Published:Updated:

VAO முதல் IAS வரை

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் டாக்டர் சங்கர சரவணன்

VAO முதல் IAS வரை

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் டாக்டர் சங்கர சரவணன்

Published:Updated:

 ரூபாய்  1

ஐஏஎஸ் தேர்வுக்குப் படிப்பவர்கள் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒன்று, மரபார்ந்த விஷயங்கள். இதை ஆங்கிலத்தில் conventional  என்று சொல்வார்கள். மற்றொன்று, சமகால நிகழ்வுகள். இதை contemporary என்று சொல்வார்கள்.

பொது அறிவு பொருளாதாரப் பாடத்தில் எந்தவொரு கருத்தாக்கத்தை எடுத்தாலும், அதுகுறித்த மரபார்ந்த விஷயங்களைப் பொருளாதாரப் பாடப்புத்தகங்களிலும், தற்காலப் போக்குகளைச் செய்தித்தாள் களிலும் படிக்க வேண்டும்.

உதாரணமாக, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு பற்றிய கருத்துகளையும், வாத பிரதிவாதங்களையும் பத்திரிகை செய்திகளிலும், கட்டுரைகளிலும் நாம் அடிக்கடி படித்திருக்கலாம்.

ஆனால், போட்டித் தேர்வு நோக்கில் அந்நிய முதலீடு பற்றி நாம் சில அடிப்படை விஷயங்களை அறிந்துகொண்டால்தான் அதுகுறித்து தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியாக விடையளிக்க முடியும்.

பொதுவாக, அந்நிய முதலீட்டில் இரண்டு வகை உண்டு. ஒன்று, எஃப்டிஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் Foreign direct Investment. .  மற்றொன்று எஃப்ஐஐ என அழைக்கப்படும் Foreign Institutional Investment என்ற அந்நிய நிறுவன முதலீடு ஆகும்.

VAO முதல் IAS வரை

இந்த இரண்டு முதலீடுகளில் அந்நிய நேரடி முதலீடு, அந்நிய நிறுவன முதலீட்டைவிட சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், அந்நிய நேரடி முதலீடு என்பது வெளிநாட்டவர்களால் ஒரு துறையில் நேரடியாகச் செய்யப்படும் முதலீடாக இருப்பதால், அந்த முதலீட்டின் மூலம் நம் நாட்டுக்குப் பணத்தோடு, வெளிநாட்டுத் தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு போன்றவையும் கிடைக்கின்றன.

ஆனால், அந்நிய நிறுவன முதலீடு பங்குச் சந்தையில் செய்யப்படுவதால், அதன்மூலம் நம் நாட்டுக்குப் பணம் கிடைத்தபோதிலும், புதிய தொழில் நுட்பமோ, வேலைவாய்ப்புகளோ நேரடியாகக் கிடைப்பதில்லை. எனவே, பொருளாதார நிபுணர்கள் அந்நிய நேரடி முதலீடுதான் நாட்டின் பொருளாதாரத்துக்கு உகந்தது என்ற கருத்தை முன்வைக்கிறார்கள்.

ஒரு நாட்டில் அதிகப்படியான அளவில் அந்நிய நிறுவன முதலீடு இருப்பது சில அசாதாரணச் சூழ்நிலை களில் நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளிவிடும் என்ற அச்சமும் உண்டு.

ஏனென்றால், அந்நிய நிறுவன முதலீடு பங்குச் சந்தையில் செய்யப்படும் தற்காலிக முதலீடாக இருப்பதால், ஒரு நாட்டின் ஏதேனும் பொருளாதாரப் பிரச்னை உருவாகும்போது, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வேகமாகத் தங்கள் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறிவிடுவதால், அது அந்த நாட்டின் பொருளாதாரச் சூழலை பெரிதும் பாதித்துவிடும் என்ற கருத்து பரவலாகச் சொல்லப்படுகிறது.

இதற்கு ஓர் உதாரணமாக, 1990-களின் இறுதியில் கிழக்காசிய புலிகள் என்று அழைக்கப்பட்ட தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்றவற்றில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி எடுத்துக்காட்டப்படுகிறது.

அந்நிய நிறுவன முதலீடானது துறை முதலீடு (Portfolio investment) என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. 2013-14ம் ஆண்டு பட்ஜெட்டின் பொது இந்திய நிதி அமைச்சர் FDI  மற்றும் FII  பற்றிய வரையறைகளில் ஒரு தெளிவு ஏற்படுத்துவதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, மாயாராம் கமிட்டி அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் கடந்த மாதம் மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. (மாயாராம் குழு அந்நிய முதலீட்டின் வகைப்பாடு குறித்து அளித்த அறிக்கையின் விவரம் குறித்த விளக்கம் அடுத்த இதழில் பார்க்கலாம்.)

அந்நிய முதலீடு குறித்து, நாம் பாடப்புத்தகங்களில் இருந்தும், சமீபத்திய நிகழ்வுகளில் இருந்தும் நமது புரிதலை வளர்த்துக் கொண்டால், முதல்கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு ஆகியவற்றில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமின்றி நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் சரியாக விடையளிக்க முடியும்.

VAO முதல் IAS வரை

எனவே, பொருளாதாரப் பாடத்தில் எந்தவொரு விஷயத்தைப் படிக்கும்போதும், 'கன்வென்ஷனல்’ மற்றும் 'கன்ட்டம்பரரி’ ஆகிய இரண்டு விஷயங்களும் முக்கியமானவை. இந்த இரண்டையும் சரியான விகிதத்தில் கலக்கும்போதுதான் இந்திய ஆட்சிப் பணி தேர்வுக்கான நமது தயாரிப்பு முழுமை அடைகிறது.

இது காபி தூளில் சிக்கரி கலப்பது போல் நுட்பமானது. எந்த அளவுக்கு நாம் அதைக் கலந்து சுவையாகக் கொடுக்கிறோம் என்பதில்தான் நமது வெற்றியின் சூட்சுமம் இருக்கிறது.

இந்த கன்வென்ஷனல் மற்றும் கன்ட்டம்பரரியில் எது காபி, எது சிக்கரி என்பது கேள்விக்குக் கேள்வி மாறுபடும். எனவே, கேள்வியின் நுட்பம் அறிந்து நமது கலவையை நாம் அமைக்க வேண்டும்

.ரூபாய்  2

அந்நிய முதலீடு குறித்து ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்பட்ட மூன்று வினாக்களை இப்போது பார்க்கலாம். இவை, முறையே 2012, 2011, 2010-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்பட்டவை.

I. Which of the following would include foreign Direct Investment in India?
1. Subsidiaries of companies in India.
2. Majority foreign equity holding in Indian companies.
3. Companies exclusively financed by foreign companies.
4. Portfolio investment 
Select the correct answer using the clues given below
(a) 1, 2, 3 and 4
(b) 2 and 4
(c) 1 and 3
(d) 1, 2 and 3
Ans:
(d) 1, 2 and 3 . 
 

VAO முதல் IAS வரை

பின்வருவனவற்றில் எவை இந்தியாவின் நேரடி அந்நிய முதலீட்டில் அடங்கும்.

1. இந்தியாவில் உள்ள கம்பெனிகளின் துணை நிறுவனங்கள்.

2. இந்திய கம்பெனிகளின் பங்குகளில்  பெரும்பான்மை   அந்நிய முதலீடு.

3. முழுவதும் அந்நிய கம்பெனிகளின் நிதி உதவியால் நடத்தப்படும் இந்திய கம்பெனிகள்.

4. துறை முதலீடு.

கீழே கண்ட குறியீடுகளைப் பயன்படுத்திச் சரியான விடையைத் தேர்வு செய்க

(a) 1, 2, 3 மற்றும் 4
(b) 2 மற்றும் 4
(c) 1 மற்றும் 3
(d) 1, 2 மற்றும் 3

விடை: (d) 1, 2 மற்றும் 3

VAO முதல் IAS வரை

ஒரு நாட்டில் செய்யப்படும் முதலீட்டில் அந்நிய நேரடி முதலீடு, அந்நிய நிறுவன முதலீடு இரண்டும் அடங்கும். பின்வரும் கூற்றுகளில் எது இவ்விரண்டுக்கும் உள்ள முக்கியமான வேறுபாட்டை எடுத்துக்காட்டுகிறது?

VAO முதல் IAS வரை

(a) அந்நிய நிறுவன முதலீடு பல்வேறு மேலாண்மைத் திறமைகளையும், தொழில் நுட்பத்தையும் கொண்டு வருகிறது. ஆனால், அந்நிய நேரடி முதலீடு வெறும் மூலதனத்தை மட்டுமே கொண்டுவருகிறது.

(b) அந்நிய நிறுவன முதலீடு ஒரு நாட்டின் மூலதனத்தைப் பொதுவாக அதிகரிக்கிறது. ஆனால், அந்நிய நேரடி முதலீடு ஒரு குறிப்பிட்ட துறையை இலக்காகக் கொண்டது.

(c) அந்நிய நேரடி முதலீடு இரண்டாம் நிலை சந்தையில் மட்டுமே வருகிறது. ஆனால், அந்நிய நிறுவன முதலீடோ முதல் சந்தையைத் தமது இலக்காகக் கொண்டுள்ளது.

(d) அந்நிய நிறுவன முதலீடு, அந்நிய நேரடி முதலீட்டைவிட அதிக நிலைப்புத்தன்மை கொண்டது.

விடை (b) அந்நிய நிறுவன முதலீடு ஒரு நாட்டின் மூலதனத்தைப் பொதுவாக அதிகரிக்கிறது. ஆனால், அந்நிய நேரடி முதலீடு ஒரு குறிப்பிட்ட துறையை இலக்காகக் கொண்டது.

இந்தக் கேள்விக்கு விடையளிக்கும்போது, சற்றுக் கவனமாகக் கேள்வியைக் கூர்ந்து படித்து விடையளிக்க வேண்டும்.

ஏனெனில், முதலாவது கூற்று (a) மற்றும் (d)-ல் அந்நிய நேரடி முதலீடு மற்றும் அந்நிய நிறுவன முதலீடு பற்றிய விவரங்களை அப்படியே மாற்றி எதிர்மறையாக இடம்பெற்றுள்ளன. எனவே, கூர்ந்து கவனித்தால்தான் சரியான விடையான (b)ஐ தேர்வு செய்ய முடியும்.

III. A great deal of Foreign Direct Investment (FDI) to India comes from Mauritius than from many major and mature economies like UK and France. Why?
(a) India has preference for certain countries as regards receiving FDI
(b) India has double taxation avoidance agreement with Mauritius
(c) Most citizens of Mauritius have ethnic identity with India and so they feel secure to invest in India.
(d) Impending dangers of global climatic change prompt Mauritius to make huge investments in India.
Ans: (b) India has double taxation avoidance agreement with Mauritius 

இந்தியாவுக்கு வரும் அந்நிய நேரடி முதலீட்டில் பெரும்பகுதி முதிர்ந்த பொருளாதார நாடுகளான இங்கிலாந்து மற்றும் பிரான்ஸில் இருந்து வருவதைவிட மொரீஷியஸில் இருந்து கூடுதலாக வருகிறது. ஏன்?

(a) இந்தியா அந்நிய நேரடி முதலீடு பெறுவதில் சில நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது.

(b) இந்தியா மொரீஷியஸோடு இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.

(c) மொரீஷியஸ் நாட்டில் பெரும்பாலான குடிமக்கள் இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதைப் பாதுகாப்பாகக் கருதுகிறார்கள்.

(d) பருவநிலை மாற்றத்தால் ஏற்பட உள்ள அபாயங்கள் மொரீஷியஸை இந்தியாவில் அதிக முதலீடு செய்யத் தூண்டுகின்றன.

விடை: (c) மொரீஷியஸோடு இந்தியா இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தக் கேள்விக்கான விடையிலேயே விளக்கம் அமைந்துள்ளது. இன்னும் கூடுதலாகச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், பல அந்நிய நிறுவனங்கள் மொரீஷியஸில் தங்களைப் பதிவு செய்துகொண்டு அங்கிருந்தபடி இந்தியாவில் முதலீடு செய்வதை இது காட்டுகிறது.

அதாவது, சரியாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இந்தியாவுக்கு வரும் அந்நிய முதலீட்டின் பெரும்பகுதி மொரீஷியஸில் இருந்து வருகிறது என்பதைவிட மொரீஷியஸ் வழியாக வருகிறது என்பதே பொருத்தமானது.

இந்தக் கேள்வி 2010-ம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியாகும்.

(தயாராவோம்)
படம்:  தி.குமரகுருபரன்.

II. Both foreign Direct Investment (FDI) and Foreign Institutional Investor (FII) are related to investment in a country. Which one of the following statements best represents an important difference between the two?

(a) FII helps bring better management skills and technology, while FDI only brings in capital.

(b) FII helps in increasing capital availability in general, while FDI only targets specific sectors.

(c) FDI flows only into the secondary market, while FII targets primary market.

(d) FII is considered to be more stable than FDI.

Ans: (b) FII helps in increasing capital availability in general, while FDI only targets specific sectors.