Published:Updated:

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 11 - பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் பீம் ஆப்!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 11 - பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் பீம் ஆப்!
பிரீமியம் ஸ்டோரி
போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 11 - பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் பீம் ஆப்!

டாக்டா் சங்கர சரவணன்

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 11 - பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் பீம் ஆப்!

டாக்டா் சங்கர சரவணன்

Published:Updated:
போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 11 - பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் பீம் ஆப்!
பிரீமியம் ஸ்டோரி
போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 11 - பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் பீம் ஆப்!

டந்த ஆண்டு நவம்பா் மாதம் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதையடுத்து, பணமில்லாப் பரிவா்த்தனையை (Cashless Transfer) ஊக்குவிக்கும் வகையில், 2016 டிசம்பா் 30-ம் தேதி பாரதப் பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட பீம் (BHIM-Bharath Interface for Money) என்ற செயலி குறித்து நீங்கள் அறிந்திருக்கலாம்.   

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 11 - பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் பீம் ஆப்!

டாக்டா் பீமாராவ் அம்பேத்கர் நினைவாக ‘பீம்’ என்று பெயரிடப்பட்ட இந்தத் திறன்பேசி செயலி (SmartPhone App) இந்திய தேசிய செலுத்துகைக் கழகத்தால் (National Payments   Corporation of India) ‘ஒன்றிணைந்த செலுத்துகை இடைமுகப்பு’ என்ற தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதாகும். 

இந்த பீம் செயலியின் அடிப்படையான ‘ஒன்றிணைந்த செலுத்துகை இடைமுகப்பு’ (Unified Payment Interface) என்ற தொழில்நுட்பம் குறித்து 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.ஏ.எஸ் தோ்வில் கேட்கப்பட்ட ஒரு வினாவை இப்போது பார்க்கலாம்.

Which of the following is a most likely consequence of implementing the `Unified Payments Interface (UPI)’?

(a) Mobile wallets will not be necessary for online payments.

(b) Digital currency will totally replace the physical currency in about two decades.

(c) FDI inflows will drastically increase.

(d) Direct transfer of subsidies to poor people will become very effective.

இந்தக் கேள்விக்குச் சரியான விடை (a) - Mobile wallets will not be necessary for online payments என்பதாகும். இந்த யூ.பி.ஐ முறை, அலைபேசி பணப்பை எனப்படும் மொபைல் வேலட் என்பதிலிருந்து வேறுபட்டதாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! - 11 - பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் பீம் ஆப்!PayTM, MobiKwiK, mPesa, Airtel Money போன்ற மொபைல் வேலட்களில் பணம் செலுத்துவதற்கு முதலில் நம் பணத்தை இந்த மொபைல் வேலட்டில் வைத்திருக்க வேண்டும். ஆனால், பீம் செயலியில் பணத்தை நேரடியாக நம் வங்கிக் கணக்கிலிருந்து செலுத்த வேண்டியவருக்குப் பரிமாற்றம் செய்யலாம். பீம் செயலி மூலம் நடத்தப்படும் பணப் பரிமாற்றம் விரைவாக நடந்துவிடுகிறது. அதுமட்டுமின்றி, வார இறுதி நாள்கள், வங்கி விடுமுறை நாள்கள் போன்ற நாள்களிலும் நாம் வாங்கும் பொருள் அல்லது சேவைக்கான பணத்தை பீம் செயலி மூலம் உடனடியாகச் செலுத்த முடியும்.

பீம் செயலி பரிவா்த்தனைக்கு 12 இலக்க ஆதார் எண்ணே செலுத்துகை ஐடி-யாக (Payment ID) பயன்படுத்தப்படுகிறது. பீம் செயலியைப் பயன்படுத்த வேறு பயோ மெட்ரிக் ஆவணங்களோ, வங்கியில் முன்பதிவோ தேவையில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்.

ஒரு லட்சம் ரூபாய் வரையான பணப் பரிமாற்ற சேவைக்கு இந்தச் செயலியைப் பயன்படுத்த முடியும். ஆனால், ரயில் டிக்கெட் புக் செய்வதற்கு ஐ.ஆர்.சி.டி.சி-யில் பீம் செயலியைப் பயன்படுத்த முடியாது என்பது ஒரு முக்கிய குறைபாடாக வாடிக்கையாளா்களால் சொல்லப்படுகிறது.

2017-ம் ஆண்டு பட்ஜெட் உரையின்போது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இந்தியாவில் 125 லட்சம் வாடிக்கையாளா்கள் பீம் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்,

இந்த பீம் செயலியை ஆங்கிலம், தமிழ், இந்தி உள்பட 12 இந்திய மொழிகளில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பீம் செயலியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்கள் தங்களுக்கான தனிப்பட்ட க்யூ.ஆர் கோட்களை (Quick Response Code) உருவாக்கிக்கொண்டு இதைப் பயன்படுத்தலாம்.

யூபிஐ முறையை 2016 ஏப்ரல் மாதத்திலிருந்து இந்திய தேசியச் செலுத்துகை கழகம், நடை முறைக்குக் கொண்டு வந்துவிட்டது குறிப்பிடத் தக்கது. இந்த முறை மெய்நிகா் செலுத்துகை முகவரியைப் (Virtual Payment Address) பயன்படுத்தி இயங்கும். உடனடி செலுத்துகை சேவை (Immediate Payment Service – IMPS) என்று தமிழில் விளக்குகிறார்கள் தமிழார்வம் கொண்ட வங்கியாளா்கள்.

(ஜெயிப்போம்)

தோ்வில் அரசு சட்டதிட்டங்கள்! 

2017-ம் ஆண்டு நடைபெற்ற TNPSC Group – II-A தோ்வில் கேட்கப்பட்ட பொருளாதாரக் கேள்விகளில் 1961-62-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட தீவிர வேளாண்மை மாவட்டத் திட்டம் (Intensive Agriculture District Programme) குறித்த கேள்வியும் பெண்கள் முன்னேற்றத்துக்காக 1986-87-ல் அறிமுகப்படுத்தப்பட்ட STEP என்று சுருக்கமாக அழைக்கப்படும், பெண்கள் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆதரவுத் திட்டம் (Support to Training and Employment Programme for women) பற்றிய கேள்வியும் முக்கியமானவை.

இதிலிருந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் பல்வேறு சமூக – பொருளாதார முன்னேற்றத் திட்டங்களை மாணவர்கள், தேர்வர்கள் வரலாற்றுபூர்வமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதை உணரலாம். அதேபோல், 2017-ம் ஆண்டு நடைபெற்ற IAS தேர்வில் ரிப்பன் பிரபு காலத்தில் கொண்டுவரப்பட்ட தொழிற்சாலைச் சட்டம் (Factories Act) பற்றிய கேள்விகள் இடம்பெற்றிருந்ததையும் நினைவுகூரலாம்.   

2017-ம் ஆண்டு Group – II-A தோ்வில், பாரத பிரதமர் 2017-ம் ஆண்டு மே மாதத்தில், இந்தியாவிலேயே மிக நீளமான சாலைப் பாலத்தை எந்த மாநிலங்களுக்கிடையே திறந்துவைத்தார் என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. இதற்கு சரியான விடை, அசாம் மற்றும் அருணாச்சலப்பிரதேசம் என்பதாகும். மேலும், இந்தத் தேர்வில் தமிழக அரசால் உலக வங்கி உதவியோடு, 2005-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் புதுவாழ்வு திட்டம் பற்றிய கேள்வியும் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விகளிலிருந்து, எந்த அரசுத் தேர்வாக இருந்தாலும் சரி, அரசின் சட்டத்திட்டங்கள் பற்றிய கேள்விகளைத் தேர்வர்கள் எதிர்பார்த்து, அவை குறித்து ஆழமாகப் படித்து செல்ல வேண்டும் என்று உணரலாம்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism