Published:Updated:

வெற்றிக்குக் கைகொடுக்கும் ‘பவர்...’ வழிகாட்டும் 7 விதிமுறைகள்..!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

வெற்றிக்குக் கைகொடுக்கும் ‘பவர்...’ வழிகாட்டும் 7 விதிமுறைகள்..!

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

பவர் (அதிகாரம்) வேண்டும் என்று நினைக்காதவர்கள் இருக்க முடியாது. ஆனால், இந்த பவர் என்பது வந்துவிட்டால், ஒருவர் நல்லவராக இருக்க முடியுமா என்கிற கேள்வி இருந்துகொண்டேதான் இருக்கிறது. தவிர, பவர் என்பது ஒருவருடைய நிம்மதியை அபகரித்துவிடும் என்கிற பயமும் பலருக்கும் இருக்கிறது. உண்மையில் இந்த பவர் என்பது என்ன?

புத்தகத்தின் பெயர்: 7 Rules of Power
 ஆசிரியர்: Jeffrey Pfeffer
பதிப்பகம்:‎ Swift Press (20 June 2022)
புத்தகத்தின் பெயர்: 7 Rules of Power ஆசிரியர்: Jeffrey Pfeffer பதிப்பகம்:‎ Swift Press (20 June 2022)

பவரின் இரு பக்கங்கள்...

பவரை வைத்திருப்பவர்கள் ‘என்னிடம் அது இல்லவே இல்லை’ என்கிற மாதிரிதான் நடந்துகொள்வார்கள். அதே சமயம், அதை இம்மியளவு மற்றவர்களிடம் பகிரவும் மாட்டார்கள். பவரை வைத்து விளையாடுபவர்கள், ரகசியமான சூழ்ச்சிகள் மூலமே அந்த விளையாட்டை ஆடிக்கொண்டிருப்பார்கள்.

இன்னொரு பக்கம், பவரும் திறமையான பணியும் இணைந்தால் மட்டுமே அது உங்களுக்குத் தேவையான பலனை அளிக்கவல்லது என்கிறோம். பவரே நெட்வொர்க்கை வளர்க்க உதவும். அதிகாரம் கொண்டதொரு மனிதருக்கு உதவுவதால், நமக்கு என்ன பலன் என்று அவர் மனதில் கேள்வி தோன்றும். நீங்கள் பவர்ஃபுல்லாக இருந்தால் என்றைக்காவது உதவுவார் என்ற பதில் அவர் மனதில் தோன்றும்.

இது தவிர, ஒருவர் கொண்டுள்ள பவரே அவர் பணிபுரியும்போது தோன்றும் இடைஞ்சல்கள் மற்றும் முரண்பாடுகளை முழுமையாகக் களைய உதவும் என்றும் சொல்கிறோம். இரண்டையும் சேர்த்துப் பாருங்கள். பவர் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது இல்லையா? அப்படி என்றால், பவர் குறித்து சொல்லப்படுவனவற்றில் எது சரி, எது தவறு, பவர் கையில் இருக்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தெளிவு படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டதுதான் ‘7 ரூல்ஸ் ஆஃப் பவர்’ எனும் இந்தப் புத்தகம். பவர் குறித்த பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டும் ஏழு விஷயங்கள் பற்றி முழுமையாக எடுத்துச் சொல்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

வெற்றிக்குக் கைகொடுக்கும் ‘பவர்...’ வழிகாட்டும் 7 விதிமுறைகள்..!

பவர் பற்றிய ஏழு விஷயங்கள்...

1. உங்களுக்கென்று தனியானதொரு பாதையைத் தேர்ந்தெடுத்து பயணியுங்கள். ஏனென்றால், ஒவ்வொரு மனிதரும் அவர் வாழும்/ எதிர்கொள்ளும் சூழலும் வெவ்வேறானவையாகவே இருக்கிறது.

2. சட்டதிட்டங்களை மீறுங்கள்; அதாவது, அனுமதி பெற்று செய்ய வேண்டிய ஒன்றை அனுமதி பெறாமல் செய்வது, வெளிப்படையான அனுமதிகள் இல்லாத புதிய முயற்சிகளை எடுப்பது போன்றவை.

3. பவர்ஃபுல்லான ஒரு தோற்றத்துடன் இருங்கள்; ஏனென்றால், மனிதர்கள் முதலில் ஒருவர் குறித்த அபிப்ராயத்தை உருவாக்கிக் கொண்டு, அதன்பின்னால் அந்த அபிப்ராயத்தின் அடிப்படையிலேயே அவர் குறித்த ஏனைய விஷயங்களைத் தீர்மானிக்கின்றனர்.

4. ஒரு பவர்ஃபுல்லான பிராண்டாக உருவெடுங்கள்; பாட் காஸ்ட்டுகளில் பேசுவது, பிளாக் எழுதுவது, புத்தகம் எழுதுவது, கான்ஃபரென்ஸ்களில் பேசுவது (கான்ஃபெரென்ஸ் நடத்துவது) போன்றவற்றின் மூலமாக நீங்கள் பவர்ஃபுல்லான பிராண்டாகலாம்.

5. தொடர்ந்து சளைக்காமல் நெட்வொர்க் செய்யுங்கள்.

6. உங்களுடைய பவரை உபயோகியுங்கள்; அதிலும் உங்களுக்கு பவர் கிடைத்த உடனேயே கணிசமான அளவுக்கு அதை உபயோகியுங்கள். ஏனென்றால், ஆரம்பத்தில் எதிர்ப்பு என்பது குறைவாக இருக்கும். பிறகு, உங்களுக்கு எதிரிகள் அதிகமாகிவிடுவார்கள். இதனால் எதிர்ப்புகளும் அதிகமாகும். எதையும் சுலபத்தில் செய்துவிட முடியாது.

7. நீங்கள் பெறும் வெற்றியானது பவரைப் பெற நீங்கள் செய்த எல்லாவிதமான காரியங்களையும் மன்னித்துவிடும்.

இதில் ஏழாவது விதி மிக மிக முக்கியமானது. ஏனென்றால், இதை நினைவில் வைத்துக்கொண்டால் மட்டுமே நாம் பலாபலன் குறித்து சிந்திக்காமல் பவரைப் பெறும் நோக்கத்துடன் மட்டுமே செயல்பட ஆரம்பிப்போம். ஏனென்றால், பவர் என்பது ஒரு தவறான வழியில் அடைக்கூடிய மோசமான விஷயம் இல்லை. அது வெற்றிக்கான சாவி. பவரைப் பெற எதையெல்லாம் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் செய்தே யாக வேண்டும். இல்லாவிட்டால் பவரைவிட்டு வெகுதூரம் ஓடி ஒளிந்துகொள்ள வேண்டியிருக்கும் என்கிறார் ஆசிரியர்.

அதிகாரம் என்பது கெட்ட விஷயமா..?

பவர் என்பது அடிப்படையில் ஒரு கருவி (tool) ஆகும். எப்படி ஒரு கருவியைக் கையாளுவதில் எந்த அளவுக்கு நீங்கள் தேர்ந்த வராக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அதை உங்கள் செளகரியத்துக்காக உபயோகித்துக்கொள்ள முடியும். அதே போல்தான் பவரும். பவர் என்பது ஒருபக்கம், நமக்கு எதிராக அநியாய கதியில் பயன்படுத்தப்பட்டிருக்கும். இப்படிப் பயன்படுத்தப்பட்டிருப்பதால் மனம் வெதும்பிய நாம் பவர் என்றாலே ஒரு கெட்ட விஷயம். அதை நம்மைப்போல் நல்லவர்களால் கையாள முடியாது என்று நினைத்துவிடுகிறோம். இதுதான் இதில் இருக்கும் முக்கியான சிக்கலே என்கிறார் ஆசிரியர்.

லீடர்ஷிப் கல்வி குறித்த பயிற்சிகளை அளிப்பவர்களுமே நீதிநெறிகள், மதிப்பு (வேல்யூ) மற்றும் சிறந்த தலைமைப் பண்புடன் திகழ்வது எப்படி என்பது பற்றி எல்லாம் சொல்லித் தர மட்டுமே முயல்கின்றனர். இதைத் தவிர்த்து, தலைமையை நோக்கிய பயணத்தில் தலைமைப்பண்பு என்பதை உருவாக்கிக் கொள்ளும் வேளையில், நம் மீது நமக்கு உள்ள தற்காதல் (Narcissism), தலைமைப் பதவியை அடையும் பாதையில் நாம் அடிக்கடி சொல்ல வேண்டியிருக்கும் பொய்கள், ‘ஒரு பதவிக்கும் பவருக்கும் இதை எல்லாம் செய்ய வேண்டியுள்ளதே’ என்று எள்ளளவும் கவலை கொள்ளாமல் செயல்படு தலுக்கான அவசியம் என்பது குறித்தெல்லாம் அவர்கள் சொல்வதேயில்லை.

நினைவிருக்கட்டும், பவர் என்றாலே அரசியல் நிறைந் தது அல்லது குறைந்தது என்கிற பாகுபாடு ஏதும் இல்லை. எனவே, தலைமைப் பதவியை எட்டிப்பிடிக்க வேண்டுமெனில், இந்த வேலைகளை எல்லாம் ஒருவர் செய்தே ஆகவேண்டும் என்கிறார் ஆசிரியர்.

இம்ப்போஸ்ட்டர் சிண்ட்ரோம்...

பெரும் வெற்றி பெற்ற நபர்கள் அனைவருமே தங்களுடைய வெற்றிக்குக் காரணமான விஷயங்களைப் பட்டியலிட்டுச் சொல்லும் போது இவற்றை எல்லாம் முழுமையாகச் சொல்வது இல்லை. தலைமை மற்றும் பவர் குறித்த தங்கள் பயணத் தில் நடந்த பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே பட்டியலிட்டு இவர்கள் சொல்கின்றனர். தலைமைப் பதவியை நோக்கிய பயணத் தில் ‘இம்ப்போஸ்ட்டர் சிண்ட்ரோம்’ வேறு சேர்ந்து கொண்டு நம்மை படாத பாடுபடுத்தும். ஒரு விஷயத் துக்கும் நாம் முயற்சி செய்யும் போது ‘இதற்கான தகுதி என்னிடம் இல்லை. இதற்கு நான் லாயக்குப் படமாட் டேன்’ என்ற எண்ணம் ஒருவருக்குள் உருவாகி விடுவதையே ‘இம்ப்போ ஸ்ட்டர் சிண்ட்ரோம்’ என்கிறோம். நம் அனை வருக்குள்ளும் இருக்கும் இந்த பயமே நம்மில் பலரும் தோற்றுவிடுவோம் என்ற பயத்துடனும், குறைந்த புரொடக்டிவிட்டியுடன் இருப்பதற்கும், பாதுகாப்பு இல்லாமல் உணர்வதற்கும், செயல்களைத் தள்ளிப் போடுவதற்கும் முக்கியமான காரணியாக இருக்கிறது.

இம்ப்போஸ்ட்டர் சிண்ட்ரோமில் இருந்து வெளியே வருவது எப்படி? இதற்கு உங்களைவிட உயர்பதவியில் இருக்கும் நபர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று கணக்குப் போட்டு வாருங்கள். பெரும் பான்மையானவர்கள் உங்களைவிட அதிக தகுதி வாய்ந்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை. எந்த வீட்டில் (பெற்றோருக்கு) பிறந் துள்ளனர், எந்த சூழ்நிலையை எல்லாம் அவர்கள் எதிர் கொண்டனர் என்பது போன்ற அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களே பெரும்பாலும் அவர்களை வேறுபடுத்தி அந்த நிலைக்குக் கொண்டு சென்றிருக்கும்.

இம்ப்போஸ்ட்டர் சின்ட்ரோமில் இருந்து வெளியே வருவதற்கு மற்றுமொரு வழி, நாம் கடினம் என்று நினைக்கும் சூழ்நிலைகளிலும் நாம் இருந்து செயல்பட்டு நம்மை வலுக்கட்டாயமாக விற்க முயலு வதாகும்.

அதாவது, முன்னிலைபடுத்திக் கொள்வதாகும். ஆரம்பத்தில் இது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் நாளடைவில் இந்தக் கலை கைகூடி அனுபவம் மற்றும் திறமை என்ற இரண்டுமே நம்மிடம் அதிகரித்துவிடும். இம்ப்போஸ்ட்டர் சின்ட்ரோமில் இருந்து வெளியே வருவதே பவரைப் பெறுவதற்கான முதல் படி என்கிறார் ஆசிரியர்.

இந்த சின்ட்ரோமை வெற்றிகரமாக எதிர்கொண்டு பாசிட்டிவ்வாக உங்களை நீங்கள் புரொஜெக்ட் செய்துகொண்டே ஆக வேண்டும். அப்போது மட்டுமே பவர் என்பதைப் பெறவும் தக்கவைத்துக் கொள்ளவும் முடியும். மாறாக நம்மால் முடியுமா, நமக்குத் தகுதி இருக்கிறதா என்று நீங்கள் ஒரு கணம் நினைத்துவிட்டீர்கள் எனில், உங்களால் பவரைப் பெறவோ, தக்கவைத்துக்கொள்ளவோ முடியாது என்று அடித்துச் சொல்கிறார். ஒருவருடைய வேலை மற்றும் திறமை குறித்து அவர் பெருமிதம் கொள்ளவில்லை எனில், அது நாளடைவில் அவர் குறித்த நெகட்டிவ் சிக்னல்களையே உருவாக்கும் என்று சொல்கின்றன ஆய்வு முடிவுகள் என்கிறார் ஆசிரியர்.

பவர் என்பது அலுவலகப் பணியில் மிக முக்கிய மான ஒன்றாக உள்ளது. பணியிடத்தில் ஒருவருடைய வெற்றியும் தோல்வியும் பவரை வைத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட பவரை நாம் பெறுவது எப்படி, அதைக் கையாளுவது எப்படி, அதைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி என்பதைப் பற்றி யெல்லாம் விளக்க மாகச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படித்துப் பயன் பெறலாம்.