ரூபாய் - 1

பொருளாதார வளர்ச்சியும் மேம்பாடும்

பொருளாதார வளர்ச்சி (Economic Growth) மற்றும் பொருளாதார மேம்பாடு (Economic Development) என்ற இரு சொற்றொடர்களுக்கும் இடையேயான நுட்பமான வேறுபாட்டை பொருளாதார வல்லுநர்கள் எடுத்துக்காட்டுவார்கள்.

பொருளாதார வளர்ச்சி என்பது எண் அடிப்படையில் அமைந்த கருத்தாக்கம் (Quantitative Concept).ஆனால், பொருளாதார மேம்பாடு என்பதோ தரத்தின் அடிப்படையிலான கருத்தாக்கம் (Qualitative Concept) என்பார்கள்.

ஒரு நாட்டின் தேசிய வருமானத்தில் ஏற்படும் சதவிகித அதிகரிப்பு, அந்த நாட்டை பொருளாதார வளர்ச்சி அடையும் நாடாக அடையாளம் காட்டும். ஆனால், ஒரு நாடு பொருளாதார மேம்பாடு அடைந்துள்ளதாக கருதுவதற்கு அந்த நாட்டு மக்களின் ஒருநபர் வருமானம், கல்வியறிவு வளர்ச்சி, சராசரி வாழ்நாள் (மறைமுகமாக நலவாழ்வையும், உடல் ஆரோக்கியத்தையும் குறிப்பது) போன்ற காரணிகளை மதிப்பிட வேண்டியுள்ளது.

பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு நாட்டு மக்களின் வருமானம் அதிகரித்துள்ளதா என்று பார்ப்பதுடன் நின்றுவிடுகிறது. ஆனால், பொருளாதார மேம்பாடு என்பது அந்த நாட்டுக்கு கிடைத்த வருமானம் சமமாகவும், நியாயமாகவும் பகிர்மானம் (Equal and Fair distribution) ஆகியுள்ளதா என்பதையும் கூடுதலாக கவனிக்கிறது.

ஒரு பொருளாதார நிபுணர் எளிமையாகச் சொன்னார்... ''ஓர் ஊரில் ஒருவர் 100 வீடு கட்டினால் அது அவரது பொருளாதார வளர்ச்சியைக் காட்டும். அதே ஊரில் நூறு பேர் ஆளுக்கொரு வீடு கட்டிக்கொண்டால், அது அந்த ஊரின் பொருளாதார மேம்பாட்டைக் காட்டும்.''

ரூபாய்-2

பொருளாதார மேம்பாட்டை மதிப்பிடுதல்

ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டை மதிப்பிடும் முறைகள் சிலவற்றைக் காண்போம்.

(A) தேசிய வருமானம் மற்றும் தலா வருமானம் (National Income and Per capita Income)

உலக வங்கி ஆண்டுதோறும் உலக நாடுகளை அவற்றின் பொருளாதார மேம்பாட்டின் அடிப்படையில் மதிப்பிட்டு உலக மேம்பாட்டு அறிக்கையை (World Development Report) வெளியிடுகிறது.

உலக மேம்பாட்டு அறிக்கையில், உலக நாடுகள் அவற்றின் மொத்த தேசிய வருமானம் (Gross National Income) அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு வகைப்படுத்தப்பட்டு ஒப்பீடு செய்யப்படுகின்றன. மொத்த தேசிய வருமானம் என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டவரால் (உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் அந்த நாட்டவர்களால்) உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மற்றும் சேவைகளின் மதிப்பிலிருந்து தேய்மானத்தைக் கழித்து கணக்கிடப்படுகிறது.

உலக மேம்பாட்டு அறிக்கை, உலக நாடுகளை அவற்றின் தலா மொத்த தேசிய வருமானத்தின் (Per capita GNP) அடிப்படையில் குறைந்த வருமான நாடுகள் (Low Income Countries), கீழ் நடுநிலை வருமான நாடுகள் (Lower Middle Income Countries),, மேல் நடுநிலை வருமான நாடுகள் (Upper Middle income Countries),அதிக வருமான நாடுகள் (High income Countries) என்று நான்காக வகைப்படுத்துகிறது. இவற்றை முறையே சுருக்கமாக LIC, LMIC, UMIC, HIC என்பர்.

LIC-ன் வருமானம் 1,005 அமெரிக்க டாலருக்கு குறைவு. LMIC-ன் வருமானம் 1,006 முதல் 3,975 டாலர் வரை. UMIC-ன் வருமானம் 3,976 முதல் 12,275 டாலர் வரை.HCL வருமானம் 12,276 டாலருக்கு மேல். இந்த வருமானங்கள் அனைத்தும் 2012-ம் ஆண்டு உலக மேம்பாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டவை. 2010-ம் ஆண்டு Per capita GNI- யில் அமைந்தவை.

மேற்படி வகைப்பாட்டில் இந்தியா 1,340 டாலர்கள் தலா GNI-வுடன் கீழ் நடுநிலை வருமான நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

(B) வாங்கும் சக்தி அடிப்படையிலான வருமானம் (Purchase Power Parity based income)

மேலே சொன்ன மதிப்பீட்டையும், ஒப்பீட்டையும் பொருளாதார வல்லுநர்கள் பலர், நாடுகளை ஒப்பிடுவதற்கான சரியான மதிப்பீடாக ஏற்பதில்லை. ஏனெனில், அதிகாரப்பூர்வமான செலாவணி விகிதம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அதுமட்டுமின்றி செலாவணி விகிதம் நாடுகளுக்கிடையே வர்த்தகம் செய்யப்படும் பொருட்களை மட்டுமே கருத்தில் எடுத்துக்கொள்கிறது. குறிப்பாக, மின்சாரம் (நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியைக் குறிக்கும் ஐந்து முக்கிய அம்சங்களில் ஒன்று) பொதுவாக நாடுகளுக்கு இடையே வர்த்தகம் செய்யப்படுவதில்லை. எனவே, இத்தகைய ஓட்டைகளைக் கொண்டு Per capita GNI நாடுகளின் பொருளாதார மேம்பாட்டை ஒப்பிடுவதற்கான கருவியே அல்ல என்ற கருத்து தீவிரமாக முன்வைக்கப்படுகிறது.

Per capita GNI சரியான மதிப்பீடு இல்லை என்பவர்கள் நாடுகளை அவற்றின் வாங்கும் சக்தியின் அடிப்படையில் ஒப்பிடுவதை சரியான மதிப்பீடு என்கின்றனர். அதாவது, ஒரு டாலரின் மதிப்பு அறுபது ரூபாய் எனக் கொண்டால், அமெரிக்காவில் ஒரு டாலருக்கு வாங்கப்படும் பொருட்கள்,

சேவைகளைவிட இந்தியாவில் அதற்கு சமமான 60 ரூபாய்க்கு அதிக பொருட்களையும், சேவைகளையும் பெற முடியும் என்பதால், இந்தியாவின் வாங்கும் சக்தி அதிகம் என்று குறிப்பிடப்படுகிறது. இது PPP அடிப்படையிலான மதிப்பீடு எனப்படுகிறது. PPP என்பதற்கு Purchase Power Parity என்பது விரிவு.

PPPக்கான வரையறை: அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு டாலருக்கு வாங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளை வேறு ஒரு நாட்டில் வாங்குவதற்குத் தேவைப்படும் அந்த நாட்டு நாணய அலகுகளின் எண்ணிக்கை (Number of Unit of a country’s currency required to buy the same amounts of Goods and Services as one dollar would buy in USA).’’

இந்தக் கட்டுரையில் எதைச் சொன்னாலும் மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி தமிழிலும், இங்கலீஷிலும் மாறி மாறிச் சொல்கிறாரே என்று நினைக்காதீர்கள். போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களில் தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்களும் உண்டு; இங்கிலீஷ் மீடியத்தில் படித்த மாணவர்களும் உண்டு. இந்த இரு பிரிவுகளுக்கும் ஒரே நேரத்தில் விஷயங்களைச் சொல்லவே, இப்படி ஆங்கிலம், தமிழ் என இரண்டும் கலந்து எழுதுகிறேன். தவிர, துறை சார்ந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆங்கில வார்த்தை அறிந்திருப்பது, பிற்காலத்தில் வேலையில் ஜொலிக்க நிச்சயம் உதவும்.

PPP அடிப்படையில் பார்த்தால், இந்தியாவின் Per capita GNI 3,560 டாலர்கள். சாதாரண GNI (Nominal GNI) மற்றும் PPP GNI அடிப்படையில் சில நாடுகளின் ஒப்பீடு: (2012 - உலக மேம்பாட்டு அறிக்கை

இந்தியா, சீனா போன்ற நாடுகளின் சாதாரண தலா GNI -ஐவிட வாங்கும் திறன் தலா GNI அதிகமாக இருப்பதையும், ஜப்பான், யு.எஸ்.ஏ., யு.கே. ஆகிய நாடுகளின் வாங்கும் திறன் GNI அவற்றில் சாதாரண GNI ஐவிட குறைவதையும் மேலே உள்ள அட்டவணை காட்டுகிறது. இந்தியா, சீனா போன்ற நாடுகள் அதிக மக்கள்தொகையைக் கொண்டிருப்பதால், அவற்றின் தலா GNI மற்ற மூன்று நாடுகளையும்விட மிகக் குறைவாக உள்ளது. ஆனால், தலா நிலையில் கணக்கிடாமல் ஒட்டுமொத்தமாக பில்லியன் கணக்கில் ஒப்பிட்டால் இந்த வேறுபாடு இவ்வளவு அதிகம் இல்லை என்பதைக் கீழே உள்ள அட்டவணை காட்டுகிறது.

PPP அடிப்படையில் இந்தியாவின் (பில்லியன் டாலரில் GNI, இங்கிலாந்தின் GNI ஐவிட சுமார் இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதைக் கண்டு காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.

இந்தக் கணக்கீட்டை எல்லாம் குப்பையில் போடுங்கள். நாட்டில் பணம் மட்டும் இருந்தால் போதுமா, மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமா என்று கூறி, பூடான் அரசர் ஜிக்மி சிங்கி வாங்க்சுக் (Jigme Singye Wangchuck) மொத்த தேசிய மகிழ்ச்சி (Gross National Happiness) என்ற குறியீட்டை அறிமுகப்படுத்தினார்.

ஐ.நா. மனித மேம்பாட்டு குறியீடு (Human Development Index), பல்பரிமாண வறுமை குறியீடு(Multidimensional poverty Index), பாலின சமமின்மைக் குறியீடு (Gender Inequality Index) எனப் பல குறியீடுகளை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இவைபற்றி அடுத்த இதழில் விளக்கமாகப் பார்ப்போம்.

ரூபாய் - 3

பொருளாதார வளர்ச்சி, வளரும் பொருளாதார நாடுகளின் குழுமங்கள் பற்றிய சில செய்திகளை கடந்த இதழிலும், இந்த இதழிலும் பார்த்துள்ளோம். இப்போது, இது தொடர்பாக 2010-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளைப் பார்க்கலாம்.

1. In the context of Indian economy, consider the following pairs:
Term Most appropriate description

1. Melt down - Fall in stock prices
2. Recession - Fall in growth rate
3. Slow down - Fall in GDP

Which of the pairs given above is/are correctly matched?

(a)1 only (b) 2 and 3
(c) 1 and 3 (d) 1, 2 and 3
Ans: (a) 1 only

இந்திய பொருளாதாரத்தில், பின்வரும் இணைகளைக் கவனிக்கவும்.

கலைச்சொல் விளக்கம்

1. வீழ்ச்சி - பங்குச் சந்தை விலை சரிவு

2. மந்தம் - வளர்ச்சி விகிதம் குறைதல்

3. சுணக்கம் - மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைதல்

மேலே தரப்பட்ட இணைகளில் எது/எவை சரியாக இணைக்கப்பட்டுள்ளது.

(A) 1 மட்டும் (B) 2 மற்றும் 3

(C) 1மற்றும்3 (D) 1, 2 மற்றும் 3

2. With reference to BRIC countries, consider the following statements:

1. Atpresent, China’s GDP is more than the combined GDP of all the three other countries.
2. China’s population is more than the combined population of any two other countries.

Which of the statements given above is/are correct?

(a) 1 only (b) 2 only
(c) Both 1and2 (d) Neither 1 nor 2
Ans: (d) Neither 1 nor 2

BRIC நாடுகளைப் பொறுத்தவரை, கீழே தரப்பட்ட கருத்துகளைக் கவனிக்கவும்.

1. தற்போது, சீனாவின் ஜிடிபி மற்ற மூன்று நாடுகளின் ஜிடிபி-யைவிட அதிகம்.

2. சீனாவின் மக்கள்தொகை எந்த இரு BRIC நாட்டின் மக்கள்தொகை கூடுதலை விடவும் அதிகம்.

மேலே தரப்பட்ட கருத்துகளில் எது/எவை சரியான(து)வை?

(A) 1 மட்டும் (B) 2 மட்டும்

(C)1 மற்றும் 2 (D)1,2 இரண்டும் சரியல்ல.

விடையும் விளக்கமும்

சரியான விடை

Q1. (A) 1மட்டும்.

Q2. (B) 1,2 இரண்டும் சரியல்ல.

மந்தம் என்பது எதிர்மறை வளர்ச்சி. அதாவது, ஜிடிபி குறைவதைக் குறிக்கும். சுணக்கம் என்பது ஜிடிபி-யின் வளர்ச்சி விகிதம் குறைவதைக் குறிக்கும். வீழ்ச்சி என்பது பங்குச் சந்தை பலவீனமடைந்து பங்குகளின் விலை வீழ்வதைக் குறிக்கும்.

சொற்களின் பொருளையும், அவற்றின் தீவிரத்தன்மையையும் சரியாக உணர்ந்தும், செய்தித்தாள்களை வழக்கமாக வாசித்து வருவதன் மூலமும் இந்தக் கேள்விக்கு சரியான விடையை எளிதில் கண்டறியலாம்.

2010-ம் ஆண்டு நிலவரப்படி BRIC நாடுகளின் ஜிடிபி-யும் மக்கள்தொகையும் பின்வருமாறு:

இது 2010-ல் தென் ஆப்ரிக்கா 'BRIC’ல் சேர்ந்தபின் BRIC என்பது 'BRICS’ ஆனது. ஆனால், அட்டவணையில் தரப்பட்டுள்ள அளவுக்கு மிகத் துல்லியமான விவரம் தெரியாமலேயே தரப்பட்ட இரண்டு விவரங்களையும் அலசி முடிவு காணும் பொருளாதார பொது உணர்வு (Economic Common Sense) வளரும் அளவுக்கு தேர்வர்கள் தங்கள் பொருளாதார பாடத்தில் ஆர்வம் காட்ட வேண்டும்.

(தயாராவோம்)