“அலுவலகப் பணியில் இருப்பவர்களில் 80% பேர் பெரிய அளவில் பதவி உயர்வு பெற்று முன்னேறாமல், நடுத்தர அளவிலான பணியில் ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். மீதமுள்ள 20% பேர் மட்டுமே உயர் பொறுப்புள்ள பதவியை அடைகிறார்கள். 20 அல்லது 25 வயதில் வேலைக்குச் சேரும் ஒருவர் 45 வயது வரை நடுத்தரப் பதவியை அடையலாம். அதற்கு அடுத்து, உயர் பணியை அடைய எல்லோரும் முயற்சி செய்தாலும் சிலர் மட்டுமே அந்தப் பதவியை அடைகிறார்கள்.

உயர் பதவியை அடைபவர்களுக்கு என்ன மாதிரியான திறமை இருக்கிறது, என்ன மாதிரியான உத்திகளையும், ரகசியங்களையும் அவர்கள் கடைப்பிடித்தார்கள்? உங்களிடமிருந்து எந்த வகையில் வேறுபட்டு நிற்கிறார்கள் என்பதைக் கவனித்து, அதன்படி நீங்களும் நடக்க முயற்சித்தாலே போதும், நீங்களும் நிச்சயம் வெற்றி பெறமுடியும்” என்கிறார் ரூட் அண்ட் ஸ்டெம் ஆலோசனை நிறுவனத்தின் நிறுவனரும் ஆலோசகருமான பிரேம்குமார். இவர், உயர் பொறுப்பைப் பெறவும், அந்தப் பொறுப்பை தக்க வைத்துக்கொள்ளவும் தேவையான ஏழு திறன்களை விவரிக்கிறார்.

‘‘பொதுவாக, உயர் பதவியை அடைவதற்குச் செயல்திறன் (Performance) வேண்டும். இந்த செயல்திறனை அளக்க கீ பெர்ஃபாமன்ஸ் இன்டிகேட்டர், கீ ரிசல்ட் ஏரியா (Key Performance Indicators, Key Result Areas) என பலவிதமான அளவுகோல்கள் உள்ளன. செயல்திறன் என்பது அடிப்படையான ஒரு விஷயம் மட்டுமே. இந்த ஒன்றை வைத்து ஒருவரது வளர்ச்சியையும், அடுத்தடுத்த நிலையையும் தீர்மானித்துவிட முடியாது. இது தவிர, வேறு பல விஷயங்களையும் பார்க்க வேண்டும்.

அலுவலக அளவில் நடுத்தரப் பணியில் இருந்து உயர் பொறுப்புக்கு செல்லும்போது ஏழு விதமான திறன்கள் தேவை. உயர்பதவியை அடைய விரும்பும் ஒருவர், இந்த ஏழு திறன்களையும் வளர்த்துக்கொள்வது அவசியம்.

1. தொடர்பியல் திறன் (Communication Skills)

ஒரு பணியாளருக்கு இரண்டுவிதமான தொடர்பியல் திறன் மிகவும் அவசியம். உரையாடும் திறனும் வேண்டும்; எழுதும் திறனும் வேண்டும். பலருக்கும் நன்றாகப் பேசும் திறன் இருக்கும். ஆனால், எழுத்தாற்றல் என்பது குறைவாக இருக்கும். பேசும் திறனோடு, எழுதும் திறனும் அவசியம். உயர்பதவிக்கு போகும்போது நிறுவனத்துக்குத் தேவையான மூலப்பொருள்களை வழங்குபவர்கள், வாடிக்கையாளர்கள், வங்கி, பங்குதாரர்கள், பணியாளர்கள் எனப் பலருக்கும் நிறையக் கடிதங்களை எழுத வேண்டியிருக்கும். மேலும், திட்ட வரைவுகள் குறித்தும், திட்ட மதிப்பீடுகள், நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விவரித்து பலருக்கும் தகவல் அனுப்ப வேண்டியிருக்கும். ஆகையால், நன்கு பேசுவதுடன் எழுதும் திறனையும் ஒருவர் நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

2. மேடைப் பேச்சு (Public Speaking)

பதவி உயரும்போது மேடையில் ஏறிப் பேச வேண்டிய சூழ்நிலை வரும். உங்களுடைய அலுவலக சகாக்கள் கூட்டத்திலும், அலுவலகப் பணியோடு தொடர்பில் இல்லாதவர்களின் கூட்டத்திலும் பேசவேண்டியிருக்கும். ஆகையால், பொது இடங்களில் பத்து பேர் இருந்தாலும், நூறு பேர் இருந்தாலும் தைரியமாக தன் கருத்தைச் சொல்வதற்கும், பேசுவதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும். சில சமயங்களில் ஊடகங்களிடம் பேச வேண்டியிருக்கும். மேலும், பொது இடங்களில் பேசுவதற்கு என்று மேனரிசம் உள்ளது. அதனையும் சரியாகச் செய்கிறோமா என்று பார்த்துக்கொண்டு, மேடையில் பேசும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள.

