Published:Updated:

தோல்வியிலிருந்து மீண்டெழ உதவும் முக்கிய விதிகள்..!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

தோல்வியிலிருந்து மீண்டெழ உதவும் முக்கிய விதிகள்..!

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

நாம் வெற்றிபெறுவதற்கு இருக்க வேண்டிய முக்கியமான ஒன்று, எந்த பாதிப்பிலும் இருந்து விரைவில் மீண்டெழுகிற குணாதிசயம். ஆங்கிலத்தில் இதை ‘Resilience’ (ரிசிலியன்ஸ்) என்பார்கள். இந்த மீண்டெழும் குணாதிசயம் பெற உதவும் பத்து முக்கிய விதிகளைச் சொல்லும் புத்தகத்தைதான் இந்த வாரம் அறிமுகப்படுத்துகிறோம்.

புத்தகத்தின் பெயர்:
10 Rules for Resilience
ஆசிரியர்: 
Joe De Sena & Lara Pence
பதிப்பகம்:‎ 
HarperOne
புத்தகத்தின் பெயர்: 10 Rules for Resilience ஆசிரியர்: Joe De Sena & Lara Pence பதிப்பகம்:‎ HarperOne

தடையை உடைப்பதே ரிசிலியன்ஸ்...

“வாழ்க்கை எப்போதுமே நீங்கள் எதிர்பார்ப்பதைத் தருவதில்லை. சிலசமயம் வாழ்க்கை உங்களுக்குத் தேவையான வற்றையோ, நீங்கள் எதிர்பார்ப்பவற்றையோ பெற தகுதியானவராக இருக்கிறீர்களா என்பதைத் தெரிந்துகொள்ள பலவித தடை களையும் உங்கள் பாதையில் உருவாக்கும். இது போன்ற தடைகளை நீங்கள் சந்திக்கும்போது இரண்டு விதமான நடவடிக்கைகளை எடுக்கலாம். ஒன்று தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு இந்த உலகத்தை நான் பார்க்க விரும்பவில்லை என்று ஓடி ஒளிந்து கொள்ளலாம். மற்றொன்று அதன் பாதிப்பில் இருந்து மீண்டெழுந்து அந்தத் தடையை உடைத்தெறிந்து முன்னேறலாம். இதில் இரண்டாவது வகை பாதையே ரிசிலியன்ஸால் ஆனதாகும்.

இந்த உலகத்தில் எல்லாமே கஷ்டமான விஷயம்தான். முன்னேறத் துடிப்பவர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் நிறுவனம் நடத்தும் நாங்கள் அதற்கான பயிற்சிக்கு வருபவர்களிடம் சொல்வது ஒன்றே ஒன்றைத்தான். ‘வாழ்க்கை பல்வேறு வகைகளில் கடினமானது. உங்களுக்கு உகந்த கடினமான விஷயம் எது என்பதை தேர்தெடுத்துக்கொள்ளுங்கள்’ என்பதுதான் அது. உடற்பயிற்சி என்பது கடினமானது என்று நீங்கள் நினைத்தால் உடற்பருமன் என்ற நிலைமையின் கடினத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வீர்கள். அவ்வளவுதானே... என்று கிண்டலாகக் கேட்கின்றனர்” ஆசிரியர்கள்.

“ரிசிலியன்ஸ் என்பது ஒரு கடுமையான இடுக்கண் வந்து சென்ற சூழ்நிலையில் அந்த இடுக்கண் வரவே வராதது போன்ற மனநிலை யில் தொடர்ந்து ஒருவரால் செயலாற்ற முடிவதைக் குறிப்பிடுகிறது. எதிர்கொண்ட இடுக்கண் குறித்து எள்ளளவும் கவலை கொள்ளாமல் போகும் திசையில் போய்க் கொண்டேயிருப்பதையே ரிசிலியன்ஸ். உண்மையில் ரிசிலியன்ஸ் என்பது நீங்கள் பெற வேண்டிய ஒரு குணாதிசயம். உண்மையான ரிசிலியன்ஸ் என்பதை உங்களு டைய உடம்பும் மனதும் சவால்கள் மற்றும் தோல்வி களைத் தொடர்ந்து சந்திக்கும் போதே உருவாகிறது.

உண்மையான ரிசிலியன்ஸ் என்பது உங்கள் மனதில் நம்பிக்கையையும் அமைதி யையும் உருவாக்கும். உண்மை யான ரிசிலியன்ஸை விலை கொடுத்தெல்லாம் வாங்க முடியாது. நீங்களாகவே முயற்சி செய்து மட்டும்தான் கற்றுக் கொள்ள வேண்டும். வேலை போகுதல், தவறான முதலீட் டைச் செய்து பணத்தை மொத்தமாக இழத்தல், விவாகரத்து, பார்ட்னரின் எரிச்சலூட்டும் பழக்க வழக் கங்கள், பதின்ம வயது பையன் உங்களுடன் போடும் சண்டை, உங்களுடைய அதிக எடை மற்றும் அதைக் குறைக்க முயலும்போது எதிர்கொள்ளும் சவால்கள், வாழ்வில் உள்ள எதிர்பார்ப்புடன் கூடிய ஏக்கங்கள், நெருங்கிய சொந்தத் துக்கு வந்துள்ள மோசமான வியாதி, லாக்டௌன் என எல்லாவற்றுக்குமான சர்வ ரோக நிவாரணி ரிசிலியன்ஸே.

தோல்வியிலிருந்து மீண்டெழ உதவும் முக்கிய விதிகள்..!

இளம் வயதிலேயே...

ரிசிலியன்ஸ் குணாதிசயத்தை ஒருவர் பெற்றுவிட்டால் அவரை அசைக்க எந்த ஒரு நிகழ்வாலும் முடியாது. இப்படிப்பட்ட ரிசிலியன்ஸை நம்மில் பெரும்பாலானவர்கள் வயது அதிகமாகும்போது ஓரளவுக்கு பெற்றுவிடுகிறோம். நாம் இளவயதில் ரிசிலியன்ஸைப் பெறாமல் போவதற்கு காரணம், பாதுகாப்பும் செளகரியமுமே முக்கியம் என்று நினைத்து இளமைக் காலத்தில் செயல்படுவதால் பெரிய அளவிலான இடுக்கண்களை எதிர்கொள்ளும் சூழ்நிலைகளை நாம் முழுமையாகத் தவிர்த்தே வாழ்கிறோம். இதனாலேயே சவால்களும் சிக்கல்களும் மட்டுமே தரக்கூடிய பண்பான ரிசிலியன்ஸ் என்பதை நாம் சிறுவயதிலேயே பெறும் வாய்ப்பு குறைவாகவே இருந்துவிடுகிறது” என்கிறார்கள் ஆசிரியர்கள்.

இந்தப் புத்தகம் உங்களுக்கு ரிசிலியன்ஸ் எனும் குணாதிசயத்தைப் பெறுவது எப்படி என்பதையும் உங்களுடைய குடும்பத்தினருக்கு எப்படி அதை பெறும் வாய்ப்புகளை அதிகரித்துக்கொடுப்பது என்பதையும் விளக்கமாகச் சொல்கிறது. புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்களுக்கான உத்திகள் தனியாகவும், ஒரு குடும்பத் தலைவராக உங்களுடைய குடும்பத்தினருக்காகக் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் என்னென்ன என்பது தனியாகவும் தரப்பட்டுள்ளது.

பிரித்துப் பார்க்கத் தெரியாவிட்டால்...

“உங்களுடைய எண்ணம் உங்களையும் உங்களுடைய குடும்பத்தினரையும் பாதிக்கவே செய்கிறது. எனக்கு வலிமை இல்லை, என்னிடம் தேவையான பணம் இல்லை, நான் சரியான முயற்சிகள் எடுக்காததால் என்னால் இதைச் செய்ய முடியாது என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ள ஆரம்பித்தால், உங்களுடைய குடும்பத்தினரும் இதையே தமக்கு தாமே சொல்லிக்கொள்ள ஆரம்பிப்பார்கள். இது உங்களுடைய குடும்பதினரின் மூளைக்குள் ஏறிவிட்டது என்றால் அவர்களும் ரிசிலியன்ஸ் எனும் பண்பை பெறும் வாய்ப்பு குறைந்துவிடவே செய்யும்.

ரிசிலியன்ஸ் எனும் குணாதிசயத்தைப் பெற தடையாக இருப்பது எது கடினம் என்பதையும், எதைச் செய்து முடிக்கவும் துணிச்சல் மட்டுமே உதவியாக இருக்காது என்பதையும் பிரித்துப் பார்க்க முடியாத நிலையில் நாம் வாழ்வதுதான்” என்கின்றனர் ஆசிரியர்கள்.

“கடினமான ஆனால் அதே சமயம் துணிச்சலால் மட்டுமே முடிக்கக்கூடிய காரியங்களை நாம் கண்டறிந்து விட்டோம் எனில், அன்றாட வாழ்வில் இதுபோன்ற காரியங்களில் விரும்பி நாம் ஈடுபட ஆரம்பிப்போம். அதாவது, எதிர்கொள்ளும் இடுக்கண் குறித்து நமக்கு சரியான புரிந்துகொள்ளல் இருக்கும். இது ஒன்றும் வாழ்வா சாவா பிரச்னையல்ல. நம் துணிச்சலால் இதைச் சாதிக்க முடியும் என்று தீர்மானித்து அதை எதிர்கொண்டு தொடர்ந்து வெற்றிகளைப் பெறுவோம். இதுபோல் பிரித்துப் பார்க்கத் தெரியாதுபோனால் அனைத்து விஷயங்களையுமே நாம் வாழ்வா சாவா பிரச்னை என்ற பார்வையில் பார்த்து அவற்றை விட்டு ஒதுங்கியோ, எதேச்சை யாக எதிர்கொண்டு தோல்வி யடைந்துவிட்டால் புலம்பவோ ஆரம்பித்துவிடுவோம்.

நமக்கென்று வரையறுக்கப் பட்ட இயலாமை என்ற ஒன்று இருக்கவே செய்கிறது. அதே சமயம் நாம் எதிர்கொள்ளும் அனைத்து விஷயங்களிலும் அந்த இயலாமை நம்மை வெற்றியடையச்செய்யாது என்று நினைப்பதுதான் ரிசிலியன்ஸ் என்ற குணம் இல்லாத நிலை” என்கிறார்கள் ஆசிரியர்கள்.

தோல்விகளே வளமான பூமி...

“சிறுவயது முதலேயே நாம் வளர்க்கப்படும் விதம் இதைச் செய்தால் இது கிடைக்கும் என்ற பாணியில்தான். ஆனால், நாளாக நாளாக நாம் ஒன்றை எதிர்பார்த்து செய்யும்போது அது நமக்கு கிடைக்காது போகும். சிறுபிராயத்தில் தொடர்ந்து பாசிட்டிவ்வாக நடந்த இந்த விஷயம் இப்படி திடீரென்று நடக்காமல் போகும் போது நாம் வருத்தப்பட ஆரம்பிக்கிறோம். சிறுவயதில் செய்யப்படுகிற இந்த வித பழக்கப்படுத்தப்படுதலே ரிசிலியன்ஸ் எனும் குணத்தை நாம் பெறாமல் போவதற்கான அடிப்படை விஷயமாக இருக்கிறது. பெருவெற்றி பெற்ற பெரும்பாலானவர்கள் இதை முழுமையாக உணர்ந்து அதற்கேற்ப மனநிலையை மாற்றிக் கொண்டதனாலேயே ரிசிலியன்ஸ் எனும் பண்பைப் பெற்று வெற்றி களைக் குவித்துள்ளனர். தோல்வி களே ரிசிலியன்ஸை வளர்த் தெடுக்க உதவும் வளமான பூமி என்று சொல்லும்” ஆசிரியர்கள் எக்கச்சக்கமான நிஜவாழ்க்கை உதாரணங்களின் மூலம் இதை விளக்கியுள்ளனர்.

முயற்சியால் கிடைக்கும் அனுகூலங்கள்...

“ஒரு விஷயத்தில் சுலபமாக வெற்றிபெறுவதற்கும் மிகவும் கஷ்டப்பட்டு வெற்றி பெறுவதற் கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒரு விஷயத்தில் வெற்றியடைவதால் கிடைக்கும் அனுகூலங்களைவிட அந்த விஷயத்தில் வெற்றியடை வதற்கு நாம் செய்யும் அதீத முயற்சியால் கிடைக்கும் அனுகூலங்களே அதிகம். இதற்கு உதாரணமாக ஆசிரியர் ஒருவர் தன்னுடைய பல்கலைக்கழக அட்மிஷன் குறித்து சொல்கிறார். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஒரு பல்கலைக் கழகத்தில் சேருவதற்கு இருமுறை முயன்று நிராகரிக்கப் பட்ட பின்னர், பெருமுயற்சி செய்து மூன்றாவது முறை வெற்றி யடைந்தேன். அந்த வெற்றியால் நான் படித்த பட்டப் படிப்பை இன்று வரை நான் பெரிய அளவில் உபயோகிக்கவில்லை. ஆனால், அந்த அட்மிஷனுக்காக ஒவ்வொரு முறை முயலும்போதும் செய்த அதீத முயற்சி எனக்கு பல்வேறு அனுகூலங்களை வாழ்நாள் முழுவதும் தந்துகொண்டிருக்கின்றன என்கிறார். இதனாலேயே நாம் ஒரே தடவை முயன்று வெற்றியடைவதை விட பல தோல்விகளுக்குப் பின்னால் வெற்றியடைவது நமக்கு பல்வேறு அனுகூலங்களைத் தருகிறது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும்போது உருவாகும் ரிசிலியன்ஸ் நம்மை பல்வேறு விஷயங்களிலும் மிளிரச் செய்யும்” என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

ரிசிலியன்ஸை பெறத் தேவையில்லாத விஷயங்களுக்கான முயற்சிகளை செய்யாமலிருப்பது, ஒரு தெளிவான கொள்கையை வகுத்து அதன்படி வாழப் பழகிக்கொள்வது, தோல்வியில் இருந்து வெற்றிக்கான பயணத்தைத் தொடங்கக் கற்றுக்கொள்வது, டெக்னாலஜி உலகத்தில் இருந்து வெளியே வந்து நிஜ உலகத்தை எதிர்கொள்வது, பயம் என்பது அனைவரிடமும் இருக்கும் ஒன்று என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு செயல்படுவது, எதற்கும் துணிவது போன்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர்கள், இவற்றை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து உதாரணங்களின் மூலம் விளக்கியுள்ளார்கள்.

இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை பொறுமை (patience), நிலையான செயல்பாடு (consistency), மற்றும்அதீத விருப்பம் (willingness) என்ற மூன்றையும் கொண்டு நடைமுறைப்படுத்தினால் நாம் அனைவருமே ரிசிலியன்ஸைப் பெறலாம் என்று கூறி புத்தகத்தை நிறைவு செய்கிறார்கள் ஆசிரியர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism