கடந்த வாரம் அந்நிய நேரடி முதலீடு மற்றும் அந்நிய நிறுவன முதலீடு ஆகியவை குறித்து விளக்கிய பின்னா், ஐ.ஏ.எஸ் தோ்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியைத் தந்து, அந்தக் கேள்விக்கான விடை என்னவாகவிருக்கும் என யோசிக்குமாறு வாசகா்களைக் கேட்டிருந்தோம். வாசகர்களுக்கு ஞாபகப்படுத்த மீண்டும் அந்தக் கேள்வி இதோ...

1.  Which of the following would include Foreign Direct Investment in India?

1.  Subsidiaries of companies in India.

2.  Majority foreign equity holding in Indian companies

3.  Companies exclusively financed by foreign companies

4. Portfolio investment Select the correct answer using the code given below:

a)  1,2,3 and 4, b) 2 and 4 only,

c)  1 and 3 only, d) 1, 2 and 3 only

இந்தக் கேள்விக்கு c சரியான விடையா அல்லது d சரியான விடையா என்று யோசிக்குமாறு கேட்டிருந்தோம். ஏனெனில் வாய்ப்பு விடை, a மற்றும் b-யில் அந்நிய நிறுவன முதலீடு (Portfoliio investment) இடம்பெற்றிருப்பதால், அவை இரண்டும் விடையாக வராது என்பதை வாசகா்களே சரியாகப் புரிந்துகொண்டிருப்பார்கள். ஆனால், c அல்லது d என்பதில் சிறிது குழப்பம் இருக்கும்.

ஏனெனில், வாய்ப்பு விடை 2 ல் கூறியுள்ள Majority foreign equity holding in Indian companies என்பது அந்நிய நேரடி முதலீட்டின் கீழ் வருமா என்னும் சிறிய குழப்பம் சில வாசகா்களுக்கு ஏற்படலாம். Equity என்கிற வார்த்தைக்குச் சரியான பொருள் என்ன என்பதை நாம் யோசிக்கவேண்டியதும், Majority equity என்ற வார்த்தையின் உள்ளா்த்தத்தை சரியாகப் புரிந்து கொள்வதும் இந்தக் கேள்விக்குச் சரியான விடை அளிக்க அவசியமானவையாகும்.

பொருளாதார அகராதியில் Equity என்கிற வார்த்தைக்கான அா்த்தம், ‘‘ஒரு சொத்தின் மதிப்பிலிருந்து (Value of an asset), அந்தச் சொத்து மீதான கடன்களைக் (Liabilities on the assets) கழிக்கக் கிடைக்கும் மதிப்பு”என வரையறுக்கப் பட்டுள்ளது. உதாரணமாக, ரூ.10 லட்சம் மதிப்புள்ள காரை ஒருவா் வாங்குகிறார். அந்த ரூ.10 லட்சம் மதிப்பில் ரூ.6 லட்சத்தை ரொக்கமாகச் செலுத்தி வாங்கு கிறார். மீதியுள்ள ரூ.4 லட்சத்தைக் (வட்டி உள்பட) கடனாகச் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளார் எனில், அந்த கார் மீதான அவரது Equity ரூ.6 லட்சம். அந்த காருக்கு அவா் Majority equity holder எனலாம்.

Equity என்ற வார்த்தை, பொருளாதார அகராதியில் மிக மிக நுட்பமானது. வெறும் பங்கை மட்டும் குறிப்பதல்ல. Private equity, Shareholder’s equity, Stockholder’s equity, Home equity, Brand equity என்று பலவிதமான equity உண்டு. இந்த வார்த்தைகளின் நுணுக்கங்களையும், நுட்பங்களையும் விவரிப்பதற்கு இது நேரமல்ல.

மேலே உள்ள கேள்வியைப் பொறுத்தமட்டில், Majority Equity Holding என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதால், அது நிறுவனத்தின் மேலாண்மையைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு அதிகபட்ச உரிமைக்குரிய Equity என்று பொருள் கொள்ள முடிகிறது. இது அந்நிய நேரடி முதலீடு என்கிற எஃப்.டி.ஐ-யில்தான் (FDI) சாத்தியம். சாதாரண ஷேர் ஹோல்டரான எஃப்.ஐ.ஐ (FII) முதலீட்டாளருக்கு இது சாத்தியமில்லை. எனவே, இந்தக் கேள்விக்குச் சரியான விடை d தான் என முடிவு செய்யலாம்.

இப்போது, எஃப்.டி.ஐ தொடா்பான இன்னொரு கேள்வி, 2013-ல் நடைபெற்ற ஐ.ஏ.எஸ் தோ்வில் கேட்கப்பட்டது. அந்தக் கேள்வி கீழே...

2. Which of the following constitute Capital Account?

1. Foreign Loans, 2. Foreign Direct Investment

3. Private Remittances, 4. Portfolio Investment

Select the correct answer using the codes given below:

a) 1, 2 and 3 b) 1, 2 and 4, c) 2, 3 and 4 d) 1, 3 and 4

இந்தக் கேள்விக்கு, சரியான விடை சொல்ல வேண்டு மெனில், Capital Account என்ற வார்த்தைக்குப் பொருள் தெரிந்திருக்க வேண்டும்.

வணிகச் சமநிலை (Balance of Trade) என்ற வார்த்தையைக் கேள்விபட்டிருப்பீா்கள். அது ஒரு நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையேயான வித்தியாசம். அதேபோல, செலுத்துகை சமநிலை (Balance of Payments) என்பது ஒரு நாட்டுக்கு, வெளிநாட்டிலிருந்து வரவேண்டிய தொகை மற்றும் வெளிநாடுகளுக்கு அந்த நாடு செலுத்த வேண்டிய தொகை ஆகிய இரண்டுக்குமான வித்தியாசம் ஆகும். இந்தச் செலுத்துகை சமநிலையில் இரண்டு வித கணக்குகள் உண்டு. ஒன்று, மூலதனக் கணக்கு (Capital Account); மற்றொன்று, நடப்புக் கணக்கு (Current Account).

இவற்றுள், ஒரு நாட்டின் மூலதனக் கணக்கு என்பது அந்த நாட்டு சொத்துகளின் நாடு தழுவிய சொத்துரிமையில் ஏற்படும் நிகர மாற்றம். இதை ஆங்கிலத்தில் ‘Net change in National Ownership of Assets of a country’ என்று வரையறுக்கிறார்கள். நடப்புக் கணக்கு என்பதை நாட்டின் நிகர வருமானமாகக் கொள்ளலாம். அதாவது, Current account means a nation’s net income. மூலதனக் கணக்கின் உபரி என்பது (A surplus in capital account) ஒரு நாட்டுக்குள் வரும் பணமே. ஆனால், அது நாட்டுக்கான வருமானமாக இருக்காது; கடனாகவோ, நாட்டின் சொத்தை விற்பதால் கிடைக்கும் வருவாயாகவோ இருக்கும்.

மூலதனக் கணக்கை நான்கு அம்சங்களின் கூட்டுத்தொகை என்கிறார்கள். அந்த நான்கு அம்சங்கள், அந்நிய நேரடி முதலீடு, அந்நிய நிறுவன முதலீடு, பிற முதலீடுகள் மற்றும் இருப்புக் கணக்கு ஆகும். எனவே, இந்தக் கேள்விக்குச் சரியான விடை B தான். Private remittences என்பது நடப்புக் கணக்கில் வரக்கூடியதாகும்.

பொருளாதாரத்தை நுட்பமாகப் படித்தால் மட்டுமே, இந்தக் கேள்விக்குச் சரியான விடை சொல்ல முடியும்!

(வெற்றி பெறுவோம்)