Published:Updated:

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! டாக்டர் சங்கர சரவணன்

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! டாக்டர் சங்கர சரவணன்

Published:Updated:

ரூபாய் - 1

நாணயம் விகடன் முகநூல் பக்கத்தில், செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டைப் பற்றிய கேள்விக்குப் பல நூறு வாசகர்கள் பல்வேறு விடைகளை வழங்கி இருப்பதைப் பார்த்தபோது, அறுபது ஆண்டுகளுக்குமுன் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

1950-களில் சென்னை மாநில சிறுசேமிப்புத் திட்ட அதிகாரி அய்யாசாமி செட்டியார் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தினார். பொருளாதார வல்லுநரும், இந்தியாவின் முதல் மத்திய நிதி அமைச்சருமான ஆர்.கே.சண்முகம் செட்டியார் அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். விழாவில் கலந்துகொண்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் செல்லாத ரூபாய் நோட்டு பற்றி ஒரு கதையைச் சொன்னார்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஹோட்டலுக்கு சாப்பிட வந்த பயணி ஒருவர், ஹோட்டல் கேஷியரிடம் 100 ரூபாய் நோட்டு ஒன்றைத் தந்து, அதை ஊருக்குப் போகும்போது வாங்கிக்கொள்வதாகச் சொன்னார். ஹோட்டல் பாக்கியைக் கேட்டு மளிகைக் கடைக்காரர் வந்த போது பயணி தந்திருந்த 100 ரூபாய் நோட்டைத்  தந்தார் கேஷியர்.

அதை எடுத்துக்கொண்டு மளிகைக்காரர் வீட்டுக்குப் போனார். குடும்ப டாக்டர் தனக்குச் சேர வேண்டிய பில் தொகையைக் கேட்டு ஆள் அனுப்ப, அந்த ஆளிடம் தன் கையிலிருந்த 100 ரூபாயைக் கொடுத்து அனுப்பினார் மளிகைக்காரர். டாக்டர் முன்பு ஒரு டீ-பார்ட்டி நடத்திய வகையில் மேலே குறிப்பிட்ட ஹோட்டலுக்கு 100 ரூபாய் தரவேண்டி இருந்தது. மளிகைக்காரரிடம் வாங்கிய 100 ரூபாயை ஹோட்டலுக்குச் செலுத்த வேண்டிய பழைய பாக்கிக்காக டாக்டர் கொடுத்தனுப்பினார்.

VAO முதல் IAS வரை!

பயணி ஊருக்குப் புறப்பட்டபோது, தான் தந்த நூறு ரூபாயை ஹோட்டல் கேஷியரிடம் கேட்க, அவரும் திரும்பக் கொடுத்தார். நோட்டை வாங்கிய பயணி அதை மேலும்கீழும் பார்த்தார். பின்னர், 'இது ஒரு செல்லாத நோட்டு. உங்களிடம் தந்தால் செல்லுபடியாகும் எனக் கொடுத்தேன். அது கடைசியில் என்னிடமே திரும்பி வந்துவிட்டது’ என்று வருத்தத்துடன் கூறியபடி, அந்த 100 ரூபாய் நோட்டை கிழித்து எறிந்தார்''.

இந்தக் கதையைக் கூறிய கலைவாணர், தலைமை வகித்த ஆர்.கே.சண்முகம் செட்டியாரைப் பார்த்து, ''இதில் யாருக்கு நஷ்டம் என்பதை தலைவர் தெரிவிக்க வேண்டும்' என்றார்.

''பயணிக்குதான் நஷ்டம்' என்றார் ஆர்.கே.சண்முகம் செட்டியார்.

''அதுதான் செல்லாத நோட்டு ஆயிற்றே?' என்றார் என்.எஸ்.கே.

''அப்படியானால் யாருக்கும் நஷ்டம் இல்லை?' என்றார் செட்டியார்.

''அப்படியானால், ஹோட்டல்காரர், மளிகைக்காரர், டாக்டர் இவர் களது 100 ரூபாய்க் கடன்கள்

அடைபட்டிருக்கிறதே?' என்றார் கலைவாணர். அதற்கு ஆர்.கே. சண்முகம் செட்டியார் சொன்ன பதில் முக்கியமானது.

''இதற்குப் பெயர்தான் நாணயம் என்பது. கரன்சி நோட்டின் மேல் நாம் வைக்கக்கூடிய மதிப்புதான் நாணயம். ரூபாய் நோட்டுக்கு விலை காகித விலைதான். அதற்கு நாம் 100 ரூபாய் மதிப்பைத் தருவது  அதில் இருக்கும் ரிசர்வ் வங்கி கையெழுத்தை நம்பி, அதாவது, அரசாங்கத்தை நம்பித்தான்.''

VAO முதல் IAS வரை!

இந்தக் குட்டிக் கதையையே 'பணம்’ என்கிற பெயரில், தான் எடுத்த படத்தின் முன்னோடிக் கதையாகக் காட்டினார் கலைவாணர். இங்கே ஆர்.கே.சண்முகம் செட்டியார் பயன்படுத்திய நாணயம் என்ற சொல்லுக்கு, விஷீஸீமீஹ்/சிuக்ஷீக்ஷீமீஸீநீஹ் என்று ஒருபொருளும், நேர்மை (பிஷீஸீமீstஹ்) என்று மற்றொரு பொருளும் தொனிக்கக் காண்கிறோம். பொருளாதார போட்டித் தேர்வுகளுக்கும், இந்தச் சம்பவத்துக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்றாலும், பொருளாதார மாணவர்கள் ஒவ்வொருவரும் நாணயத்தின் மதிப்பு பற்றி சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ரூபாய் - 2

VAO முதல் IAS வரை!

பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாடு பற்றி நிறைய கருத்துகளை பார்த்திருக்கிறோம். அது குறித்து 2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் கேட்கப்பட்ட இரண்டு வினாக்களை இப்போது பார்ப்போம்.

In India, deficit financing is used for raising resources for

a) Economic development
b) Redemption of public debt
c) Adjusting the balance of payments
d) Reducing the foreign debt

இந்தியாவில் பற்றாக்குறை நிதியாக்கம் எதற்கான வளங்களைப் பெருக்க பயன்படுகிறது?

a) பொருளாதார மேம்பாடு

b) பொதுக் கடனை அடைத்தல்

c) செலுத்து சமநிலையை சரிசெய்தல்

d) வெளிநாட்டு கடனைக் குறைத்தல்

Economic growth in country 'X' will necessarily have to occur if
a)  There is technical progress in the world economy
b)  There is population growth in X
c)  There is capital formation in X
d)  The volume of trade grows in the world economy

நான் கல்லூரி இளங்கலைப் படிப்பை தற்போதுதான் முடித்துள்ளேன். யூபிஎஸ்சி தேர்வுகளுக்கு எப்போது விண்ணப்பிப்பது?

முருகேஷ், கடலூர்

''யூபிஎஸ்சி முதல்கட்டத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30ஆம் தேதி கடைசி நாள். முதல்கட்டத் தேர்வு ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெறும்.

'X என்ற நாட்டில் பொருளாதார வளர்ச்சி நிச்சயமாக ஏற்பட வேண்டுமெனில்,

a) உலகப் பொருளாதாரத்தில் தொழில்நுட்ப முன்னேற்றம் இருக்க வேண்டும்.

b) X என்ற நாட்டில் மக்கள்தொகை வளர்ச்சி இருக்க வேண்டும்.

c) X என்ற நாட்டில் மூலதன திரட்சி இருக்க வேண்டும்.

d) உலகப் பொருளாதாரத்தில் வணிகம் பெருக்கம் அடைய வேண்டும்.

இப்போது இந்த இரு கேள்விகளுக்கான விடைகளையும் விளக்கங்களையும் பார்க்கலாம்.

முதல் கேள்விக்கு சரியான விடை ணீ) பொருளாதார மேம்பாடு என்பதாகும்.

பற்றாக்குறை நிதியாக்கம் (Deficit Financing) என்பது ஒரு நாடு வரவுக்குமேல் செலவு செய்வதைக் குறிக்கும். வரவுக்குமேல் செலவு செய்வது அவசியமா, அது ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதா என்கிற கேள்வி எழுகிறது. 'வீடாக இருந்தாலும் சரி, நாடாக இருந்தாலும் சரி கடன் வாங்கலாம்; ஆனால், வாங்குகிற கடன் அன்றாட செலவுக்கோ எற்கெனவே வாங்கிய கடனை அடைக்கவோ என்றில்லாமல் பொருளாதார மேம்பாட்டுக்காக எனில் கடனை தாராளமாக அனுமதிக்கலாம்’ என்பதுதான் பொருளாதார வல்லுநர்களின் பொதுக் கருத்து.

இந்தக் கேள்விக்கான விடையையும் அதே நோக்கில்தான் அணுகவேண்டும். ஒரு நாடு கடன் வாங்கி அதன் மூலம் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியைப் பெருக்கவும் (Infrastructure Development) கல்வி, மருத்துவமனை போன்றவற்றில் முதலீடு செய்து நாட்டின் பொருளாதார மேம்பாட்டை அதிகப்படுத்தவும்  பயன்படுத்தினால், அது அந்த நாட்டுக்கு நல்லது. ஆனால், அப்படிச் செய்யாமல் ஏற்கெனவே இருக்கிற பொதுக்கடனை அடைக்கவோ (Redemption of public debt), வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தொகையைச் செலுத்தவோ (Adjusting the Balance of  Payments) அல்லது ஏற்கெனவே வாங்கியிருந்த வெளிநாட்டு கடனின் ஒரு பகுதியை அடைக்கவோ (Reducing the foreign debt)  பயன்படுத்துவது நல்லதல்ல.

VAO முதல் IAS வரை!

இந்தக் கேள்விக்கு விடை அளிப்பதற்கு பற்றாக்குறை நிதியாக்கம் (Deficit Financing), செலுத்து சமநிலை (Balance of Payments) போன்ற பொருளாதார கலைச்சொற்களுக்கு பொருள் தெரிந்திருக்க வேண்டும். பற்றாக்குறை நிதியாக்கத்தைச் சமாளிக்க கடன் வாங்கத்தான் வேண்டுமா?, ரிசர்வ் வங்கியிடம் சொல்லி கூடுதலாக கரன்சி அடித்து வாங்கிக்கொள்ளக் கூடாதா? என்றும் சந்தேகம் எழலாம்.

கரன்சி அடிப்பது (புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிடுவது) பணவீக்கத்தை அதிகப்படுத்தும் என்பதால், பொதுவாக பற்றாக்குறை நிதியாக்கத்தை சரிசெய்ய  நினைக்கும் அரசாங்கங்கள் இந்த முடிவை எடுக்க விரும்புவதில்லை.  

இரண்டாவது கேள்விக்கான சரியான விடை (C).

'X என்ற நாட்டில் மூலதன திரட்சி இருக்க வேண்டும். ஐ.ஏ.எஸ் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளைப் படிக்கும்போது கவனமாகப் படிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்வியிலும் இடம்பெறும்only, necessarily, essentially, strictly, always, never, seldom போன்ற வார்த்தைகள் மிக முக்கியமானவை. இந்தக் கேள்வியும் அந்த ரகத்தைச் சார்ந்ததுதான்.

எந்த ஒரு நாட்டிலும்  பொருளாதார வளர்ச்சி ஏற்பட அந்த நாட்டின் மூலதன திரட்சி, மனிதவளம், உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் வணிகப் பெருக்கம், உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப மேம்பாடு போன்ற அனைத்துமே முக்கியமான காரணிகள்தான். ஆனால், இந்தக் கேள்வியில் குறிப்பிட்ட ஒரு நாட்டில் (X என்ற நாட்டில்) பொருளாதார வளர்ச்சி 'நிச்சயமாக’ ஏற்பட தேவைப்படுவது எது என்ற தொனியில் இந்தக் கேள்வி அமைந்துள்ளது.

VAO முதல் IAS வரை!

உலகப் பொருளாதாரத்தில் தொழில்நுட்ப முன்னேற்றம், வணிகப் பெருக்கம் போன்றவை எற்படும்போது ஒவ்வொரு நாட்டிலும் தொழில்நுட்ப முனேற்றமும் வணிகப் பெருக்கமும் நிச்சயமாக ஏற்படும் என்று கூறமுடியாது. அதேபோல், ஒரு நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குரிய மக்கள் மூலதனத்தை (Human Capital) வழங்குகிறது என்றாலும், அது எப்போதும் அந்த நாட்டுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறமுடியாது.

மக்கள்தொகை வளர்ச்சியால் ஒரு நாட்டில் ஏற்படும் பொருளாதார முன்னேற்றம், அந்த நாட்டின் இயற்கை வளம் (Natural Resource), தொழில் வளர்ச்சி (Industrial Growth),  வேலைவாய்ப்பு (Employment), , மக்கள்தொகை கூறு (Demographic Dividend) தொழில்நுட்ப முன்னேற்றம் (Technological Advancement), மனிதவள மேம்பாடு (Human Resource Development), திறன்மிகு மனிதவளம் (Skilled Human Capital) நகர்ப்புற மக்கள்தொகை (Urban Population),, மக்களின் சராசரி வாழ்நாள் (Life Expectancy)  உள்ளிட்ட  பல காரணிகளைப் பொறுத்து அமைகிறது. எனவே, மக்கள்தொகை வளர்ச்சியால் ஒரு நாட்டில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று கூறமுடியாது.

சில சமயங்களில் மக்கள்தொகை வளர்ச்சி பொருளாதார முன்னேற்றத் துக்கு ஒரு முக்கிய சவாலாகக்கூட (இந்தியாவில் இருப்பதுபோல) அமையலாம். ஆனால், ஒரு நாட்டில் ஏற்படும் மூலதன திரட்சி கண்டிப்பாக அந்த நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும். அதனால் தான், மூலதன திரட்சியை அதிகரிக்கும் நோக்கத்தோடு அரசாங்கம், சேமிப்புக்கு வருமான வரிச் சலுகை தந்து அதை ஊக்குவிக்கிறது.

(தயாராவோம்)
படம்: சோ.கேசவசுதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism