Published:Updated:

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் !டாக்டர் சங்கர சரவணன்படங்கள்: ச.ஹர்ஷினி, டி.ஆரோன் பிரின்ஸ் காட்ஸன்.

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் !டாக்டர் சங்கர சரவணன்படங்கள்: ச.ஹர்ஷினி, டி.ஆரோன் பிரின்ஸ் காட்ஸன்.

Published:Updated:

ரூபாய்  1

மக்கள்தொகை மாற்ற நிலையில் மூன்று படிநிலைகள் இருப்பதையும், 1921-ம் ஆண்டு முதல் இந்தியா இரண்டாவது படிநிலையில் இருந்து வருவதையும் கடந்த வாரம் பார்த்தோம்.

இரண்டாவது படிநிலையின் மூன்று துணை நிலைகள் குறித்து மக்கள்தொகை விஞ்ஞானிகள் (Demographic Scientists) விளக்கியுள்ளனர். 1921 முதல் 1951 வரையான காலகட்டம் நிலையான வளர்ச்சிக் காலம் (Period of steady growth) எனப்படும். இந்தக் காலகட்டத்தில் உணவு உற்பத்தி பெருக்கத்தாலும், நோய்க் கட்டுப்பாட்டு முயற்சிகளாலும் இறப்பு விகிதம் குறைந்தது. ஆனால், பிறப்பு விகிதம் உயர்வாகவே காணப்பட்டது.

1951 - 1981 வரையிலான காலம் விரைவான மற்றும் அதிக வளர்ச்சிக் காலம் (Period of Rapid and high growth) என்று அழைக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் கால கட்டத்தில் இந்திய நாட்டின் மருத்துவ வசதிகள் அதிகரிப்பு, நலவாழ்வு நடவடிக்கைகள், மருத்துவ அறிவு வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாகவும், வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. இதனால் மக்கள்தொகை இறப்பு விகிதம் குறைந்த போதிலும், மக்கள்தொகை பிறப்பு விகிதம் அதிகமாகவே காணப்பட்டது. இந்த நிலையைப் பொறுத்தமட்டில், முன்னேறிய நாடுகளுக்கும், இந்தியா வுக்கும் இடையேயான வேறுபாட்டை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

VAO முதல் IAS வரை!

இந்தப் படிநிலையில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதும், இறப்பு விகிதம் குறைவதும் முக்கியப் பண்புகளாக முன்னேறிய நாடுகளில் காணப்பட்டது. ஆனால், இந்தியாவில் இந்தப் படிநிலை பற்றி பேசும்போது இறப்பு விகிதம் குறைவதற்கு முன்பாகவே மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது என்று எடுத்துக்காட்டுவர். மக்கள்தொகையின் அதிக வளர்ச்சியை அதேசமயத்தில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறையும் போக்கையும் இந்த துணை நிலையில் காணலாம்.

பத்தாண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் (Decadal growth rate) என்பது ஒவ்வொரு பத்து ஆண்டிலும் மக்கள் தொகை எந்த விகிதத்தில் பெருகியுள்ளது என்பதைக் காட்டுவதாகும்.

உதாரணமாக, 1981 - 1991 வரையான பத்தாண்டில் 23.87 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி விகிதம் 1991 - 2001 வரையான பத்தாண்டில் 21.54 சதவிகிதமாக குறைந்தது. அதுவே 2001 -2011-ம் ஆண்டு அது 17.64 சதவிகிதமாக மேலும் குறைந்து உள்ளது. கடைசி பத்தாண்டில் மட்டும் வளர்ச்சி விகிதம் 3.9 விழுக்காட்டு புள்ளிகள் குறைந்திருப்பது சுதந்திர இந்தியாவின் மிகப் பெரும் சாதனை ஆகும்.  இந்தச் சாதனயைச் சுட்டிக்காட்டி இந்தியா ஏறக்குறைய மக்கள்தொகை யின் மூன்றாவது படிநிலையை எட்டி உள்ளது என்று கூறுவோரும் உண்டு.

ரூபாய் 2

போட்டித் தேர்வுகளில் மக்கள் தொகைப் பற்றி கேட்கப்படும் வினாக்களில் மக்கள்தொகை, மக்கள் நெருக்கம், எழுத்தறிவு விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய மாநிலங்களை ஏறு வரிசையிலும், இறங்கு வரிசையிலும் அமைத்துத் தருமாறு கேட்கப்படும் வினாக்கள் பிரபலம்.

மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ள மாநிலங்கள் (2011 கணக்கெடுப்பின்படி), உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்காளம் ஆகியவை ஆகும். இவை முறையே இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 16.49%, 9.29%, 8.58%, 7.55% மக்களைக் கொண்டுள்ளது.

இந்த வரிசையில் 7 சதவிகித மக்கள் தொகையைக் கொண்டு ஐந்தாம்  இடத்தில் இருந்த ஆந்திரப்பிரதேசம், 2014-ம் ஆண்டு ஆந்திரா, தெலங்கானா என இரண்டாகப் பிரிக்கப்பட்டதால் பின்னுக்குச் சென்றுவிட்டது. எனவே 7-ம் இடத்தில் இருந்த தமிழ்நாடு 6-ம் இடத்திலும், ஏற்கெனவே 6-ம் இடத்தில் இருந்த மத்தியப்பிரதேசம் 5-ம் இடத்துக்கும் முன்னேறியுள்ளன.

VAO முதல் IAS வரை!

2011-ம் ஆண்டு சென்சஸ்படி, இந்திய மொத்த மக்கள்தொகையில் 5.96% பேர் தமிழ்நாட்டில் வசிக்கின்றனர். தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை 7.21 கோடி ஆகும். இதுபோல், மக்கள் நெருக்கத்தில் முதல் 5 இடத்தைப் பிடிக்கும் மாநிலங்கள் முறையே, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, உத்தரப் பிரதேசம், ஹரியானா இந்த வரிசையில் 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, முதல் இடத்தில் இருந்த மேற்கு வங்காளம், 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது இரண்டாம் இடத்துக்கு சென்றுவிட்டது.

2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் பாலின விகிதம் 940 ஆகும். அதாவது, 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் உள்ளனர் என்பதே பாலின விகிதம் ஆகும்.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகளில்  ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாடுகளின் பெண்கள் விகிதம் முறையே 1025, 1055 ஆகும்.

நாட்டின் எழுத்தறிவு விகிதம் குறித்த விவரங்களும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது திரட்டப்படு கின்றன. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, கேரளா (93.91%) லட்சத்தீவு (92.28%) மிசோரம் (91.58%) திரிபுரா (87.75%) ஆகியவை முதல் நான்கு இடத்தில் உள்ளன.
இந்த வரிசையில் 80.33% எழுத்தறிவு விகிதத்தைக் கொண்ட தமிழ்நாட்டுக்கு 14-வது இடம்தான் கிடைத்துள்ளது. மிகக் குறைந்த எழுத்தறிவு விகிதம் கொண்ட மாநிலமாக பீகார் 63.82% உள்ளது.

ரூபாய்-3

VAO முதல் IAS வரை!

பின்வரும் வினாக்கள் இந்திய மக்கள்தொகை / மக்கள் தொடர்பானவை.

1. Which one of the following states of India has the lowest density of population?
(a) Himachal Pradesh
(b) Meghalaya
(c) Arunachal Pradesh
(d) Sikkim

பின்வரும் இந்திய மாநிலங்களில் எது மிகக் குறைந்த மக்கள் அடர்த்தி கொண்டது?

(a) ஹிமாச்சலப் பிரதேசம்
(b) மேகாலயா
(c) அருணாசலப் பிரதேசம்
(d) சிக்கிம்

2. With reference to ‘Changpa’ community of India, consider the following statements.

1. They live mainly in the state of Uttarakhand
2. They rear the pashmina goats that yield a fine wool
3. They are kept in the category of Scheduled tribes.

Which of the statements given above is / are correct?

(a) 1 only
(b) 2 and 3 only
(c) 3 only
(d) 1, 2 and 3

இந்தியாவில் வசிக்கும் ‘சங்பா’ இனத்தவர்கள் குறித்த பின்வரும் கூற்று களில் எது / எவை சரியானவை?

1. அவர்கள் குறிப்பாக, உத்தரகண்ட் மாநிலத்தில் வசிக்கிறார்கள்.
2. அவர்கள் அழகிய கம்பளியைத் தரும் பேஷ்மினா வகை வெள்ளாடுகளை வளர்க்கின்றனர்.
3. இந்த மக்கள் பட்டியல் பழங்குடி இனத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலே தரப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
(a)  1 மட்டும்
(b) 2 மற்றும் 3 மட்டும்
(c)  3 மட்டும்
(d) 1, 2 மற்றும் 3

முதல் வினா 2007-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்விலும், இரண்டாவது வினா 2014-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்விலும் கேட்கப் பட்டது. இனி இவற்றுக்கான விடைகளைப் பார்க்கலாம்.

முதல் வினாவுக்கான சரியான விடை (c) அருணாசலப்பிரதேசம்.

2007-ம் ஆண்டு இந்த வினா கேட்கப்பட்டபோது 2001-ம் மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு கேட்கப்பட்டது. இப்போது 2011-ம் ஆண்டு சென்சஸ் நடத்தப்பட்ட பின்பும் இந்த வினாவுக்கான விடையில் மாற்றமில்லை.

VAO முதல் IAS வரை!

2001-ம் ஆண்டு சென்சஸ்படி, அருணாசலப்பிரதேசம் ஒரு சதுர கி.மீட்டருக்கு 13 பேர் வசிக்கும் மாநிலமாக இருந்தது. 2011-ம் ஆண்டு சென்சஸ்படி, அது ஒரு சதுர கி.மீட்டருக்கு 17 பேர் வசிக்கும் மாநிலமாக உள்ளது. இந்தியாவில் தற்போதுள்ள 29 மாநிலங்களில் மக்கள் நெருக்கம் (மக்கள் அடர்த்தி) மிகக் குறைவாக உள்ள மாநிலம் அதுதான்.

இந்தியாவில் மக்கள்தொகை குறைந்த மாநிலம் சிக்கிம். சிக்கிமின் மக்கள் தொகை 2011-ம் ஆண்டு கணக்கெடுப்புப் படி, 10,54,686. ஆனால், அருணாசலப் பிரதேசத்தின் மக்கள்தொகை அதைவிட அதிகம் (13,82,611). மக்கள்தொகை, மக்கள் அடர்த்தி இரண்டுக்குமான வேறுபாடு உணர்ந்து சென்சஸ் விவரங்களை சரியாக அப்டேட் செய்துகொண்டால், இதுபோன்ற வினாக்களுக்கு சரியாக விடை அளிக்க இயலும்.

இரண்டாவது கேள்விக்கான விடை (b) 2 மற்றும் 3 மட்டும் என்பதாகும். சங்பா பழங்குடியினர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வசிக்கின்றனர். இவர்கள் இந்திய அரசாங்கத்தின், இந்திய (பழங்குடியினர்) ஆணை திருத்தச் சட்டம், 1991ல் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் பழங்குடியினரில் அடங்குவர்.

புகழ்பெற்ற காஷ்மீர் கம்பளங்களுக் கான கவின்மிகு கம்பளி ரோமங்களைத் தரும் பேஷ்மினா என்னும் வெள்ளாடு களை வளர்ப்பதை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளனர். பொதுவாக, செம்மறி ஆடுகள்தான் கம்பளி ரோமங்களைத் தரும். பேஷ்மினா வெள்ளாடுகள் விதிவிலக்கானவை.

2011-ம் ஆண்டு சென்சஸ்படி, இந்திய மக்கள்தொகையில் 8.6% பேர் பழங்குடியினர் ஆவர்.
(தயாராவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism