“எந்த நிறுவனமும் தன் பணியாளர்களிடம் நல்ல மனப்பான்மையையே (Attitude) முதன்மையாக எதிர்பார்க்கும். பார்க்கும் வேலையில் திறமையும் அறிவும் குறைவாக இருந்தாலும் பயிற்சியின் மூலம் அதைக்கொண்டு வந்துவிட முடியும். மனப்பான்மையில் குறையிருந்தால், அதை கஷ்டப்பட்டுத்தான் மாற்ற வேண்டும்.

மனப்பான்மை என்பது தனிநபரைச் சார்ந்தது. அதனால்தான் மனப்பான்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நல்ல மனப்பான்மையுடன் இருப்பவர்கள் மட்டுமே நிறுவனங்களில் உயர்பொறுப்புக்கு வருகிறார்கள்” என்கிறார் கவின்கேர் நிறுவனத்தின் மனித வளத்துறையின் துணைத்தலைவர் எஸ்.ராமச்சந்திரன். நிறுவனங்கள் தங்களது பணியாளர்களிடம் என்ன எதிர்பார்க்கின்றன, நிறுவனங்கள் வளர்ச்சியடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவரிக்கிறார் அவர்.

தரம் மிக முக்கியம்

‘‘பொதுவாக, வசதிகள் அதிகம் வேண்டுமென்றால் பொருளின் விலை அதிகமாகும்; வசதியைக் குறைத்தால் குறைந்த விலைக்குக் கொடுக்க முடியும் என்று சொல்வதுண்டு. இந்த மனநிலையில் இருந்தால் சந்தையில் நிற்க முடியாது. குறைந்த விலையில் தரத்தை அதிகப்படுத்தித் தர வேண்டும் என்ற மனநிலை வேண்டும். இந்த மனநிலையில் இருப்பவர்களுக்கு உற்பத்திப் பிரிவில் மட்டுமல்லாது, அனைத்துப் பிரிவுகளிலும் அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்த மனநிலையில் இருப்பவர்களால் மட்டுமே நிறுவனத்தில் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இவர்கள் தான் நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் துணைபுரிகிறார்கள்.

குறைந்த வளத்தில் நிறைய உற்பத்தி

குறைந்த வளத்தைக்கொண்டு அதிகளவில் பொருள்களை உற்பத்தி செய்ய முடியும் என்பவர்களுக்கும் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. இவர்களையும் நிறுவனங்கள் அள்ளிக்கொள்ளத் தயாராக இருக்கின்றன. குறைந்த வளத்தைக் கொண்டு அதிகளவில் உற்பத்தி செய்வதற்கு பெரியதாக யோசித்து, அதனை நிர்வாகத்திடம் தெரிவியுங்கள்.

நல்ல மனப்பான்மை அவசியம்

கடந்த காலங்களில் குறிப்பிட்ட அனுபவம் இருந்தவர்களை மட்டுமே பணிக்குத் தேர்ந்தெடுத்தார்கள். தற்போது வேறு பல பிரிவுகளில் வேலை பார்த்தாலும் அவர்களையும் பணிக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். உதாரணமாக, டெலிகாம் துறையில் இருப்பவர்களை சில்லறை வர்த்தக வணிகத்தில் சிறப்பாகப் பொருத்துகிறார்கள்.

தற்போதைய நிலையில், ஒருவருக்குத் துறை சார்ந்த அறிவு இருந்தால் மட்டும் போதாது; சரியான அணுகுமுறையும், மனப்பான்மையும் இருக்கிறதா என்றும் பார்க்கிறார்கள். சரியான அணுகுமுறையும், மனப்பான்மையும்தான் உயரமான இடத்துக்கு அழைத்துச் செல்லும். அதுவே அறிவையும், பெரிய பதவியையும் வழங்கும். நல்ல மனப்பான்மை யுடன் வரும்போது நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. ஆகையால், துறை சார்ந்த அறிவை இரண்டாவதாகவும், சிறந்த மனப்பான்மை உணர்வையே முதலாவதாகவும் கொண்டுதான் இப்போது ஒருவரை வேலைக்குத் தேர்வு செய்கிறார்கள்.

நல்ல நடத்தையும் (Behaviour) அவசியம்

அனைத்து நிறுவனங்களும் தங்களிடம் பணிபுரிபவர் சரியான நடத்தை உள்ளவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க் கின்றன. சரியான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதைத் தாரக மந்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பதை முக்கியமாக எதிர்பார்க்கின்றன.

குறைகள் இருந்தாலும், உடனே சரிசெய்துகொள்ளுங்கள்

பல நிறுவனங்களில், பணியாளரின் பணியில் சின்னக் குறைகள் இருந்தாலும் வெளியில் சொல்லத் தயங்கிவந்தார்கள். ஆனால், தற்போது நிலைமை மாறி, நிறுவனங்கள் பெரிய வளர்ச்சியை எதிர்பார்ப்பதால், ஆரம்ப நிலையிலேயே பணியாளர்களின் பணியில் குறைகளைச் சுட்டிக்காட்டி மேம்படுத்திக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள். நிறுவனத்தில் உங்கள் குறைகளைச் சுட்டிக்காட்டினால் உடனடியாக ஆரோக்கியமான மனப்பான்மையோடு ஏற்றுக் கொண்டு, அதை விரைவில் சரிசெய்து கொள்ளுங்கள்.

பங்குபெறுங்கள், பேசுங்கள்

நிறுவனத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தன் கருத்தைத் தெரிவிக்கும் கலாசாரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்குபெறும்போது வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.

அறிவும் திறமையும் இருந்தும் பேசவேண்டிய இடத்தில் பேசாமல் இருந்தால், நம்மால் நிறுவனத்துக்கு எந்த நன்மையும் இல்லை என்பதை உணர வேண்டும். உங்களுடைய கருத்தை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்துங்கள். நீங்களும் நிறுவனத்தின் முக்கிய அங்கம் என்பதை மனதில்கொள்ளுங்கள். நல்ல முறையில் சிந்தித்து அதை நல்ல முறையில் வெளிப்படுத்தவும் வேண்டும்.

செயல்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்

இன்றைக்கு யோசனைகள் குவிந்து கிடக்கின்றன. ஆலோசனைகள் சொல்வதற்கும் நிறையப் பேர் இருக்கிறார்கள். குழுவில் இருந்தும் ஏராளமான ஐடியாக்களை பெற முடியும். ஆனால், அந்த யோசனைகளை உடனடியாக, சரியான நேரத்தில் செயல்படுத்துவதற்கு சரியான நபராக இருக்க வேண்டும். எவ்வளவு விரைவாகவும்,

திறமையாகவும் செயல்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கிறது. எப்போதுமே ஐடியாவை வேகமாகச் செயல்படுத்தக்கூடிய நபர்களுக்கே முன்னுரிமை தருகிறார்கள், நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள்.

மாற்றங்களுக்கு வரவேற்புக் கொடுங்கள்

நிறுவனத்தில் மாற்றங்கள் கொண்டுவரும் போது அதனை வரவேற்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக, தொழில்நுட்ப மாற்றங்களைப் பாருங்கள். மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், வளர்ச்சி பெற முடியாது. நிறுவனத்தில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது அவரை ஏற்றுக் கொள்ளும் திறன் இருக்கிறதா என்பதைப் பார்ப்பார்கள். ஏற்றுக்கொள்ளும் திறன் உள்ளவர்தான் சந்தையின் தேவையையும், நிறுவனத்தின் தேவையையும் உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல் வேலை பார்க்க முடியும்.

நிறுவனத்தின் கலாசாரத்தை கடைப்பிடியுங்கள்

நாம் சிந்திப்பதுதான் செயல்வடிவம் பெறும். நல்ல எண்ணங்கள் வரவர, நம்முடைய நல்ல செயல்களும் அதிகரிக்கும். நல்ல செயல்கள்தான் நல்ல பழக்கமாக மாறும். நல்ல பழக்கங்கள் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். நம்பிக்கை அதிகரிக்கும்போது நம்பகத்தன்மை அதிகரிக்கும். நம்பகத்தன்மை அதிகரிக்கும்போது வளர்ச்சி பெற முடியும். ஆக, வளர்ச்சி பெற வேண்டும் என்ற நிறுவனத்தின் கலாசாரத்தில் நம்முடைய நல்ல எண்ணங்களைச் செயல்படுத்தினாலே மிகப்பெரிய இலக்கை அடைய முடியும்” என்றார் ராமச்சந்திரன்.

நல்ல மனப்பான்மைதான் ஒரு பணியாளருக்குப் பதவி உயர்வு உள்பட அனைத்து விஷயங்களையும் பெற்றுத் தருவதாக இருக்கிறது. நீங்களும் உங்கள் மனப்பான்மையை நல்லவிதமாக மாற்றிக் கொள்ளுங்கள். நிச்சயம் உயர் பதவியை நோக்கி முன்னேறுவீர்கள்.

படம்: சொ.பாலசுப்ரமணியன்

ஜாப் கார்னர்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 255 பணியிடங்கள்

பணியின் பெயர்: வெல்த் மேனேஜ் மென்ட் பிரிவில் சிறப்பு அதிகாரி பணி

கல்வித் தகுதி: நிதி நிறுவனங்களில் பணி அனுபவம்

வயது வரம்பு: 40 வயது

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600 (பொதுப் பிரிவு மற்றும் பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு) இதர பிரிவினருக்கு ரூ.100

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 10-4-2017.

மேலும் விவரங்களுக்கு:www.sbi.co.in

மத்தியப்பிரதேசத்தில் உள்ள மத்திய அரசின் வடக்கு நிலக்கரி வயல் நிறுவனத்தில் 432 பணியிடங்கள்

பணியின் பெயர் :  ஃபிட்டர், வெல்டர், எலெக்ட்ரிஷியன்

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ பயிற்சி முடித்தவர்கள்

வயது வரம்பு: 24 வயது

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 13-4-2017

மேலும் விவரங்களுக்கு:http://nclcil.in/recruitment/notification_english.pdf

நேஷனல் ஏரோஸ்பேஸ் லோபாரட்டரீஸ் நிறுவனத்தில் 23 பணியிடங்கள்

பணியின் பெயர்: சயின்டிஸ்ட் மற்றும் சீனியர் சயின்டிஸ்ட்

கல்வித் தகுதி : எம்.இ., எம்.டெக்., மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்கள் மற்றும் வேதியியல் முனைவர் பட்டம் பெற்றவர்கள்

வயது வரம்பு : சயின்டிஸ்ட் பணிக்கு 32 வயது, சீனியர் சயின்டிஸ்ட் பணிக்கு 37 வயது

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (பொதுப் பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு) இதர பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 16-4-2017

மேலும் விவரங்களுக்கு: www.nal.res.in

இந்திய விமானப் படையில் 154 பணியிடங்கள்

பணியின் பெயர்: உதவியாளர் மற்றும் பண்டகக் காப்பாளர் பணிகள்

கல்வித் தகுதி: ஐடிஐ, +2 தேர்ச்சி

வயது வரம்பு: 25 வயது

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (பொதுப் பிரிவு மற்றும் பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு) இதர பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 17-4-2017

மேலும் விவரங்களுக்கு: http://www.davp.nic.in/WriteReadData/ADS/adi_10801_107_1617b.pdf