Published:Updated:

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 18 - ஆர்.பி.ஐ-யின் முக்கியப் பணி என்ன?

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 18 - ஆர்.பி.ஐ-யின் முக்கியப் பணி என்ன?
பிரீமியம் ஸ்டோரி
போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 18 - ஆர்.பி.ஐ-யின் முக்கியப் பணி என்ன?

டாக்டா் சங்கர சரவணன்

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 18 - ஆர்.பி.ஐ-யின் முக்கியப் பணி என்ன?

டாக்டா் சங்கர சரவணன்

Published:Updated:
போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 18 - ஆர்.பி.ஐ-யின் முக்கியப் பணி என்ன?
பிரீமியம் ஸ்டோரி
போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 18 - ஆர்.பி.ஐ-யின் முக்கியப் பணி என்ன?

நாட்டின் நிதிக் கொள்கை (Fiscal Policy) என்பது மத்திய நிதியமைச்சகத்துடன்  தொடர்புடையது. நாட்டின் வரவு-செலவுக் கணக்கு, வரி வருவாய், திட்டம் மற்றும் திட்டம் சாரா செலவுகள் போன்றவை நிதிக்கொள்கையின் கீழ் அடங்கும்.  

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 18 - ஆர்.பி.ஐ-யின் முக்கியப் பணி என்ன?

ஆனால், பணக்கொள்கை (Monetary Policy) என்பது நிதிக் கொள்கையிலிருந்து வேறுபட்டது. ஒரு நாட்டின் பணக்கொள்கையைக்  கட்டுப்படுத்துவது அந்த நாட்டின் மத்திய வங்கியே. அதாவது, இந்தியாவில் ரிசா்வ் வங்கி. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பணப் புழக்கத்தை அதிகப்படுத்துவது, வங்கிகளில் நிதி இருப்பை அதிகரிப்பது மற்றும் குறைப்பது, வங்கிக்கான வட்டி விகிதங்களை (Bank Rates) மாற்றியமைப்பது என்பது போன்ற பல நடவடிக்கைகள் பணக்கொள்கையோடு தொடா்புடையவை.

ஐ.ஏ.எஸ் தோ்வுக்குப் படிப்பவா்கள் நிதிக் கொள்கை, பணக்கொள்கை ஆகியவற்றில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள், அந்தக் கொள்கைகள் சார்ந்து இயற்றப்படும் புதிய சட்டங்கள், கொண்டு வரப்படும் சட்டத் திருத்தங்கள், உருவாக்கப்படும் குழுக்கள் போன்றவற்றைப்பற்றி தொடா்ந்து கவனித்து வரவேண்டியது மிக அவசியமாகும். உதாரணமாக, 2017 - ஐ.ஏ.எஸ் தோ்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 18 - ஆர்.பி.ஐ-யின் முக்கியப் பணி என்ன?



Which of the following statements is/are correct regarding the Monetary Policy Committee (MPC)?

1. It decides the RBI’s benchmark interest rates.

2. It is a 12-member body including the Governor of RBI and is reconstituted every year.

3. It functions under the chairmanship of the Union Finance Minister.

Select the correct answer using the code given below:

a) 1 only            b) 1 and 2 only

c) 3 only          d) 2 and 3 only   
                                                
(I.A.S  Prelims 2017)


பணக் கொள்கை குழு (Monetary Policy Committee), 2016-ம் ஆண்டு மத்திய அரசினால்  கொண்டுவரப்பட்ட நிதிச் சட்டத்தின் (Finance Act 2016) மூலம், இந்திய ரிசா்வ் வங்கிச் சட்டம் 1934-யைத் திருத்தம் செய்து உருவாக்கப்பட்டது. நாடாளுமன்ற சட்டதிருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, நாட்டின் வளா்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, பொருள்களின் விலையில் அதிக ஏற்ற இறக்கங்கள் ஏற்படாமல் பராமரிக்கும் பணியைச் செய்கிறது. பணக்கொள்கையில் வெளிப்படைத்தன்மையைக் (Transparency in monetary policy) கொண்டு வருவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு இது என இந்த அமைப்பின் அறிவிக்கை (Notification) தெரிவிக்கிறது.

இந்த அமைப்பின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்தபட்சம் நான்கு முறை நடைபெற வேண்டுமென்றும், ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் இந்த கமிட்டி தன் முடிவுகளை வெளியிட வேண்டுமென்றும் அதன் பணி வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு உருவாக்கம் பற்றிய அறிவிக்கை 27.6.2016 அன்று இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. (Notified in the Gazette on 27.6.2016).

செப்டம்பா் 2016-ல் மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பின்படி. பணக்கொள்கை குழுவானது ஒரு தலைவரையும் ஐந்து உறுப்பினா்களையும் கொண்டது. ரிசா்வ் வங்கி ஆளுநா், பணக் கொள்கைக்குப் பொறுப்பு வகிக்கும் ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநா், ரிசா்வ் வங்கியின் மத்திய வாரியத்தால் பரிந்துரைக்கப்படும் ரிசா்வ் வங்கி அலுவலா் ஒருவா் ஆகிய மூவரும், இந்த கமிட்டியின் அலுவலா் சாரா உறுப்பினா்கள் (Ex-officio members) ஆவா்.

மேலே குறிப்பிட்ட மூன்று அலுவல் சாரா உறுப்பினா்கள் தவிர, மற்ற மூன்று உறுப்பினா்களில் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் பேராசிரியா் ஸ்ரீசேத்தன் கதே, டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் மற்றும் பேராசிரியா் பமி துவா, அகமதாபாத் ஐ.ஐ.எம். பேராசிரியா் ரவீந்திர தோலக்யா ஆகிய மூவரும் பணக்கொள்கை குழுவில் உறுப்பினா்களாக இருப்பார்கள் என்று அரசிதழ் அறிவிக்கை தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி, மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள இந்த உறுப்பினா்களின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகள் என்றும் இந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்ட இந்த அறிவிக்கையைப் படித்த மாணவா்கள், ஐ.ஏ.எஸ் தோ்வில் கேட்கப்பட்ட (மேலே கண்ட) கேள்வியில் இடம்பெற்ற மூன்றாவது கருத்து (மத்திய நிதி அமைச்சா் இந்தக் குழுவின் தலைவா்) தவறானது என்பதைத் தெரிந்திருப்பார்கள். எனவே, வாய்ப்பு விடைகள் c மற்றும் d தவறானவை என்று தெரிந்துவிடுகிறது. இது, ஆறு உறுப்பினா்கள் குழு என்பதைத் தெரிந்துகொண்டால்,கேள்வியில் கொடுக்கப்பட்ட இரண்டாவது கருத்தும் தவறு என விளங்கும். அதனால், வாய்ப்பு விடைகள் b மற்றும் d ஆகிய இரண்டும் தவறானவை என்று உணரப்படும். ஆகையால், மிச்சம் இருப்பது முதல் கருத்து (இந்தக் குழுவே RBI-ன் முக்கிய வட்டி விகிதங்களைத் தீா்மானிக்கிறது) மட்டுமே. எனவே, a-தான் சரியான விடை என முடிவு செய்யலாம்.

இந்த அறிவிக்கை வருவதற்குமுன்பு, ஆர்.பி.ஐ-ன் முக்கிய வட்டி விகிதங்களைத் தீா்மானிக்கும் பொறுப்பு ஆர்.பி.ஐ கவா்னா் வசமே இருந்தது. ஆர்.பி.ஐ கவா்னரின் அதிகாரத்தைக் குறைக்கும்பொருட்டு, இந்தக்
குழுமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் படித்த செய்திகள் உங்கள் நினைவுக்கு வரலாம். 

இந்தக் குழு அமைக்கப்பட்டது சரியா, அதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன என்பது போன்ற ஆழமான, நுணுக்கமான, அபிப்ராயம் சார்ந்த கேள்விகள் இனிவரும் தேர்வுகளில் கேட்கப்படலாம். 2017-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ் நோ்முகத் தோ்வில் அது போன்ற கேள்விகள் கேட்கப்பட்ட தாக நோ்முகத் தோ்வில் பங்கேற்ற மாணவா்கள் தெரிவித்தார்கள். எனவே, ஐ.ஏ.எஸ் முதல்கட்டத் தோ்வுக்குப் படிக்கிற விஷயம், முதல்கட்டத் தோ்வோடு முடிந்துவிடுவதில்லை. அதை இன்னும் ஆழமாக, நுணுக்கமாக படித்தால் முதன்மை மற்றும் நோ்முகத் தோ்வுகளில் நமக்கு உதவும். 

(தேர்ச்சி பெறுவோம்)