Published:Updated:

உங்களை நிபுணராக உருவாக்கும் மூன்று படிநிலைகள்..!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

நிபுணர் என்றால் என்ன, நிபுணராவது எப்படி என்கிற கேள்விகள் பலருக்கும் உண்டு. நிபுணத்துவம் தொடர்பான உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் பதில் உங்களுக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்தும் ‘எக்ஸ்பர்ட்’ என்கிற புத்தகத்தைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.

புத்தகத்தின் பெயர்:
Expert: Unders tanding the Path to Mas tery
ஆசிரியர்:
Roger Kneebone
பதிப்பாளர்:
Viking
புத்தகத்தின் பெயர்: Expert: Unders tanding the Path to Mas tery ஆசிரியர்: Roger Kneebone பதிப்பாளர்: Viking

நிபுணத்துவத்தில் பலவகை உண்டு. நீங்கள் நிபுணராக இருப்பது ஒன்று. நான் ஒரு நிபுணன் என்று சொல்லும் அளவுக்கு அதைப் புரிந்துகொண்டிருப்பது மற்றொன்று. பெரும்பாலான நிபுணர் களிடம் நீங்கள் இதில் நிபுணரா என்று கேட்டால், தெரியவில்லை என்பதுதான் பதிலாகக் கிடைக்கிறது. அதாவது, ஒருவர் கொண்டுள்ள நிபுணத்துவம் என்பது அவருடைய கண்ணுக்கே புலப்படாத ஒன்றாகவே இருக்கிறது. நிபுணத்துவம் என்பது ஒரு விஷயத்தை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள், அது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்பது சார்ந்த ஒன்றாகும். நீங்கள் ஒரு விஷயத்தில் எப்படிப்பட்ட திறன்களைக் கொண்டவராக இருக்கிறீர்கள் என்பதில்தான் அது இருக்கிறதே தவிர, எந்த விஷயங்களை நீங்கள் ஏற்கெனவே செய்து முடித்தீர்கள் என்பதில் இல்லை.

‘‘ஒரு நிபுணர், எப்படி ஒரு நிபுணராக உருவெடுத்தார் என்பதை நாம் பார்ப்பதே இல்லை. ஒரு நிபுணராக அவர்கள் எதை உருவாக்கினார்கள், எதைச் செய்தார்கள் என்பதைத்தான் நாம் பார்க்கிறோமே தவிர, அவர் எப்படி நிபுணராக உருவெடுத்தார் என்பதை நாம் பார்ப்பதேயில்லை. உதாரண மாக, ஒருவர் டிரம்ப்பெட்டை மிகப் பிரமாதமாக வாசிக்கிறார் எனில், அவர் செய்யும் கச்சேரியைத்தான் கேட்கிறோமே தவிர, அவர் அந்த ட்ரம்பெட்டை வாசிக்கக் கற்றுக்கொள்ள எவ்வளவு சிரமப்பட்டார் என்பதைப் பற்றியெல்லாம் நாம் பார்ப்பதில்லை. இல்லையா? அதுபோல, நீங்கள் ஒரு நிபுணராக வேண்டும் எனில், இது போன்ற நீண்ட நாள் நடவடிக்கைகள் பல நிச்சயம் தேவைப்படும். அதைக் குறித்து விளக்குவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்’’ என்று சொல்லி ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

நிபுணர்கள் உருவாகும் மூன்று படிநிலைகள்...

நம்மைச் சுற்றிலும் பல நிபுணர்கள் இருக் கிறார்கள். ஒரு சிலரை அவர்கள் செயல்படும் விதத்தை நாம் பார்க்காமலேயே அவர்களை நாம் நிபுணர்கள் என்று ஏற்றுக்கொள்கிறோம். மருத்துவ அறுவைசிகிச்சை நிபுணர்கள், பிரசித்திபெற்ற செஃப்கள் (சமையல் கலைஞர் கள்), ஆர்க்கிடெக்டுகள் போன்றவர்கள் இதில் அடங்குவர். இரண்டாவது வகை நம்மைச் சுற்றி இயங்கும் அதே சமயம், நாம் அவர்கள் செயல்பாட்டைக் கண்டுகொள்ளமல் விடுகிற நபர்கள். நம்முடைய வாகனத்தில் ஏற்படும் கோளாறுகளைச் சரிசெய்துதரும் கைதேர்ந்த மெக்கானிக்குகள், வீட்டின் பாத்ரூமில் பிட்டிங்குகளைப் பொருத்துகிற பிளம்பர்கள் எனப் பல்வேறு விதமான தொழில்களிலும் நிபுணர்கள் நம்முடைய கண்முன்னே நடமாடிக்கொண்டு இருக்கிற போதிலும் அவர்களை நாம் பெரிதாகக் கவனித்து பார்ப்ப தில்லை. இந்தவித பணிகளில் இருக்க வேண்டுமெனில், அதில் நிபுணத்துவம் என்பது கட்டாயம் தேவையானது என்பது போல நாம் அர்த்தம் செய்துகொள்கிறோம். ஆனால், இந்தத் தொழில்களிலுமே (பிளம்பிங், மெக்கானிக் போன்ற) நிபுணத்துவம் என்பதைப் பெற குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாவது தேவைப்படுகிறது.

நிபுணர்களின் நிபுணத்துவம் குறித்து ஆராய்ச்சி செய்வது கடினமான ஒரு விஷயம் ஆகும். அவர்களாலே அவர்கள் ஒரு நிபுணராக ஒரு காரியத்தை எப்படி சிறப்பாகச் செய்கின்றனர் என்று விளக்கிக் கூற முடியாது. ஆனால், அவர்களால் மீண்டும் மீண்டும் அதுபோன்ற செயல்பாட்டைச் செய்துகாட்ட முடியும். அதை நாம் கூர்ந்து நோக்கினாலுமே எது அவர்களை நிபுணர்களாக்குகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வது ரொம்பவுமே கடினமானதொரு விஷயம் ஆகும்.

‘‘தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு, மூன்று படிநிலைகளிலேயே நிபுணர்கள் உருவாகின்றனர் என்று என்னால் கண்டறிய முடிந்தது’’ என்று சொல்லும் ஆசிரியர், அப்ரன்டிஸ் (பயிற்சி பெறும் நிலை), ஜர்னிமென் (தனியாகச் செயல்படும் நிலை) மற்றும் மாஸ்டர் (நிபுணத்துவத்தின் முழு சக்தியுடன் செயல்படும் நிலை) என்ற மூன்று படிநிலைகளாக நிபுணத்துவம் பெறும் படிநிலைகளைப் பிரித்து விளக்குகிறார்.

உங்களை நிபுணராக உருவாக்கும்
மூன்று படிநிலைகள்..!

முதல் படிநிலை

முதலில், நீங்கள் ஒரு பயிற்சி மாணவனாக பணியை ஆரம்பிக்கிறீர்கள். இந்தப் படிநிலையில், நீங்கள் மற்றொருவரின் கண்காணிப்பில் இருப்பீர்கள். அவர்களே உங்களுடைய வேலைகளுக்கான பொறுப்பை ஏற்பவராக இருப்பார்கள். இதைக் கற்றுக்கொள்வதற்காக வேலை செய்யும் காலகட்டம். நீங்கள் செய்யும் தவறுகளுக்கு வேலை ரீதியாகவும் தனிநபராகவும் நீங்கள் பொறுப்பாகவே மாட்டீர்கள். நீங்கள் கற்றுக்கொள்ள நினைப்பதை அதே இடத்தில் இருக்கும் பலரும் கற்றுக்கொண்டிருப்பார்கள். அந்தச் சூழலில், உங்களுடைய தலையாய பணி என்பது, செய்ய வேண்டியதை சரியாகச் செய்வதாக இருக்குமே ஒழிய, புதுமைகளை புகுத்துவதாக இருக்காது.

ஏன் என்று புரிந்துகொள்ளாமலேயேகூட சில விஷயங் களைச் செய்ய வேண்டியிருக்கும் காலகட்டம் இது. இந்தப் படிநிலையில், சிறிதுகாலம் கழித்து உங்களுக்கு உங்களுடைய அறிவு மற்றும் புலன்களின் மூலமாகப் பல விஷயங்கள் ஏன், எதற்கு, எப்படி என்றெல்லாம் புரிய ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் தவறுகளைச் செய்துவிட்டு திருதிருவென்று முழித்த நீங்கள், இப்போது தவறுகளைச் செய்துவிட்டு, அதைச் சரிசெய்யவும் கற்றுக்கொள்வீர்கள். பிரச்னை வந்தால் சரிசெய்யும் அளவுக்கான ஆள்கள் இணைந்து உங்கள் கூடவே செயல்பட்டுக்கொண்டே இருப்பார்கள். பிரச்னை ஆவதற்கான சூழ்நிலை உருவாகாமல் உங்களுக்கு எச்சரிக்கை மணியை அவ்வப் போது அடித்துக்கொண்டே இருப்பார்கள். இதற்கு அடுத்த நிலையில் இவை எல்லாம் மாற ஆரம்பிக்கும்.

இரண்டாம் படிநிலை

ஜர்னிமென் (Journeyman) என்னும் இரண்டாவது படிநிலை யில், நீங்கள் சுதந்திரமாகப் பொறுப்புடன் செயல்பட வேண்டியிருக்கும். உங்களுடைய வேலையை மற்றவர்கள் எப்படி மதிக்கிறார்கள் (எடை போடு கிறார்கள்) என்ற ஆரம்ப நிலையே இந்தப் படிநிலையின் ஆரம்பப்புள்ளி. நேரடியாக அப்படி எடைபோடும் நபர் களைப் பார்க்க வாய்ப்பு இல்லாத சூழலிலும், உங்களின் நிபுணத்துவம் கண்ணுக்குத் தெரியாத நபர்களால் எடை போடப்படும் என்பதே நிஜம்.

நீங்கள் ஒரு வித்வானாக இருந்தால், கச்சேரி கேட்க அரங்கத்தில் குழுமியிருப்பவர்கள் நேரடியாக உங்களை எடை போடும் நபர்களாக இருப் பார்கள். உங்களுடைய நிபுணத் துவத்தை எடைபோடும் நபர்கள் கண்ணுக்குத் தெரியா விட்டாலும் நீங்கள் உங்கள் நிபுணத்துவத்தின் தன்மையை வேலையில் காண்பிக்க முடியும்.பயிற்சி மனநிலையில் உங்கள் கவனம் முழுவதும் உங்களின் செயல்பாட்டிலேயே இருந்திருக்கும். ஜர்னிமென் நிலையில், உங்கள் கவனம் அடுத்தவர்கள் எப்படி உங்களுடைய நிபுணத்து வத்தை (திறமையை/செய்கிற காரியத்தை) எடைபோடுவார்கள் என்பதை நோக்கித் திரும்பும்.

ஒரு சிலருக்கும், ஒரு சில துறை களிலும் இந்த நிலை என்பது தோன்றாமலே போகவும் வாய்ப்புள்ளது. சிலருக்கு, நம்மை எதன் அடிப்படையில் உங்களை எடைபோடுகிறார்கள் என்பது சற்றுத் தாமதமாகப் புரிய ஆரம்பிக்கும். இதன்பின் உங்களுடைய எந்த மாதிரியான திறமைகள் நிபுணத்துவமாகப் பார்க்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற ஆளாக உங்களை மாற்றிக் கொள்ள ஆரம்பிப்பீர்கள்.

உங்களின் நிபுணத்துவத்தின் முத்திரை (Signature) என்பது இந்தச் சூழ்நிலையில்தான் உருவாகும். மற்றவர்களால் மதிக்கப்படும் நிபுணத்துவத்தை ‘இதுதான் என்னுடைய ஸ்பெஷா லிட்டி’ என்பதைப் பூரணமாக உணர்ந்துகொண்டு, அதை உங்களுடைய முத்திரை ஆக்கிக் கொள்ள உங்களுக்கு நிறையவே தன்னம்பிக்கை வேண்டியிருக்கும். யாருக்காக வேலை செய்கிறோம், அதில் தேவைப்படும் நிபுணத்துவம் என்ன என்பதைச் சரியான அளவில் சமநிலைப்படுத்தி எடுத்துச் செல்லவும் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியமான குணாதிசயம். இந்த நிலைக்குப் பின், உங்களுக்கென்று ஓர் அடையாளம் மற்றும் உங்களுடைய நிபுணத்துவத்துக்கு பங்களிப்புச் செய்வதற்கென்று உங்களைச் சுற்றி ஒரு சில பணி யாளர்கள் உருவாவார்கள். இந்த நிலையில்தான், நீங்கள் புதிய ஐடியாக்களை உருவாக்குதல், பின்பற்றும் நடைமுறைகளை மாற்றுதல் மற்றும் நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றும் பொருள்களில் உங்களுடைய முத்திரையை முழுமையாகப் பொறித்தல் போன்ற காரியங்களைச் செய்வீர்கள்.

மூன்றாம் படிநிலை

மூன்றாவது படிநிலையான மாஸ்டர் எனும் நிலையில், நீங்கள் ஏற்கெனவே செய்துகொண்டிருந்த விஷயங்களையும் தாண்டி, புதிய திசையில் பயணிக்க ஆரம்பிப்பீர்கள். இந்தப் படிநிலையில் உங்களுடைய நிபுணத்துவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் அதற்கான பயிற்சிகளை அளிக்கவும் செய்வீர்கள். உங்களின் நிபுணத்துவத்தை கற்றுக்கொள்ள உங்களுடன் ஆள்கள் பணிபுரிய ஆரம்பிப்பார்கள். இந்த நிலையில், நீங்கள் சிரத்தை எடுத்து கற்றுக்கொடுக்கும் நபராகவோ, மென்டாராகவோ உருவெடுப்பீர்கள். இந்த மூன்று படிநிலைகளைக் கடந்தவர், நான்காவது படிநிலையில் இருப்பர்கள். இந்தப் படிநிலையில், நாம் கொண்டிருப்பது நாமே அறிந்திராத நம்முடைய திறமை (நிபுணத்துவம்) என்பதாகும். நாம் ஒரு விஷயத்தை சரளமாகவும் மிகவும் நேர்த்தியாகவும் எப்படி செய்கிறோம் என்பதில் பெரியதொரு அழுத்தம் எதுவுமே இல்லாமல் செய்துவிடுவோம். அதுதான் இந்த நிலை.

இறுதியாக, ‘‘நிபுணத்துவம் என்பது அடைய வேண்டிய ஓர் எல்லை இல்லை. தொடர்ந்து பயணிக்கும் ஒரு பயணம் என்று சொல்லி முடியும்’’ இந்தப் புத்தகத்தைத் தனித் திறமையுடன் விளங்க நினைக்கும் எல்லோரும் அவசியம் படிக்கலாம்.