ரூபாய் - 1

பொருளாதாரத்தில் புதுப்புது கலைச்சொற்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அப்படிப்பட்ட இரண்டு சொற்களைப் பார்ப்போம். ஒன்று ரூர்பனைசேஷன் (Rurbanization). இந்தச் சொல் நகர்ப்புற வசதிகளை ஊரகப் பகுதிகளில் ஏற்படுத்துவதைக் குறிக்கும். அதாவது, நகர்ப்புறங்களில் இருப்பது போன்ற சாலைகள், தகவல்தொடர்பு வசதிகள், வங்கி வசதிகள், மின்சாரம், குடிநீர், கல்வி, மருத்துவம் ஆகியவற்றை ஊரகப் பகுதிகளிலும் ஏற்படுத்திவிட்டால், ஊரக மக்கள் நகரத்தைத் தேடி வருவது பெருமளவுக்குக் குறையும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த ரூர்பனைசேஷனின் முக்கியத்துவம் குறிப்பிடப்படுகிறது. PURA-Providing

Urban Amenities in Rural Areas என்று முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமினால் முன்வைக்கப்பட்ட கனவுத் திட்டம், ரூர்பனைசேஷனின் ஓர் அங்கமே ஆகும்.
அடுத்து, மற்றொரு புதிய கலைச்சொல், டீசர் லோன் (Teaser Loan). இது வங்கிகளால் வழங்கப்படும் ஒருவகைக் கடன். இந்தக் கடன்களின் தன்மை கடன் வழங்கப்பட்ட ஆண்டிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் (உதாரணமாக, ஓராண்டு) குறைந்த வட்டி விகிதம் உடையதாகவும், பின்னர் சந்தை நிலவரத்துக்கேற்ப மாறி அமைவதாகவும் (பெரும்பாலும், அதிக வட்டி விகிதம்) அமையும். வணிக வங்கிகள் சமீப காலங்களில் வழங்கும் வீட்டுக் கடனில் இந்தவகை கடன் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஐஏஎஸ் தேர்விலும், 2011 மற்றும் 2012-ம் ஆண்டுகளிலும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்த டீசர் லோனனை ‘சீண்டல் கடன்’ என தமிழில் சொல்லலாமா?

ரூபாய் - 2

போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் பொருளாதாரக் கேள்விகளில் வங்கியியல் (Banking) பற்றிய கேள்விகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. நாட்டின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி, அதன் பணிகள், வங்கித் துறையில் இயங்கும் பல்வேறு வங்கிகள், அவற்றின் வகைப்பாடு, அவற்றின் செயலை ரிசர்வ் வங்கி முறைப்படுத்தும் விதம், வங்கித் துறை சீர்திருத்தத்துக்காக அமைக்கப் பட்ட பல்வேறு கமிட்டிகள், அந்த கமிட்டிகளின் பரிந்துரைப்படி வங்கித் துறையில் செய்யப்பட்ட முக்கிய சீர்திருத்தங்கள், வங்கித் துறை எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகள், வங்கித் துறையில் கொண்டுவரப் பட்டுள்ள புதுமைகள், வங்கித் துறை சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள் போன்றவற்றைப் பற்றிய பல்வேறு கேள்விகள் போட்டித் தேர்வுகளில் வருகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி 1935-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் நாள் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் கீழ் உருவானது. தொடக்கத்தில் பங்குதாரர்களின் பங்கு முதலீட்டில் 5 கோடி ரூபாய் மூலதனத்தில் தனியார் வங்கியாகத்தான் அது தொடங்கப்பட்டது. இருப்பினும், வங்கிகளை ஒழுங்குப்படுத்தும் பணியை யும், அரசாங்கத்தின் வங்கியாகச் செயல்படும் பணியையும் அது மேற்கொண்டது. பின்னர் 1949-ம் ஆண்டு ஜனவரி 1-ம் நாள் அது தேசிய மயமாக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் பணிகளை நாணய வெளியீட்டாளர் (Currency Authority), அரசாங்கத்தின் வங்கி (Bank to the Government), வங்கிகளின் வங்கி (Bankers Bank), அந்நிய செலாவணியின் பாதுகாவலன் (Custodian of Foreign Exchange), கடன்களின் கட்டுப்பாட்டாளர் (Controller of Credit), பன்னாட்டு நிதி நிறுவனங்களில் இந்தியாவின் முகவர் (Agent of India at International Financial Institutions) என்று வரையறுப்பார்கள். ரிசர்வ் வங்கி நாட்டின் மொத்த வங்கித் துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, வங்கிகளை, அட்டவணை வங்கிகள் (Scheduled Banks) மற்றும் அட்டவணை சாரா வங்கிகள் (Non-Scheduled Banks) என இரண்டாக வகைப்படுத்தி உள்ளது. அட்டவணை வங்கிகள் என்பவை 5 லட்சத்துக்குக் குறையாமல் மூலதனத்தைக் கொண்டு ரிசர்வ் வங்கியின் பிற கட்டுப்பாடுகளையும் ஏற்று இயங்குபவை ஆகும். இவை ரிசர்வ் வங்கி சட்டத்தின் 2-ம் அட்டவணையில் பட்டியலிடப்பட்டு உள்ளன. அனைத்து வணிக வங்கிகள் (இந்திய மற்றும் அந்நிய), ஊரக மண்டல வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் ஆகியவை அட்டவணை வங்கிகள் ஆகும்.
ரிசர்வ் வங்கியின் இரண்டாவது அட்டவணையில் பட்டியலிடப்படாத வங்கிகளை அட்டவணை சாரா வங்கிகள் என்கிறோம். 1960-61-ம் ஆண்டு களில் அட்டவணை சாரா வங்கிகளின் எண்ணிக்கை 250-க்கும் மேல் இருந்தது. பின்னர் அவை படிப்படியாகப் பெரிய வங்கிகளோடு இணைக்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கை காலப்போக்கில் வெகுவாகக் குறைக்கப்பட்டது.

இந்தியாவில் வணிக வங்கிகளின் வரலாறு 1770-ல் தொடங்குகிறது. ஹிந்துஸ்தான் பேங்க் என்ற வங்கி அலெக்ஸாண்டர் அன்கோ என்ற நிறுவனத்தால் கொல்கத்தாவில் ஐரோப்பிய நிர்வாகத்தின் கீழ் 1770-ல் ஏற்படுத்தப்பட்டது. 1806-ல் வங்காள வங்கியும் (Bank of Bengal), 1880-ல் பாம்பே வங்கியும் (Bank of Bombay), 1843-ல் மெட்ராஸ் வங்கியும் (Bank of Madras) ஏற்படுத்தப்பட்டன. இவை மூன்றும் பொதுவாக பிரசிடென்சி என்று அழைக்கப்பட்டன.

1894-ல் தொடங்கப்பட்ட பஞ்சாப் தேசிய வங்கிதான் முதல் தூய இந்திய வங்கி எனப்படுகிறது. 1881-ம் ஆண்டு OUDH வணிக வங்கி தொடங்கப்பட்டது. 1921-ம் ஆண்டு மூன்று பிரசிடென்சி வங்கிகளையும் இணைத்து இம்பீரியல் வங்கி உருவாக்கப்பட்டது. பின்னர், 1955-ம் ஆண்டு இம்பீரியல் வங்கி தேசியமயமாக்கப்பட்டு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என பெயர் மாற்றப்பட்டது.

பின்னர், விவசாயிகள், நலிந்தோர், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஊரக மக்கள் ஆகியோருக்கு வங்கிக் கடன் கிடைக்க வழிசெய்யும் வகையில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. 1969-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 14 வங்கிகளும், 1980-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 6 வங்கிகளும் தேசிய மயமாக்கப்பட்டன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் அதன் ஏழு துணை வங்கிகள் ஆகியவற்றோடு சேர்த்து இந்தியாவிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட மொத்த வங்கிகளின் எண்ணிக்கை 28 ஆகும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், மண்டல ஊரக வங்கிகளும் சேர்ந்து பொதுத்துறை வணிக வங்கிகள் (Public Sector Commercial Banks) என்று அழைக்கப்படுகின்றன.

ரூபாய் - 3

வங்கித் துறை பற்றிய 2010-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளை இப்போது பார்க்கலாம்.

1. Which of the following terms indicates a mechanism used by commercial banks for providing credit to the government?

(a) Cash Credit Ratio
(b) Debt Service Obligation
(c) Liquidity Adjustment Facility
(d) Statutory Liquidity Ratio

பின்வரும் சொற்களில் எது வணிக வங்கிகள் அரசாங்கத்துக்குக் கடன் வழங்கும் ஒருமுறையைக் காட்டுகிறது?

(a) ரொக்க கடன் விகிதம்
(b) கடன் சேவை கட்டாயம்
(c) நீர்மை சரிசெய்யும் வசதி
(d) சட்டப்பூர்வ நீர்ம விகிதம்
2. Consider the following Statements:

The functions of commercial banks in India include
1. Purchase and sale of shares and securities on behalf of customers.
2. Acting as executors and trustees of wills.

Which of the statements given above is / are correct?

(a) I only
(b) 2 only
(c) Both 1 and 2
(d) Neither I nor 2

பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்.

இந்தியாவில் வணிக வங்கிகளின் செயல்பாடு

1. வாடிக்கையாளர்கள் சார்பாக செக்யூரிட்டிகளையும், பங்குகளையும் வாங்குதலும், விற்பனை செய்தலும்.
2. விருப்பங்களின் தர்மகர்த்தா வாகவும் செயல்பாட்டாளராகவும் செய லாற்றுதல்.

மேலே தரப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
(a) 1 மட்டும்
(b) 2 மட்டும்
(c) 1 மற்றும் 2 சரி
(d) இரண்டும் தவறு

இரண்டு கேள்விகளுக்கான விடைகளை இப்போது பார்க்கலாம். முதல் கேள்விக்கான சரியான விடை (d) சட்டப்பூர்வ நீர்ம விகிதம். அதாவது, ஒவ்வொரு வணிக வங்கியும், தனது மொத்த வைப்புத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை ரொக்கம் அல்லாத பிற சொத்தாக (கடன் பத்திரங்கள், உண்டியல் பில்கள் போன்ற வையாக) வைத்திருக்க வேண்டும். இதுவே சட்டப்பூர்வ நீர்ம விகிதம் (Statutory Liquidity Ratio) எனப்படும்.

இந்த விகிதம் ஒவ்வொரு வங்கியின் மொத்த வைப்புத் தொகையில் குறைந்தபட்சம் 25 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்று வங்கிகள் ஒழுங்குமுறை (திருத்தச்) சட்டம், 1962 கூறுகிறது. இந்த விகிதத்தை 40% வரை அதிகரிக்க ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உள்ளது.

இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி 1990-களுக்கு முன்பு மத்திய, மாநில அரசு பட்ஜெட் தேவைகளைச் சமாளிப் பதற்கான நிதியைத் திரட்டுவதற்கு ரிசர்வ் வங்கி தொடர்ந்து எஸ்எல்ஆரை உயர்த்தி வந்தது. ஒருகட்டத்தில் எஸ்எல்ஆர் 38.5% கூட இருந்துள்ளது. வங்கிகளும் தங்கள் எஸ்எல்ஆர் கட்டாயத்துக்காக அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டிய நிலை இருந்தது. 1991-ம் ஆண்டு வங்கி சீர்திருத்தம் பற்றிய நரசிம்மம் கமிட்டி இவ்வாறு எஸ்எல்ஆரை பட்ஜெட் நிதி திரட்ட பயன்படுத்துவது நல்லதல்ல என்று கூறியது. அதன்பின் 1997-ல் எஸ்எல்ஆர் 25 சதவிகிதமாகக் குறைக்கப் பட்டது. தொடர்ந்து எஸ்எல்ஆர் இந்த அளவுக்கு கீழேயே பராமரிக்கப்பட்டு வருகிறது.

இரண்டாவது கேள்விக்கான சரியான விடை (b) 2 மட்டும் ஆகும். ஏனெனில், வணிக வங்கிகள் நேரடியாக மூலதனச் சந்தையில் (Capital Market) ஈடுபடுவதில்லை. வாடிக்கையாளர்கள் சார்பாக செக்யூரிட்டிகளையும், பங்கு களையும் வாங்கி விற்றல் என்பது முதலீட்டு வங்கிகளின் (Investment Bank) பணியாகும். எனவே, வணிக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர் விருப்பங்களின் தர்மகர்த்தாவாகவும், செயல்பாட்டா ளராகவும் மட்டுமே பணியாற்றுகின்றன என்ற விடையே இந்தக் கேள்வியைப் பொறுத்தமட்டில் சரியான விடையாகும்.

புரிந்த விஷயத்தையே புரியாதமாதிரி கேட்டால், அதுதான் சிவில் சர்வீஸ் கேள்வி என்று வேடிக்கையாகச் சொல் வார்கள். இந்தக் கேள்வி அதற்கு ஓர் உதாரணமோ!

(தயாராவோம்)
படங்கள்: தே.தீட்ஷித்.