ரூபாய் - 1

ஐஏஎஸ் ஆளுமைத் தேர்வில் சில சமயங்களில் அறநெறி சார்ந்த சுவையான கேள்விகள் கேட்கப்படுவதுண்டு. 2013-ம் ஆண்டு ஐஏஎஸ் ஆளுமை தேர்வுக்குச் சென்றுவந்த மாணவர்களோடு உரையாடியபோது, ஒரு மாணவர் தனக்குக் கேட்கப்பட்ட ஒரு சுவையான கேள்வியைக் குறிப்பிட்டார். அந்தக் கேள்வி இதுதான்.

‘‘ஒரு தொழிலதிபருக்கு 30 கோடி ரூபாய்க்கான ஒரு ஒப்பந்தம் அரசாங்கத்திலிருந்து கிடைக்கிறது. அந்த ஒப்பந்தம் தனக்குக் கிடைத்தால், அவர் திருப்பதி கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய் காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருக்கிறார். அதன்படி, அதைச் செலுத்துகிறார். அதேபோல், அந்த ஒப்பந்தம் தனக்குக் கிடைக்க காரணமாக இருந்த அதிகாரிக்கு (அந்த அதிகாரி நீதிக்கு புறம்பாக எதையும் செய்யவில்லை; தனக்குப் பணம் தரும்படியும் அந்தத் தொழிலதிபரிடம் கேட்கவில்லை) 50 லட்சம் ரூபாய் தருகிறார். இப்போது அந்தத் தொழிலதிபர் கோயிலுக்குச் செலுத்திய 1 கோடி ரூபாய் காணிக்கை எனப்படுகிறது. ஆனால், அந்த அதிகாரிக்கு தரும் 50 லட்சம் லஞ்சமாகப் பார்க்கப்படுகிறது. ஏன் அப்படி?”
இந்தக் கேள்விக்கு அந்த மாணவர் சொன்ன பதில் என்ன என்பதை அடுத்த இதழில் சொல்கிறேன். நம் வாசகர்கள் சிந்தித்துத் தங்கள் பதில் என்ன என்பதை நறுக்கென இரண்டு வரியில் vao2ias@vikatan.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் பார்ப்போம். சிறந்த பதில் அனுப்பும் இரண்டு வாசகர்களுக்கு நிச்சயம் பரிசு உண்டு.

ரூபாய் - 2

உலக அளவில் பொருளாதாரத்தைக் கட்டிக்காக்கும் மும்மூர்த்திகளாகத் திகழ்பவை உலக வங்கி (World Bank), பன்னாட்டு பண நிதியம் (International Monetary Foundation) மற்றும் உலக வர்த்தக நிறுவனம் (World Trade Organisation) ஆகியவை ஆகும். இவற்றில் உலக வர்த்தக நிறுவனத்தின் கதை சற்றே பெரியது. எனவே, அதை இன்னொரு வாரம் பார்க்கலாம். இப்போது, ‘பிரெட்டன் வுட் இரட்டையர்கள்’ என்று அழைக்கப்படும் உலக வங்கி மற்றும் பன்னாட்டு பண நிதியம் பற்றிச் சில கருத்துக்களைப் பார்க்கலாம்.

உலக வங்கி, பன்னாட்டு பண நிதியம் ஆகிய இரண்டும் பிரெட்டன் வுட் மாநாட்டு தீர்மானத்தின்படி, 1945 டிசம்பரில் தொடங்கப்பட்டன. உலக வங்கி, பன்னாட்டு பண நிதியம் ஆகியவற்றின் தலைமையகங்கள் வாஷிங்டனில் உள்ளன. உலக வங்கியில் 188 நாடுகளும், பன்னாட்டு பண நிதியத்தில் 188 நாடுகளும் உறுப்பு நாடுகளாகும்.

உலக வங்கிக்கும், பன்னாட்டு நிதியத்துக்கு உள்ள வேறுபாடு என்ன? ஒரு வரியில் விடை சொல்லுங்கள் என்று நேர்முகத் தேர்வுகளில் ஒரு கேள்வி கேட்கப்படுவதுண்டு. அதற்கான விடை, World Bank Lends but IMF bails out என்பதாகும். அதாவது, உலக வங்கிக் கடன் வழங்குகிறது. ஆனால், பன்னாட்டு நிதியம் நிதிச் சிக்கலில் இருந்து ஒரு நாட்டை விடுவிக்கிறது என்பதே அந்த விடை.

உலக வங்கி என்பது IBRD, IDA, IFC, MIGA, ICSID என்ற ஐந்து உறுப்புகள் கொண்டது. IBRD - International Bank for reconstruction and Development (பன்னாட்டு மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கி), IDA - International Development Association (பன்னாட்டு மேம்பாட்டு ஒன்றியம்), IFC - International Finance Corporation (பன்னாட்டு நிதிக் கழகம்), MIGA - Multilateral Investment Guarantee Agency (பன்னாட்டு முதலீட்டு உறுதி முகமை), ICSID - International Centre for Settlement of Investment Disputes (முதலீட்டு பிரச்னைகளைச் சரிசெய்வதற்கான சர்வதேச மையம்) என்ற இந்த ஐந்து உறுப்புகளிலும் ஒரு நாடு உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. உதாரணமாக, இந்தியா முதல் நான்கு உறுப்புகளிலும் உறுப்பினராக உள்ளது. ஆனால், ஐந்தாவது உறுப்பான ICSID-ல் உறுப்பினராக இல்லை.

ஏதேனும் ஓர் உலக நாட்டின் பணத்துக்குச் சர்வதேச சந்தையில் தேவை பெருகும்போது அந்தப் பணத்தைக் கடனாகத் தருவது உலக வங்கி. அந்தப் பணத்தை விற்பனை செய்வது பன்னாட்டு பண நிதியம் (Bank Lends and the Fund sells).

பன்னாட்டு வணிகச் சமநிலையைப் பாதுகாப்பது, உலக நாடுகளுக்கிடையே பண ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகியவை பன்னாட்டு பண நிதியத்தின் முக்கியப் பணிகள். பன்னாட்டு பண நிதியத்தின் நாணயம் அல்லது அதன் முதலீட்டு வளம் (Capital Resources) Special Drawing Rights எனப்படுகிறது. பன்னாட்டு பண நிதியத்தின் பணமான SDR-ஐ ‘காகிதத் தங்கம்’ (Paper Gold) என்கிறோம்.

பன்னாட்டு பண நிதியத்தின் ஒவ்வோர் உறுப்பு நாடும் தங்கள் ஒதுக்கீட்டுக்கு ஏற்ப பணம் அளித்துப் பன்னாட்டு நிதியத்தின் முதலீட்டு வளத்தை உருவாக்குகின்றன. பன்னாட்டு பண நிதியத்தில் அதிக ஒதுக்கீடு கொண்டிருக்கும் மூன்று நாடுகள், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி. பன்னாட்டு பண நிதியத்தில் அதிக ஒதுக்கீடு கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியா 11-வது இடத்தில் உள்ளது. பன்னாட்டு பண நிதியத்தின் மொத்த ஒதுக்கீட்டில் இந்தியாவின் பங்களிப்பு 2.44%. சீனா மொத்த முதலீட்டு வளத்தில் 4 சதவிகித பங்களிப்புடன் 6-வது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடத்தில் உள்ள அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகியவற்றின் முதலீட்டு பங்களிப்புகள் (Quota) முறையே 17.69%, 6.56%, 6.12% ஆகும்.

பன்னாட்டு பண நிதியத்தின் கொள்கை முடிவுகளில் வாக்களிக்கும் உரிமை அதன் உறுப்பு நாடுகளுக்கு அவை கொண்டுள்ள ஒதுக்கீட்டைப் பொருத்து அமைகிறது. பன்னாட்டு பண நிதியத்தின் உறுப்பு நாடுகள் தங்கள் ஒதுக்கீட்டுக்கான பணத்தை 25% நிலைச் சொத்தாகவும் (Reserve Assets) மீதத்தைத் தங்கள் நாட்டுப் பணமாகவும் வழங்கலாம். ஒவ்வொரு நாடும் தான் செலுத்த வேண்டிய BOP (Balance of Payment)-க்கு தனது நாட்டு இருப்பில் உள்ள அந்நிய செலாவணி போக அதிகப்படியான பணத்தைப் பன்னாட்டு பண நிதியத்திடமிருந்து தங்கள் ஒதுக்கீட்டுக்கு ஏற்ப பெற்றுக்கொள்ளலாம். பன்னாட்டு பண நிதியம் ஆண்டுதோறும் உலகப் போட்டி அறிக்கையை (world competitiveness report) வெளியிடுகிறது.

ரூபாய் - 3

ஐஏஎஸ் தேர்வில் பன்னாட்டு நிதி அமைப்புகள் பற்றி ேகட்கப்பட்ட இரண்டு கேள்விகளைப் பார்க்கலாம்.

1. Regarding the International Monetary fund, which one of the following statements is correct?
(a) It can grant loans to any country
(b) It can grant loans to only development countries
(c) It grants loans to only member countries
(d) It can grant loans to the central Governments

பன்னாட்டு பண நிதியம் பற்றிக் கீழே தரப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது எது?

(a) அது எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் கடன் வழங்கும்
(b) அது வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே கடன் வழங்கும்
(c) அது உறுப்பு நாடுகளுக்கு மட்டுமே கடன் வழங்கும்
(d) அது மத்திய அரசாங்கங்களுக்கு மட்டுமே கடன் வழங்கும்

2. The International Development Association, a lending agency, is administered by the
(a) International Bank for Reconstruction and Development
(b) International Fund for Agricultural Development
(c) United Nations Development Programme
(d) United Nations Industrial Development Organisation

பன்னாட்டு மேம்பாட்டு ஒன்றியம் ஒரு கடனளிக்கும் முகமை. அதை நிர்வகிப்பது

(a) பன்னாட்டு மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி
(b) பன்னாட்டு வேளாண்மை மேம்பாட்டு நிதி
(c) ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம்
(d) ஐக்கிய நாடுகள் தொழில் மேம்பாட்டுத் திட்டம்

இதில் முதல் கேள்வி 2011-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்விலும், இரண்டாவது கேள்வி 2010-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்விலும் கேட்கப்பட்டவை ஆகும். இப்போது இவற்றுக்கான சரியான விடைகளைப் பார்க்கலாம். முதல் கேள்விக்கான சரியான விடை (c) அது உறுப்பு நாடுகளுக்கு மட்டுமே கடன் வழங்கும் என்பதாகும். ஏனென்றால், பன்னாட்டு பண நிதியம் ஒரு நாட்டுக்கு வழங்கும் கடனின் அளவு அந்த நாடு பன்னாட்டு பண நிதியத்தில் கொண்டுள்ள மூலதன வளத்தின் சதவிகிதத்திலேயே அமையும். எனவே, உறுப்பினர் இல்லாத நாட்டுக்கு பன்னாட்டு பண நிதியம் கடன் வழங்குவதில்லை.

இரண்டாவது கேள்விக்கான சரியான விடை (a) பன்னாட்டு மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி என்பதாகும். இந்த அமைப்பு உலக வங்கியின், மென்கடன் நிறுவனம் (Soft loan Window) என்று அழைக்கப்படுகிறது. சில சமயங்களில் இந்த அமைப்பு உறுப்பு நாடுகளுக்கு பூஜ்ய வட்டி விகிதத்தில்கூட கடன் வழங்கும்.

(தயாராவோம்)