Published:Updated:

வேலைத் திறனை அதிகரிக்கும் ‘மைண்ட்ஃபுல்னெஸ்’ கோச்சிங்!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

வேலைத் திறனை அதிகரிக்கும் ‘மைண்ட்ஃபுல்னெஸ்’ கோச்சிங்!

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

இன்றைய நவீன கார்ப்பரேட் உலகில் பணியாளர்கள் சந்திக்க வேண்டிய சவால்கள் பல நூறுகளாக சிதறிக் கிடக்கின்றன. இந்தவித சவால்கள் நம்முடைய மனநலத்தைத் தொடர்ந்து சீராக வைத்திருப்பதில்லை. ஏக்கம் மற்றும் மனச்சோர்வு போன்ற மனநலம் பாதிக்கும் விஷயங்கள் பலவும் தனிநபர்களின் மனநிலையை பாதிக்கிறது. இந்த பாதிப்பு நம்முடன் நிற்காமல், நாடுகளின் பொருளா தாரத்தையும் பாதிக்கவே செய்கிறது. மனநலம் சார்ந்த பிரச்னைகளால் மனிதர்கள் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் தங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்க முடிவதில்லை. எப்படி என்று கேட்கிறீர்களா?

புத்தகத்தின் பெயர்: Coach Your Team
ஆசிரியர்: Liz Hall
பதிப்பகம்:‎  ‎Penguin
புத்தகத்தின் பெயர்: Coach Your Team ஆசிரியர்: Liz Hall பதிப்பகம்:‎ ‎Penguin

மனநலம் இன்மையால் குறையும் உற்பத்தி...

யுனைடெட் கிங்டமில் மட்டும் பணியாளர் களின் மனநலக்குறைவு என்பது ஆண்டொன்றுக்கு 42 பில்லியன் பவுண்டுகள் அளவிலான உற்பத்தித்திறன் குறைவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். வேலைக்கு வாராதிருத்தல் (absenteeism), வேலைக்கு வந்தும் உருப்படியாக எதையும் செய்யாதிருத்தல் (மனநலம் நன்றாக இல்லாதபோதும் நிறுவனத்தின் சட்டதிட்டங்களின் அழுத்தத்தால் பணிக்கு வருதல் அல்லது நீண்ட நேரம் பணிபுரிதல் போன்றவற்றை பிரசன்டீயிசம் (presenteeism) என்கிறோம்) போன்றவற்றால் இந்த அளவுக்கான பாதிப்பு சாராசரியாக ஒவ்வோர் ஆண்டும் ஏற்படு கிறது என்கின்றன ஆய்வு முடிவுகள். இதில் கொடுமையான விஷயம் என்னவெனில், absenteeism என்பதால், நிறுவனத்துக்கு உருவாகும் நஷ்டத்தைவிட presenteeism என்பதனால் உருவாகும் நஷ்டமே அதிகம் என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியை. அமெரிக்காவில் இதே காரணத்தால் ஆண்டொன்றுக்கு சராசரியாக 500 பில்லியன் டாலர் அளவிலான உற்பத்தித்திறன் பாதிப்பு ஏற்படுகிறது.

மேலாளர்கள் சந்திக்கும் மண்டையிடிகள்...

இது இப்படி இருக்க, பணியிடத்தில் ஒரு மேலாளராகவும்/ஒரு தலைவராகவும் (manager/leader) பணிபுரியும் நபர்கள் பல்வேறு மண்டையிடிகளை தொடர்ந்து சந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள். தனிமனிதர்களிடம் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்து, உற்பத்தித்திறனை அதிகரித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் மேலாளர்கள்.

அதே சமயம், மனிதநேயம் என்பது எது என்பதையும் நாம் புரிந்துகொண்டு செயல்பட வேண்டியுள்ளது. தொடர்ந்து மாறிவரும் இதுபோன்ற சூழ்நிலைகளில் நிறுவனங்களுக்குள் செயல்படும் பழைய நடைமுறைகளைக் களைந்து புதிய சூழ்நிலைக்கேற்ற நடைமுறைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது நிர்வாகிகளுக்கும் தலைவர்களுக்கும் (Leaders and Managers) உள்ள பொறுப்பாக இருக்கிறது.

வேலைத் திறனை அதிகரிக்கும்
‘மைண்ட்ஃபுல்னெஸ்’ கோச்சிங்!

‘மைண்ட்ஃபுல்னெஸ்’ பயிற்சி என்றால்...

ஒவ்வொரு நிறுவனத்தில் இருக்கிற தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நிறுவனத்தினுள் தற்போது செயல்பாட்டில் இருக்கும் நடைமுறைகள் உதவிகரமாக இல்லை. மாறியே ஆக வேண்டிய சூழலில் இருக்கிறோம் என்பது ஒரு கட்டத்தில் தெளிவாகத் தெரியும். இந்தச் சூழலில் அக்கறை யுடனான கவனம் (mindfullenss) என்பது தேவைப்படும் மாற்றங்களைக் கண்டறிந்து செயல்படுத்த மிகவும் உதவியாக இருக்கும். இதனாலேயே ‘மைண்ட்ஃபுல்னெஸ்’ஸுக்கான பயிற்சிகள் உலக அளவில் தற்போது மிகவும் பிரசித்திபெற்று வருகிறது.

‘‘மைண்ட்ஃபுல்னெஸ்’ என்பது ஒரு விஷயத்தில் நிகழ்கிற அந்தக் கணத்தில் ஒரு தீவிரமான குறிக்கோளுடன் எந்த விதமான முன்அனுமானங்களும் இல்லாமல் குறிப்பிட்ட வகையில் கவனம் செலுத்துவதைக் குறிக்கிறது. மைண்ட் ஃபுல்னெஸ் என்பது வீடு, அலுவலகம், உறவு மற்றும் பொதுவான பலவற்றில் நம்முடைய ஒவ்வொரு செயல்பாட்டையும் விழிப்புணர்வுடன் செய்ய வைத்து நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் உள்ள அர்த்தத்தை நமக்கு தெளிவாகப் புரிய வைக்கவும் செய்கிறது. இதனாலேயே நாம் ஒவ்வொரு விஷயத்திலும் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். ஏற்கெனவே உலகத்தில் நடைபெறும் மாற்றங்களால் அனுபவரீதியாக நம் விழிப்புணர்வைப் பெற்றுவருகிறோம். அனுபவத்தின் மூலம் பெறமால் நாமாகவே முனைந்து இந்த விழிப்புணர்வை மைண்ட்ஃபுல்னெஸின் மூலம் பெற்றால் அதன் பலன் மிகவும் அதிகமாக இருக்கும்’’ என்கிறார் ஆசிரியை.

‘மைண்ட்ஃபுல்னெஸ்’ஸால் என்ன நன்மை?

மைண்ட்ஃபுல்னெஸ் என்றால் என்ன என்பதை அனுபவித்தால் அன்றி முழுமையாக ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது. தலைமைப் பதவியில் இருப்பவர்களும் நிர்வாகிகளும் பணியாளர்களின் தேவைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் போன்றவற்றில் ஏற்படும் மாறுதல்களை மைண்ட் ஃபுல்னெஸ் எனும் நடைமுறையின் மூலமாக சிறப்பாகப் புரிந்துகொண்டு நிறுவனத்தின் நோக்கத்துக்கு ஏற்றாற்போல் தகுந்த தீர்வுகளை வழங்க முடியும்.

மைண்ட்ஃபுல்னெஸ் என்பது வெறுமனே மனநலத்தைப் பேணுவது என்ற நிலையுடன் முடிந்துவிடாமல் வாங்கும் சம்பளத்துக்கு மேலான உழைப்பை மனம் விரும்பி அனைவரும் தருவதற்கும் வழிவகை செய்கிறது. பயிற்சிக்கும் மைண்ட் ஃபுல்னெஸ்ஸுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். எல்லா நிறுவனங்களுமே தங்களுடைய பணியாளர்களுக்கு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுதல், மன அழுத்தத்தைக் குறைத்தல், நெகிழ்வுத்தன்மை மற்றும் வெளிப்படைத் தன்மை யுடன் செயல்படுதல், கலாசார மாறுதலைக் கொண்டு வருதல்/ஏற்றுக்கொள்ளுதல், புதிய கோணங்களில் சிந்தித்தல் போன்ற வற்றுக்கான பயிற்சிகளை வழங்கி வருகின்றன. இந்தவித பயிற்சிகள் விழிப்புணர் வுடன்கூடியதாக (மைண்ட் ஃபுல்னெஸ்) இருக்கும் பட்சத்தில் அது அதிக அளவிலான பலனைத் தரக்கூடியதாக இருக்கிறது’’ என்பதை ஆசிரியை, தனது பல ஆராய்ச்சிகள் மூலம் கண்டறிந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

‘மைண்ட்ஃபுல்னெஸ்’ பயிற்சி பெறுவது எப்படி?

‘மைண்ட்ஃபுல்னெஸ் கோச்சிங்’ என்பது எப்படி சிறப்பான விளைவுகளை உருவாக்குகிறது என்பது குறித்த ஆய்வுகளின் முடிவு களை முதலாவது பகுதியில் ஆசிரியை விவரித்துள்ளார்.

இரண்டாவதாக, ஒரு தலைவராக/நிர்வாகியாக சக பணியாளர்களுக்கு விழிப்புணர்வுடன்கூடிய பயிற்சி என்பதைத் தர நாம் முயலும்போது நாம் என்ன நோக்கத்துடனும் அர்த்தத் துடனும் அதை பணியாளர் களுக்கு அளிக்க முயல்கிறோம் என்பதைக் கூறுகிறது. மூன்றாவதாக, விழிப்புணர் வுடன் (conscious coaching) கூடிய பயிற்சியை நடை முறைக்குக் கொண்டு வருவது எப்படி என்பதற்கான வழி களைச் சொல்கிறார் ஆசிரியை.

ஆசிரியர் - கோச்சிங் - என்ன வித்தியாசம்?

பயிற்சி என்பது கற்றுத் தருபவர் மற்றும் கற்றுக் கொள்பவர் என்ற இருவரும் இணைந்து (co-creation) கற்றுக்கொள்பவர் தன்னுள் இருக்கும் திறனைத் தெரிந்து கொண்டு அதை மேம்படுத்திக் கொண்டு வளர்ச்சி காண் பதற்கும் அவர்களுடைய முழுத் திறனை உபயோகித்து முன்னேறுவதற்கும் உதவுகிற ஒரு விஷயமாகும். கோச்சிங் என்பது பயிற்சியை அளிப்பவர் பயிற்சி அளிக்கப் படும் விஷயம் குறித்து பயிற்சியைப் பெறுபவரைவிட அதிக அளவிலான அறிவும் திறமையும் கொண்டவராக இருப்பார் என்று முடிவு செய்துகொண்டு செய்யப் படும் ஒரு விஷயமாகும்.

ஆனால், விழிப்புணர்வு டன் கூடிய கோச்சிங் என்பது (conscious coashing) பயிற்சி யளிக்கப்படும் விஷயம் குறித்த திறன், மைண்ட் ஃபுல்னெஸ் மற்றும் பரிவு என்ற மூன்றையும் உள்ளடக் கிய விஷயம். நம்முடைய உடல், மனம் மற்றும் உணர்வுகள் என்கிற மூன்று விஷயங்களும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டுள்ளது என்பதையும் இந்தப் புத்தகத்தில் தெளிவாக விளக்கியுள்ளார் ஆசிரியை.

பல சமயங்களில் நிர்வாகி கள் தனிநபர்களை பணி சார்ந்த பயிற்சிகள் தாண்டி உணர்வுகள் மேலாண்மைக் கான பயிற்சிகளையும் தர வேண்டியிருக்கும். இப்படிப் பட்ட கோச்சிங்கை வழங்கும் போது ஆரம்ப நிலையில் இருக்கும் மனிதரைப் போல் சிந்திப்பது எப்படி, கொஞ்சம் கொஞ்சமாகத் திறனை வளர்த்தெடுப்பது எப்படி, முன் அனுமானங்கள் எதையும் செய்துகொள்ளாமல் செயல்படுவது எப்படி, நடப்பவை நடக்கட்டும், இருப்பது இருக்கட்டும், புதியவை உள்ளே வரட்டும் என்ற மூன்று மனநிலையிலும் செயல்படுவது எப்படி, பயிற்சியின்போது நம்பிக்கை மற்றும் பொறுமையை வளர்த்தெடுப்பது எப்படி என்பது பற்றி விரிவாகப் பல்வேறு உதாரணங்கள் மற்றும் கேஸ் ஸ்டடிகள் மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியை. இந்த வித பயிற்சிகள் இறுதியாக பயிற்சி பெறுபவரை சுயமாக பொறுப்புகளை [அலுவலக பணி நிலை அடுக்கை மட்டுமே சார்ந்திராமல் (hierarchy)] கையில் எடுக்க வைக்கும் அளவுக்கான பலனைத் தருவதாக இருக்க வேண்டியிருக்கும்’’ என்கிறார் ஆசிரியை.

தனிநபர் மற்றும் குழு போன்ற இரண்டு விதமான பயிலும் சூழ்நிலைகளிலும் விழிப்புணர்வுடன்கூடிய பயிற்சியை வழங்குவது எப்படி என்பது பற்றி விளக்கமாக ஆசிரியை இரண்டு அத்தியாயங்களில் விளக்கியுள்ளார். இந்த அளவுக்கு சிறப்பான பலன் களைத் தருகிற மைண்ட்ஃபுல்னெஸ் என்பதைத் அவ்வப்போது பயிற்சி செய்து வந்தால் நம்முடைய ஒவ்வொரு வேலை நாளுமே தலைசிறந்த வேலை நாளாக அமைந்துவிடும் என்று கூறி புத்தகத்தை முடித்துள்ளார் ஆசிரியர்.

மனதை ஒருமுகப்படுத்த முடியாத சூழலை வழங்கும் இந்த பரபரப்பான உலகில் மைண்ட் ஃபுல்னெஸ் எனும் நடைமுறை நமக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதையும், அது குறித்த ஆராய்ச்சி முடிவுகளையும், அதை எப்படி நம்முடன் இருப்பவர்களுக்கு பயிற்றுவிப்பது என்பதையும், இது குறித்த பல்வேறு கேஸ் ஸ்டடிகள் மற்றும் எக்சர்சைஸ்களையும் கொண்டிருக்கும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படித்துப் பயன் பெறலாம்.