Published:Updated:

‘இன்றே செய்... இப்போதே செய்..!’ தள்ளிப்போடும் குணத்தை விட்டொழிக்கும் வழிகள்..!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

‘இன்றே செய்... இப்போதே செய்..!’ தள்ளிப்போடும் குணத்தை விட்டொழிக்கும் வழிகள்..!

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

''இந்த உலகில் எதுவுமே சரியில்லை, நியாயம் செத்துப் போய் விட்டது என்று புகார் சொல்லிக்கொண்டும், நான் உருப்படாமல் போனதற்கும் காரணம், என்னைச் சுற்றி யிருப்பவர்களே காரணம்” என்று வாழ்ந்துகொண்டிருந்தேன். ஆனால், வாசிப்பது, ஒவ்வொரு வேலையையும் ஒழுங்காகச் செய்வது, எழுதுவது போன்றவற்றால், இன்றைக்கு நான் வேறொரு மனிதனாக உருவெடுத்துள் ளேன். என்னுடைய வெற்றிக் கான தாரக மந்திரம் மூன்றே வார்த்தைகளைக் கொண்டது. ‘இன்றே செய்ய வேண்டியதை செய் (Do it today)’ என்ற உற்சாகமான வார்த்தை களுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.

புத்தகத்தின் பெயர்: Do It Today
 ஆசிரியர்: Darius Foroux
பதிப்பகம்:‎ Penguin Random House India
புத்தகத்தின் பெயர்: Do It Today ஆசிரியர்: Darius Foroux பதிப்பகம்:‎ Penguin Random House India

பிடிக்காததை செய்வது ஏன்?

வாழ்க்கை நிரந்தரமான தல்ல என்பது உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு நொடிப் பொழுது நகரும்போதும் நாம் மரணத்துக்கு அருகே சென்று கொண்டே இருக்கிறோம். தேவையற்ற விஷயங்களைச் செய்ய நாம் ஒதுக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாம் நம்முடைய நேரத்தை வீணாக முதலீடு செய்துகொண்டிருப் பதற்கு ஒப்பான விஷயமே ஆகும். இன்றைக்கு நீங்கள் எதைச் செய்கிறீர்கள் என்பதே இன்றிலிருந்து ஒரு வருடம், இரண்டு வருடம் அல்லது ஐந்து வருடம் கழித்து என்ன மாதிரியான நிலையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை நிர்ணயம் செய் கிறது.

ஒவ்வொரு நாளும் நாம் நமக்குப் பிடிக்காத பல விஷயங்களைச் செய்து கொண்டே இருக்கிறோம். நாம் வாழ்வில் என்னவாக நினைக்கிறோமோ (கனவு காண்கிறோமோ) அதை அடைவதற்கு சற்றும் உதவாத விஷயங்களில் நம்முடைய நேரத்தை முதலீடு செய்து கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் நான் குறிப் பிடுகிறேன். இந்த வித சரியான நேர முதலீடுகளே உங்களுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.

நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, நம்முடைய பிழைப்பை ஓட்டுவதற்கு தேவைப்படும் பணத்தை சம்பாதிப்பதற்காக நாம் ஒரு வேலைக்குக் கட்டாயமாகச் செல்ல வேண்டியுள்ளது. அதாவது, நம்முடைய நேரத்தை விற்று பணத்தை வாங்க ஆரம்பிக்கிறோம். நாளடைவில் நம்முடைய வேலைதான் நம்முடைய அடையாளம் என்று ஆகி விடுகிறது. நம்மில் ஒரு சிலரே நாளைக்கு நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கத் தேவையான விஷயங் களுக்காக இன்றைக்கு நம்முடைய நேரத்தை செலவிடுகிறோம். பிழைப்பை ஓட்டவும், மாதாந்தர பில்களைக் கட்டவும் பணம் தேவைப்படுவதால், நாம் வேலைக்குச் செல்வது என்பதை நம்மால் தவிர்க்கவே முடியாது.

எது வேண்டுமோ அதை மட்டும் செய்யுங்கள்...

அதே சமயம் நாளைய பொழுது நன்றாக இருக்கத் தேவையானவற்றை எந்தவித சமரசமும் இன்றி தள்ளிப்போடாமல் இன்றைக்கே நான் செய்துவிடு கிறேன். தள்ளிப்போடுவது என்பது நம்மை குறுகிய கால அடிப்படையில் செளகர்யமாக இருக்கச் செய்து நீண்ட கால அடிப்படையில் எக்கச்சக்கமான கஷ்டத்தில் ஆழ்த்திவிடுகிறது. எனவே, இன்று செய்ய வேண்டியதை இன்றே செய் என்ற மந்திரமே என் வாழ்க்கையை முமுமையாக மாற்ற உதவியது. நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை மிகவும் சுலபமானதாக மாற்ற வேண்டும். ஏனென்றால், ஒரு விஷயத்தில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். உங்களுக்கு எது வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். அப்படி தெளிவாக ஆனபின் தேவை இல்லாத விஷயங்களை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி விடுங்கள் என்கிறார் ஆசிரியர்.

‘இன்றே செய்... இப்போதே செய்..!’
தள்ளிப்போடும் குணத்தை விட்டொழிக்கும் வழிகள்..!

மூன்று பெரும் பிரிவுகளாக...

மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்து எழுதப் பட்டிருக்கிறது இந்தப் புத்தகம். முதல் பிரிவில் வாழ்க்கையை நாம் பார்க்கும் பார்வையை மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் எப்படி அந்தப் பார்வையை மாற்றுவது என்பது குறித்தும் விளக்கி யுள்ளார் ஆசிரியர்.

நம்மில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையை அதன்மீது நமக்கு ஏதும் கன்ட்ரோல் இல்லை என்ற எண்ணத்திலேயே (Passive) பார்த்து பழகி செயல் படுகிறோம். மாறாக, நம்முடைய வாழ்க்கை என்பதன் மீது நமக்கு முழுமையான கன்ட்ரோல் இருக்கிறது (Active) என்பதை உணர்ந்துகொள்வது எப்படி என்பதை இந்தப் பகுதி விளக்கமாகச் சொல்கிறது.

நம்முடைய வாழ்வின் மீது நமக்கு ஆக்டிவ் கன்ட்ரோல் இருக்கிறது என்பதை உணர்ந்து நாம் செயல்பட ஆரம்பித்த உடனேயே நம்முடைய புரடக்டிவிட்டியும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கிவிடும். புரடக்டிவிட்டி எப்படி அதிகரிக் கிறது, நம்முடைய நேரத்தை மிகவும் உபயோகமாக வைத்திருப்பதால்தானே என்று கேட்கிறார் ஆசிரியர்.

உங்கள் வாழ்க்கை உங்கள் கட்டுப்பாட்டில்...

முதல் பகுதியைப் படித்தால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் உங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது எப்படி என்பது தெளிவாகப் புரியும். உங்கள் வாழ்க்கை உங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடனேயே நேரம் என்பது உங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் தானாகவே வந்துவிடும். இதற்கு முதல்படியாக, உங்கள் வாழ்வில் கண்ட வெற்றிகளை அடிக்கடி நினைவில் கூர்ந்துகொள்ளுங்கள். இப்படி நினைவு கூர்வதால், செரோடோனின் என்னும் வேதிப் பொருள் மூளையில் சுரக்கிறது. இந்த வேதிப்பொருள் நம்முடைய கவனத்தை அதிகப்படுத்தும் குணம் கொண்டது என்கின்றன ஆய்வு முடிவுகள். கவனம் அதிகரித்தால், நாம் தேவையான வற்றை மட்டுமே எப்போதும் செய்வோம். எல்லாம் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும்.

புரடக்டிவ்வாக இருக்க வேண்டும் என்று வெறுமனே நினைப்பதன் மூலமோ, ஆசைப் படுவதன் மூலமோ நாம் புரடக் டிவ்வாக மாறிவிட முடியாது. அதற்கான சிஸ்டம் ஒன்றை உருவாக்கி அதன்படி செயல் படுவதன் மூலமே புரடக்ட்டிவ் வாக மாற முடியும் என்கிறார் ஆசிரியர்.

உதாரணமாக, அதிகாலையில் நாம் எழுந்துவிடுவதால் மட்டுமே நாம் புரடக்டிவ்வாக மாறிவிட முடியாது. எழுந்தவுடன் என்னென்ன விஷயங்களைச் செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு திட்டம் நம்மிடம் இருந்தால் மட்டுமே நிச்சயமாக நாம் புரடக்டிவ்வாக இருப்போம்.

இந்த சிஸ்டத்தை உருவாக்க நாம் உடனடியாகச் செய்ய வேண்டிய விஷயம், தேவையற்ற வற்றைத் தூக்கி எறிவதுதான். தேவை இல்லாததைத் (ஐடியாக் கள், புராஜெக்ட்டுகள், வேலை, பொருள்கள் என நம்மிடம் இருக்கும் பலவற்றிலும்) எப்படிக் கண்டறிந்து தூக்கி எறிவது என்பதை இந்தப் புத்தகத்தில் விளக்கமாகக் கூறியுள்ளார்.

பலரும் இது போன்ற சிஸ்டத்தை உருவாக்கி செயல்பட விரும்ப மாட்டார்கள். ஏனென் றால், இது போன்ற சிஸ்டம்கள் சுதந்திரத்தை முழுமையாகப் பறித்துவிடும் என்கிற பயம் அவர்களுக்கு இருக்கும். நீங்கள் கட்டாயம் வேண்டும் என்று நினைக்கிற சுதந்திரமே உங்களு டைய முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக இருக்கும் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. எதையும் உருப்படியாகச் செய்து முடிக்க வேண்டும் எனில், சட்ட திட்டங்கள் (ரூல்கள்) என்பது வாழ்வில் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறார் ஆசிரியர்.

அடுத்தவர்களின் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்...

இரண்டாவது பிரிவில் புரடக்டி விட்டியை அதிகரித்துக்கொள்வதற் கான பாதையைத் தேர்ந்தெடுத்து பயணிப்பது எப்படி என்பதை தெளிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.

நம்மைச் சுற்றியுள்ளவர் களுடைய அனுபவத்தில் இருந்து நாம் பாடம் கற்று பலவிஷயங்களில் திருந்திக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர், முட்டாள் களே தங்களுடைய அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள் கின்றனர். புத்திசாலிகள் அடுத்தவர் களுடைய அனுபவத்தில் இருந்து பாடம் கற்று தங்களுடைய வாழ்க் கையை சரிசெய்துகொள்கின்றனர் என்கிறார்.

இலக்கை நோக்கி தொடர்ந்து பயணித்தல்...

மூன்றாவது பிரிவில், தேர்ந் தெடுத்த பாதையில் தொடர்ந்து சலிக்காமல் பயணம் செய்வது எப்படி என்பதை விளக்கமாகக் கூறியுள்ளார் ஆசிரியர். ஏனென்றல், இதைச் செய்யுங்கள் என்று யாராவது சொன்னால், அதை ஏற்று கொஞ்ச நாளைக்கு அந்த விஷயங்களை நாம் செய்ய ஆரம்பிப்போம். சில காலத்துக்குப் பின் நாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்த நிலைக்கே திரும்பி விடுவோம். இதுபோல் நடப்பதைத் தவிர்த்து தொடர்ந்து நாம் தேர்ந்தெடுத்த பாதையில் பயணிப்பது எப்படி என்பதை விளக்கமாக இந்தப் பிரிவில் சொல்லியுள்ளார் ஆசிரியர்.

‘இன்றே செய்... இப்போதே செய்..!’
தள்ளிப்போடும் குணத்தை விட்டொழிக்கும் வழிகள்..!

தொடர்ந்து தேர்வு செய்த பாதையில் பயணிக்க 1. வாழ்க்கை என்பது நிரந்தரத்தன்மை இல்லாதது என்பதை முழுமனதாய் ஒப்புக்கொள்வது. 2. போய்ச் சேர வேண்டிய இடத்தை மட்டுமே தெரிந்து வைத்துக் கொள்ளாமல் தொடர்ந்து நாம் போகும் திசையை தெரிந்து வைத்துக்கொள்வது (அதற்கான முயற்சிகளை எடுப்பது) 3. சுய கட்டுப்பாடு, தனிப்பட்ட தனிநபர் சிறப்பு செயல்பாடுகள், கம்யூனிகேஷன் ஸ்கில், ஒப்பந்தம் செய்வதற்காக பேரம் பேசும் கலையில் தேர்ச்சி பெற்றிருத்தல், வற்புறுத்தி ஒப்புக்கொள்ள வைக்கும் திறமை உள்ளிட்ட உலகத்தில் வெற்றி பெறத் தேவையான பொதுவான குணாதிசயங்களில் சிறந்து விளங்குவது போன்ற விஷயங்களை நீங்கள் கொண்டிருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

மேலும், தொடர்ந்து இந்தப் பாதையில் பயணிப்பதால் கிடைக்கும் பலனையும், நீண்ட நாள்களுக்கு இப்படி தொடர்ந்து பயணிக்கும்போது எப்படி கூடுதலான பலன்கள் (கூட்டுவட்டி முறையில்) கிடைக்கிறது என்பதையும் விளக்குகிறது. உதாரணமாக, வாரன் பஃப்பெட்டின் சொத்து மதிப்பை மேற்கோள்காட்டி யுள்ளார் ஆசிரியர். (பார்க்க, எதிர்பக்கத்தில் உள்ள அட்டவணை) வெறுமனே எண்களை மட்டும் பார்க்காமல் வயது இடைவெளியையும் வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பாருங்கள் என்கிறார் ஆசிரியர். 32 முதல் 44 வயதுவரை அவருடைய சொத்து மதிப்பு 1,257% அளவு வளர்ந்துள்ளது. நல்ல வளர்ச்சிதான். ஆனால், 44 வயது முதல் 56 வயது வயதில் சொத்தின் மதிப்பு 7,268% அளவு வளர்ந்துள்ளது. இதுவும் அதே 12 வருட இடைவெளிதானே! இதில் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தாலும், அனுபவமும் தொடர்ந்து கடைப்பிடித்துவரும் ஒரு சிஸ்டமுமே (compounding முறையில் பண ரீதியாக அல்ல சிஸ்டம் ரீதியாக அதில் அளவு கடந்த சிறப்பான தேர்ச்சியைப் பெற்றுவிட்டதால்) அவருடைய வெற்றிக்குக் காரணமாக இருந்தது என்கிறார் ஆசிரியர். முத்தாய்ப்பாக வாரன் பஃப்பெட்டின் இன்றைய சொத்து மதிப்பில் 99% அளவானது அவருடைய ஐம்பதாவது வயதுக்குப் பின் உருவானதுதான் என்பதையும் சற்றுக் கூர்ந்து கவனியுங்கள் என்று புத்தகத்தை முடிக்கிறார் ஆசிரியர்.

நம்மில் பெரும்பாலானோர் கொண்டிருக்கும் தள்ளிப் போடும் குணத்தை விட்டொழிப்பதற்கான வழிகளையும் வாழ்க்கையில் வெற்றி பெறும் நடைமுறைகளையும் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படிக்கலாம்.