Published:Updated:

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்!டாக்டர் சங்கர சரவணன்

ரூபாய்1

 கடந்த இதழில் நான்கு கணக்குகளைக் கேள்விகளாகக் கேட்டிருந்தேன். (கேள்விகளைத் தெரிந்துகொள்ள   http://nanayam.vikatan.com/index.php?aid=8015) இந்தக் கணக்குகளுக்கான விடைகளை இப்போது சொல்கிறேன்.

முதல் கணக்கைப் பொறுத்தமட்டில், 7 பரிசுகள் தரப்பட வேண்டும். ஒவ்வொரு பரிசுக்கும் இடையே வித்தியாசம் ரூ.20 இருக்க வேண்டும். எனவே, 7 பரிசுகளுக்கான மொத்த வித்தியாசத் தொகை ரூ.140. இந்த

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

140தோடு தந்திருக்கிற விடையை 7ஆல் பெருக்கினால் (7 பரிசுகள் என்பதால்) 560 வருகிறதோ, அதுவே சரியான விடை. எனவே, 7ம் வாய்ப்பாட்டை மனத்துக்குள் சொல்லிப்பார்த்து 7 X 8  = 56 என்று வந்தவுடன், 7 X 80 = 560 ரூபாய். இதோடு 140 ரூபாயைக் கூட்ட 700 ரூபாய். எனவே, குறைந்தபட்ச பரிசின் விலை ரூ.80 என முடிவு செய்யலாம்.

இரண்டாம் கணக்கில், ஒரு ராணுவ முகாமில் ஆயிரம் வீரர்களுக்கான உணவு ஒரு மாதத்துக்கு வரும். பத்து நாள் கழிந்தபின், இன்னும் ஆயிரம் வீரர்கள் வந்து சேர்கிறார்கள். எனவே, மீதமுள்ள உணவு எத்தனை நாளைக்கு வரும் என்று கேட்டிருப்பதால், முதல் 10 நாள் முடிந்த பின்னால் இருக்கும் உணவு ஏற்கெனவே இருக்கக்கூடிய ஆயிரம் வீரர்களுக்கு இருபது நாளைக்கு வரும். இப்போது புதிதாக மேலும் ஆயிரம் வீரர்கள் வந்து சேர்வதால் அந்த உணவு மேற்கொண்டு 10 நாளைக்கு மட்டுமே வரும்.

VAO முதல் IAS வரை!

மூன்றாவது கேள்வியில், பொம்மையின் விலை ரூ.770 என்று எழுதப்பட்டுள்ளது. கடைக்காரர் எழுதபட்ட விலையிலிருந்து 10%  கழித்துத் தருகிறார். எனவே, 693 ரூபாய்க்கு விற்கிறார். இந்த 693 ரூபாயில் உற்பத்தி விலையும், கடைக்காரர் பெறும் 10%  லாபமும் (உற்பத்தி விலையில் 10%) அடக்கம் என்பதால் உற்பத்தி விலையை யும், அதோடு 10 சதவிகிதத்தையும் கூட்டினால், 693 ரூபாய் வரவேண்டும். ஆக, 630ன் 10% என்பது 63. எனவே, சரியான விடை (d) தான்.

நான்காவது கேள்வியில், 14 பம்புகள் 6 நாளில் செய்யும் வேலையைக் கணக்கிடுவோம். அது 14 X 6 = 84 யூனிட் வேலை. நான்கு நாளில் எத்தனை பம்புகள் வேலை செய்தால் இதற்கு சமமான வேலை நடக்கும் என்று அறிய வேண்டும். நான்கு நாளில் இயங்க வேண்டிய பம்புகளின் எண்ணிக்கை நமக்குத் தெரியாததால், அதை ஜ் என்று வைத்துக்கொள்வோம். இப்போது இரண்டு வேலைகளையும் சமன் செய்தால் 4ஜ்=84. எனவே, ஜ்ன் மதிப்பு 21 என்று வருகிறது. அதாவது, நான்கு நாளில் 21 பம்புகள் வேலை செய்தால், 6 நாளில் 16 பம்புகள் வேலை செய்வதற்குச் சமமாக அமையும். நம்மிடம் ஏற்கெனவே, 14 பம்புகள் இருப்பதால் அதிகப்படியாக 7 பம்புகள் தேவைப்படும்.

இந்தச் சரியான விடைகளைப் பல வாசகர்களும் அனுப்பியிருக்கிறார்கள். அவர்களின் அறிவுத்திறன் நிச்சயம் பாராட்டுக்குரியவை.

 ரூபாய் 2

சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து  பலரும் அதுபற்றி பேசுகிறார்கள். நாமும்  பட்ஜெட் தொடர்பான ஒரு விஷயத்தைப் பேசுவோம். 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் முதன்மைத் தேர்வில், நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் 2003 பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அது என்ன சட்டம்? அந்தச் சட்டத்தில் சொல்லப்படும் விஷயங்கள் என்னென்ன என்பதைப் பற்றி என்று  தெரிந்துகொள்வோம்.

ஒவ்வொரு நாட்டிலும் பணக் கொள்கை, நிதிக்கொள்கை ஆகிய இரண்டும் அந்த நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அவசியமானவை ஆகும். இந்த இரு கொள்கைகளில் நிதிக் கொள்கை என்பது ஆளும் அரசாங்கத் தாலும், பணக்கொள்கை என்பது நாட்டின் மத்திய வங்கியாலும் வகுக்கப் படுகிறது. இதில் பணக்கொள்கையை வகுப்பதில் மத்திய வங்கிக்குப் போதுமான அளவுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். அதாவது, நிதிக்கொள்கை, பணக்கொள்கை இரண்டும் ஒன்றில் ஒன்று அடிக்கடி குறுக்கிடக்கூடாது.

உதாரணத்துக்கு, அரசாங்கம் நினைத்தால் பட்ஜெட்டில் ஆகும் அதிகப்படியான செலவுக்கு உரிய பணத்தை மத்திய வங்கியில் இருந்து கடனாக வாங்கிக்கொள்ளலாம் அல்லது ரூபாய் நோட்டாக புதிதாக அச்சடித்துத் தரச் சொல்லலாம். ஆனால், இவை எல்லாம் நாட்டின் பொருளாதாரத்துக்கு உகந்ததா என்பதைப் பார்த்துதான் செய்ய வேண்டும்.

அரசாங்கம் பற்றாக்குறை பட்ஜெட் போடும்போது ஏற்படும் நிதிப் பற்றாக் குறையைச் சமாளிக்க மத்திய வங்கியின் பணக்கொள்கையில் தலையிடுவது நல்லதல்ல. இதனால்தான் ஆளும் அரசு எந்த அளவுக்குப் பற்றாக்குறை பட்ஜெட் போடலாம்; நிதிப் பற்றாக்குறையை எந்த அளவுக்குக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பது பற்றியெல் லாம் இந்தச் சட்டம் பேசுகிறது.

VAO முதல் IAS வரை!

2003ம் ஆண்டு இயற்றப்பட்ட நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் 2004 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் வருவாய் பற்றாக்குறையை (ஸிமீஸ்மீஸீuமீ ஞிமீயீவீநீவீt) ஜிடிபியின் 0.5% அளவுக்கு ஆண்டுதோறும் குறைக்க வேண்டும் என்று குறிப்பிட்டது. அதுமட்டுமின்றி, 200708க்குள் வருவாய் பற்றாக்குறையே இல்லாத அளவுக்குப் பட்ஜெட் போடப்பட வேண்டும் என  வலியுறுத் தியது. பின்னர் இந்த இலக்கு 200809க்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதேபோல், நிதிப் பற்றாக்குறையையும் (Fiscal Deficit) ஆண்டொன்றுக்கு 0.3% என்ற அளவில் குறைத்துக்கொண்டே வந்து, 200708க்குள் 3 சதவிகிதத்தில் கொண்டுவந்துவிட வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயித்தது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்தக் கடன்களின் அளவு ஆண்டொன்றுக்கு 9 சதவிகி தத்துக்குமேல் அதிகரிக்கக் கூடாது என்றும் இந்தச் சட்டம் கூறுகிறது.

மேலும், நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க மத்திய வங்கியை நோட்டு அடித்து தரச்சொல்லும் வழக்கம் அறவே நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஆளும் அரசுகள் இந்த இலக்குகளைக் கண்டுகொள்ளவில்லை.  இந்த ஆண்டும் நிதிப் பற்றாக்குறை 4.1 சதவிகிதமாக இருக்கும் என்றே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் பற்றாக்குறை பட்ஜெட்டை தவிர்க்க, ஒன்று வருவாயைக் கூட்ட வேண்டும். முடியாதபட்சத்தில் செலவுகளையாவது குறைக்க வேண்டும். ஆனால், செலவுகளைக் குறைக்கும்போது பொதுமக்கள் நலன் பாதிக்கப்படாத அளவுக்குத் தேவையற்ற செலவுகளைக் குறைக்கவேண்டும். எது தேவையான செலவு, எது தேவையற்ற செலவு என்பதில் பொதுக்கருத்துக்கு உகந்த அளவு பட்ஜெட் செலவுகள் இருக்குமாறு பட்ஜெட் அமைய வேண்டும்.

உதாரணமாக, இந்த ஆண்டு பட்ஜெட்டில் நதிநீர் இணைப்புக்கு 100 கோடி ரூபாயும், வல்லபாய் படேல் சிலை அமைப்பதற்கு 200 கோடி

ரூபாயும் ஒதுக்கப்பட்டது குறித்து ஊடகங்களில் விமர்சனங்கள் வைக்கப்பட்டதைக் கவனித்திருக்கலாம். இதுபோன்ற நடப்பு செய்திகளை குறிப்பு எடுத்துக்கொண்டு கேள்விகளுக்கு விடை எழுதும்போது மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.

 ரூபாய் 3

போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் பொருளாதாரக் கேள்விகளில் பணக்கொள்கை பற்றிய கேள்விகள் முக்கியமானவை. அப்படிப்பட்ட இரு கேள்விகளை இங்குப் பார்க்கலாம்.

1. Consider the following liquid assets
1. Demand deposits with the banks
2. Time deposits with the banks
3. Savings deposits with the banks
4. Currecncy
The correct sequence of these assets in the decreasing order of liquidity is
 

(a) 1-4-3-2  (b) 4-3-2-1
(c) 2-3-1-4  (d) 4-1-3-2
 

VAO முதல் IAS வரை!

பின்வருவனவற்றை அவற்றின் நீர்மைத் தன்மை அடிப்படையில் வரிசைப்படுத்துக.

1. வங்கிகளில் வைக்கப்படும் கேட்பு வைப்புகள்

2. வங்கிகளில் உள்ள கால வைப்புகள்

3. வங்கிகளில் உள்ள சேமிப்பு வைப்புகள்

4. பணம்

மேலே குறிப்பிட்டவற்றின் நீர்மைத் தன்மை அடிப்படையில் அவற்றின் சரியான இறங்குவரிசை

(a) 1-4-3-2
(b) 4-3-2-1
(c) 2-3-1-4
(d) 4-1-3-2

2. In the context of Indian economy, ‘Open Market Operations’ refers to

(a) borrowing by scheduled banks from the RBI
(b) lending by commercial banks to industry and trade
(c) purchase and sale of government securities by the RBI
(d) None of the above

VAO முதல் IAS வரை!

இந்திய பொருளாதாரத்தைப் பொறுத்தவரை 'வெளிச்சந்தை செயல் பாடுகள்’ என்பது எதைக் குறிக்கும்

(a) அட்டவணை வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெறுவது

(b) வணிக வங்கிகள் தொழில் மற்றும் வர்த்தகத்துக்குக் கடன் வழங்குதல்

(c) அரசாங்கப் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வாங்குதலும், விற்பனை செய்தலும்

(d) மேற்கண்ட எதுவுமில்லை

இனி இந்த இரு கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம். முதல் கேள்விக்கான விடை (d) 4-1-3-2.

பொருளாதாரத்தில் நீர்மைத்தன்மை என்பது உடனடியாகப் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் சொத்தைக் குறிக்கும். அப்படி பார்க்கிறபோது, பணம் என்பது அதிக நீர்மைத்தன்மை வாய்ந்தது. யார் வேண்டுமானாலும், யாரிடம்

வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் தரவோ, வாங்கவோ முடியும். பணத்துக்கு அடுத்தாற்போல் வரும் அதிக நீர்மைத் தன்மையுள்ள சொத்து கேட்பு சேமிப்புகள். தேவையானபோது டிடில் இருந்து பணத்தை உடனடியாக எடுத்துவிடலாம். இந்த வரிசையில் மூன்றாவதாக வருவது சேமிப்புக் கணக்குகள். கடைசியில் வருவதுதான் கால வைப்புகள். கால வைப்புகளில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கென்று பணத்தை டெபாசிட் செய்துவிட்டால் அந்தக் காலம் முடிந்த பின்புதான் பணத்தைப் பெறமுடியும். எனவே, அதற்கு நீர்மைத்தன்மை குறைவு என்பது உண்மைதானே.

இரண்டாவது கேள்விக்கான சரியான விடை (c). அரசாங்கப் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வாங்குதலும், விற்பனை செய்தலும். வெளிச்சந்தை செயல்பாடுகளை நாட்டின் மத்திய வங்கிகள், பணக்கொள்கையைக் கட்டுப்படுத்தும் முக்கியக் கருவியாகப் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் ரிசர்வ் வங்கி அரசுப் பத்திரங்களை விற்கும்போது வட்டி விகிதம்

அதிகரிக்கிறது. அதேசமயம், நீர்மைத்தன்மை சுருங்குகிறது. அதேபோல் ரிசர்வ் வங்கி அரசாங்கப் பத்திரங்களை வாங்கும் போது வட்டி விகிதம் குறைகிறது. நீர்மைத்தன்மை விரிவடைகிறது.

அடுத்த இதழில் பணக்கொள்கை பற்றி இன்னும் சில விஷயங்களை விளக்கமாகப் பார்ப்போம்.

(தயாராவோம்)
படம்:  தி.குமரகுருபரன்