டும். இந்தத் திறமைகள் எல்லாம் இருப்பவரே தலைமைப் பணிக்குப் பொருத்தமானவராக இருப்பார்’’ என்கிறார் சிவக்குமார்.

தலைமைப் பணிக்கு வரவிரும்புகிறவர்கள் இந்தத் திறன்களை வளர்த்துக் கொள்ளலாமே!

ஜாப் கார்னர்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 2,313 பணியிடங்கள்

பணியின் பெயர்: புரபஷனரி ஆபீஸர்

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

வயது வரம்பு: 30 வயது

விண்ணப்பக் கட்டணம் : ரூ.600 (பொது பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு). இதரப்பிரிவினருக்கு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 6-3- 2017.

மேலும் விவரங்களுக்கு: wwww.sbi.co.in

சென்னைக் குடிநீர் வாரியத்தில் 322 பணியிடங்கள்

பணியின் பெயர்: அலுவலக பணி முதல் பொறியாளர் பணி வரை

கல்வித்தகுதி: பொறியியல் பட்டப்படிப்பு, அலுவலகப் பணிக்கு பி.காம். பட்டப்படிப்பு

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500 (பொதுப்பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு). இதரப் பிரிவி னருக்கு கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 06-03-2017.

மேலும் விவரங்களுக்கு: www.chennaimetrowater.gov.in

தாது எக்ஸ்ப்ளோரஷன் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 33 பணியிடங்கள்

பணியின் பெயர்:  எக்ஸிக்யூட்டிவ் டிரையினி

கல்வித்தகுதி: எம்.எஸ்ஸி ஜியாலஜி, ஜியோ பிசிக்ஸ் படிப்பு. இவர்கள் கேட் தேர்வு எழுத வேண்டும்.

வயது வரம்பு: 28

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 3-3-2017.

மேலும் விவரங்களுக்கு: http://www.mecl.gov.in/

இஸ்ரோ நிறுவனத்தில் 87 பணியிடங்கள்

பணியின் பெயர்: சயின்டிஸ்ட் / இன்ஜினீயர்

கல்வித்தகுதி: எலெக்ட்ரானிக்ஸ் / மெக்கானிக்கல் / கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களில் 65% மதிப்பெண்ணுடன் பொறியியல் பட்டப்படிப்பு

வயது வரம்பு:35 வயது

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 7-3- 2017.

மேலும் விவரங்களுக்கு: www.isro.gov.in