Published:Updated:

ஊழியர்கள் மனம் கோணாமல் அவர்களின் மனதை மாற்றும் கலை!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

ஊழியர்கள் மனம் கோணாமல் அவர்களின் மனதை மாற்றும் கலை!

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

ஒரு பெரிய நிறுவனத்தில் நீங்கள் ஒரு மேனேஜர் அல்லது சொந்தமாகத் தொழில் செய்யும் ஒரு தொழில்முனைவோர். உங்களுக்குக்கீழ் பலரும் வேலை பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் செய்யும் வேலைகளுக்கு நீங்கள் சரியான ஃபீட்பேக்கைத் தர வேண்டும். ஒருவரை வருத்தப்பட வைக்காமல் அவர் குறித்த ஃபீட்பேக்கை அவரிடம் சொல்வது எப்படி என்பதைப் பற்றி அருமையாக எடுத்துச் சொல்கிறது, நாம் இந்த வாரம் பார்க்கவிருக்கும் புத்தகம்.

புத்தகத்தின் பெயர்: 
Let’s Talk
ஆசிரியர்: 
Therese Huston
பதிப்பகம்: 
Random House Business
புத்தகத்தின் பெயர்: Let’s Talk ஆசிரியர்: Therese Huston பதிப்பகம்: Random House Business

ஃபீட்பேக் அவசியம் பாஸ்...

‘‘பாசிட்டிவ்வான ஃபீட்பேக்குகளைச் சொல்வதில் எப்போதும் பிரச்னை இல்லை. ஆனால், நெகட்டிவ் ஃபீட்பேக் தரும்போது பெரும் பிரச்னை ஏற்படுகிறது. இதனாலேயே ஐந்து மேனேஜர் களில் ஒரு மேனேஜர் நெகட்டிவ் ஃபீட்பேக்கை தங்களின்கீழ் பணி புரியும் நபர்களிடம் கூறுவதில்லை என்று சொல்கின்றனர் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

என்றாலும், ஒரு நிர்வாகியின்கீழ் வேலை பார்க்கும் அனைவருக்குமே நிர்வாகி அவர்களுடைய வேலையைப் பற்றி என்ன நினைக்கிறார், எப்படி எடை போடுகிறார் என்பதைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் அளவுக்கு அதிகமாக இருக்கவே செய்யும். இந்த எண்ணத்தை சரிவரப் புரிந்துகொண்டு அதற்கேற்ப ஃபீட்பேக்குகள் தரப்பட்டால், தருபவர், பெறுபவர் மற்றும் நிறுவனம் என்ற மூன்றுக்குமே நன்மை பயக்கும் ஒரு விஷயமாக அது இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒரு நிர்வாகியாக நீங்கள் உங்களுடைய ஃபீட்பேக் தருகிற திறனை மேம்படுத்திக்கொண்டீர்கள் எனில், அது உங்களின் கீழ் பணிபுரியும் நபர்களைப் பெருமளவில் சரியான திசையில் பயணிக்கத் தேவையான ஊக்கத்தை அளிப்பதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எந்த அளவுக்கு நீங்கள் உங்களுடைய ஃபீட்பேக்கை தரும் திறமையை வளர்த்துக்கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் உங்களின் கீழ் பணிபுரியும் நபர்களால் போற்றவும்படுவீர்கள்.

நான் வேலைபார்த்த நிர்வாகிகளிலேயே இவர்தான் தலைசிறந்தவர் என்று அவர்கள் கூறுவதையும் நீங்கள் காதால் கேட்பீர்கள். ஒரு சராசரிப் பணியாளரைக்கூட சிறந்த முயற்சியுடன்கூடிய தலைசிறந்த பணியாளராக மாற்றும் வல்லமை சிறந்த ஃபீட்பேக்குகளை தரவல்ல தொரு நிர்வாகிகளிடத்தில் இருக்கிறது என்றும் சொல்கிறார் ஆசிரியை.

ஊழியர்கள் மனம் கோணாமல்
அவர்களின் மனதை மாற்றும் கலை!

திறமையை அதிகப்படுத்தும் ஃபீட்பேக்...

சராசரியாகப் பணி புரிபவர்களை இந்த ஃபீட்பேக் என்பது சிந்திக்க வைத்து அவர்களுடைய செயல் பாட்டை முன்னேற்றும் வகையில் செயல்பட வைக்கும் என்கின்றன ஆய்வு முடிவுகள். சில சமயம் சரியாகச் சொல்லப்பட்ட ஃபீட்பேக் என்பது அதைப் பெற்றவரின் வாழ்க்கையை ஒரேயடியாக மாற்றியமைக்கவும் உதவியுள்ளது என்கிறார் ஆசிரியை.

இருக்கும் இடத்துக்கு தகுந்தாற்போல் வேலை பாருங்கள் என்பதின் நாசூக்கான வடிவம் இது. ஃபிட்னஸ் சென்டர் ஒன்றின் தலைவர் சொன்ன ஃபீட்பேக்கால் மிகவும் மனமுடைந்த பணியாளர் ஒருவர் வேலையை விட்டு நின்று விட்டாராம். ஒரு வருடம் கழித்து ஒரு பொது நிகழ்வில் இருவரும் சந்திக்கும்போது அந்தப் பணியாளர் ஃபிட்னஸ் சென்டரின் தலைவரைக் கட்டி அணைத்து நன்றி கூறினாராம்.

‘‘நீங்கள் சொன்னதில் இருந்த உண்மையை உணராமல் நான் வேலையை விட்டு நின்றுவிட்டேன். ஆனாலும், அதன் பின்னால் உங்களுடைய அறிவுரையை ஏற்று என்னுடைய திறமைக்கேற்றதொரு ஃபிட்னஸ் கோர்ஸை டிசைன் செய்து நானே செயல்படுத்தினேன். நான் இன்றைக்கு சிறப்பாக பிசினஸ் செய்து வருகிறேன். இது எல்லாமே உங்களுடைய ஃபீட்பேக்கினால் வந்தது’’ என்றாராம். இதுதான் சரியான ஃபீட்பேக்கின் மகத்துவம்.

ஒரு வழிப்பாதை வேண்டாமே...

சரி, எப்படி நாம் சொல்லும் ஃபீட்பேக்கை மிகவும் பயனுள்ளதாக மாற்றி அமைப்பது என்று கேட்பீர்கள். ஃபீட்பேக் என்பதற்கு அகராதியில் அர்த்தம் பார்த்தால், அது ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்துக்கு அனுப்பப்படும் ஒருவழிப்பாதை தகவல் (ஒன் சைடட் கம்யூனிகேஷன்) என்ற தொனியிலேயே அர்த்தம் தரப்பட்டிருக்கிறது. ‘‘உங்களுடைய வேலை பிரமாதமாக இருக்கிறது. இதை இப்படிச் செய்யாதீர்கள்’’ என்பது போன்ற ஒருவழித் தகவலே ஃபீட்பேக் என நாம் நினைக்கிறோம். அதாவது,நான்சொல்கிறேன். நீ கேட்டேயாக வேண்டும் என்ற கதியில் உள்ள ஒரு விஷயம் என்றே நாம் நினைத்துக்கொள்கிறோம். ஆராய்ச்சிகள் சொல்வதைப் பார்த்தால், இந்த ஒருவழிப்பாதை என்பது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்குப் புரியும்.

ஃபீட்பேக் சொல்வதற்கு முன் 11 காரணங்கள்...

ஓர் ஆராய்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வியான ‘‘ஃபீட்பேக் உங்களுக்கு வழங்கப்படும் பலவிதமான சூழ்நிலைகளில் எந்த மாதிரியான சூழ்நிலையில் அந்த ஃபீட்பேக் (மோசமான ஃபீட்பேக்காக இருந்தாலுமே) சிறப்பாகத் தரப்பட்டதாக நீங்கள் உணர்வீர்கள் என்பது குறித்து இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஓர் ஆய்வு நடத்தினார். அதில் பின்வரும் பதிலாக 11 காரணங்கள் தெரிய வந்தன.

நான் சில வேலைகளைச் சரிவர செய்யாவிட்டாலும் நான் உண்மையாகவே கஷ்டப்பட்டு உழைத்தேன் என்பதை ஒப்புக்கொண்டிருந்தால், என்னுடைய வேலைக்கு ஏற்ற சரியானதொரு ஃபீட்பேக் தரப்பட்டிருந்தால், எனக்கு ஃபீட்பேக் கொடுத்தவருடன் அது குறித்து விலாவாரியாக என்னால் பேச முடிந்திருந்தால், எனக்கு ஃபீட்பேக் தந்தவர் என் பக்கம் உள்ள விஷயங்களைக் காது கொடுத்து கேட்டிருந்தால், என் ஃபீட்பேக்கைத் தந்தவரும் நானும் இணைந்து அந்த ஃபீட்பேக்கில் சொல்லப்பட்டிருப்பவற்றை (குறைகளை) சரிசெய்யும் முயற்சிகளில் ஈடுபட முடிந்திருந்தால்/ வாய்ப்பிருந்தால், ஃபீட்பேக் என்ற ஒன்று வரப்போகிறது என்பது முன்பே எனக்குத் தெரிந்திருந்தால், என்னுடைய ஃபீட்பேக்கை சுற்றி வளைக்காமல் நேரடியான விஷயங்களைப் பேசியிருந்தால், நிர்வாகம் என்ன எதிர் பார்க்கிறது என்பது எனக்கு முன்பே தெளிவுபடுத்தப் பட்டிருந்தால், எனக்கு ஃபீட்பேக்கை தந்தவர் என்னுடைய நம்பிக்கையை பெற்றவராக இருந்தால், என்னுடைய நேரடி நிர்வாகியாக இல்லாமல் வேறொருவர் ஃபீட்பேக்கை எனக்குத் தந்திருந்தால் ஆகிய 11 காரணங்களே. இவையெல்லாம் நடந்திருந்தால் என்னுடைய ஃபீட்பேக் சிறந்த முறையில் தரப்பட்டதாக நான் ஒப்புக்கொள்வேன் என்பதே அந்தக் காரணங்கள் ஆகும்.

ஆய்வு முடிவில் சொல்வது என்ன?

இந்த 11 காரணங்களைக் கூர்ந்து நோக்கினால், நமக்கு என்ன புரியும்? முதல் ஐந்து காரணங்களைப் பார்த்தால், முதலாவதாகச் சொல்லப்பட் டுள்ள காரணத்தின்படி, கஷ்டப் பட்டு பணியாளர்கள் உழைத்தது கட்டாயம் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்பது தெளிவாகப் புரிகிறது. இரண்டாவதாக, (2 - 5 வரையிலான காரணங்களைப் பார்த்தால்) பணியாளர்கள் அவர்கள் பக்கம் இருக்கும் விளக்கத்தை நிர்வாகிகள் கேட்க வேண்டும் என்று விரும்புகின்றனர் என்பது புரிகிறது.

மேலும், நிர்வாகிகள் பணி யாளர்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதற்காகவும் அவர்களுடைய திறமையை வளர்த்தெடுப்பதற்காகவுமே ஃபீட்பேக்கை தருகின்றனர் என்பதை, அவர்கள் முழுமையாக உணரும் வண்ணம் ஃபீட்பேக் தரப்படும்போது பணியாளர்கள் பணியிலிருந்து விலக நினைக்கவே மாட்டார்கள் என்கிறார் ஆசிரியை.

மேலும், இந்த ஆய்வின் முடிவில் நான் கண்டறிந்தது சிறந்த ஃபீட்பேக் என்பது பணியாளர்களின் கிரியேட்டி விட்டியை அதிகரிக்கவும் அவர்கள் வேலையை விட்டு செல்வதைக் குறைக்கவும் உதவுகிறது என்பதைத்தான் என்கிறார். எனவே, ஃபீட்பேக் என்பதில் பாராட்டு, கற்றுக் கொடுத்தல் மற்றும் மதிப்பீடு என்ற மூன்றும் சரியான விகிதாசாரத்தில் இருக்க வேண்டும்.

குற்றங்கள் கூறப்படும்போது குற்றத்தை மட்டுமே கையில் எடுத்துக்கொண்டு பேசாமல் அவற்றை எப்படி சரிசெய்வது என்பதற்கான வழிவகைகளை முன்னிறுத்தி பேசுவதே சிறந்ததொரு வழியாகும். மாறாக, குற்றத்தை முன்னிலைப்படுத் தினால் பணியாளர் தனிமைப் படுத்தப்படுவார். அதனாலேயே அவர் வேலையை விட்டுச் செல்ல எத்தனிப்பார் என்கிறார் ஆசிரியை.

பல நிர்வாகிகள் அவர்களின் கீழ் பணிபுரிபவர்களுக்கு நல்லதையே நினைத்தாலும், அதை வெளிப்படையாகச் சொல்லத் தெரியாதவர்களாக இருக் கின்றனர். இந்த நிலையை மாற்றி நீங்கள் பணியாளர்களுக்கு நல்லது நினைக்கிறீர்கள் என்பதை உரக்கச் சொல்லிப் பழகுங்கள். இதுவே பணியாளர்களின் மனதில் ஃபீட்பேக் குறித்து இருக்கும் அச்சத்தை ஒழிக்கும் உபகரணமாக இருக்கும் என்கிறார் ஆசிரியை.

பணியாளர்களைப் பேசவிடுங்கள்...

முதலில், பணியாளர்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுவிட்டு, பின்னரே நீங்கள் ஃபீட்பேக்கை கொடுக்க வேண்டும் என்பதையும் அதனால் வரக்கூடிய பலாபலன்களையும் பல்வேறு உதாரணங்கள் மூலம் ஆசிரியை தெளிவுபடுத்தியுள்ளார்.

இறுதியாக, நெகட்டிவ் ஃபீட் பேக்குகள் தரப்பட வேண்டிய வேளையில் டேட்டாக்களை வைத்து மட்டுமே பேச வேண்டும். டேட்டாக்களைத் தாண்டி கதைகளை (அனுமானங்கள் – இன்சென்டிவ் குறைவு என்ற கோபத்தில் இப்படிச் செய்தீர்கள், அவருக்கு பதவி உயர்வு வந்தவுடன் உங்கள் போக்கில் மாற்றம் வந்துவிட்டது என்பது போன்றவை) உள்ளே நுழைத்துவிடக் கூடாது என்று சொல்லும் ஆசிரியை, எந்த அளவுக்கு நீங்கள் நாசூக்காக கதையைச் சொன்னாலுமே அது எடுபடவே படாது என்று எச்சரிக்கிறார்.

பக்குவமாகப் பேசுங்கள்...

மோசமான ஃபீட்பேக்கை வழங்கிய சூழ்நிலையில் பணியாளர் கோபமுற்றால் ‘முட்டாள் மாதிரி பேசாதீர்கள்’ என்று சொல்லாமல், ‘உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது’ ஆனாலும், கொஞ்சம் குறைகளை சரி செய்யுங்கள்’ என்று பேசும் பக்குவத்தை நீங்கள் பெற்றால் மட்டுமே ஃபீட்பேக் என்பது அளவற்ற பலன்களை ஒரு நிர்வாகியாக உங்களுக்கும், உங்கள் இருவரின் சிறப்பான பங்களிப்பை எதிர்பார்க்கும் நிறுவனத்துக்கும் நிச்சயமாகத் தரும் என்று சொல்லி முடித்துள்ளார் ஆசிரியை.

சிறப்பாகச் செயல்பட நினைக்கும் நிர்வாகிகளும் பணியாளர்களும் கட்டாயம் படித்துப் பயன்பெற வேண்டிய கருத்துக்களைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒரு முறை அவசியம் படிக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism