Published:Updated:

நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்களா..? உங்கள் பயணத்தை மாற்றும் மந்திரம்!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்களா..? உங்கள் பயணத்தை மாற்றும் மந்திரம்!

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

இந்தப் புத்தகத்தைப் படித்த பின்னால், இந்தப் புத்தகத்தைப் படிக்கும் முன் நீங்கள் என்ன மாதிரியான நபராக இருந்தீர்கள் என்பதை அடையாளம் காண முடியாமல் போய்விடும். நீங்கள் உங்களுக்குள் ஏற்பட்டிருக் கும் மாற்றத்தை முழுமையாக உணர்ந் திருப்பீர்கள்’’ என்று அடித்துச் சொல்கிறார் ஆசிரியர். அப்படி என்னதொரு மாற்றத்தை இந்தப் புத்தகம் நமக்குள் ஏற்படுத்தும்?

புத்தகத்தின் பெயர்: Not a Life Coach
 ஆசிரியர்: James Smith
பதிப்பகம்:‎ HarperCollins
புத்தகத்தின் பெயர்: Not a Life Coach ஆசிரியர்: James Smith பதிப்பகம்:‎ HarperCollins

நீங்கள் ஏறும் ஏணி சரியான ஏணியா?

‘‘கொஞ்சம் ஆசுவாசமாக உங்களைச் சுற்றி இருக்கும் உலகைப் பாருங்கள். அனைவரும் அவரவர் தகுதி மற்றும் திராணிக்கேற்ப ஒரு ஏணியில் ஏறிக்கொண்டிருப்பார்கள். ஏறுவது எந்த ஏணியாக இருந்தாலும் சரி, அதில் உச்ச நிலைக்குச் செல்ல வேண்டும் என்கிற எண்ணத்துடன் அவர்கள் ஏறிக்கொண்டிருப் பார்கள். இதில் பெரும்பாலானவர்கள் கவனிக்கத் தவறுவது எதுவென்றால், அவர்கள் ஏறுகிற ஏணி சரியானதுதானா என்பதைத்தான். நீங்கள் ஏறிய ஏணி சரியான ஏணியாக இல்லை எனில், அதில் உச்சத்தை அடைந்தும் எந்தப் பிரயோஜனமும் இருக்காதில்லையா?

ஆனால், இந்த உலகத்தில் பெரும்பாலானவர்கள் இது போன்ற செயலையே செய்து வருகின்றனர். இதனாலேயே இது தவறு என்று சொல்லிப் புரிய வைப்பதே கடினமான விஷயமாக மாறிவிட்டது.

‘எது சரியான ஏணி..?’ என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்று நீங்கள் கேட்பீர்கள். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நினைத் தீர்கள் என்பதையும், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதையும் சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். சரியான ஏணியில் நீங்கள் ஏறிக்கொண்டிருக்கிறீர்களா என்பது உங்களுக்குப் புரியும்.

உடனே நீங்கள் என்ன சொல்வீர்கள்? ‘‘இன்றைக்கு நான் செய்துகொண்டிருப்பது என் வாழ்க்கையை பிரச்னை இல்லாமல் ஓட்டுவதற்காக மட்டும்தான். என்னுடைய நிதிநிலைமை சற்றே உயர்ந்தால், நான் அடைய நினைப்பதை நோக்கி என் பயணத்தைத் தொடங்கிவிடுவேன்’’ என்பீர்கள். இதற்கு என் பதில் என்ன தெரியுமா?

நீங்கள் முன்னேற்றம் காண்பதற்கு இந்த உலகமே ஒன்றுசேர்ந்து உங்களுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு தரப்போவதில்லை. புராணங்களில் வருகிற மாதிரி, கடலானது இரண்டாகப் பிளந்து நீங்கள் பயணிப்பதற்கான வழியை ஏற்படுத்தித் தரப்போவதும் இல்லை.

தேவையில்லாத ஒரு ஏணியில் ஏறிவிட்டு, செய்ய நினைப்பதை செய்யாமல் விட்டுவிட்டு, ‘பிழைப்புக்காக மட்டுமே நான் இந்த ஏணியில் ஏறுகிறேன். நிதிநிலை சரியாகிவிட்டால் நான் ஏறுகிற ஏணியே வேறாக இருக்கும்’ என்ற பொய்யை மீண்டும் மீண்டும் உங்களுக்கு நீங்களே சொல்லி, உங்களை நீங்கள் நம்பவைக்கிறீர்கள்.

இந்தப் பொய்கள் உங்களுடைய முழுமையான ஆற்றலைப் புரிந்துகொள்ளத் தவறி அதை முழுமையாக உபயோகித்து, அதனால் வரவாய்ப்பிருக்கும் பலன்களை அனுபவிக்கவும் முடியாமல் செய்துவிடும்.

நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்களா..? உங்கள் பயணத்தை மாற்றும் மந்திரம்!

இந்தப் புத்தகத்தின் நோக்கம் இதைச் சரிசெய்வதுதான். உங்களுடைய எண்ணத்தில் மாறுதலை ஏற்படுத்தி, உங்களுடைய அடிப்படை நம்பிக்கைகளை மாற்றி, ஒரு கொள்கையுடன் கூடிய மனிதனாக நீங்கள் முழுமையான அளவில் அடைய நினைப்பதை நோக்கி சரியான பாதையில் பயணிக்கும் மனிதனாக மாற்றியமைப்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம். இதைப் புரிந்துகொள்ளவும் நடைமுறைப்படுத்தவும் நீங்கள் கவனமாகச் சில மணி நேரங்களை இந்தப் புத்தகத்தில் செலவிட வேண்டும்’’ என்கிறார் ஆசிரியர்.

பத்தலை என்கிற எண்ணத்தைத் திணிக்கும் உலகம்...

முதலில் புத்தகத்தைக் கொஞ்சம் கீழே வைத்துவிட்டு, சுற்றி முற்றி நீங்கள் எதையெல்லாம் பார்க்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள். பொதுவாக, உங்களைச் சுற்றி இருக்கும் அத்தனை விஷயங்களுமே பணம், உடனடியாக சுகம் தரும் விஷயங்கள், உடம்பினுள் கலோரிகளை ஏற்றும் விஷயங்கள் போன்றவையாகவே இருக்கும்.

நம்மைச் சுற்றி ஏன் இப்படிப்பட்ட விஷயங்களே இருக் கின்றன..? ஏனெனில், இவைதான் இந்த உலகில் நாம் அனுபவிக்க வேண்டிய விஷயங்கள் என்று, இந்த உலகத்தில் வாழும் மற்றவர்கள் நமக்கு உருவாக்கி வைத்துள்ளதால்தான்.

உதாரணமாக, பணம் என்கிற விஷயத்தை எடுத்துக் கொள்வோம். அது உங்களிடம் இருந்தால், அதை வைத்து ஒரு மிகப் பெரிய உலாப்படகை (yacht) நீங்கள் வாங்குவீர்கள். கொஞ்ச நாள் கழித்து அதைவிட சிறந்த மாடல் ஒன்று உங்கள் கண்ணில்படும். அவ்வளவுதான், உங்களுக்குக் கிறுக்கு பிடித்துவிடும். இன்னொரு படகை வாங்க முயற்சி செய்வீர்கள். ஏனென்றால், நாம் எப்போதும் மிகச் சிறந்த பொருளையே வைத்திருக்க வேண்டும் என்றுதானே நமக்குக் கற்பிக்கப்பட்டு இருக்கிறது? பத்தலை என்பதை மூளைக்குள் உருவேற்றிவைத்து விட்ட இந்த உலகம், நம்மை பெரிய வீடுகளை மீண்டும் மீண்டும் வாங்கவும், நம் பயோடேட்டாவை மெருகேற்றி அதிக சம்பளத்தை எதிர்பார்த்து ஒரு வேலையைவிட்டு மற்றொரு வேலைக்கு அடிக்கடி தாவவும் வைக்கிறது.

ஆனால், நாம் அனைவருமே தனிநபராக எது நம்முடைய நோக்கம் என்று கேட்டால், என்ன சொல்வோம். ஜாலியாக ஊர் சுற்றி வர வேண்டும்; ரிஸ்க் எடுத்து செயல்பட்டு, செய்யும் காரியத்தை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும் என்றுதானே சொல்வீர்கள்?

நாம் ஏன் மகிழ்ச்சியாக இல்லை..?

இந்த உலகில் பணத்தைச் சுற்றியே வெற்றி என்பது கட்டமைக்கப்பட்டுள்ளது என்கிற எண்ணம் தோன்று மளவுக்கு இந்த உலகத்தின் சூழல் நம்மை மாற்றி வைத்திருக்கிறது.

சிறு வயதில் நமக்குப் பிடித்ததை மட்டுமே செய்த நாம் ஏன் வளர வளர உலகத்துக்குப் பிடித்ததை செய்ய ஆரம்பிக்கிறோம், உலகில் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் மரணம் என்பது நிச்சயம் என்பதை உணர்ந்த நாம், ஏன் நமக்கு கிடைத்த ஒரே ஒரு வாழ்க் கையை பணம் சம்பாதிப் பதற்காக மட்டுமே கிடைத் ததைப் போல் செலவழிக் கிறோம், நாம் நமக்குப் பிடித்ததைச் செய்யாமல் பிழைப்புக்காக இதைச் செய்கிறேன் என்று சொல்லி நம்மை நாமே ஏன் ஏமாற்றிக் கொள்கிறோம், சோஷியல் மீடியாவில் பலரும் நம்மை ஃபாலோ செய்ய வேண்டும் என்று நாம் ஏன் நினைக் கிறோம் அல்லது யாராவது நம்மை அன் ஃபாலோ செய்தால் மிகவும் வருந்து கிறோம்? ஏனென்றால், வெற்றி குறித்த நம் கண்ணோட்டம் மிகவும் தவறாக இருப்பதால்தான், மகிழ்ச்சி என்பது நம்மிடம் இருப்பதே இல்லை.

வாழ்நாள் முழுவதும் பொய்யையே சொல்லி வாழும் பெரும்பாலான மனிதர்களை நாம் ஏன் முன்உதாரணமாகக்கொண்டு வாழ முயல்கிறோம், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை குருட்டுத் தனம் நிறைந்தது என்பதை நாம் ஏன் புரிந்துகொள்வ தில்லை, அதைப் பின்பற்றி வாழ்ந்து நாம் எதைச் சாதிக்கப்போகிறோம் என்று கேட்கிறார் ஆசிரியர்.

மகிழ்ச்சியை நிர்ணயிப்பது எது?

இந்த உலகம் முன்பு இருந்ததைவிட வாழ்வதற்கு சிறந்த இடமாக மாறிக் கொண்டே வருகிறது எனில், நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். அதிலும், கோவிட்-19 வந்தபின் இதை நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் இல்லையா? ஆனால், கொஞ்சம் பின்னோக்கிப் பாருங்கள். கடந்த காலத்தில் தம்பதியர் ஐந்தாறு பிள்ளை களைப் பெற்றுக் கொண்டனர். ஏன் தெரியுமா? அவை அனைத்தும் வளர்ந்து பெரிய ஆளாக ஆவதற்கான வாய்ப்பு குறைவு (பெருநோய்கள், மருத்துவ வசதி இல்லாமை போன்றவற்றால்) என்பதை மனதில் கொண்டுதான். என்னதான் கோவிட், பொருளாதார சிக்கல் என்றெல்லாம் கூவினாலும் இன்றைக்கு பல்வேறு நோய் களுக்கான ஆன்டிபயாட்டிக் மருந்துகள், உயிர்காக்கும் அதி நவீன மருத்துவ வசதி, நல்ல கல்வி, அரசாங்கத்தின் நல்ல பல திட்டங்கள் என நம் முன்னோர்கள் வாழ்ந்த உலகத்தைவிட நாம் வாழும் உலகம் முன்னேறிய தாகத்தான் இருக்கிறது.

ஏக்கம், உணர்வு ரீதியிலான பாதிப்பு, பாதுகாப் பின்மை உணர்வு, மகிழ்ச்சியின்மை போன்றவற்றை அதிகமாகக்கொண்டிருக்கும் நபர்களுமே சிரிப்புக் கான எமோஜி ஒன்றை இணைத்து மற்றவர்களுக்கு அனுப்புவதையும் நான் பார்க்கிறேன். இதுதான் வருத்தம் தரும் ஒன்றாக இருக்கிறது.

நாம் வாழும் உலகின் நடைமுறைகள், நாம் ஒருவருக்கு ஒருவர் தொடர்புகொள்ள பயன்படுத்தும் நடைமுறைகள், சோஷியல் மீடியாவில் நமக்கு இருக்கும் எக்ஸ்போஷர் போன்றவையே நாம் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறோம், நம்முடைய நோக்கம் மற்றும் நம்முடைய மகிழ்ச்சி போன்றவற்றை நிர்ணயம் செய்கிறது.

மேலே சொன்னவற்றால் உருவாகும் வருத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளை நம் வாழ்வில் கொண்டுவந்துவிட்டு, பின்னர் அதை சரிசெய் வதற்கான வழிமுறைகளைத் தேடித் திரியாமல் இது போன்ற பிரச்னைகள் நம் வாழ்வினுள் வராமல் இருக்க, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

ஐந்து பெரும் பிரிவுகளாக...

இந்தப் புத்தகம் நம்மைச் சுற்றியிருக்கும் சூழல், நம்முடைய மதிப்பீடுகள் (values), நம் செயல்களுக் கான அடித்தளம், நம் அடையாளம் குறித்த நம்முடைய உணர்வு, நாம் வாழும் செளகர்ய மான சூழல் மற்றும் அதையே நாம் காரண மாகக் காண்பித்து தப்பித்துக்கொள்ள முயல்வது போன்ற வற்றைப் பற்றி விளக்க மாக எடுத்துச் சொல் கிறது.

வாழ்வின் குறிக்கோள், மகிழ்ச்சி மற்றும் சாதனைகள் என்பது குறித்து ஒரு மாற்றுச் சிந்தனையைச் சொல் லும், இந்தப் புத்தகத்தை அனைவரும் படித்துப் பயன் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism