“எல்லோருமே உழைப்பு, உழைப்பு என்று வேகமாக ஓடுகிறோம். சிலர் 10 மணி நேரம், 12 மணி நேரம்கூட உழைக்கிறார்கள். இதனால் வேலையில் வெறுப்பு வந்துவிடுகிறது. இந்த நிலை வரக்கூடாது என்பதற்காகவே, குறிப்பிட்ட நேரத்தில் உழைக்கவேண்டும், மற்ற நேரத்தில் குடும்பத்துடன் நேரத்தைச் செலவு செய்யவேண்டும் என்று நினைத்து, பணியாளர் நலச் சட்டத்தை வகுத்திருக்கிறார்கள். நல்ல மனநலனும், உடல்நலனும் இருந்தால்தான் வேலையின் மீது வெறுப்பு இல்லாமல் ஆர்வத்துடன் பணியாற்ற முடியும்” என்கிறார் டி அண்ட் ஏ (D & A consulting Services) தொழிலாளர் நலச் சட்ட ஆலோசனை நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஆனந்த். ஒரு நிறுவனத்தில் பணிக்குச் சேரும்போது என்னென்ன விஷயங்கள் தெரிந்திருக்கவேண்டும் என்பதைப் பற்றி விரிவாகப் பேசினார் ஆனந்த்.

நிறுவனம் தரும் கடிதத்தைக் கவனமாகப் படியுங்கள்

ஒரு நிறுவனத்தில் பணியாளராகச் சேர்கிறீர்கள். அந்த நிறுவனத்தில் நிறைய பேர் இருக்கலாம். அப்படிச் சேரும்போது உங்களிடமிருந்து நிறுவனம் என்ன எதிர்பார்க்கிறது என்று நீங்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம். நீங்கள் நிறுவனத்தில் சேரும்போது வழங்கப்படும் அப்பாயின்ட்மென்ட் கடிதத்தில் உள்ள ஷரத்துகளைப் நன்றாகப் படித்துப் பார்க்க வேண்டும். உங்களுடைய சம்பளத்தை எப்படிப், பிரித்துத் தருகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

ஒரு சில நிறுவனங்கள், ‘முன்அறிவிப்பு இல்லாமல் வேலையில் இருந்து விலகினால், மூன்று மாத சம்பளத்தைத் திரும்பத் தரவேண்டும்’ என்று போட்டிருப்பார்கள். ஆனால், நிறுவனத்தில் சேர்பவர்கள் இந்த விதிமுறையை நன்றாகப் படித்து இருக்கமாட்டார்கள். கடைசியில் மன வருத்தத்தோடுதான் பணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும்.

எந்த நிறுவனமாக இருந்தாலும் பணியாளர்களின் சான்றிதழ்களின் நகல்களை மட்டுமே வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். அசல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொள்ளக் கூடாது. எனவே, உங்களின் அசல் சான்றிதழ்களை கேட்டால் கொடுக்காதீர்கள். ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்து போட்டுவிட்டால், அதனை ஏற்றுத்தான் ஆகவேண்டும். எனவே, வேலைக்குச் சேரும் முன்பு ஒப்பந்தப் படிவத்தை நன்றாகப் படித்து பார்ப்பது அவசியம்.

எதிர்பாராதவிதமாக வரும் மருத்துவ செலவுகள்

பத்து பேருக்கு மேல் பணியாற்றும் நிறுவனத்தில் ஒருவரின் நிகர சம்பளம் 21,000 ரூபாய்க்குக் குறைவாக இருந்தால், அவர் பெயர் தொழிலாளர் நலக் காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐ) பதிவு செய்யப்பட வேண்டும். பணியாற்றுபவரோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ளவர்களோ நோய்வாய்ப்பட்டால் அவசர சிகிச்சை மேற்கொள்ள தொழிலாளர் நலக் காப்பீடு உதவும்.

மேலும், ஒரு பணியாளர் இரண்டு, மூன்று மாதங்கள் படுத்த படுக்கையாக இருக்க நேர்ந்தால், அவருக்கு இஎஸ்ஐ நிறுவனத்திடமிருந்து ஊதியத்துக்கு இணையான இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். பணியாளருக்குக் கால் அல்லது கையில் அடிபட்டால், அவரால் வேலை செய்ய முடியாது. உற்பத்திப் பிரிவில் வேலையின் மூலதனமே கைதான். கையை இழந்தால் அவருக்கு 100% முழு இழப்பீடு வழங்கப்படும்.

மாதத்தில் ஏதேனும் ஒரு நாள் விடுப்பு வழங்கவேண்டும். அதற்கு மேல் விடுப்பு எடுக்கும்போது சம்பள இழப்பு ஏற்படும். அந்தச் சம்பள இழப்பை இஎஸ்ஐ ஈடுசெய்யும்.

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவருக்கு ஒரு நாள் சம்பளம் 330 ரூபாய் என்ற அளவில் இருக்கும். நோய்வாய்ப்பட்டு படுத்தால் 91 நாட்கள் வரை 70 சதவிகிதத் தொகையை இஎஸ்ஐ, இழப்பீட்டுத் தொகையாக வழங்கும். நீண்ட காலத்தில் நோய் தாக்கம் இருந்தால், இரண்டு ஆண்டுகள் வரை 80% வரை இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். பெண்கள், குழந்தைப்பேறுக்காக செல்லும்போது அவர்களுக்கு 26 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கும். குடும்பக் கட்டுப்பாடு செய்யும்போது 14 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும்.

வைப்புத்தொகை அவசியம்

இருபது பணியாளர்களுக்கு மேல் இருக்கும் நிறுவனமாக இருந்தால், தொழிலாளர் வைப்பு நிதியில் (EPF - Employment Provident Fund) சேர்க்க வேண்டும். இதில், நிறுவனத்தின் சார்பில் அடிப்படை சம்பளத்தில் இருந்து 12%, அதற்கு இணையாக பணியாளர் தன்னுடைய பங்களிப்பாக 12% வழங்கவேண்டும். இவ்வாறு செலுத்தப்படும் தொகைக்கு ஆண்டுக்கு 8.65% கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. பணியாளருக்குத் திருமணம், வீடு வாங்குதல், மருத்துவம் போன்ற செலவீனங்கள் வந்தால், பணியாளர் வைப்புத் தொகையிலிருந்து தேவையான தொகையை எடுக்கமுடியும்.

ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாறும்போது பிஎஃப் கணக்கை முடிவுக்குக்கொண்டு வந்து, பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. இப்படிச் செய்யக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. இனி, நிறுவனங்களில் வேலையே செய்யமாட்டேன் என்கிறபோதும், ஓய்வுப்பெறும்போதும் மட்டுமே பிஎஃப் கணக்கை முடிவுக்குக் கொண்டுவந்து பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

திடீரென ஏற்படும் இழப்பினை சமாளிக்க..

ரூ.21 ஆயிரத்துக்கும் அதிகமாகச் சம்பளம் பெறுபவர்களுக்குப் பணியாளர் இழப்பீட்டுச் சட்டம் இருக்கிறது. அவர்கள் அடிபட்டாலோ அல்லது பணி செய்யும்போது இறந்துவிட்டாலோ அவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதையும், எதிர்காலத்தில் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்பதையும் கணக்கிட்டு, ஒரு பெருந்தொகையை அவரது குடும்பத்துக்கு வழங்கவேண்டும். உதாரணத்துக்கு, ரூ.30,000 சம்பளம் வாங்கிவரும் 30 வயதான ஒருவர் திடீரென இறந்துவிட்டால், 58 வயது வரை அவருக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்குமோ, அதனைக் கணக்கிட்டு பெரும் தொகை இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.

பொதுவாக, தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எவ்வளவு தொகைக்கு பாலிசி எடுத்து இருக்கிறாமோ, அந்தத் தொகைதான் நமக்குக் கிடைக்கும். ஆனால், இந்தத் தொகை குடும்பத்தைக் காப்பாற்ற உதவாது. பணியாளர், வீட்டுக் கடன் வாங்கி இருப்பார். குழந்தைகளை நல்ல பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைத்திருப்பார். இவையெல்லாம் பாதிக்காத வகையில் அவர்களுக்கு உதவவேண்டும். சம்பளம் வாங்கும் அளவு, அவருடைய வயது, திறன் போன்றவற்றையெல்லாம் கணக்கிட்டுத்தான் இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும். இந்த வகையான இன்ஷூரன்ஸ் திட்டங்களை பல பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன.

போனஸும், பணிக்கொடையும் கிடைக்கும்

ரூ.21 ஆயிரத்துக்குக் குறைவாக ஒருவரது சம்பளம் இருந்தால், அந்த நிறுவனம் லாபத்தில் செயல்பட்டால், போனஸ் வழங்கவேண்டும். அதாவது, குறைந்தபட்சம் 8.33% போனஸ் வழங்க வேண்டும். அதற்கு மேல் வழங்குவது நிறுவனத்துக்கு நன்மதிப்பைக் கொடுக்கும். பத்து பணியாளர் களுக்கு அதிகமானோர் பணியாற்றும் நிறுவனத்தில் ஐந்து வருடங்களுக்கு மேல் பணியாற்றி இருந்தால், ஓய்வு பெறும்போது அல்லது பணியில் இருந்து விலகும்போது பணிக்கொடை வழங்கவேண்டும். எவ்வளவு ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்களோ, அதற்குத் தகுந்தாற்போல் பணிக்கொடை வழங்க வேண்டும்.

சில பேர் இரண்டு வருடங்கள் வேலை பார்த்திருப்பார்கள். பணியாற்றிக்கொண்டிருக்கும் போது இறந்தால், அவர் எவ்வளவு காலம் பணியாற்றிருப்பார் என்று கணக்கிட்டு அதற்குத் தகுந்தாற்போல் பணிக்கொடை வழங்க வேண்டும். உதாரணமாக, ஒருவர் 4 வருடங்கள் 6 மாதம் பணியாற்றி இருந்தால், அதை ஐந்து ஆண்டுகளாகக் கணக்கிட்டு வழங்கவேண்டும். அதேபோல, ஐந்து வருடங்கள் ஏழு மாதம் பணியாற்றி இருந்தால், அதை ஆறு ஆண்டுகளாக கணக்கில் எடுத்துக்கொண்டு வழங்கவேண்டும்.

விடுமுறையினைத் தெரிந்துகொள்வோம்

ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தபட்சம், ஒன்பது நாள்கள் விடுமுறை நிச்சயம் வழங்கிட வேண்டும். இதில் நான்கு நாள்கள் (சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம், காந்தி ஜெயந்தி) அரசு அறிவிக்கும் விடுமுறைகள். மீதி ஐந்து நாள்கள் நிறுவனத்தின் தேவைகளையும், பணியாளர்களின் தேவைகளையும் கணக்கிட்டு வழங்கவேண்டும். அந்த ஐந்து நாள்கள், எந்தெந்த நாள்கள் என்பதை முன்னரே நிறுவனம் அறிவிக்கவேண்டும். ஒருவர், இந்த ஒன்பது விடுமுறை நாள்களில் வேலை பார்த்தால், அடுத்துவரும் மூன்று பணிநாள்களில் விடுமுறை வழங்கவேண்டும். அவ்வாறு வழங்கப்படவில்லை எனில், அந்த வேலை நாள் களுக்கு இரண்டு மடங்கு சம்பளம் வழங்கவேண்டும்.

வேலை நேரத்தில் பணியாற்றுவோம்

ஒரு நாளைக்கு `பிரேக்கிங் ஹவர்ஸ்’ என்றழைக்கப்படும் ஓய்வு நேரத்தையும் சேர்த்து ஒன்பது மணி நேரம்தான் வேலை பார்க்க வேண்டும். முன்பு உற்பத்திப் பிரிவில் வேலை பார்த்தவர்கள் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை ஓய்வும், மதிய உணவு வேளையில் ஓய்வும் எடுத்துக்கொண்டார்கள்.

ஆனால், இன்றைக்கு ஐ.டி நிறுவனத்திலோ அல்லது இதர நிறுவனங்களிலோ பணியாற்றும் நபர்களுக்கு, எட்டு மணி நேரம் என்பதற்குப் பதிலாக 10, 12 மணி நேரம் அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது வேலையில் வெறுப்பு வந்துவிடுகிறது.

வேலையில் வெறுப்பு உண்டாகாமல் இருக்க, குறிப்பிட்ட நேரம் மட்டும் உழைக்கவேண்டும். எதிர்காலம் குறித்து யோசிக்கவேண்டும், குடும்பத்துடன் நேரத்தைச் செலவு செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு 8 மணி நேரமும், ஒரு வாரத்தில் 48 மணி நேரமும், ஓவர் டைம் எனில், ஒரு வாரத்துக்கு 6 மணி நேரம் என்றும் விதிமுறை இருக்கிறது.

இதுபோல, பல எளிமையான விதிகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் முழுமையாகப் புரிந்துகொண்டு நிறுவனமும், பணியாளரும் பரஸ்பரம் ஒற்றுமையுடன் செயல்பட்டால், நிறுவனமும் பணியாளர்களும் வளர்ச்சிப் பெறுவது நிச்சயம்” என்றார் ஆனந்த்.

நிறுவனங்கள் மட்டுமல்ல, பணியாளர்களும் கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை!

ஜாப் கார்னர்

இந்திய விமான நிறுவன ஆணையத்தில் 147 பணியிடங்கள்

பணியின் பெயர்: தீயணைப்பு வீரர்

கல்வித்தகுதி: மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், தீயணைப்பு பிரிவில் டிப்ளமோ அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி.

வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 30 வயது, பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு 33 வயது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிப் பிரிவினருக்கு 35 வயது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (பொதுப் பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு). இதர பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-03-2017.

மேலும் விவரங்களுக்கு: http://www.aai.aero/employment_news/

மத்திய அரசின் சிவில் சர்வீஸ் பணியிடங்கள்

பணியின் பெயர்: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற பணிகள்

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பு

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (பொதுப் பிரிவு மற்றும் பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு). இதர பிரிவின ருக்குக் கட்டணம் இல்லை.

வயது வரம்பு: 21

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17-03-2017.

மேலும் விவரங்களுக்கு:http://www.upsc.gov.in/

தமிழ்நாடு அரசுத் துறையில் புவியியல் உதவி வல்லுநர் - 53 பணியிடங்கள்

பணியின் பெயர்: புவியியல் உதவி வல்லுநர் பணி

கல்வித்தகுதி: முதுநிலைப் புவியியல் அல்லது ஜியாலஜி பட்டப்படிப்பு

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150

வயது வரம்பு: 30

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21-03-2017.

மேலும் விவரங்களுக்கு:http://www.tnpsc.gov.in/notifications/2017_05_not_eng_asst_geologist.pdf