Published:Updated:

மன அழுத்தம் இல்லாமல் வேலையில் முன்னேற்றம் காணும் வழிகள்!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

மன அழுத்தம் இல்லாமல் வேலையில் முன்னேற்றம் காணும் வழிகள்!

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

வேலையை ரிலாக்ஸாகச் செய்தது அந்தக் காலம். இப்போது வேலை தொடர்பான மன அழுத்தம்தான் பலரையும் அழுத்துகிறது. இந்த மன அழுத்தத்தில் தனிமனித உற்பத்தித்திறனை (புரடக்டிவிட்டி) அதிகரிப்பது பெரும் சவாலாகவே இருக்கிறது. இந்த பிரச்னைக்கு என்ன தீர்வுசொல்லும் ‘ஸ்ட்ரெஸ் ஃப்ரீ புரடக்டிவிட்டி’ என்கிற புத்தகத்தைதான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.

புத்தகத்தின் பெயர்:
Stress-Free Productivity: A Personalised Toolkit to Become Your Most Efficient, Creative Self
ஆசிரியை: 
Dr Alice Boyes
பதிப்பகம்:‎ 
TarcherPerigee
புத்தகத்தின் பெயர்: Stress-Free Productivity: A Personalised Toolkit to Become Your Most Efficient, Creative Self ஆசிரியை: Dr Alice Boyes பதிப்பகம்:‎ TarcherPerigee

லேசர் ஃபோகஸ் Vs ரிலாக்ஸ்ட் அணுகுமுறை...

நம்முடைய மூளையானது ஒரு விஷயம் குறித்து நாம் லேசர் ஃபோகஸுடன் (முழு கவனத்தையும் ஒன்றுகுவித்து யோசிப்பது) செயல்படும் நேரத்தில் கொண்டிருக்கும் புரடக்டிவிட்டி சார்ந்த செயல்திறனைவிட மிகவும் ரிலாக்ஸ்டாக இருக்கும் நேரத்திலேயே அதிக செயல்திறனுடன் செயல்படுகிறது. அதாவது, ஒரு பிரச்னையைத் தீர்க்க லேசர் ஃபோகஸுடன் நாம் சிந்திக்கும்போது கிடைக்கும் விடைகளைவிட ரிலாக்ஸ்ட்டாக பிரச்னையை மறந்திருக்கும்போதே சரியான விடையைத் (சொல்யூஷன்) தருகிறது என்கின்றன ஆய்வு முடிவுகள்.

புரடக்டிவிட்டி குறித்து நமக்கு சொல்லப்படும் அறிவுரைகள் எல்லாம் இந்த ஆய்வு முடிவுகளுக்கு முற்றிலும் எதிரானவை யாகவே இருக்கின்றன. ‘உற்பத்தித்திறனைப் பெருக்க கவனத்தைக் குவியுங்கள். வேறெந்த விஷயத்தையும் நினைக்காதீர்கள்’ என்றெல்லாம் கவனக் குவியலின் அவசியத்தை மட்டுமே தற்போது கிடைக்கும் அறிவுரை களும் பயிற்சிகளும் வலியுறுத்துகின்றன. இது எவ்வளவு தவறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நிச்சயமாக, தலைசிறந்த விஷயங்கள் கவனக்குவியலின் மூலமாகச் செய்து முடிக்கப் படுவதில்லை. கவனக்குவியல் மற்றும் கவனச் சிதறல் (அலைபாயுதல்) என்ற இரண்டும் மாறிமாறி வரும் சூழலிலேயே தலைசிறந்த கிரியேட்டிவிட்டி மற்றும் பிரச்னைகளுக்கான தலைசிறந்த தீர்வுகள் போன்றவை உருவாகிறது என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியை.

மன அழுத்தம் இல்லாமல் வேலையில் முன்னேற்றம் காணும் வழிகள்!

கவனக் குவியலும் கவனச் சிதறலும்...

எடுத்த காரியம் குறித்து கவனம் செலுத்து வதில் நமக்கு ஒழுங்கு மற்றும் ஒழுங்கின்மை என்ற இரண்டும் மாறிமாறி வருவது சகஜமான ஒன்றாகும். சில சமயம், இந்த ஒழுங்கின்மை என்பது எடுத்த காரியத்தை விட்டுவிட்டு சற்றும் சம்பந்தமில்லாத விஷயம் குறித்துகூட சிந்திக்க ஆரம்பித்துவிடுவோம். இதனாலேயே புரடக்டிவிட்டி குறித்த ஆலோசகர்கள் ‘தீவிர கவனம் தேவை, தீவிர கவனம் தேவை’ என்ற மந்திரத்தைத் திரும்பத் திரும்பக் கூறுகின்றனர்.

