Published:Updated:

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் டாக்டர் சங்கர சரவணன்

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் டாக்டர் சங்கர சரவணன்

Published:Updated:

ரூபாய்-1

அரசாங்கத்தின் வரவு-செலவு பற்றிப் பேசும்போது பல்வேறு கலைச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. செலவு பற்றிய கலைச்சொற்களில் வாக்களிக்கப் பட்ட செலவினம் (Voted expenditure) மற்றும் சாட்டப்பட்ட செலவினம் (Charged expenditure) என்பவை முக்கியமானவை.


இந்திய அரசாங்கத்தால் செய்யப்பட வேண்டிய செலவினங்கள் இந்திய தொகுப்பு நிதியில் (Consolidated Fund of India) இருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நிதியில் இருந்து பணத்தைச் செலவு செய்வதற்கான ஒப்புதலை நாடாளுமன்றத்தில் பெறுவதற்காகத்தான் ஆண்டுதோறும் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படுகிறது.

பட்ஜெட்டில் ஓர் ஆண்டுக்கான வரவுகளும், செலவுகளும் தனித் தனியாகப் பிரித்து விவரமாகக் காட்டப் படுகின்றன. அந்த அடிப்படையில் நாட்டுக்குரிய அனைத்து செலவினங் களும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வாக்களித்து நிறைவேற்றப்படுகின்றன. இதில், திட்டச் செலவுகள், திட்டம் சாரா செலவுகள், அரசு ஊழியர்களுக் கான ஊதியம் உள்ளிட்ட பலவும் அடங்கும்.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் களால் வாக்களிக்கப்பட்டு நிறைவேற்றப் படும் செலவின வகை, வாக்களிக்கப்பட்ட செலவினம் என அழைக்கப்படுகிறது. இந்த வாக்களிக்கப்பட்ட செலவினத் திலிருந்து விதிவிலக்கு பெற்ற செலவின மும் ஒன்று உண்டு. அதுதான் சாட்டப் பட்ட செலவினம் என்பது.

VAO முதல் IAS வரை!

இந்திய நாட்டின் அரசு அங்கங்களில் நாடாளுமன்றமும் ஒன்று. அது சட்டம் இயற்றும் அமைப்பு (Legislature). இதேபோல், அரசமைப்பு சார்ந்த நிர்வாகிகள் (Constitutional Executives), நீதி அமைப்பு (Judiciary) ஆகியவையும் இந்திய நாட்டின் அரசு அங்கங்களே. இந்த அங்கங்களில் உயர்ந்தபட்ச பதவியை வகிப்பவர்களுக்கான சம்பளத்துக்கும், நாடாளுமன்றமே அனுமதி அளித்தால், அது அந்தப் பதவி களுக்கு அழகல்ல. எனவேதான், இந்திய குடியரசுத் தலைவர், இந்திய தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதி (அதேபோல் மாநிலத்தில் ஆளுநர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள்) ஆகிய உயர்பதவி வகிப்பவர் களின் ஊதியங்கள் நாடாளுமன்றத்தில் அனுமதி ஓட்டெடுப்புக்கு உட்படுத்தப் படுவதில்லை. மாறாக, சாட்டப்பட்ட செலவினங்கள் என்ற பெயரில் பட்ஜெட்டில் குறிப்பிடப்படுகின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் இடம் பெற்ற இந்த அரசமைப்பு மற்றும் நீதித் துறை உயர்பதவியாளர்களுக்கான சம்பளச் செலவே சாட்டப்பட்ட செலவினம் ஆகும்.

இந்தப் பதவி வகிப்பவர்களுக்கான சம்பளத்துக்கு நாடாளுமன்ற அனுமதி தேவையில்லை என்பதை இந்திய அரசமைப்புச் சட்டம் வரையறுத்ததன் மூலம் இந்த உயர்பதவி வகிப்பவர்களின் சுதந்திரமும், நீதித் துறையின் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரூபாய்-2

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வில் கேட்கப்படும் பொருளாதாரக் கேள்விகளில் பல வகைகள் உண்டு. அவற்றுள் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் நிர்வாக அலுவலர் பதவி களுக்காக நடத்தப்படும் தேர்வுகளில் கேட்கப்படும் பொருளாதாரக் கேள்விகளின் தன்மை யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வு கேள்விகளில் இருந்து மாறுபட்டதாக இருக்கும்.

 வங்கிகளைப் பற்றிய விஷய ஞானம், தற்காலப் பொருளாதார நிகழ்வு, பொருளாதாரத் துறையில் பயன் படுத்தப்படும் சில விரிவாக்கங்கள் போன்றவற்றைச் சார்ந்து எளிய கேள்விகள் அந்தத் தேர்வுகளில் இடம்பெறும்.

சான்றாக 2013-ம் ஆண்டு தேசிய காப்பீட்டு நிறுவனம் நிர்வாக அலுவலர் பதவிக்காக நடத்தப்பட்ட தேர்வில் கேட்கப்பட்ட சில பொருளாதாரக் கேள்விகளைப் பார்க்கலாம்.

1. Commission for Agricultural Costs and Prices (CACP) recommends
a) Comfort Price
b) State Advised Price
c) Minimum Support Price
d) Minimum Export Price

2. Vedanta Alumina is a company operating in the area of

a) Shipping
b) Mining
c) Cement
d) Textiles

3. Which of the following is the abbreviated name associated with food security?

a) ASHA
b) PDS
c) WTO
d) NPA

4. Golden revolution refers to the development of

a) Oilseeds
b) Pulses
c) Horticulture
d) Cereals

5. Which of the following banks has taken over the Centurion Bank of Punjab?

a) ICICI Bank
b) IDBI Bank
c) HDFC Bank
d) AXIS Bank

6. Which of the following is the name of a private sector Bank in India?

a) IDBI Bank
b) Axis Bank
c) Corporation Bank
d) UCO Bank

7. India paid Rs.700 cr as penalty to World Bank and other international agencies due to...
a) World Bank hates India
b) Prepayment of loans
c) Delay in the payment of debts
d) delay in the execution of projects

8. Mr. A.K.Antony, a Union Minister in the Indian Cabinet, recently signed an agreement with South Korea. This agreement was for the Cooperation in the field of

a) Agriculture   b) Rural Development
c) Defence   d) None of these

இனி, இந்தக் கேள்விகளுக்கான விடைகளைப் பார்க்கலாம்.
1. c  2. b 3. b 4. c
5. c  6. b 7. d 8. c

VAO முதல் IAS வரை!

இந்தக் கேள்விகள் பொருளாதாரம் சார்ந்த மிக எளிமையான கேள்விகள். செய்தித்தாள்களைப் படித்து வருவதன் மூலமும், இந்தவகைத் தேர்வுகளின் முந்தைய வருட வினாத்தாள்களை பார்ப்பதன் மூலமும், பட்டப்படிப்புத் தரத்தில் அமைந்த பொது அறிவு நூல்களை வாசிப்பதன் மூலமும் இத்தகைய கேள்விகளுக்கு எளிதாக விடையளிக்கலாம்.

முந்தைய வருட கேள்விகளைப் பார்த்து படிக்கும்போது கேள்விக்கான விடையை மட்டும் படிக்காமல், அந்தக் கேள்வி சார்ந்த முழுவிவரத்தையும் படித்துக்கொள்வது சிறந்தது.

சில கேள்விகளில் சரியான விடையைத் தவிர, மீதமுள்ள மூன்று வாய்ப்பு விடைகளுக்கான விவரங்களையும் சரிவரத் தெரிந்துகொள்வது நல்லது.

சான்றாக, மேலே குறிப்பிடப்பட்ட கேள்வி ஒன்றில், குறைந்தபட்ச ஆதார விலை (Minimum Support Price) பற்றிக் கேட்கப்பட்டுள்ளது. என்றாலும், இந்தக் கேள்வியைப் படிக்கும்போது வேளாண்மை விலை நிர்ணயக் குழு பற்றியும், அரசாங்கத்தின் கொள்முதல் விலை பற்றியும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

VAO முதல் IAS வரை!

 அதேபோல், இரண்டாவது கேள்விக் கான விடையைப் படிக்கிறபோது, வேதாந்த நிறுவனம் சுரங்கத் தொழிலில் ஈடுபடும் ஒரு நிறுவனம் என்ற விடையை சரியாகச் சொல்ல, கப்பல் கட்டும் துறை, சிமென்ட் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களைப் பற்றியும் நினைவுகூற வேண்டும்.

அதேபோல், தங்கப் புரட்சி என்பது தோட்டத் தாவரங்களின் உற்பத்திப் பெருக்கத்தைக் குறிக்கும் என்ற விடையைப் படிக்கும்போது, மஞ்சள் புரட்சி என்பது எண்ணெய் வித்து உற்பத்திப் பெருக்கத்தைக் குறிக்கும் என்பதையும், வெள்ளிப் புரட்சி என்பது முட்டை உற்பத்தி பெருக்கத்தைக் குறிக்கும் என்பதையும், நீலப் புரட்சி என்பது கடல் உற்பத்திப் பொருட்கள் தொடர்பானது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், மேற்படிக் கேள்விகள் செய்தித்தாளை படிக்கிறபோது, எதுமாதிரியான பொருளாதாரச் செய்தி களுக்கு முக்கியத்துவம் தந்து படிக்க வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகின்றன.  இதேபோல், மூன்றாவது கேள்வியில் பொதுவிநியோகத் திட்டம் (Public Distribution System) பற்றிக் கேட்கப் பட்டுள்ளது.

 நாம் அன்றாட வழக்கில் ரேஷன் கடை என்று கூறுவதுதான் Public Distribution System என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும். அதேபோல், அந்தக் கேள்வியில் தரப்பட்ட வாய்ப்பு விடையான ASHA-என்பது Accredited Social Health Activist என்பதன் சுருக்கம் என்பதையும், அந்தச் சொல் சுகாதாரத் துறையோடு தொடர்புடையது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

(தயாராவோம்)

படங்கள்: ஆ.முத்துக்குமார்,  ரா.வருண் பிரசாத்