ரூபாய் 1

ஜமீன்தாரின் தங்கக் காப்பு!

ஒரு ஜமீன்தாரிடம் அவரது பரம்பரைச் சொத்தான தங்கக் காப்பு ஒன்று இருந்தது. அவருக்கு நான்கு மகன்கள். ஜமீன்தார் அந்தத் தங்கக் காப்பை தன் மூத்த மகனுக்குக் கொடுக்க நினைத்தார். ஆனால், அவரது நான்கு மகன்களும் அந்தப் பரம்பரைச் சொத்தான தங்கக் காப்பில் இருந்து தங்களுக்கு ஒரு துண்டு வேண்டும் என்று கேட்டனர். அந்தத் தங்கக் காப்பின் விட்டம் 28 செ.மீ என்றால், ஒவ்வொரு மகனுக்கும் எத்தனை செ.மீ நீளம் உள்ள தங்கக் காப்பு துண்டு கிடைக்கும்?

இந்தக் கேள்வி, அடிப்படையில் ஆறாம் வகுப்பில் இடம் பெறக்கூடிய கணக்குக் கேள்விதான். இந்தக் கேள்வியின் விடை என்னவாக இருக்கும் என்பதை யோசித்து, vao2ias@vikatan.com என்கிற முகவரிக்குப் பதில் அனுப்புங்களேன்.

ரூபாய் 2

தர்மபுரியில் இருந்து போட்டித் தேர்வு ஆர்வலரான ஹரிகிருஷ்ணன் கடந்த வாரம் நம்மிடம் ஒரு கேள்வி கேட்டார். 'நீங்கள் எழுதும் இந்தத் தொடர், விஏஓ முதல் ஐஏஎஸ் வரை படிக்கும் தேர்வாளர்களுக்கானது என்று சொல்கிறீர்கள். ஒரே பாடத்தில் இரண்டு தேர்வுகளிலும் எவ்வாறு கேள்விகள் வருகின்றன என்பதை ஓர் உதாரணத்துடன் விளக்க முடியுமா?’ என்று கேட்டார்.

அவரது கேள்விக்குப் பதில் சொல்லும் வகையில் எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டிய அதிமுக்கியமான பொருளாதார கருத்தாக்கமான பணவீக்கம்

(Inflation) பற்றிக் கடந்த வாரம் நடைபெற்ற விஏஓ தேர்வில் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளையும், 2013 மற்றும் 2011-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் பணவீக்கம் பற்றிக் கேட்கப்பட்ட தலா ஒரு கேள்வியுமாகப் பணவீக்கம் குறித்த நான்கு கேள்விகளையும் கீழே தருகிறோம். அந்தக் கேள்விகளுக்கான விடை எதுவென்று குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

1. Inflation denotes the following situation:

(a) price level rises - money value falls
(b) price level rises - money value rises
(c) price level falls - money value falls
(d) price level falls - money value rises

பணவீக்கம் என்பது கீழ்க்கண்ட நிலையைக் குறிக்கும்:

(a) விலைவாசி உயர்வும், பணத்தின் மதிப்பு வீழ்ச்சியும்

(b) விலைவாசி உயர்வும், பணத்தின் மதிப்பு உயர்வும்

(c) விலைவாசி வீழ்ச்சியும், பணத்தின் மதிப்பு வீழ்ச்சியும்

(d) விலைவாசி வீழ்ச்சியும், பணத்தின் மதிப்பு உயர்வும்

2. Consider the following statements and identify which one is not correct? Inflation can be checked by some of the following measures:-

Select the incorrect measure:-

(a) increased taxation
(b) increasing government expenditure
(c) restrictions on imports
(d) rationing

கீழ்க்கண்டவற்றுள் எந்த கூற்று சரியல்ல என தீர்மானிக்க:

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் கீழே தரப்பட்டுள்ளதில் எது தவறு?

(a) வரி விதிப்பை அதிகப்படுத்துதல்

(b) அரசின் செலவினத்தை அதிகரித்தல்

(c) இறக்குமதியில் கட்டுப்பாடுகள் விதித்தல்

(d) பொதுப் பங்கீடு

3. A rise in general level of prices may be caused by

1. an increase in the money supply

2. a decrease in the aggregate level of output

3. an increase in the effective demand
Select the correct answer using the codes given below:

(a) only 1
(b) 1 and 2
(c) 2 and 3
(d) All of these

பொதுவாக, விலையேற்றம் ஏற்பட காரணம்

1. பண விநியோகம் அதிகரித்தல்

2. ஒட்டுமொத்த வெளியீடு அளவு குறைதல்

3. சந்தையில் தாக்கம் ஏற்படுத்தும் தேவை அதிகரிப்பு

கீழ்க்கண்டவற்றில் இருந்து சரியான விடையைத் தேர்வு செய்க

(a) 1 மட்டும்

(b) 1 மற்றும் 2

(c) 2 மற்றும் 3

(d) இவை அனைத்தும்

4. A rapid increase in the rate of inflation is sometimes attributed to the ‘base effect’.What is ‘base effect’?
(a) It is the impact of drastic deficiency in supply due to failure of crops
(b) It is the impact of the surge in demand due to rapid economic growth
(c) It is the impact of the price levels of previous year on the calculation of inflation rate
(d) None of the statements (a), (b), (c) given above is correct in this context

பணவீக்க விகிதத்தில் ஏற்படும் திடீர் அதிகரிப்புக்கு சில சமயங்களில் 'அடிவிளைவு’ காரணமாகிறது. 'அடிவிளைவு’ என்றால் என்ன?

(ணீ) பயிர் விளைச்சல் பாதிப்புக் காரணமாக விநியோகத்தில் ஏற்படும் குறிப்பிடத்தக்க குறைவின் விளைவாக

(a) விரைவான பொருளாதார வளர்ச்சியினால் தேவை பெருகுவதனால் ஏற்படும் விளைவாக

(b) முந்தைய ஆண்டு விலை பணவீக்க கணக்கீட்டில் ஏற்படுத்தும் விளைவாக

(c) மேலே சொல்லப்பட்ட a,b,c ஆகிய மூன்று கருத்துகளுமே இந்த இடத்தில் பொருந்தாதவை

இனி, இந்த நான்கு கேள்விகளுக்கான விடையைப் பார்ப்போம்.

முதலாவது கேள்விக்கான விடை: (a) விலைவாசி உயர்வும், பணத்தின் மதிப்பு வீழ்ச்சியும். இரண்டாவது கேள்விக்கான விடை: (b) அரசின் செலவினத்தை அதிகரித்தல். 3-வது கேள்விக்கான விடை: (d) இவை அனைத்தும். 4-வது கேள்விக்கான விடை: (c) முந்தைய ஆண்டு விலை பணவீக்கக் கணக்கீட்டில் ஏற்படுத்தும் விளைவாக.

இந்தக் கேள்விகளைப் பார்க்கிற போதே இவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை உணர முடியும். மேலே முதலாவதாக உள்ள இரண்டு கேள்விகளில் பணவீக்கத்தைப் பற்றிய எளிமையான புரிதல் கொண்டு விடை அளிக்க முடியும். ஆனால், மூன்றாவது மற்றும் நான்காவது கேள்விகளுக்கு விடை அளிக்க இன்னும் கூடுதலாகக் கலைச்சொல் அறிவு இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் வருகிற பண விநியோகம் (Money Supply),, வெளியீடு (output),தேவை (Demand) போன்ற சொற்களுக்குச் சரியான பொருள் தெரிந்திருக்க வேண்டும். இன்னொரு முக்கிய விஷயம், முதலில் வரும் இரண்டு கேள்விகளும் இடம்பெற்ற விஏஒ தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழியிலும் கேள்வித்தாளில் வினா இருக்கும். எனவே, கிராமப்புற மாணவர்கள்கூட ஓரளவுக்கு புரிந்துகொண்டு விடை அளித்துவிடலாம்.

ஆனால், ஐஏஎஸ் தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே கேள்விகள் இருக்கும். எனவே, மேலே தரப்பட்ட மூன்றாவது மற்றும் நான்காவது கேள்வியைக் கிராமப்புற மாணவர்களும், தமிழ் மொழி வழியே படித்தவர்களும் ஆங்கிலத்தில் படித்து புரிந்துகொண்டுதான் விடை அளிக்க வேண்டும். இந்தமாதிரி கேள்விகளுக்கு எல்லாம் முதல்நிலை தேர்வில் ஆங்கிலத்தில் விடையளித்துத் தேறியபின் முதன்மை தேர்வில் வேண்டுமானால் தமிழில் எழுதிக்கொள்ளலாம். இந்த மாதிரியான கஷ்டங்களையெல்லாம் தாண்டி வெற்றி பெறுவதால்தான் கிராமப்புற மாணவர்கள் குறிப்பாக, தமிழ் வழியில் படித்த மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறும்போது அவர்களைப் பத்திரிகைகள் கொண்டாடுகின்றன.

பணவீக்கம் என்ற சொல்லுக்கு என்ன பொருள் என புதிதாகப் பொருளாதாரம் படிக்கவரும் மாணவர்கள் கேட்பார்கள். தமிழில் இந்தக் கலைச்சொல் மிகவும் நுட்பமானது. ஐந்து வருடங்களுக்குமுன் நாம் காய்கறி வாங்கச் செல்லும்போது 10 ரூபாய் நோட்டுகள் பத்து எண்ணிக்கை எடுத்து போனாலே காய்கறிகளை வாங்கிவந்துவிடலாம். ஆனால், இன்றோ அதே காய்கறிகளை வாங்க 10 ரூபாய் நோட்டுகள் ஐம்பது எண்ணிக்கையில் எடுத்துச் செல்ல வேண்டும். அதாவது, பொருட்களின் விலையேற்றம் காரணமாக நாம் செலவழிக்க எடுத்துச் செல்லும் பணம் அதிகரிக்கிறது. அதாவது, பணம் வீங்குகிறது. அதனால்தான் பணவீக்கம் என்ற வார்த்தை மிக நுட்பமாக அதன் பொருளை விளக்கிவிடுகிறது.

பொருட்களின் விலை குறைவதை ஆங்கிலத்தில் Deflation என்பார்கள். இதைத் தமிழில் 'பணவாட்டம்’ என்கிறோம். சில சமயங்களில் பணவீக்கத்தோடு சேர்ந்து வேலைவாய்ப்பின்மையும் அதிகரிக்கும். அதை ஆங்கிலத்தில் Stagflation என்பார்கள்.stagnation, inflation என்ற இரு வார்த்தைகளின் சேர்க்கையாகும். இதைத் தமிழில் 'தேக்கநிலை வீக்கம்’ என சொல்லலாமா?

(தயாராவோம்)
படம்: தி.குமரகுருபரன்.

சிறப்பாக தந்து வருகிறீர்கள்!

கடந்த வாரத்தில் 2013-ம் ஆண்டுக்கான ஐஏஎஸ் தேர்வு முடிவு வெளியானது. அதில் அகில இந்திய அளவில் 45-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்ற வீ.ப.ஜெயசீலனுடன் பேசினோம்.

ஐஏஎஸ் தேர்வில் பொருளாதாரப் பாடத்துக்கு நீங்கள் பின்பற்றிய புத்தகங்கள் எவையெவை?

''நான் ஐஏஎஸ் முதல் கட்ட தேர்வுக்குப் பொதுஅறிவு பொருளாதாரப் பாடத்துக்காகப் படித்த நூல்களில் குறிப்பிடத்தக்கவை 9 - 12-ம் வகுப்பு வரையிலான எக்கனாமிக்ஸ் அண்ட் சோஷியல் டெவலப்மென்ட் பாடத்துக்கான ழிசிணிஸிஜி பாடப் புத்தகங்கள், ஜிவிபி (ஜிணீtணீ விநீநிக்ஷீணீஷ் பிவீறீறீ) வெளியிட்டுள்ள ரமேஷ் சிங் எழுதிய மிஸீபீவீணீஸீ ணிநீஷீஸீஷீனீஹ் என்ற புத்தகமும் எனக்கு பெரிதும் உதவியது.''

முதன்மைத் தேர்வில் பொது அறிவு பொருளாதாரத்துக்கு நீங்கள் பின்பற்றிய புத்தகங்கள் எவை?

''முதன்மைத் தேர்வை நான் முழுவதும் தமிழ் மொழியிலேயே எழுதிய போதிலும், அதற்கான குறிப்புகளை ஆங்கிலப் புத்தகங்களை வாசித்தே தயாரித்தேன். டெல்லியில் உள்ள வாஜி ராம் மற்றும் ரவி பயிற்சி மையம் வெளியிட்டிருந்த பொருளாதாரப் பாடத்துக்கான பாடக்குறிப்புப் புத்தகம் எனக்கு மிகவும் பயன்பட்டது. இதுதவிர, தேசிய நாளிதழ்கள் மற்றும் பிசினஸ் நாளிதழ்களில் வெளியான பொருளாதாரச் செய்திகள் பலவற்றையும் படித்துக் குறிப்பெடுத்துக் கொண்டேன்.''

நாணயம் விகடனில் வெளிவரும் இந்தத் தொடர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

''இந்தத் தொடரை மரபார்ந்த பொருளாதாரச் செய்திகளோடு சமீபத்திய நிகழ்வுகளையும் சேர்த்து வெகுசிறப்பாகத் தந்துவருகிறீர்கள். போட்டித் தேர்வு வினாக்களை மையப்படுத்தி இந்தத் தொடர் எழுதப்பட்டாலும், பொருளாதாரத்தில் பல கருத்துகளை எளிமையாகப் புரிந்துகொள்ள விரும்புவோருக்கும் இந்தத் தொடர் பயன்படும். ஆங்கிலம் மற்றும் தமிழ் கலைச்சொற்கள் இரண்டும் கலந்து எழுதப்படுவதால் இந்தத் தொடர் நிறைவடைந்து புத்தகமாக வெளிவரும்போது போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும்.''

படம்: வீ.நாகமணி