இப்படிச் சொல்வதனாலேயே அலைபாயும் மனதை ஓரளவுக்காவது நிலைநிறுத்தி சிறிய அளவிலாவது எடுத்த காரியத்துக்கான தீர்வை நாம் காண முடியும். ஆனால், தலைசிறந்த தீர்வுகளைக் கண்டறியவும், அதிக அளவுக்கு கிரியேட்டிவிட்டியுடன் திகழவும் நாம் அனைவரும் பழக வேண்டியது கவனம் மற்றும் கவனச்சிதறல் என்ற இரண்டையும் கொண்டு பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிவதும் கிரியேட்டிவிட்டியை அதிகரித்துக்கொள்வதையும்தான். இன்னும் தெளிவாகச் சொன்னால், சாதாரண ரக புரடக்டிவிட்டிக்கு ஃபோகஸுடனும் தலைசிறந்த சிறப்பான புரடக்டிவிட்டிக்கு ஃபோகஸ் இல்லாமல் ரிலாஸ்க்ஸாகவும் செயல்பட வேண்டும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

இதில் நாம் அறியாத இன்னுமொரு விஷயமும் இருக்கிறது. நாம் அனைவருமே கிரியேட்டிவிட்டியும் புரடக்டிவிட்டியும் வெவ்வேறு விஷயம் என்று நினைத்துக்கொண்டும் புரிந்துகொண்டும் இருக்கிறோம். உண்மையில் இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்திசையில் இருக்கும் விஷயங்களாகும். இந்த இரண்டும் சேர்ந்தால் அற்புதங்கள் நிகழும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கிரியேட்டிவிட்டி என்ற மேஜிக் வற்புறுத்தலின்பேரில் நிகழாது. எனவேதான், கிரியேட்டிவிட்டி என்ற நிகழ்வு நிகழ மனம் அலைபாயவும், கவனம் எங்கோ செல்லவும் வேண்டும் என்கிறோம் என்கிறார் ஆசிரியை.

உங்களிடம் இருக்க வேண்டிய 3 விஷயங்கள்...

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்கிற கேள்விக்கு மூன்று விஷயங்கள் அத்தியாவசியமானவை என்கிறார் ஆசிரியர். முதலாவதாக, நீங்கள் வளர்ச்சி குறித்த வேட்கையைக் கொண்டவராக இருக்க வேண்டும். ஏனெனில், இந்தவித வேட்கை இல்லாத ஒரு நபராக நீங்கள் இருந்தீர்கள் எனில், கடினமான எந்த விஷயத்தையும் நீங்கள் ஏறெடுத்தும் பார்க்க மாட்டீர்கள். இதனால் கிரியேட்டிவிட்டிக்கும் அதைச் சார்ந்த புரடக்டிவிட்டிக்கும் உங்களிடம் இடமே இருக்காது.

இரண்டாவதாக, நீங்கள் பணியிடத்தில் கிரியேட்டிவ்வாகத் திகழ முதலில் உங்களுடைய புரடக்டிவிட்டியை உபயோகித்து அதனால் உருவாகும் பலன்களை சரியாக அனுபவிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். வெறுமனே கிரியேட்டிவ்வாக இருந்துகொண்டு அதனால் உருவாகும் பலன்களை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியாத சூழலில் இருந்தீர்கள் எனில், நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடம் இருக்கும் கிரியேட்டிவிட்டியை நீங்களாகவே மழுங்கடித்துக் கொள்வீர்கள்.

மூன்றாவதாக, நீங்கள் மிகவும் அதிக அளவிலான செயல்பாட்டு ஒழுக்கங்களைக் (organized) கொண்டிருந்தும், புரடக்டிவிட்டிக்கான நடைமுறைகளை உருவாக்கத் தெரிந்துகொண்டும் இருந்தாலுமே ஒரு சிறு குறுகிய வட்டத்தில் சிக்கிக்கொண்டீர்கள் என்றால் உங்களால் பெரிய அளவில் கிரியேட்டிவ்வாகவும் புரடக்டிவ்வாகவும் இருக்க முடியாது என்கிறார் ஆசிரியை.

கடினமான நேர மேலாண்மை கூடாது...

தனிநபர்களிடம் கடினமான நேர மேலாண்மை ஏன் கூடாது என்பதற்கு ஆசிரியை பல்வேறு விளக்கங்களைக் கூறியுள்ளார். ‘‘உங்களுடைய நேரத்தை மிகவும் துல்லியமாக மேலாண்மை செய்ய முயலும் போது நீங்கள் பல்வேறு ஆச்சர்யங்களைச் சந்திப்பீர்கள். இந்த உலகில் பல்வேறு விஷயங் கள் உடனடிப் பலனைத் தருவதில்லை. ஆரம்பத்தில் ஒரு காரியத்துக்காக நீங்கள் செலவிடும் நேரம் வீணானது போன்ற தோற்றம் இருந்தாலும், நாளடைவில் அந்தக் காரியம் பெரிய அளவில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. எனவே, நீங்கள் உங்கள் நேரத்தை மிகவும் நெருக்கிப் பிடித்து மேலாண்மை செய்ய நினைத்தீர்கள் எனில், இது போன்ற பெருவெற்றி பெறக்கூடிய வாய்ப்பு குறைய ஆரம்பிக்கும். மேலும், நேர மேலாண்மையை மிகவும் சீர்தூக்கிப் பிடிக்க ஆரம்பிக்கும் போது எந்த ஒரு சிறிய மாறுதலை நீங்கள் எதிர்கொண்டாலும் கோபப்படுவீர்கள். கோபத்தைக் கண்டால் கிரியேட்டிவிட்டி காத தூரம் ஓடிப்போய்விடும். இதனாலேயே நேர மேலாண் மையை சீரியஸாகச் செய்ய ஆரம்பிக்கும்போது புரடக்டி விட்டி கணிசமாகக் குறைகிறது என்கிறார் ஆசிரியை.

