Published:Updated:

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! டாக்டர். சங்கர சரவணன்

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! டாக்டர். சங்கர சரவணன்

Published:Updated:

ரூபாய் - 1

இந்திய பொருளாதாரத்தின் இயல்பு என்னவென்று கேட்டால், ஒவ்வொருவரும் தங்கள் அறிவு மற்றும் அனுபவத்தின் நீள, அகலங்களுக் கேற்ப வெவ்வேறு விடையைத் தருவார்கள்.

நம் நாட்டின் மிகப் பெரும் பிரச்னையே கடன் என்பார்கள் சிலர். 'இந்தியாவின் மூன்றுபக்கத்தில் கடல் இருக்கிறது; ஆனால், நான்குபக்கத்திலும் கடன் இருக்கிறது' என்று பேசி  கைதட்டல் வாங்குவார்கள் சிலர்.

இன்னும் சிலர், நம் நாட்டின் முக்கிய பிரச்னையே ஊழல் என்று சொல்வார்கள். ஜெர்மனியில் இருக்கும் பன்னாட்டு வெளிப்படை நிறுவனம் ((Transparency International) உலக நாடுகளை ஊழல் அடிப்படையில் வரிசைப்படுத்தி வெளியிட்ட அறிக்கையை அதற்கு ஆதாரம் காட்டுவார்கள்.

ஆனால், இந்திய பொருளாதாரத்தின் இயல்புகளாக 12 முக்கிய அம்சங்களை பொருளாதார பேராசிரியர்களான தத் மற்றும் சுந்தரம் பட்டியலிட்டுள்ளனர்.

VAO முதல்  IAS வரை!

1. குறைந்த தலா வருமானம் (Low per capita income).
 

2. வேலைவாய்ப்பு வழங்கலில் வேளாண்மையின் பெரும்பங்கு.

3. அதிக மக்கள்தொகையின் அழுத்தம் (Heavy population pressure).
 

4. பரவலாகக் காணப்படும் வேலையின்மை மற்றும் தகுதிக்கு குறைந்த வேலை பிரச்னைகள் (prevalence of chronic unemployment and underemployment).

5. குறைந்த அளவிலான மூலதன திரட்சி (Low capital formation).

6. செல்வத்தின் சீரற்ற குவிவும் பகிர்வும் (Unequal concentration and maldistribution of wealth).

7. மனித மூலதனத்தின் குறைவான தரம் (Poor quality of human capital).

VAO முதல்  IAS வரை!

8. மேம்படாத தொழில் நுட்பத்தின் பரவலான தன்மை (Prevalence of low level of technology).

9. சராசரி இந்தியனின் கீழ்நிலையான வாழ்க்கைத் தரம் (Low level of living of the average Indian).
 

10. வளர்ச்சியடையாத நாட்டின் மக்கள்தொகை கூறுகளைக் கொண்டிருத்தல் (Demographic characteristics of an underdeveloped country).
 

11. இந்தியாவில் நுகர்வின் சமூக பொருளாதார அளவீடுகள், வளர்ச்சியடையாத நாட்டின் இயல்புகளை ஒத்திருத்தல் (Socio - economic indicators of Consumption resembles the characteristic of underdeveloped economy in India).

VAO முதல்  IAS வரை!

12. வலுவற்ற பொருளாதார அமைப்பு (Poor economic organization).
 

இந்த அம்சங்கள் பற்றி இந்தத் தொடரில் போகப் போக நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

ரூபாய் - 2

இந்திய பொருளாதாரத்தின் இயல்பு குறித்து போட்டித் தேர்வில் கேட்கப்பட்ட / கேட்க வாய்ப்புள்ள சில மாதிரி கேள்விகளை இப்போது கவனிப்போம்.

The concept of Five Year Plans in India was introduced by
a) Lord Mountbatten
b) Jawaharlal Nehru
c) Indira Gandhi
d) Lal Bahadur Shastri
Ans. (b). Jawaharlal Nehru.
 

இந்தியாவில் ஐந்தாண்டு திட்டம் என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியவர்.

a) லார்டு மவுன்ட்பேட்டன்

b) ஜவஹர்லால் நேரு

c) இந்திரா காந்தி

d) லால் பகதூர் சாஸ்திரி

விடை: (b). ஜவஹர்லால் நேரு.

விளக்கம்:

நேருவின் பொருளாதாரக் கொள்கை:

முதலாளித்துவம் (Capitalism)  சுரண்டலையும், கம்யூனிஸம் அடக்குமுறையையும் வளர்க்கக் கூடியது என்பதே நேருவின் கருத்தாகும். எனவே, இரண்டுக்கும் இடைப்பட்ட கொள்கையான சோஷலிஸ கொள்கையே சிறந்தது என்றார் நேரு. கடையனுக்கும் கடைத் தேற்றம் (unto the last) என்பதே மகாத்மா காந்தியின் கொள்கையாக இருந்தது. காந்தியின் சீடரான நேருவும் அந்தக் கனவை நிறைவேற்ற சோஷலிஸ பொருளாதாரக் கொள்கையே இந்தியாவுக்கு உகந்தது என்று நம்பினார்.

1955-ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் ஆவடியில்  நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் 60-வது மாநாட்டில் நேரு இந்தியாவுக்கான சோஷலிஸ சமுதாயக் கொள்கையை வலியுறுத்தி தீர்மானத்தை நிறைவேற்றினார். வரலாற்று சிறப்புமிக்க அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் தமிழக முதலமைச்சருமான காமராஜர் ஆவார்.

VAO முதல்  IAS வரை!

சோஷலிஸ சமுதாய கோட்பாடு தனியார் லாபத்தைவிட சமூக லாபத்தை முதன்மையாகக் கொண்டது. தேசிய செல்வம் மக்களுக்கு சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதையும் இந்தியா, மக்கள் நல நாடாக (Welfare State) அமைய வேண்டும் என்பதையும் முக்கிய லட்சியங்களாகக் கொண்டதே சமதர்ம கோட்பாடாகும்.

இந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே நேரு ரஷ்ய மாதிரியை அடிப்படையாகக்கொண்டு திட்டமிடுதலில் அரசுத் துறைக்கு முக்கியம் இருக்கும் வகையில் முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களையும் செயல்படுத்தினார்.

2. Which document declared ‘Mixed Economy’ as the economic policy of India:
a) Constitution of India
b) Second Five Year Plan
c) Industrial Policy of 1948
d) New economic policy of 1991
Ans. (c). Industrial Policy of 1948.
 

கலப்பு பொருளாதாரத்தை இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையாக அறிவித்த ஆவணம் எது?

a) இந்திய அரசமைப்பு சட்டம்.

b) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்.

c) தொழில் கொள்கை 1948

d) புதிய பொருளாதார கொள்கை 1991

விடை: (c). தொழில் கொள்கை 1948.

VAO முதல்  IAS வரை!

3. ‘Mixed Economy’ means :
a) Co existence of small scale and large scale industries
b) Co existence of the rich and the poor
c) Co existence of private and public sector
d) Assigning equal importance to both agricultural and heavy industries.
Ans. (c). Co existence of private and public sector.

கலப்பு பொருளாதாரம் என்பதன் பொருள் :

a) சிறுதொழிலும், பெருந்தொழிலும் ஒருங்கே இணைந்திருத்தல்.

b) ஏழைகளும், பணக்காரர்களும் ஒருங்கே வாழ்தல்.

c) தனியார் மற்றும் பொதுத் துறை ஒருங்கே அமைந்திருத்தல்.

d) வேளாண்மைக்கும் கனரகத் தொழிலுக்கும் சம வாய்ப்பு அளித்தல்.

கேள்வி 3-க்கான விடை (c). கேள்வி 2 மற்றும் 3-க்கான விளக்கம் இனி:  

இந்திய பொருளாதாரத்தின் இயல்புகள்:

இந்திய பொருளாதாரம் கலப்பு பொருளாதாரம், வளரும் பொருளாதாரம், இரட்டை நிலைப் பொருளாதாரம் எனப் பல இயல்புகளைக் கொண்டுள்ளது.

VAO முதல்  IAS வரை!

இந்திய பொருளாதாரத்தில் பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் ஒருங்கே செயல்படுவதால், அதைக் கலப்பு பொருளாதாரம் என்று இந்திய தொழில் கொள்கை (1948) வரையறுத்தது. ஆனால், காலவோட்டத்தில் பொருளாதாரக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்தியா தாராளமயம், உலகமயம் மற்றும் தனியார்மயம் ஆகியவற்றை வலியுறுத்தும் புதிய பொருளாதாரக் கொள்கையை 1991-ல் ஏற்றுக்கொண்டது.

எனவே, இந்திய பொருளாதாரத்தில் பொதுத்துறைக்கு என்று ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த பல துறைகள் தனியாருக்குத் திறந்துவிடப்பட்டன. இதன் விளைவாக, இந்தியாவின் கலப்பு பொருளாதாரம் என்ற கருத்தாக்கம் மாறி, தனியார் மயத்தின் தீவிரம் உணரப்பட்டது; உணரப்படுகிறது.

இருப்பினும், தற்போதும் சில துறைகள் முழுக்க முழுக்க அரசுத் துறைக்கே என்று ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளன. அணுசக்தி தாதுக்கள், உற்பத்தி மற்றும் பயன்பாடு தொடர்பான விஷயங்கள், நாட்டின் பாதுகாப்புத் தளவாடங்கள் தொடர்பான உற்பத்தி ஆகியவை தற்போதும் பொதுத்துறை வசமே உள்ளது.  

முன்பு அரசாங்கத்திடம் மட்டுமே இருந்த எரிபொருள் எண்ணெய் உற்பத்தி மற்றும் வழங்கல் (Oil fuel generation and distribution) தற்போது தனியார் வசமும் வழங்கப்பட்டுள்ளது குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளன. எண்ணெய் உற்பத்தி வளங்களை கண்டறிதல் மற்றும் எண்ணெய் உற்பத்தி ஆகியவற்றில் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்ற கருத்தும் அதற்கான சாதக, பாதகங்களும் பொருளாதார வல்லுநர்களால் அலசப்படுகின்றன.

இந்திய பொருளாதாரம் வளர்ந்துவரும் பொருளாதாரம் (Developing Economy)என்ற நிலையிலிருந்து தற்போது எழுச்சியுறும் பொருளாதாரம் (Emerging Economy) என்ற நிலைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

தற்போது உலக நாடுகளில் எழுச்சியுறும் பொருளாதார நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நாடுகள் IBSA  எனப்படும் இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகள் ஆகும். இந்த மூன்று நாடுகளும் ஏற்கெனவே பொருளாதாரத்தில் நன்கு வளர்ந்துவரும் சீனாவோடு சேர்ந்து BASIC  நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

அமெரிக்காவின் ஒருமுனை உலகத்தை (Unipolar world)  எதிர்க்கும்வகையில் இந்த நான்கு நாடுகளும் ரஷ்யாவோடு இணைந்து 'பிரிக்ஸ்’ (BRICS) அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

இந்திய பொருளாதாரத்தை இரட்டை பொருளாதாரம்   (Dualistic Economy)   என்று அழைக்க காரணம், இந்தியாவில் நவீன பொருளாதாரமும் பாரம்பரிய பொருளாதாரமும் இணைந்து செயல்படுவதே.  இந்தியாவில் ஆடி காரும்  உண்டு; மாட்டுவண்டியும் உண்டு. மிகப் பெரிய பணக்காரரும் இங்கு உண்டு; ஏழையும் இங்கு உண்டு. விவசாயமும் உண்டு; தொழில் வளர்ச்சியும் உண்டு. கனரக தொழிலும் உண்டு; கைத்தொழிலும் உண்டு. மேம்பட்ட எட்டு வழி சாலைகளும் உண்டு; மேடுபள்ளமான சாலைகளும் உண்டு.

(தயாராவோம்)
படங்கள்: எஸ்.கேசவசுதன்