ரூபாய் 1

மொத்த நாணயங்கள்!

கடந்த இதழில் ஒரு சுவாரஸ்யமான கேள்வியைக் கேட்டிருந்தோம். அதற்கான சரியான விடையைப் பல வாசகர்கள் மின்னஞ்சல் மூலம் நமக்கு அனுப்பி இருந்தார்கள். இப்போது அந்தக் கேள்விக்கான விடையைப் பார்ப்போம்.

இந்தக் கேள்விக்கான விடை 36 நாணயங்கள். இந்த விடையைக் கண்டுபிடிப்பது சுலபம். சம எண்ணிக்கையில் 1, 2, 5 ரூபாய் நாணயங்கள் இருப்பதாகக் கேள்வியில் சொல்லியிருந்தோம் எனவே, 1, 2, 5 இவை மூன்றையும் கூட்டினால் 8 வரும். நூறுக்குள் எத்தனை எட்டுகள் உள்ளன என்று பார்த்துவிட்டால், நாணயங்களின் எண்ணிக்கை எத்தனை என்று தெரிந்துவிடும். நூறுக்குள்

12 எட்டுகள் இருக்கும். எனவே, மூன்று விதமான மதிப்பு நாணயங்களுக்கு 3 X 12 = 36 என்பதுதான் சரியான விடை. மூன்று நாணயங்களும் சம எண்ணிக்கையில்தான் இருக்கின்றன என்பதாலும், மொத்த ரூபாய் நூறுக்குக் குறைவு என்பதாலும் அந்த பர்ஸில் அதிகபட்சம் 36 நாணயங்களுக்குமேல் இருக்க முடியாது.

ஐஏஎஸ் தேர்வில் இதுமாதிரி நம் கணித அறிவை சோதிக்கும் கேள்விகளும் கேட்கப்படும் என்பதை எடுத்துச் சொல்லவே, இந்தக் கேள்வியைத் தந்தேன். சரியான விடை தந்த பல நூறு வாசகர்களுக்கு சபாஷ்!

ரூபாய் 2

அரசுத் திட்டங்கள்!

'எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணாம பண்ணினா இப்படித்தான்’ - மண்டையில் நச்சென்று அடி வாங்கி விட்டு, வடிவேலு பேசும் இந்த வசனம் பிரபலம். திட்டமிடுதல் (Planning), , திட்டம் (Plan), நலத்திட்டங்கள் (Welfare Schemes), மக்களைக் கவரும் கவர்ச்சிகரத் திட்டங்கள் (Populist Schemes), யோஜனா (திட்டம் என பொருள்படும் இந்தி வார்த்தை, Mission) என திட்டங்கள் குறித்த பல கலைச்சொற்கள் பொருளாதாரப் பாடத்தில் சாதாரணமாகப் புழங்குகின்றன.

இந்திய அரசு அனைத்து சமூக மக்களையும் உயர்த்தும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி வகுக்கும் வகையிலும் கல்வி, நலவாழ்வு தேவைகளை நிறைவேற்றும் வகையிலும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துகிறது. இந்தத் திட்டங்களின் நோக்கங்கள், திட்டங்களின் பயனாளிகள் யார், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மத்திய, மாநில அரசுகளுக்கிடையே எவ்வாறு பகிர்ந்துகொள்ளப்படுகிறது, திட்டத்தின் இலக்கு என்ன, அந்த இலக்கை அடைவதற்கான காலக்கெடு என்ன என்பது குறித்த கேள்விகள் கொள்குறி (Objective type) வகையில் கேட்கப்படும் கேள்விகளில் முக்கிய இடம் வகிக்கின்றன.

விரிவான விடையளிக்குமாறு கேட்கப்படும் ஐஏஎஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்-மி முதன்மைத் தேர்வுகளில் மேற்படி கேள்விகளோடு இந்தத் திட்டங்கள் குறித்த விமர்சனங் கள், திட்டங்களில் செயல்படுத்துவதில் உள்ள பிரச்னைகள், மாற்று ஏற்பாடுகள் ஆகியவை குறித்தும் கேள்விகள் வருகின்றன. இந்தப் பகுதியில் வரும் வினாக்களுக்கு விடையளிப்பதற்கு மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை வெளியிடும் இந்தியா புத்தகமும், யோஜனா மாத இதழும் பெரிதும் பயன்படும்.

மேலும், பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து செய்தித்தாள்களில் வெளியாகும் கட்டுரைகள் மற்றும் விமர்சனக் கட்டுரைகள் ஆகியவற்றைப் படிப்பதும், முந்தைய வருட தேர்வுகளில் இந்தப் பகுதியில் கேட்கப்பட்டுள்ள வினாக்களை அலசி ஆராய்வதும் மிகுந்த பயன்தரும். (சில ஊரக நலத் திட்டங்களும், சமூகப் பொருளாதார வளர்ச்சி திட்டங்களும் பெட்டிச் செய்தியாகத் தந்திருக்கிறேன்!)

ரூபாய் 3

நலத் திட்டங்கள் குறித்த 2 கேள்விகள்!

நலத்திட்டங்கள் குறித்து 2012-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளைப் பார்க்கலாம். இவற்றுக்கு விளக்கங்கள் தேவையில்லை.

How does the National Rural Livelihood Mission seek to improve livelihood options of rural poor?

1. By setting up a large number of new manufacturing industries and agribusiness centres in rural areas.
2. by strengthening ‘self-help groups’ and providing skill development
3. By supplying seeds, fertilizers, diesel pump-sets and micro-irrigation equipment free of cost to farmers.
Select the correct answer using the codes given below
(a) 1 and 2
(b) Only 2
(c) 1 and 3
(d) 1, 2 and 3
Ans: (b) Only 2

1. தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம், ஊரக ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு மேம்படுத்த முயல்கிறது?

1. ஊரகப் பகுதிகளில் நிறைய எண்ணிக்கையில் புதிய உற்பத்தி தொழில்களையும், வேளாண் தொழில் மையங்களையும் அமைப்பதன் மூலம்.

2. சுயஉதவிக் குழுக்களை வளப்படுத்தித் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதன் மூலம்.

3. விதைகள், உரங்கள், டீசல் பம்ப் செட்டுகள் மற்றும் நுண்ணுயிர் பாசன கருவிகள் ஆகியவற்றை விலையில்லாமல் மக்களுக்கு வழங்குவதன் மூலம்.

கீழ்க்கண்டவற்றில் இருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு

(a) 1 மற்றும் 2

(b) 2 மட்டும்

(c) 1 மற்றும் 3

(d) 1, 2 மற்றும் 3

விடை: (b) 2 மட்டும்

The endeavour of ‘Janani Suraksha Yojana’ Programme is
1. to promote institutional deliveries.
2. to provide monetary assistance to the mother to meet the cost of delivery.
3. to provide for wage loss due to pregnancy and confinement.
Which of the statement(s) given above is / are correct?
(a) 1 and 2
(b) Only 2
(c) Only 3
(d) 1, 2 and 3
Ans: (a) 1 and 2

2. ஜனனி சுரக்ஷ£ திட்டத்தின் நோக்கம்.

1. மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களை ஊக்குவித்தல்.

2. கர்ப்பிணித் தாய்மார்களுக்குப் பிரசவத்துக்கான பண உதவியை வழங்குதல்.

3. கர்ப்பத்தின் காரணமாக வேலைக்குச் செல்ல முடியாததால் ஏற்பட்ட கூலி இழப்பை ஈடுசெய்தல்.

(c) 3 மட்டும்

(d) 1, 2 மற்றும் 3

விடை: (a) 1 மற்றும் 2

(தயாராவோம்)
படங்கள்: பா.காளிமுத்து.

ஊரக நலத் திட்டங்களும்,
சமூகப் பொருளாதார வளர்ச்சி திட்டங்களும்!

ஊரக வளர்ச்சிக்காக சமூக மேம்பாட்டுத் திட்டம் 1952-ல் கொண்டுவரப்பட்டது.

1975-ம் ஆண்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், வறுமை ஒழிப்புக்காகவும் 20 அம்ச திட்டம் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்டது.

ஊரக மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் 1977-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

ஊரக வறுமை ஒழிப்புத் திட்டம் அக்டோபர் 2, 1980-ல் நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டது.

ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் (1974-79) வேலைக்கு உணவுத் திட்டம் 1977-78-ல் கொண்டுவரப்பட்டது.

ஊரகத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் 1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொகுதி மேம்பாட்டுக்காக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஆண்டொன்றுக்கு ரூ.5 கோடி தரப்படுகிறது.

(1 கோடி என்பது 2011-12 முதல் 5 கோடி ஆக்கப்பட்டுள்ளது).

மகளிர் இடையே அஞ்சலகச் சேமிப்பை ஊக்குவிப்பதற்காக மகிளா சம்ருதி யோஜனா 1993-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

'சக்ஷ£ர் பாரத் - படிக்கும் பாரதம்’ என்று திட்டம் பெண்கள் எழுத்தறிவு குறைவாக உள்ள மாவட்டங்களில் 2010-ல் கொண்டுவரப்பட்டது.

பெண்களின் நிலையை உயர்த்துவதற்காக 'பாக்கிய ஸ்ரீ பால் கல்யாண் யோஜனா’ 1998-ல் கொண்டுவரப்பட்டது.

பெண்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்புத் திட்டமான ராஜ ராஜேஸ்வரி மகிளா கல்யாண் யோஜனா 1998-ல் கொண்டுவரப்பட்டது.

வறுமைக்கோட்டுக்கு கீழே வசிக்கும் மக்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கும் 'ஜன் பீமா யோஜனா’ 2000-ல் கொண்டுவரப்பட்டது.

மூத்த குடிமக்களுக்கு 10 கிலோ தானியங்கள் வழங்கும் 'அன்னபூர்ண யோஜனா’ 1999-ல் கொண்டுவரப்பட்டது.

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில் மாதம் 35 கிலோ உணவு தானியத்தை வழங்கும் 'அந்தியோதையா அன்ன யோஜனா’ 2000-ல் கொண்டு வரப்பட்டது.

கிராமப்புற சாலைவசதிகளை மேம்படுத்தும் பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா 2000-ல் கொண்டுவரப்பட்டது.

'வால்மீகி அம்பேத்கர் வீட்டு வசதித் திட்டம்’ நகர்ப்புறங்களில் சேரி வீடுகள் அமைப்பதற்காக 2001-ல் கொண்டுவரப்பட்டது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவப் பரிசோதனைக்கு வழி செய்யும் 'வந்தே மாதரம் திட்டம்’ 2004-ல் கொண்டுவரப்பட்டது.

கருவுற்ற தாய்மார்களுக்குப் பாதுகாப்பளிக்கும் 'ஜனனி சுரக்ஷ£ திட்டம்’ 2005-ல் கொண்டு வரப்பட்டது.