Published:Updated:

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்!

டாக்டர் சங்கர சரவணன்

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்!

டாக்டர் சங்கர சரவணன்

Published:Updated:

ரூபாய்1

ஒரு சின்னக் கணக்கு!

ஒருவருடைய பர்ஸில் சம எண்ணிக்கையில் 1, 2, 5 ரூபாய் நாணயங்கள் உள்ளன. அந்த பர்ஸில் இருக்கும் மொத்த ரூபாய் நூறுக்கும் குறைவு எனில், அந்த பர்ஸில் அதிகபட்சமாக மொத்தம் எத்தனை நாணயங்கள் இருக்கும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் கேள்விக்கான சரியான விடையை  vao2ias@vikatan.com   என்கிற மின்னஞ்சலில் எனக்கு எழுதி அனுப்புங்களேன்.  

 ரூபாய்2

தேசிய மகிழ்ச்சிக் குறியீடு!

பூடான் அரசு வெளியிடுகிற மொத்த தேசிய மகிழ்ச்சிக் குறியீடு (Gross  National Happiness Index) பற்றி கொஞ்சம் விரிவாகச் சொல்கிறேன்.  

உலக வங்கி, ஐ.நா. போன்ற அமைப்பு கள் வெளியிடும் பொருளாதார மேம்பாடு பட்டியல்களில் பூடானுக்கு மிகப் பின்தங்கிய இடம் அளிக்கப்படுவதைப் பார்த்து கடுப்பாகிப்போன பூடான் அரசர் ஜிக்மீ சிங்கி வாங்சுக் (Jingme Singye Wangchuk), ஒரு நாடு பொருளாதார மேம்பாடு அடைந்துள்ளதா என்பதை அந்த நாட்டின் தேசிய வருமானம், கல்வித்தரம், மக்களின் சராசரி வாழ்நாள் இவற்றை எல்லாம்விட அந்த நாட்டு மக்களின் மகிழ்ச்சியை அடிப்படையாகக்கொண்டே அளவிட வேண்டுமென்றார்.

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்!

பூடான் அரசர் பரிந்துரைத்த மொத்த தேசிய மகிழ்ச்சிக் குறியீடு நான்கு காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. பொருளாதாரத் தன்நிறைவு (Economic Self-reliance), களங்கப்படாத இயல்பான சுற்றுச்சூழல் (Pristine Environment), பூடான் கலாசாரத்தை பாதுகாத்து போற்றுதல் (Preservation and Promotion of Bhutan’s Culture) மக்களாட்சி மூலம் ஏற்படுத்தப்படும் சிறந்த ஆளுகை (Good Governance in the Form of Democracy)  என்பவையே மொத்த தேசிய மகிழ்ச்சிக் குறியீட்டுக்கு பூடான் அரசர் கணக்கில் எடுத்துக்கொண்ட காரணிகள்.

பூடான் அரசின் அனைத்துக் கொள்கைகளும் மொத்த தேசிய மகிழ்ச்சி அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகின்றன. திட்ட கமிஷன் பெயரையே பூடான் அரசாங்கம் தேசிய மகிழ்ச்சி கமிஷன் என்று மாற்றிவிட்டது. பூடானை மன்னர் ஆட்சியிலிருந்து மக்களாட்சி, அரசமைப்பு முடியாட்சி யாக காலபோக்கில் மாற்றி அமைப்பதையும் தேசிய மகிழ்ச்சி கொள்கைகளில் ஒன்றாக பூடான் அரசர் குறிப்பிட்டுள்ளார்.

ரூபாய்  3

வணிகம் தொடர்பாக ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளைப் பார்க்கலாம்.

1. In order to comply with TRIPS Agreement, India enacted the Geographical     Indications of Goods (Registration and Protection) Act, 1999. The difference/differences between a ‘Trade Mark’ and a Geographical Indication is/are:

1. A Trade Mark is an individual or a company’s right whereas a Geographical Indication is a community’s right.

2. A Trade Mark can be licensed whereas a Geopraphical Indication connot be licensed.

3. A Trade Mark is assigned to the manufactured goods whereas the Geographical Indication is assigned to the agricultural goods/products and handicraft only.

Which of the statements given above is/are correct?

(a) 1 only
(b) 1 and 2
(c) 2 and 3
(d) 1, 2 and 3

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்!
போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்!

1. TRIPS ஒப்பந்தத்தின்படி, இந்திய பொருட்கள் (பதிவு செய்தல் மற்றும் பாதுகாத்தல்) புவிசார் குறியீடு சட்டம், 1999-ஐ ஏற்றியுள்ளது. வர்த்தகக் குறியீடு என்பதற்கும், புவிசார் குறியீடு என்பதற்கும் இடையேயான வேறுபாடு யாதெனில்,

1. வர்த்தகக் குறியீடு என்பது ஒரு தனிநபர் அல்லது ஒரு நிறுவனத்தின் உரிமை. ஆனால், ஒரு புவிசார் குறியீடு என்பது ஒரு சமூக உரிமை.

2. ஒரு வர்த்தகக் குறியீட்டுக்கு உரிமம் உண்டு. ஆனால், புவிசார் குறியீட்டுக்கு உரிமம் கிடையாது.

3. வர்த்தகக் குறியீடு உற்பத்திப் பொருட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மாறாக, புவிசார் குறியீடு விவசாயப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

மேற்கண்ட மூன்று கூற்றுகளில் எது / எவை சரியானவை?

(a) 1 மட்டும்

(b) 1 மற்றும் 2

(c) 2 மற்றும் 3

(d) 1, 2 மற்றும் 3

2. Other than Venezuela, Which one among the following from South America is a member of OPEC?
 

(a) Argentina
(b) Brazil
(c) Ecuador
(d) Bolivia

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்!

2. வெனிசூலா தவிரப் பின்வரும் எந்தத் தென் அமெரிக்க நாடு ளிறிணிசி அமைப்பில் உறுப்பினராக உள்ளது?

(a) அர்ஜென்டினா
(b) பிரேசில்
(c) ஈக்வெடார்
(d) பொலிவியா

இனி மேலே குறிப்பிட்ட இரண்டு கேள்விகளுக்கான விடைகளைப் பார்க்கலாம்.

முதல் கேள்விக்கான விடை : (B) 1 மற்றும் 2.

புவிசார் குறியீடு அனைத்து வகையான பொருட்களுக்கும் வழங்கப்படுகிறது. அதில் விவசாயப் பொருட்கள், தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், கைவினைப் பொருட்கள் போன்ற பலவகைப் பொருட்களும் அடங்கும். புவிசார் குறியீடு ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் சமூகத்தின் பாரம்பரிய அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் சேலம் வெண்பட்டு, சிறுமலை வாழைப்பழம், நாச்சியார்கோயில் குத்துவிளக்கு போன்றவை அடங்கும்.

தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்றுள்ள பொருட்களின் விவரம் பின்வருமாறு:

1. சேலம் துணி (Salem Fabric), 2. காஞ்சிபுரம் பட்டு, 3. பவானி ஜமுக்காளம், 4. மதுரை சுங்குடி சேலை, 5. கோயம்புத்தூர் அரவை இயந்திரம் (Wet Grinder), 6. தஞ்சாவூர் ஓவியங்கள், 7. நாகர்கோவில் கோயில் நகைகள் (Temple Jewellery of Nagercoil),  8. தஞ்சாவூர் தட்டு, 9. இ.ஐ. தோல் (East India Leather) 10. சேலம் வெண்பட்டு,

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்!

11. கோவை கோரா காட்டன், 12. ஆரணி பட்டு, 13. சுவாமிமலை வெண்கலச் சிலை (Bronze Icons), 14. ஈத்தாமொழி பெரிய தென்னை (Eathomozhy Tall Coconut), 15. தஞ்சாவூர் பொம்மை,

16. நீலகிரி (பழமையான) இலச்சினை (Nilgiri (Orthodox) Logo),  17. விருப்பாட்சி மலை வாழைப்பழம் (Virupatshi Hill Banana), 18. சிறுமலை வாழைப்பழம் (Sirumalai Hill Banana),  19. மதுரை மல்லி, 20. பத்தமடை பாய், 21. நாச்சியார் கோயில் குத்து விளக்கு, 22. செட்டிநாடு பெட்டி (Chettinad Kottam),23. தோடா பூ வேலை (Toda Embroidery),  24. தஞ்சாவூர் வீணை.

மேலே உள்ள வினாவில் குறிப்பிட்டுள்ளதுபோல, வர்த்தகக் குறியீடு என்பது ஒரு கம்பெனிக்கு மட்டுமே சொந்தமானதாகவும், உரிமம் பெற்றதாகவும் உள்ளது. புவிசார் குறியீட்டுக்கு அதேபோல உரிமம் ஏதும் இல்லை என்ற போதிலும் அது ஒரு சமூகத் தொழிலின் / விவசாயச் சிறப்பின் பாரம்பரியத்தையும், பெருமையையும் பதிவு செய்யவும், பாதுகாக்கவும் பயன்படுகிறது.

இரண்டாவது கேள்விக்கான விடை : (C) ஈக்வெடார்.

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்!

OPEC-ன் விரிவாக்கம், Organisation of Petroleum Exporting Countries.. இந்த அமைப்பு 1960-ல் பாக்தாத்தில் தொடங்கப்பட்டது.  இந்த அமைப்பின் நிறுவன உறுப்பினர்கள் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசூலா ஆகிய ஐந்து நாடுகளாகும். தற்போது இந்த அமைப்பில் மொத்தம் 12 நாடுகள் உள்ளன. அவற்றில் ஆறு நாடுகள் மத்திய கிழக்கைச் சேர்ந்தவை. (ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவுதி அரேபியா, யூ.ஏ.இ.) நான்கு ஆப்பிரிக்க நாடுகள் (அல்ஜீரியா, நைஜீரியா, அங்கோலா, லிபியா) மற்றும் இரண்டு தென் அமெரிக்க நாடுகள் (வெனிசூலா, ஈக்வெடார்).

இந்த அமைப்பில் உறுப்பினராக ஈக்வெடார் 1973-ல் சேர்ந்து, அதன்பின் 1992-ல் வெளியேறியது. மீண்டும் 2007-ல் சேர்ந்து கொண்டது. ஆப்பிரிக்க நாடான கபான் 1975-ல் சேர்ந்து 1994-ல் வெளியேறியது. OPEC  நாடுகளில் உறுப்பினராகச் சேர்ந்த ஒரே கிழக்காசிய நாடு இந்தோனேஷியா. இது 1962-ல் சேர்ந்தது. ஆனால், பின்னர் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளம் இல்லாததால், 2008-ல் இந்த அமைப்பில் இருந்து விலகிக்கொண்டது. மொத்த பெட்ரோலியத்தில் 75 சதவிகிதத்தை OPEC நாடுகளே உற்பத்தி செய்கின்றன. அதேபோல், தங்கள் நலனை பாதுகாக்கும் வகையில் இந்த நாடுகளே உலகச் சந்தையில் பெட்ரோலியத்தின் விலையை நிர்ணயிக்கின்றன.

கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும்  நாடுகள் இந்த அமைப்பில் சேரலாம். இந்த அமைப்பின் தலைமையகம் ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் அமைந்துள்ளது.

(தயாராவோம்)
படம்: தே.தீட்ஷித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism