Published:Updated:

வேலைவாய்ப்பைப் பிரகாசிக்க வைக்கும் வெளிநாட்டு இன்டர்ன்ஷிப்!

வேலைவாய்ப்பைப் பிரகாசிக்க வைக்கும் வெளிநாட்டு இன்டர்ன்ஷிப்!
பிரீமியம் ஸ்டோரி
வேலைவாய்ப்பைப் பிரகாசிக்க வைக்கும் வெளிநாட்டு இன்டர்ன்ஷிப்!

நாணயம் எம்ப்ளாய்மென்ட்! - 22ஞா.சக்திவேல் முருகன்

வேலைவாய்ப்பைப் பிரகாசிக்க வைக்கும் வெளிநாட்டு இன்டர்ன்ஷிப்!

நாணயம் எம்ப்ளாய்மென்ட்! - 22ஞா.சக்திவேல் முருகன்

Published:Updated:
வேலைவாய்ப்பைப் பிரகாசிக்க வைக்கும் வெளிநாட்டு இன்டர்ன்ஷிப்!
பிரீமியம் ஸ்டோரி
வேலைவாய்ப்பைப் பிரகாசிக்க வைக்கும் வெளிநாட்டு இன்டர்ன்ஷிப்!

வெளிநாட்டுக் கல்லூரி மாணவர்கள் நம் நாட்டுக்கு வந்து இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறுகிற மாதிரி, நம்மூர் கல்லூரி மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் சேர்ந்து இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற வாய்ப்புண்டு. இந்த வாய்ப்பினை நம் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு சிலர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். தற்போது இணையத்தின் மூலம் ஏற்பட்டுள்ள விழிப்பு உணர்வின் காரணமாக, பல நாடுகளில் இன்டர்ன்ஷிப் செய்வதற்கான வாய்ப்பு இருப்பதை அறிந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். 

வெளிநாடுகளில் இன்டர்ன்ஷிப் செய்ய விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உதவுவதற்கென்றே  ஏராளமான இணையதளங்கள் இருக்கின்றன. தற்போது இந்தியாவில் டெக்ஸ்டைல் மற்றும் ஆடை வடிவமைப்பு, பொறியியல், மேலாண்மை, மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டு வருபவர்கள் வெளிநாடுகளில் இன்டர்ன்ஷிப் செய்ய சென்று வருகிறார்கள். வெளிநாடுகளில் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் குறித்து இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ் பிரிவின் டீன் பேராசிரியர் நாகராஜனிடம் பேசினோம்.

“மாணவர்கள் எந்தப் பாடத்தில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்களோ, அந்தப் பாடப் பிரிவுக்கான ஆசிரியரின் உதவியைப் பெற்று ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்க வேண்டும். அதன்பின்பு, அந்த ஆசிரியரின் வழியாகச் சர்வதேசப் பல்கலைக் கழகங்களிலுள்ள பேராசிரியர்களிடம் தொடர்பு கொண்டு இன்டர்ன்ஷிப் வாய்ப்பைப் பெறலாம்.

வேலைவாய்ப்பைப் பிரகாசிக்க வைக்கும் வெளிநாட்டு இன்டர்ன்ஷிப்!

இந்த வழிமுறையைப் பின்பற்றுபவர்களுக்கு உதவித்தொகையும், இதர உதவிகளும் கிடைக்கின்றன. பெரும்பாலும் ஒவ்வொரு மாணவரும் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் விண்ணப்பங்களை அனுப்பி வைப்பார்கள். வெளிநாட்டுப் பேராசிரியர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் ஒவ்வொரு வருடமும் 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரும். இதிலிருந்து ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே வாய்ப்பு தருவார்கள் என்பதால், முறையான வழிமுறையைக் கடைப்பிடித்து செல்பவர்களுக்கு வாய்ப்பு எளிது.

இதைப் போலவே, கல்வி நிறுவனங்களும் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், தொழில் நிறுவனங்களிலும் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம் செய்துகொள்ளும் போது மாணவர்கள் நிறையப் பேர் பயனடைய வாய்ப்புள்ளது. மேலும், நீங்கள் படிக்கும் கல்லூரியில் படித்தவர்கள் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும்போது, அவர்களைத்  தொடர்புகொண்டு இன்டர்ன்ஷிப் வாய்ப்பைப் பெறலாம்.

பொதுவாக, தொழில் நிறுவனங்கள் வேலைக்குச் சேர்ப்பதற்குமுன்பு இன்டர்ன்ஷிப் வாய்ப்பை வழங்குகின்றன. இன்டர்ன்ஷிப் காலத்தில் சிறப்பாகச் செயல்படும் போது வேலை வாய்ப்பை வழங்குகின்றன என்பதால், இதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார் நாகராஜன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேலைவாய்ப்பைப் பிரகாசிக்க வைக்கும் வெளிநாட்டு இன்டர்ன்ஷிப்!



  வெளிநாட்டில் இன்டர்ன்ஷிப் ஏன்?

வெளிநாட்டில் இன்டர்ன்ஷிப் செய்யும்போது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். வெளிநாட்டில் இன்டர்ன்ஷிப் செய்தவர்களின் ரெசியூமைப் பார்த்து இன்டர்ன்ஷிப் குறித்த விவரங்களை அறிந்தவுடன் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் நிறைய உள்ளன. நீங்கள் இன்டர்ன்ஷிப்பில் சிறப்பாகச் செயல்படும்போது இன்டர்ன்ஷிப் செய்யும் நிறுவனத்திலேயே வேலை வாய்ப்பைப் பெறவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்வதால், வேலைவாய்ப்புக் கூடும் அல்லது உங்களைப் பரிந்துரை செய்வார்கள். வேறுபட்ட முறையில் கற்றுக்கொள்ள முடியும். மேலும், எந்த நேர்முகத் தேர்விலும் கலந்துகொள்ள முடியும்.

வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் நல்ல ஆராய்ச்சி சார்ந்த நுணுக்கங்களையும், வளர்ச்சியை நோக்கிய பாங்குகளையும் கற்றுக்கொள்ள முடியும். பல்வேறு நாடுகளுடன் பயிற்சி செய்யும்போது வெளிப்படைத்தன்மையையும், பிரச்னைகளைச் சந்திக்கும் திறனையும் வளர்த்துக்கொள்ளலாம். மேலும், சர்வதேச அளவிலான கற்றுக்கொள்ளலும், அனுபவமும், அங்குள்ள கலாசாரத்தையும், தகவமைப்புகளையும் கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும். நிறுவனத்தின் செயல் பாடுகளை யும், பணியாற்று கிறவர்களுடன் நல்ல தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். வெளிநாட்டில் கொஞ்ச காலத்துக்கு இன்டர்ன்ஷிப் செய்தாலும், அது பயனுள்ள விஷயம்தான். இவை உங்களுடைய எதிர்காலப் பணிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

  முன்னரே திட்டமிடுதல் அவசியம்

வெளிநாடுகளுக்கு இன்டர்ன் ஷிப் பெறுவதற்கு ஆலோசனை வழங்கும் நிறுவனங்களை நாம் அணுகியபோது அவர்கள் பலவிதமான டிப்ஸ்களை வழங்கினார்கள்.

* இந்திய மாணவர்கள் சர்வதேச அளவில் இன்டர்ன்ஷிப் பெறுவதற்கு பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பொறியியல் படிப்பவர்கள் இரண்டாம் ஆண்டிலிருந்தும், முதுநிலைப் பட்டப்படிப்பு படிப்பவர்கள் முதலாம் ஆண்டிலிருந்தும் திட்டமிட வேண்டும். 

* ஏற்கெனவே படித்து முடித்து வெளிநாட்டில் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பவர்களின் வழியாக விண்ணப்பிக்கும் போது இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கின்றன. ஒரே நிறுவனத்தில் விண்ணப் பித்தவுடன் இன்டர்ன்ஷிப் கிடைக்கும் என்று  முழுமையாக நம்பி இருக்கா மல் பல நிறுவனங்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

* இன்டர்ன்ஷிப்புக்காக நிறுவனங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்பு நிறுவனம் குறித்த விவரங்கள் அனைத்தையும் இணையதளம் வழியாக அறிந்துகொள்ள வேண்டும்.

* எதற்காக குறிப்பிட்ட தொரு நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் செய்ய விரும்புகிறீர்கள் என்கிற விவரத்துடன் உங்களைக் குறித்த சுய விவரங்களை நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், மனிதவளப் பிரிவுக்கும் அனுப்பிவைக்க வேண்டும்.

* வெளிநாட்டில் இன்டர்ன்ஷிப் செய்ய விரும்புகிறவர்கள் உங்களுடைய பொருளாதார நிலையையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக, வெளிநாட்டில் உள்ள செலவுகளைச் சமாளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

* வெளிநாடுகளில் இன்டர்ன்ஷிப் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் வழங்குவதால், அந்த சமயத்தில் இங்கு கல்லூரி வகுப்பு இல்லாமல் இருக்கும்வகையில் பார்த்து விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றிரண்டு வாரங்கள் பயிற்சி பெறுவதாக இருந்தால், இங்கு விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதிக காலம் தங்கி பயிற்சி பெறும்வகையில் நிறுவனத்தின் அனுமதியைக் கேட்டுப் பெற வேண்டும்.

* இப்போது டெக்னாலஜி சிறந்த முறையில் இருப்பதால், இன்டர்நெட்டிலும், ஸ்கைப் வழியாகவும் எளிதாகத் தொடர்புகொண்டு நிறுவனத்தில் உள்ளவர்களுடன் பேசலாம். வெளிநாட்டில் இதை மிகவும் விரும்புகிறார்கள். 

* தற்போது கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுடனும், நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதும், மாணவர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளும் முறையும் நடைபெற்று வருகிறது. சில கல்லூரிகளில் மாணவர்கள் வெளிநாடுகளில் இன்டர்ன்ஷிப் செய்வதற்கு நிதி உதவி செய்கிறார்கள். இதை அறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

* அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் அவர்களுடைய இணைய தளங்களிலேயே இன்டர்ன்ஷிப் வாய்ப்புக் குறித்த விவரங்களைப் பதிவிடுகிறார்கள். சிலர் பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்களே இன்டர்ன்ஷிப்புக்கு மாணவர்கள் தேவை என தகவல் கொடுக்கிறார்கள்.

* வெளிநாடுகளில் உள்ள இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் குறித்த தகவல் வழங்குவதற்கு என்று நிறைய நிறுவனங்களும், இணையதளங்களும் செயல்பட்டு வருகின்றன.

http://www.aiesec.in/, https://internshala.com/, http://www.letsintern.com/, http://www.twenty19.com/, https://www.goabroad.com/, www.international-internships.com போன்ற இணையதளங்களில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இன்டர்ன்ஷிப் பெறுவது குறித்த தகவலை பெறலாம்.

ஜாப் கார்னர்

தேனா வங்கியில் 300 பணியிடங்கள்


பணியின் பெயர்: புரபேஷனரி அதிகாரி

கல்வித் தகுதி:
இளநிலைப் பட்டப்படிப்பு

வயது வரம்பு: 29

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு ரூ.400, இதரப் பிரிவினருக்கான கட்டணம் ரூ.50

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 9-5-17

மேலும் விவரங்களுக்கு: www.denabank.com

வேலைவாய்ப்பைப் பிரகாசிக்க வைக்கும் வெளிநாட்டு இன்டர்ன்ஷிப்!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 74 பணியிடங்கள்

பணியின் பெயர் : ஜூனியர் இன்ஜினீயர் அசிஸ்டென்ட்

கல்வித் தகுதி: இன்ஜினீயரிங் டிப்ளோமா

வயது வரம்பு: 29

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு ரூ.150, இதரப் பிரிவினருக்குக் கட்டணமில்லை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 9-5-17.

மேலும் விவரங்களுக்கு: https://www.iocl.com/PeopleCareers/job.aspx


தமிழக அரசுத் துறைகளில் 1,953 பணியிடங்கள்

பணியின் பெயர்: பல்வேறு பணிநிலைகள்

கல்வித் தகுதி: இளநிலைப் பட்டப்படிப்பு

விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.50. தேர்வுக் கட்டணம் ரூ.125.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்:
26-5-17.

மேலும் விவரங்களுக்கு: http://tnpscexams.net/

வேலைவாய்ப்பைப் பிரகாசிக்க வைக்கும் வெளிநாட்டு இன்டர்ன்ஷிப்!

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 56 பணியிடங்கள்

பணியின் பெயர்: ஜூனியர் அசிஸ்டென்ட் ட்ரெய்னி

கல்வித் தகுதி: இன்ஜினீயரிங் டிப்ளோமா/ இளநிலைப் பட்டப்படிப்பு

வயது வரம்பு:
27

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு ரூ.300, இதர பிரிவினருக்குக் கட்டணமில்லை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31-5-17.

மேலும் விவரங்களுக்கு:
https://www.cpcl.co.in/RecruitmentDrive.htm