3. தொழில் பிரிவின் கள அறிவை (Industrial Domain Knowledge) மேம்படுத்துதல்

ஒரு நிறுவனத்தின் தொழில் பிரிவில் இருப்பவர்கள், மற்ற நிறுவனங்களின் தொழில் பிரிவில் என்ன நடக்கிறது என்பதை நுணுக்கமாக அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் போட்டி நிறுவனங்கள் என்னென்ன மாதிரியான தொழில் நுட்பத்தைக் கடைப்பிடிக்கின்றன. எந்தெந்த வகையில் விற்பனையை அதிகரிக்கின்றன, எந்தெந்த முறையில் செலவைக் குறைக்கின்றன, எங்கிருந்து மூலப்பொருட்களை வாங்குகின்றன, விற்பனைக்கு எப்படிப் பொருள்களைக் கொண்டு செல்கின்றன என்பதையெல்லாம் அறிந்திருப்பது அவசியம். கூடவே, உங்கள் துறையுடன் இணைப்பில் உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும். இது உங்கள் துறையில் உங்களை நிபுணத்துவம் உள்ளவராக மாற்றும்.

4. பொருளாதாரக் காரணிகளைக் (Macro-Economics) கவனிக்கவும்

அலுவலகப் பணியில் இருந்தாலும், உலக அளவில் என்னென்ன மாற்றங்கள் வருகின்றன என்பதைக் கவனிக்கவேண்டும். உலக அளவிலான மாற்றங்கள் உங்களுடைய துறையில் பாதிப்பையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தும். உதாரணத்துக்கு, அண்மையில் கொண்டுவந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை. இந்த அறிவிப்பு வந்தபின்பு ஏராளமான நிறுவனங்கள் திடீரென்று அப்படியே ஸ்தம்பித்து நின்றன. ஆனால், சில நிறுவனங்கள் சுதாரித்து, உடனடியாக உத்திகளை வகுத்து பிரச்னையில் இருந்து வெளியே வந்தன.

ஆட்டோ மொபைல் துறையில் கச்சா எண்ணெய் விலையேறினால், என்னென்ன மாதிரியான விளைவுகள் நடக்கும் என்பதைத் தெரிந்து வைத்திருக்கவேண்டும். டாலரின் மதிப்பு உயரும்போது இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை உயரும். ஐ.டி மற்றும் டெக்ஸ்டைல் போன்ற ஏற்றுமதி, இறக்குமதியைச் சார்ந்த துறையில் வேலை பார்ப்பவர்கள் இதனை நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும்.

5. நிதிமேலாண்மை அறிவு (Finance Management)

பல நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் நிதி மேலாண்மை அறிவைப் பெற்றவர்களாக இருப்பார்கள். ஒரு நிறுவனத்தின் லாபம், நஷ்டம் மற்றும் இருப்புக் கணக்கைக் (Profit & Loss, Balance Sheet) குறித்து அறிந்திருக்க வேண்டும். ஒரு இடத்தில் இருந்து பணம் வந்தால் அதனை எந்த வகையில் கையாளவேண் டும், எங்கு முதலீடு செய்யவேண் டும், எங்கு முதலீடு செய்தால், அதிக அளவில் வருமானம் வரும், கடன் தரவேண்டியவர் களுக்கு எவ்வளவு காலம் கழித்துத் தரலாம் (Payback period), மூலதனத்தின் மீதான வருமானம் (ROCE - Return on Capital Employed) போன்றவை குறித்து நிதி சார்ந்த அறிவும் இருக்கவேண்டும்.

6. குழு மேலாண்மை (Team Management)

ஒவ்வொரு பணிநிலையிலும் ஒரு விதமான குழு மேலாண்மை இருக்கும். திறமைமிகுந்தவர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி, அந்தக் குழுவை நிறுவனத்தின் தொலைநோக்குத் திட்டத்துக்குத் தகுந்தாற்போல் கொண்டு செல்லவேண்டும்.

7. நிறுவனப் பிரிவுகளுக்கு இடையேயான மேலாண்மை (Cross Functional Management)

ஒவ்வொரு தொழில் நிறுவனத்திலும் உற்பத்திப் பிரிவு, வர்த்தகப் பிரிவு எனப் பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் எந்தப் பிரிவில் இருக்கிறீர்களோ, அந்தப் பிரிவுக்கு தகுந்தாற்போல் மற்ற பிரிவுகளில் இருப்பவர்களை வேலை பார்க்க வைத்து, உங்கள் வேலையை எளிமையாக்கிக் கொள்ளலாம்.

இந்த ஏழு திறன்களைப் பட்டியலிட்டு, ஒன்று முதல் பத்து மதிப்பெண் என வைத்துக்கொண்டு உங்களுடைய திறனுக்குத் தனித்தனியாக மதிப்பெண் தரவேண்டும். எந்தத் திறனுக்குக் குறைவாக மதிப்பெண் இருக்கிறதோ, அந்தப் பிரிவில் குறிப்பிட்ட காலத்துக்குள் அதிகத் திறனைப் பெற நீங்கள் முயற்சிக்க வேண்டும்.

நடுத்தரப் பதவியில் இருக்கும்போது, ஒவ்வொரு பிரிவிலும் ஆறு மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தால் போதுமானது. ஆனால், நீங்கள் நிறுவனத்தின் உதவித் தலைவராக இருக்கும்போது ஒவ்வொரு பிரிவிலும் 8 முதல் 9 மதிப்பெண்களைப் பெற்றிருக்கவேண்டும். உதாரணமாக, மேடையில் பேசும் திறன் குறைவாக இருந்தால், ஒவ்வொரு மாதத்திலும், பத்து பேர் கலந்துகொள்ளும் நான்கு கூட்டத்திலும், 50 பேர் கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்திலும் நீங்கள் பேசத் திட்டமிடலாம். இதுபோல, எல்லாச் செயல்களையும் கவனிக்க வேண்டும். தொழில் துறையின் கூடுதல் அறிவுக்குத் துறை சார்ந்த ஆய்வு இதழ்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் படிக்க வேண்டும். இதற்குக் குறிப்பிட்ட நேரம் ஒதுக்க செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு நாள் எந்தவிதமான தொந்தரவும் இல்லாத இடத்துக்குச் சென்று, அலுவலகத்தில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம், குடும்பத்தின் இலக்கு என்ன, குடும்பப் பொருளாதாரத்துக்கு என்ன செய்ய வேண்டும், அடுத்த பணி உயர்வுக்கு என்னென்ன சவால்களைச் சந்திக்க வேண்டும், அதற்கு எந்த மாதிரியான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்க்கமாக யோசிக்க வேண்டும். குறைந்தது வருடத்துக்கு ஒரு நாளாவது இதற்கென ஒதுக்கி, எதிர்காலம் குறித்து யோசிக்க வேண்டும்.

இப்படி செய்யும்போது நிச்சயம் உங்களுக்குள் பாசிட்டிவ் எனர்ஜி பாயும். உயர் பொறுப்புக்கான தகுதியைப் பெறமுடியும்’’ என்றார் பிரேம்குமார்.

அலுவலகத்தில் உயர் பதவியை அடையும் ஆசை கொண்டவர்கள், இவர் சொல்லும் திறன்களை வளர்த்துக் கொள்ளலாமே!

படம்: சொ.பாலசுப்ரமணியன்

ஜாப் கார்னர்

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2510 பணியிடங்கள்

பணியின் பெயர்: ஜூனியர் டெலிகாம் ஆபிஸர் (JTO)

கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இன்ஸ்ட்ரூமென்டேஷன், டெலிகம்யூனிக்கேஷன். எம்எஸ்சி - கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். கேட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 (பொதுப் பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு). இதரப் பிரிவினருக்கு கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 06-04-2017.

மேலும் விவரங்களுக்கு: http://www.externalbsnlexam.com/

மதுரை மாவட்ட பால் கூட்டுறவு சங்கத்தில் 20 பணியிடங்கள்

பணியின் பெயர்: துணை மேலாளர், அலுவலர், விரிவாக்க அலுவலர்

கல்வித் தகுதி: பால்வள அறிவியல் அல்லது பால்வள பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பு, பி.டெக்., உணவுத் தொழில்நுட்பம், பால் வளத் தொழில்நுட்பம், உணவு சார்ந்த படிப்புகள் படித்தவர்கள்.

வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 30 வயது, இதரப் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 24-03-2017.

மேலும் விவரங்களுக்கு: http://www.aavinmilk.com/mdubmgrapp28.pdf