Published:Updated:

பதவி உயர்வு பெற கைகொடுக்கும் பளிச் உத்திகள்!

பதவி உயர்வு
பிரீமியம் ஸ்டோரி
பதவி உயர்வு

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

பதவி உயர்வு பெற கைகொடுக்கும் பளிச் உத்திகள்!

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
பதவி உயர்வு
பிரீமியம் ஸ்டோரி
பதவி உயர்வு

பதவி உயர்வு பற்றி அலுவலகங்கள் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பல விதமான ஆத்திரமான எண்ணங்கள் இருக்கும். ‘அவனுக்கு ஒன்றும் தெரியாது. அவனுக்கெல்லாம் பதவி உயர்வு கிடைக்குது. எனக்குக் கிடைக்க மாட்டேன் என்கிறதே’ எனச் சிலர் வாய்விட்டுப் புலம்புவதையும், இன்னும் சிலர் மனதில் புகைந்துகொண்டிருப்பதையும் நாம் தினம் தினம் பார்க்கலாம். பதவி உயர்வைப் பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது பற்றித் தெளிவாக விளக்கி எழுதப்பட்டிருக்கும்.

புத்தகத்தின் பெயர்:
Get Promoted
ஆசிரியை:
Niamh Keeffe 
பதிப்பாளர்:
Penguin Business
புத்தகத்தின் பெயர்: Get Promoted ஆசிரியை: Niamh Keeffe பதிப்பாளர்: Penguin Business

‘‘வெறுமனே நன்கு வேலை செய்வதோ, கஷ்டப்பட்டு உழைப்பதோ பதவி உயர்வுக்கு வழிவகை செய்யாது, பதவி உயர்வுகள் எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்பது குறித்தும், நீங்கள் எந்தப் படிநிலையில் இருந்தாலும் படிப்படியாக முன்னேறி பதவி உயர்வை அடைவது எப்படி என்பது குறித்தும் விளக்கமாகச் சொல்வதுதான் இந்தப் புத்தகத் தின் நோக்கம்’’ என்கிறார் இப்புத்தகத்தின் ஆசிரியை.

தவறான எண்ணங்களை நீக்குங்கள்...

பதவி உயர்வு குறித்து நாம் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லும் ஆசிரியர் அதற்கான காரணங்களைப் பட்டியல் இடுகிறார்.

1. கடுமையாக உழைத்தால் பதவி உயர்வு கிடைக்கும்...

கஷ்டப்பட்டு அதிக நேரம் உழைத்து நம்முடைய உயரதிகாரியின் பார்வையில் பட்டு அவருடைய மனம் குளிர்ந்தால் பதவி உயர்வு என்பது கிடைத்துவிடும் என்று நாம் நினைப்போம். கஷ்டப்பட்டு உழைப் பவருக்குத் தான் பதவி உயர்வு கிடைக்கும் என்பது ஊக்குவித்தல் (Motivation) என்ற அடிப்படையில் செய்யப்படும் ஏமாற்று வேலை ஆகும். ஏனென்றால், பதவி உயர்வு என்பது கஷ்டப் பட்டு உழைத்ததற்காகத் தரப்படுகிற பரிசல்ல. உங்களுடைய நேரடியான மேலதிகாரியும், அவருடைய மேலதிகாரிகளும் உங்களுக்கு எதிர்காலத்தில் தரப்படும் பொறுப்புகளைச் சிறப்பாகக் கையாளும் திறமை இருக்கிறது என்று நம்பும் சூழலிலேயே உங்களுக்கு பதவி உயர்வு தரப்படுகிறது. இன்றைய பணியைத் திறம்பட செய்வதற்காகத் தரப்படும் பரிசு அல்ல பதவி உயர்வு என்பது.

பதவி உயர்வு பெற கைகொடுக்கும் பளிச் உத்திகள்!

2. சிறந்த பணியாளருக்குத்தான் பதவி உயர்வு கிடைக்கும்...

இது பெரும்பாலான சமயங்களில் நடப்பதே இல்லை என்பதே நிஜம். நம்ப முடியவில்லையா? உங்களுடைய மேலதிகாரி மற்றும் அவருடைய மேலதிகாரிகள் போன்றவர்களைக் கொஞ்சம் உங்கள் மனக்கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்துங்கள். அவர்கள் அனைவருமே ஆயக் கலைகள் அறுபத்தி நான்கிலும் தலைசிறந்த திறமை கொண்டவர்களாக இருக்கிறார்களா என்ன? நிறுவனங்கள் எப்போதும் தகுதி மற்றும் திறமையை முன்னிறுத்தி மட்டுமே செயல்படுவதில்லை / முடிவுகளை எடுப்பதும் இல்லை. அலுவலக அரசியல் என்பது இதில் முன்னிலை வகிக்கவே செய்யும். பதவி உயர்வுக்கு உங்களுக்கு என்ன தெரியும் என்பது முக்கியமில்லை. உங்களுக்கு யாரைத் தெரியும் என்பதுதான் முக்கியம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

3. பதவி உயர்வுக்கான செயல்பாடுகள் மிக நேர்மையாக நடக்கும்...

உங்கள் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு பாகுபாடின்றி செயல்படும் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், பொருளாதார வளர்ச்சி மட்டுப்பட்டால் இவ்வளவு பேருக்கு பதவி உயர்வு கொடுத்து அதனால் வரும் செலவினங்கள் எல்லாம் கட்டுப்படியாகுமா என்கிற கேள்வியை ஒருபுறமும் இவருக்குப் பதவி கொடுத்தால், இவர் திருப்திப்படுவார் அல்லது இவருக்குத் தராவிட்டால் டென்ஷனாகிவிடுவார் என்பது போன்ற அலுவலக அரசியல் சூழலுமே மனிதவள மேம்பாட்டுப் பிரிவின் செயல்பாட்டுக்கு பெரும்பாலான சூழ்நிலைகளில் அடித்தளமாக இருக்கின்றன.

உங்களுக்குப் பதவி உயர்வு கிடைத்தாலுமேகூட (ஏற்கெனவே கிடைத்திருந்தாலும்) அது வெறும் திறமையால் மட்டுமே வந்தது என்று நினைத்து ஏமாந்து போகாதீர்கள். உங்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ வேறு சில வெளியே சொல்ல முடியாத காரணங்களும் இருக்கவே செய்யும். பதவி உயர்வுக்காக உங்களுடைய செயல்பாடுகளை மாற்றிய மையுங்கள். அது ஒரு நல்ல விஷயம். அதே சமயம் பதவி உயர்வுக்காக நீங்கள் ஆக்ரோஷமான நபராக மாறிவிடாதீர்கள்.

உதாரணமாக, கடினமாக உழைப்பது, மற்றவர்களுடைய பார்வையில் உங்களுடைய உழைப்பும் பங்களிப்பும் படுவதைப்போல் நடந்துகொள்வது போன்றவையெல்லாம் சரியான செயல்பாடுகளே. அதே நேரத்தில், ‘எனக்குப் பதவி உயர்வு தராவிட்டால் நான் வேலையை விட்டு சென்றுவிடுவேன்’ என்று கூற ஆரம்பித்தீர்கள் எனில், உங்களுடைய மேலதிகாரி நினைத்தாலுமே உங்களுக்கு உதவ முடியாது. அப்படியெனில், அடங்கிப்போக வேண்டியதுதானா என்று கேட்பீர்கள். வேலையை விட்டுவிட்டு போக முடியும் என நீங்கள் உறுதியாக நினைத்தால் மட்டுமே, நீங்கள் அப்படிப் பேசலாம். வெறும் உதார் விட்டீர்கள் எனில், பின்னால் நீங்கள்தான் வருத்தப்படுவீர்கள். பதவி உயர்வு என்று கேட்பவர்களுக்கு பல சமயங்களில் அது கிடைப்பதே இல்லை.

ஒருவேளை, மிரட்டலுக்கு பயந்து பதவி உயர்வைத் தந்துவிட்டாலுமே எதிர்காலத்தில் இவர் எப்படி வேண்டு மென்றாலும் நம்மை மிரட்டுவார் என நிர்வாகம் நினைத்து, அதற்கேற்பவே நம்மை எடைபோடும். பதவி உயர்வு கிடைக்காமல் போய் அதனால் வேலை மாறிக்கொண்டே போனால் எதிர்காலத்தில் உங்களை புதிய நிறுவனத்தில் நேர்காணல் செய்யும் அதிகாரி உங்களை ஒரு விசுவாசம் இல்லாத நபராக உங்கள் அலுவலக நிர்வாகம் கருதிவிடவும் நிறைய வாய்ப்புள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, ஜாக்கிரதை’’ என்று எச்சரிக்கிறார் ஆசிரியை.

பதவி உயர்வுக்கான தடைகள் என்னென்ன?

பதவி உயர்வால் உங்களுக்கு கிடைக்கப்போகும் பதவிக்குத் தேவைப்படுகிற நம்பிக்கை/தன்னம்பிக்கை குறைவாக இருத்தல், அந்தப் பதவிக்குத் தேவைப்படுகிற மனிதர்களை நிர்வகிக்கக்கூடிய திறமை இல்லாது இருத்தல், அந்தப் பதவிக்குத் தேவையான முதிர்ச்சி யைப் பெறாது இருத்தல், ‘இந்தப் பதவி எனக்கு தரப்பட்டே ஆக வேண்டும்’ என்கிற உரிமை யுடன் நடந்துகொள்ளுதல்,அந்தப் பதவிக்குத் தேவையான திறமைகள் இல்லாமல் இருத்தல் அல்லது அப்படி சிந்திக்கும் திறன்கள் இல்லாமல் இருத்தல், பணியிட மாறுதலை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுதல், நம்முடைய பிரிவின் செயல் பாட்டுக்கு முழுப்பொறுப் பேற்காமல் மற்றவர்கள் மேல் பழிபோடும் குணங்களைக் கொண்டிருத்தல், நீங்கள் உங்களைத் தவிர வேறு யாருக்குமே விசுவாசியாக இல்லாமல் இருப்பதை நிர்வாகம் கண்டுபிடித்துவிடுதல், நீங்கள் ஏற்கெனவே பார்க்கும் வேலையை (பதவி) யாராலும் உங்கள் அளவுக்கு சிறப்பாகச் செய்ய முடியாது / உங்களுக்குப் பதிலாக ஆள் கிடைக்கவே கிடைக்காது எனும் அளவுக்கு நீங்கள் திறமையுடன் செயல் பட்டு வருதல், உங்களுடைய நேரடியான மேலதிகாரியிடம் நல்ல உறவில் இல்லாமல் இருத்தல் போன்றவை உங்களுக்கு பதவி உயர்வு என்பது கிடைப்பதற்குத் தடையாக இருக்கக்கூடிய சில முக்கிய காரணங்களாகும். இவற்றில் ஏதாவது ஒன்றோ, அதற்கு மேற்பட்ட காரணங்களால் உங்களுடைய பதவி உயர்வு தடைப்படுகிறதா என்று பார்த்து, அவற்றை சரிசெய்துகொள்ள முயலுங்கள்’’ என்கிறார் ஆசிரியை.

முதிர்ச்சியான எண்ணத்துடன் செயல்படுங்கள்...

‘‘வெறுமனே கடின உழைப்பை தருவது என்பது மட்டுமே பதவி உயர்வுக்கு உதவும் ஒரு விஷயமாக இருக்காது. உங்களுடைய வேலை யையும் திறமையையும் வெளி உலகுக்கு வெளிப்படுத்தும் நபராக நீங்களே இயங்குங்கள். அலுவலகக் கூட்டங்களில் அவ்வப்போது பேசுங்கள். நீங்கள் இருப்பதை உணர்த்துவதிலும் உங்களால் என்ன பலன்கள் இருக்கின்றன என்பதையும் தெளிவுபடுத்தும்படி நடந்துகொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு காரியத்தில் ஈடுபடுத்தப்பட்டால் அதில் வேறெ லெவலில் எனர்ஜி இருக் கிறது என்பதை நிரூபியுங்கள். தோல்விகள், சிக்கல்கள் போன்ற வற்றால் துவண்டுபோகாமல் எதிர்த்து நின்று அடித்து ஆடும் நபர் நீங்கள் என்பதை அனை வருக்கும் காட்டுங்கள். வெற்றி வந்தால் பெரியதாக ஆடாமலும் தோல்வி வந்தால் துவண்டு போய் விடாமலும் ‘இதெல்லாம் ஒரு அனுபவம்தான்’ என்று சொல்லி சீரான நடத்தையுடன் செயல் படுங்கள்.

இவைதான் உங்களுக்குப் பதவி உயர்வைக் கொண்டுவருவதற் கான முக்கிய காரணிகளாக இருக்கும்’’ என்கிறார் ஆசிரியை.

கட்டாயம் கடக்க வேண்டிய ஆறு படிநிலை...

‘‘பணியிடத்தில் எவ்வளவு போட்டி நிலவுகிறது, பணிபுரியும் நிறுவனம் அது செயல்படும் துறையில் எந்த அளவுக்கு வெற்றிகரமான நிறுவனமாக இருக்கிறது, உங்களுடைய நேரடியான மேலதிகாரி உங்களுக்கு எந்த அளவுக்கு உதவியாக இருப்பார் என்பவற்றையும் தெளிவாகப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். பதவி உயர்வைப் பெற தெளிவுடன் இருத்தல், உறுதியுடன் செயல்படுதல், நம்பிக்கையுடன் செயல்படுதல், நம்பகத் தன்மையை உருவாக்குதல், உங்கள் திறமைகளை சரியான அளவில் பரைசாற்றுதல், வாய்ப்பு கிடைக்கும்போது இவை அனைத்தையும் உபயோகித்து வெற்றி பெறுதல் என்ற ஆறு படிநிலைகளை நீங்கள் கடக்க வேண்டும்’’ என்று சொல்லும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியை, இவற்றை தனித்தனி அத்தியாயங்களில் எடுத்துச் சொல்லி அசத்தியிருக்கிறார்.

சரி, இதை எல்லாம் செய்தும் பதவி உயர்வு கிடைக்கா விட்டால்..? உங்கள் உயரதிகாரியை ஒருமுறை சந்தித்து, காரணம் கேளுங்கள். நீங்கள் சரிசெய்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என அவர் சொல்வதில் உங்களுக்கு நியாய மாகப்படும் விஷயங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அப்படி யும் கிடைக்கவில்லையா? நீங்கள் அந்த நிறுவனத்தை விட்டுவிட்டு வேறு நிறுவனத்துக்கு மாறுவதே சரி’’ என்று இந்தப் புத்தகத்தை முடிக்கிறார் ஆசிரியை.

அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism