Published:Updated:

வேலைக்கு உத்தரவாதம் தரும் மொழித் திறன்!

வேலைக்கு  உத்தரவாதம் தரும் மொழித் திறன்!
பிரீமியம் ஸ்டோரி
News
வேலைக்கு உத்தரவாதம் தரும் மொழித் திறன்!

நாணயம் எம்ப்ளாய்மென்ட்! - 21ஞா.சக்திவேல் முருகன்

வேலை வேண்டுமா? உங்களுக்கு நல்ல ஆங்கில மொழித் திறன் இருந்தால் சுலபமாக வேலை கிடைக்கும். ஆங்கில மொழித் திறனை எப்படி வளர்த்துக்கொள்வது என்பது பெரும்பாலானவர்களுக்கு உள்ள பெரிய பிரச்னை.

எந்த விஷயமாக இருந்தாலும் முயற்சியும், பயிற்சியும் இல்லாவிட்டால் சுட்டுப்போட்டாலும் வராது என்பார்கள். “பயிற்சி செய்யாமல் எதுவும் சாத்தியம் ஆகாது. கொஞ்சமாவது முயற்சி செய்து பயிற்சி என்னும் களத்தில் இறங்கினால்தான், மொழித் திறனில் வெற்றி பெறமுடியும்” என்கிறார் கடந்த 15 ஆண்டுகளாக மொழித் திறன் பயிற்சியாளராகவும், தற்போது வெர்டெக்‌ஸ் பிபிஓ நிறுவனத்தின் தலைமைப் பயிற்சியாளராகவும் உள்ள பிராங்க்.

“நீங்கள் பெரிய நகரத்தில் வளர்ந்தவராக இருந்தாலும் சரி, சிறிய நகரத்தில் வளர்ந்தவராக இருந்தாலும் சரி, மொழித் திறனை மேம்படுத்திக் கொள்வது அவ்வளவு சிரமமான காரியமல்ல. நீங்கள் தொடர்ந்து முயற்சிசெய்தால் ஆங்கில மொழியில் சரளமாகப் பேசவும், எழுதவும், உரையாடவும் செய்யலாம். வேலை வாய்ப்பிலும் சிறப்பாகச் செயல்பட முடியும்” என்றவர், மொழித் திறன் மேம்பாட்டுக்கான எட்டு வழிகளைப் பட்டியலிட்டார்.

வேலைக்கு  உத்தரவாதம் தரும் மொழித் திறன்!

1. கவலைப்படக்கூடாது

எனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று சதா கவலைப்படுவதை விட்டு, என்ன செய்தால் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள முடியும் என்று திட்டமிட வேண்டும். முயற்சியே செய்யாமல் கவலைப்பட்டால், மொழித் திறனை மேம்படுத்த முடியாது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

2. ஊக்கப்படுத்த வேண்டும்

ஆங்கிலம் பேசும்போது ஏதேனும் தவறு செய்தால், உடனே சிரித்துவிடுவது இந்தியக் கலாசாரத்தில் பழகிய ஒன்றாக இருக்கிறது. ‘துரை இங்கிலீஷ் எல்லாம் பேசுது பாத்தியா?’ என்று சிலர் கேலி பேசுவார்கள். இதுபோல் செய்யாமல், பேசும்போது என்ன தவறு செய்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டி மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும். இதுபோல் ஊக்கப்படுத்துபவர்களை நண்பராகவோ அல்லது ஆசிரியராகவோ ஏற்றுக்கொண்டு ஆங்கிலத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

 3.உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ளுங்கள்

நீங்கள் ஆங்கிலம் பேச முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு ஆங்கிலம் பேசும் போது தவறுகள் நடப்பது இயல்பான ஒன்று என்று நினைத்துக் கொள்ளுங்கள். பேசும்போது என்னென்ன தவறுகளைச் செய்கிறீர்கள் என்று கவனியுங்கள். அதனை நீங்களே திருத்திக்கொள்ள முயற்சிசெய்யுங்கள். பொதுவாகத் தவறுகளை மறைக்கவே பலரும் முயற்சி செய்வோம். தவறுகளை மறைக்கும்போது கற்றுக் கொள்ள முடியாது; ஒப்புக் கொண்டால் மட்டுமே அதனைத் திருத்திக்கொள்ள முடியும்.

4.பயிற்சி செய்ய வேண்டும்

மொழித் திறனை வளர்க்க முடிவெடுத்துத் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். சித்திரமும் கைப்பழக்கம் என்பார் ஒளவையார். தினமும் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும்; எழுதிப் பார்க்க வேண் டும்; பேசிப்பார்க்க வேண்டும். மொழியை எப்படிப் பயன்படுத்துவது என்று யோசிக்க வேண்டும். சாப்பிடும்போதும், தேநீர் அருந்தும்போதும், நடக்கும்போதும், தூங்கும் போதும் என எல்லாச் செயல் களிலும் மொழித் திறனையே மேம்படுத்திக்கொள்வது குறித்து யோசிக்க வேண்டும். நீங்கள் செய்ய நினைப்பதையே கனவில்கூட செய்ய வேண்டும். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வேலைக்கு  உத்தரவாதம் தரும் மொழித் திறன்!


ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டுமெனில், அந்த மொழி சார்ந்த விஷயங் களைப் பார்க்க வேண்டும், கவனிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், நாம் இதனைச் செய்வதில்லை. எளிமையான முறையில் கற்றுக்கொள்ள முதலில், சிறு குழந்தைகளுக்கான ஆங்கில டிவி சானல்களான போகோ, கார்ட்டூன் நெட்வொர்க் போன்றவற்றைப் பார்க்கப் பழக வேண்டும். ஒரு சிலர் உடனே ஆங்கிலப் படத்தை பார்த்து புரிந்துகொள்ள வேண்டும் என்பார்கள். இவர்கள் முயற்சி சரியானதுதான் என்றாலும், ஆரம்பநிலையில் புரிந்துகொள்ள முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கற்றுக்கொள்ள முடியும்.

அதைப்போலவே, ஆங்கில உரையாடல்களைக் கேளுங்கள். நிறைய ஆங்கில சானல்களில் செய்திகளையும், விவாதங்களையும் கேட்பதற்குப் பழக்கப்படுத்திக்கொள்ளுங் கள். சிறுவர்களுக்கான புத்தகங்களைப் படியுங்கள். தினமும் ஆங்கிலச் செய்தித்தாள்களையும், வார இதழ்களையும் படியுங்கள்.  இவற்றைத் தொடர்ந்து செய்யும்போது மொழித் திறனில் நீங்கள் கைதேர்ந்தவராக முடியும்.

5.எப்படிப் பேச வேண்டும்?

நீங்கள் மற்றவர்களுக்காகத்தான் பேசுகிறீர் கள் என்பதைப் புரிந்துகொள்ளுங் கள். உங்களுடைய பேச்சின் ஏற்ற இறக்கங் களும், உச்சரிப்பும் சரியாக இருக்க வேண்டும். அதன்பின்பு வார்த்தைகள் வடிவமைப்பு, இலக்கணம் போன்றவற்றை கவனிக்க வேண்டும்.

6. எப்படிப் பழக வேண்டும்?

ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப் பழகிக் கொள்ள வேண்டும். எவ்வளவு அதிகமான கேள்விகள் கேட்க முடியுமோ, அந்தளவுக்குக் கேள்விகளைக் கேட்க வேண்டும். பொதுவாக, கேள்வி கேட்கப் பலரும் தயங்குவார்கள்; வெட்கப்படுவார்கள். இது தவறான எண்ணம். சரியோ, தவறோ நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைத் திறந்த மனதுடன் கேளுங்கள். இப்படிக் கேள்வி கேட்கத் தொடங்கினால், பிறகு நீங்கள் திருப்திப்படும் அளவுக்குக் கேள்விகளைக் கேட்பீர்கள். 

7.  அர்த்தங்களைப் புரிந்துகொள்ளுங்கள்

ஒவ்வொரு சொற்களின், சொற்றொடர் களின் அர்த்தங்களைப் புரிந்துகொண்டா லேயே ஓரளவு மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

8. உடல் மொழியைச் சரி செய்யுங்கள்

உங்களுடையச் செயல்களை உடல்மொழியே பிரதிபலித்துவிடும் என்பதால், உடல்மொழியின் மீது கவனம் செலுத்த வேண்டும். 60% உடல்மொழியும், 40% உங்களது மொழியும்தான் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. வெளிநாட்டினர் இந்த விஷயத்தில் கெளரவம்  பார்ப்பதில்லை. நாம் கெளரவம் பார்த்தே பிற மொழிகளைக் கற்றுக்கொள்வதில் கோட்டை விடுகிறோம். உடனிருப்பவர்களுடன் உரையாடும் போது நிறைய கற்றுக்கொள்ள முடியும். இவற்றைத் தொடர்ந்து செய்யும்போது நீங்கள் மொழித் திறனை நன்கு வளர்த்துக்கொள்ள முடியும்” என்றார் பிராங்க்.

இனியாவது நாம் வெட்கத்தை விட்டுப் பேசத் தொடங்குவதன் மூலம் நம் மொழித் திறனை மேம்படுத்திக்கொள்வோம்.

படம்:  ப.பிரியங்கா

ஜாப் கார்னர்

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 721 பணியிடங்கள்

பணியின் பெயர்: கிராஜுவேட் டிரைய்னி (இன்ஜினீயர்)

கல்வித் தகுதி: பொறியியல் பட்டப் படிப்பு மற்றும்  இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களில் முதுநிலை பட்டப் படிப்பு (GATE தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்)

வயது வரம்பு: 28.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 27-4-17.

மேலும் விவரங்களுக்கு: http://www.ongcindia.com/

வேலைக்கு  உத்தரவாதம் தரும் மொழித் திறன்!

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 128 பணியிடங்கள் 

பணியின் பெயர்: கிராமின் தாக் சேவக் (Gramin Dak Sevaks (GDS))

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு

வயது வரம்பு: 40

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு ரூ.100, இதரப் பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 8-5-17.

மேலும் விவரங்களுக்கு: http://www.appost.in/gdsonline/

இந்திய அரசின் நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் 141 பணியிடங்கள்

பணியின் பெயர்: இளநிலை உதவியாளர்

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு + ஐடிஐ

வயது வரம்பு: 25.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு ரூ.400, இதரப் பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 1-5-17.

மேலும் விவரங்களுக்கு: http://igmhyderabad.spmcil.com/Interface/Home.aspx

வேலைக்கு  உத்தரவாதம் தரும் மொழித் திறன்!

மத்திய ஆயுதப்படையின் பிரிவில் 179 பணியிடங்கள்

பணியின் பெயர்: அசிஸ்டண்ட் கமாண்டன்ட்

கல்வித் தகுதி: பட்டப்படிப்பு

வயது வரம்பு:
25.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு ரூ. 200, இதரப் பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 5-5-17.

மேலும் விவரங்களுக்கு: upsc.gov.in