மேலும், நேர மேலாண்மையை நீங்கள் கறாராகப் பின்பற்றத் தொடங்கினால், நீங்கள் எல்லா விஷயங்களையும் பிசினஸ் லைக்காக அணுகி, செயல்பட ஆரம்பிப்பீர்கள். மொத்த பிசினஸ் உலகின் செயல்பாடு களுமே மனிதர்களால் நிறைந்தது தானே? இதில் ஒருவர் நம்மிடம் அதிக நேரத்தை எதிர்பார்க்கலாம். ஒரு சிலருக்கு பிசினஸ் லைக்காக நேரம் ஒதுக்கி பிசினஸ் மட்டும் பேசி கைகுலுக்கி விடை பெறுவது பிடிக்காமல் போகலாம். இதனால் பலரும் நம் நடவடிக்கையைக் கண்டு எரிச்சலடையவே வாய்ப்புள்ளது. அதனால் அவர் நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விஷயங்களைக்கூட செய்யாமல் போகவோ, அனுகூலமான விஷயங்களை வரவிடாமல் செய்யவோ வாய்ப்பிருக்கிறது இல்லையா?

அதேபோல் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறேன் என்று ரிசிலியன் ஸைக் கோட்டை விட்டுவிடக் கூடாது. உதாரணமாக, தொழில் ரீதியாக ஒரு பார்ட்னருடன் இணைந்து நீண்ட நாள்களுக்கு செயல்படுவது நமது வேலைத் திறனை அதிகரிக்கும். அதற்காக இதைவிட நல்ல வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ள பார்ட்ன ரைக் கணக்கில் கொள்ளாமல் (வேலைத்திறனைக் குறைந்து விட்டால் சிக்கலாயிற்றே என்ற எண்ணத்தில் – தாங்கும் சக்தியை இழந்து) நீண்ட நாள்களுக்குச் செயல்பட்டால் அதுவும் பாதகத் தையே ஏற்படுத்தும். உற்பத்தித் திறன் அதிகரிப்பு என்ற வளையத் துக்குள் நீங்கள் சென்றுவிட்டால் பல நல்ல வாய்ப்புகளைக் கண்டு கொள்ளாமலும், நீண்ட கால அடிப்படையில் கேடுகளை விளைவிக்கக்கூடிய விஷயங்களை உணராமலும் செயல்பட அதிக வாய்ப்புள்ளது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என்கிறார் ஆசிரியை.

நம்மை நாமே கண்காணித்துக் கொள்வது எப்படி?

‘‘புரடக்டிவிட்டி பற்றிக் கற்றுக் கொள்வதற்கு முன் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இது குறித்து அதிகமாகத் தெரிந்துகொள்ள ஆரம்பிக்கும்போது, நாம் தற்போது இருக்கும் நிலையை நினைத்து, ‘‘சே, நாம் ரொம்பத்தான் மோசமாக இருந்திருக்கிறோமே!’’ என்று வெட்கம் கொள்ள வாய்ப்புள்ளது. இது உங்கள் வேலைத்திறனை மேலும் பாதித்துவிடும் என்பதால், இதில் நீங்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இதனாலேயே புரடக்டிவ்வாக இருக்க நினைக்கும் ஒவ்வொருவரும் மிகுந்த தைரியமுள்ளவராக இருக்க வேண்டும்’’ என்று சொல்லும் ஆசிரியர், புத்தகத்தின் இறுதியில் உங்களுடைய தைரியத்தை அளப்பதற்கான ஒரு கேள்வித்தாளையும் அதற்கான விளக்கத்தையும் கூறி புத்தகத்தை நிறைவு செய்துள்ளார்.

இறுதியாக, ‘‘இந்தப் புத்தகம் உங்களை உச்சபட்ச புரடக்டிவிட்டியைக் கொண்ட ஐசக் நியூட்டனாகவோ, தாமஸ் ஆல்வா எடிசனாகவோ, எலான் மஸ்க்காகவோ, ஜெஃப் பெசோஸாகவோ மாற்றிவிடாது. முக்கியமான, கிரியேட்டிவ் தீர்வுகள் (சொல்யூஷன்கள்) எக்கச்சக்கமான கட்டுப்பாடுகளுக்கு (constraints) இடையே உருவாகிறது’’ என்கிற கருத்தை நச்சென்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியை.

புரடக்டிவிட்டி பற்றி மாற்றுக்கருத்துகளைப் பல்வேறு உதாரணங்களுடனும் ஆராய்ச்சி முடிவுகளுடனும் சொல்கிறது இந்தப் புத்தகம். எனவே, கிரியேட்டிவிட்டி மற்றும் புரடக்டிவிட்டி என்கிற இரண்டையும் அதிகம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பயன் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism