Published:Updated:

அலுவலக வேலைகளில் பெண்கள் அதிகாரம் செலுத்துவது எப்படி?

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

அலுவலக வேலைகளில் பெண்கள் அதிகாரம் செலுத்துவது எப்படி?

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

ஃபின்டெக் துறையில் 5,000-க்கும் மேற்பட்ட முக்கிய மனிதர்கள் கலந்து கொள்ளும் ‘மணி 20/20’ (Money 20/20) எனும் வருடாந்தரக் கருத்தரங்கில் இரண்டாவது நாளின் தலைமை உரையை பல ஆண்டுகளாக வழங்கி வருபவர் இந்த வாரம் நாம் பார்க்கப் போகும் புத்தகத்தின் ஆசிரியை. இவர் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பேமென்ட்ஸ் பிரிவின் தலைமைப் பதவியையும் வகித்தவர். ‘மணி 20/20’ கருத்தரங்கை ஒருங்கிணைக்கும் குழுவில் இருந்து அதிகாரி (ஆண்) ஒருவரும் கூடவே வருவாராம். கருத்தரங்குக்கு வந்தவர் களில் பலர் அந்த ஒருங்கிணைப்பு அதிகாரியைத் தான் ஃபேஸ்புக்கின் பேமென்ட்ஸ் பிரிவின் தலைவர் என்று நினைத்து அவரிடமே பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டு இருப்பதைப் பார்த்து, பல ஆண்டுகள் தவித்துப் போயிருக் கிறாராம் ஆசிரியை. தவறான ஆளிடம் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள் என்று கூட்டத்துக்கு வந்திருப்பவர்களை சங்கடப்படுத்த ஆசிரியர் விரும்பாததால், இது பல ஆண்டுகளுக்கும் தொடர்ந்திருக்கிறது.

புத்தகத்தின் பெயர்: Take Back Your Power: ஆசிரியர்: Zondervan; ITPE editionபதிப்பகம்:‎ Deborah Liu
புத்தகத்தின் பெயர்: Take Back Your Power: ஆசிரியர்: Zondervan; ITPE editionபதிப்பகம்:‎ Deborah Liu

ஒருமுறை வேறு ஒரு நிறுவனத்தில் ஒரு பெண் உயரதிகாரியை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கும் அதே பிரச்னை இருந்ததைக் கண்டு, ஒரு முடிவெடுத்தார்களாம். ‘‘இனி யாரையும் சங்கடப்படுத்தக் கூடாது என்று நினைத்து நாம் ஒதுங்கிப்போக வேண்டாம். இப்படி ஒதுங்கிப்போவதாலேயே இந்த நிலை தொடர்கிறது. எனவே, பெண்களும் பெரிய பதவி வகிப்பார்கள் என்பதைப் புரியாமல் பேசும் அவர்களுக்கு நான்தான் அந்தப் பதவியில் இருக்கிறேன் என்று தெளிவாகக் கூறி புரிய வைப்போம் என்று நாங்கள் முடிவு செய்து செயல்பட ஆரம்பித்தோம்’’ என்ற அனுபவத்தைச் சொல்லி இந்தப் புத்தகத்தை ஆரம்பிக்கிறார் புத்தகத்தின் ஆசிரியை.

அதிகாரம் என்பது...

‘பவர்’ (அதிகாரம்) என்ற வார்த்தைக்கு அகராதியில் அர்த்தம் தேடினால் ‘ஒருவருடைய ஒரு நடவடிக்கையையோ, தொடர் செயல்பாடுகளையோ கட்டுப்படுத்துவதற்கான செல்வாக்கு’ என்று இருக்கிறது. பல வெற்றிகரமான புராஜெக்ட்டுகளை முடித்த பெண்களும், அலுவலகத்துக்கு வெளியே சமூகத்தில் பலருக்கும் மிகவும் பயன்படும் அளவிலான காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் பெண்களுமே தங்களிடம் இருக்கும் அதிகாரத்தைத் தேவையான இடங்களில் உபயோகிப்பதில்லை. ஏன், அப்படி ஒரு அதிகாரம் இருக்கிறது என்பதை உணர்வதே இல்லை. ஃபேஸ்புக் அலுவலகத்திலுமே இதே போல் பல சாதனைகளைச் செய்த பெண் ஒருவர், ஒரு மீட்டிங்கில் அவருடைய கருத்துகள் ஏதும் சொல்லாமல் அமர்ந்திருக்க, ‘ஏன் கருத்தே கூறவில்லை’ என்று ஆசிரியை கேட்டபோது, ‘கருத்து சொல்வதற்கான அதிகாரம் எனக்கு இல்லை என்று நினைத்தேன்’ என்று கூறினாராம்.

இது போன்று சகல விஷயங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தும் தகுதிகள் பல இருந்தும் அதிகாரம் இல்லை என்று நினைக் கிறார்கள் பல பெண்கள். அதிகாரம் என்பது மோசமான விஷயம் இல்லை. அதிகாரம் என்பது ஒரே பதவியில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற இரண்டு பேரிடமும் சமஅளவில் இருக்க வேண்டும். இந்த நிலை உருவாவதில் பெண்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. பெரிய அளவிலான புரட்சிகள் ஏதும் செய்யாமலேயே அதிகாரத்தை சரியான அளவில் பெண்களால் பெற முடியும்’’ என்று சொல்லும் ஆசிரியர், அதற்கான 10 விதிகளை விளக்கமாகச் சொல்கிறார்.

அலுவலக வேலைகளில் பெண்கள் அதிகாரம் செலுத்துவது எப்படி?

அதிகாரத்தைப் பெற மனதளவில் தயாரா?

“பெண்கள் அவர்கள் செயல்படும் உலகத்தின் அடிப்படை செயல்பாட்டு விதிகள் அனைத்தையும் கட்டாயம் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். பெண்களுக்கு உயர்பதவிகள் மறுக்கப்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலுமே அவற்றில் முதலாவதாக வருவது பெண்கள் அந்தப் பதவியை கையில் எடுத்துக்கொள்வதற்கு மனதளவில் தயாராக இல்லை என்பதே. அதாவது, உலகம் எப்படிச் செயல்படுகிறது? சிறு பிள்ளையாக இருக்கும்போதிலிருந்தே ஆண் குழந்தையை நீ தலைமையேற்றால்தான் உன்னை உலகம் மதிக்கும் என்றும், பெண் பிள்ளையிடம் நீ அடுத்தவர்களுக்கு உதவியாக இருந்தால்தான் உன்னை உலகம் மதிக்கும் என்றும் கூறி வளர்க்கிறது.

இப்படிச் சொல்லி வளர்த்த பின்னால் பொதுவாக பெண்கள் அதிகாரத்தைக் கையில் எடுக்கும் தலைமைப் பதவியை ஏற்க விரும்புவதில்லை. தப்பித் தவறி ஒரு சில பெண்கள் அதிகாரத்தைக் கையில் எடுக்க நினைத்தால் அந்தப் பெண் என்னமோ தவறான செயலைச் செய்வதைப்போல் சுற்றி இருப்பவர்களால் பார்க்கப்படுகிறது. அதே சமயம், ஓர் ஆண் அதிகாரத்தைக் கையில் எடுத்தால் அவன் அதற்கெனவே பிறந்தவன் என்பதைப் போல் பாராட்டப்படுகிறான். பெண்கள் அதிகாரத்தைக் கையில் எடுக்கக் கூடாது என்று அழுத்தமாக சிறுவயது முதலே சொல்லப்படுகிறது. அவர்கள் கையில் அதிகாரத்தை எடுக்க விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இதைத்தான் உலகம் செயல்படும் விதம்” என்று கூறுகிறார் ஆசிரியை.

என்ன செய்ய வேண்டும் பெண்கள்..?

“அமெரிக்க நிறுவனங்களில் இருக்கும் இன்னுமொரு நடைமுறையைச் சொல்கிறேன். தகப்பனான ஓர் ஆண்மகனுக்கு தகப்பன் ஆனதற்காக 6% வரை சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பெண்களுக்கோ 4% வரை சம்பளம் குறைவதற் கான வாய்ப்பே இருக்கிறது. போதுமா பெண்ணுக்கு இருக்கும் இடைஞ்சல்கள்...” என்று கேட்கிறார் ஆசிரியை.

“இதையெல்லாம் சரி செய்ய முடியாதா, இவற்றை வென்று முன்னேற முடியாதா என்று கேட்டால் அதற்கான வழிகள் இருக்கவே செய்கிறது என்கிறார். பதவி உயர்வு போன்ற முன்னேற்றம் குறித்த விஷயங்களில் உங்களை ஒதுக்குவது/தவிர்ப்பது போன்றவற்றை மற்றவர் களுக்கு (குறிப்பாக, மேலதிகாரிகளுக்கு) சுலபமாக நடத்திவிடக்கூடிய ஒரு விஷயமாக மாற்றிவிடாதீர்கள் என்று சொல்கிறார் ஆசிரியை. இதை எப்படி பெண்கள் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஒரு மீட்டிங்கில் கலந்து கொள்கிறோம். ஒரு பெண் ணாக நாம் எப்படி பேச வேண்டும் என்று மனதில் நினைக்கிறோம். ரொம்பவும் முரட்டுத்தனமாக இருந்து விடக் கூடாது. நம் பேச்சானது நயமாக அதே சயமம், உறுதி யானதாக இருக்க வேண்டும். மற்றவர்களை அசெளகர் யமும் படுத்திவிடக் கூடாது. ஆனால், நாம் நம்முடைய கருத்தில் பின்வாங்கிவிடவும் கூடாது. இவ்வளவு குழப்பத்துடன்கூடிய ஒரு திட்டத்தைத் தீட்டி அந்தக் குழப்பத்தை முகத்திலும் காட்டியபடியேதான் மீட்டிங்கில் பங்கெடுத்துக்கொள்வோம். அதாவது, ஒருபோதும் அடுத்தவர் மனம் கோணுமாறு நடந்துவிடக் கூடாது என்ற அழுத்தத்தை நமக்கு நாமே விதித்துக் கொண்டு செயல்படுகிறோம். இப்படிப்பட்ட நிலைப் பாட்டை எடுப்பதால் பெண் களுக்கு அவர்களுக்கு தகுதி ரீதியாகக் கிடைக்க வேண்டிய ஒரு தெரிவு நிலையானது (visibility) கிடைப்பதே இல்லை.

நல் உறவைப் பேண நினைத்து நம்முடைய எந்த ஒரு விஷயத்திலும் நம்முடைய நிலைப்பாட்டை நாம் ஒளிவு மறைவு இல்லாமல் கூறுவதே யில்லை. இதன் மூலம் பெண்கள் வெளிப்படை யாகத் தெரிவதும் இல்லை. மிகவும் செளகர்யமான முறையில் மறைந்து வாழ்ந்து அதே நேரம் வேலைகளை எல்லாம் இழுத்துப் போட்டு செய்து முன்னேற்றத்தைப் பெறாமல் வாழ்ந்துகொண்டே இருக்கிறோம்” என்கிறார் ஆசிரியை.

தொடர் முயற்சி தேவை...

“இவையெல்லாம் எனக்கு அதிகாரம் வேண்டாம். நீங்களே எடுத்துக்கொள்ளுங் கள் வேலை இருந்தால் கொடுங்கள் என்று கேட் பதற்கு ஒப்பானதாகும். பெண்கள் தங்களுடைய கேரியர் பாதையைத் தீர்க்க மாக தீர்மானித்து அதில் பயணிக்க வேண்டும்” என்பதை வலியுறுத்தும் ஆசிரியை, அதில் என்ன இடர்ப்பாடுகள் வந்தாலும் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.

பல்வேறு வெற்றி பெற்ற நபர்களின் கதைகளையும் ஆசிரியையின் சொந்தக் கதையையும் இதற்கான உதாரணமாக ஆசிரியை கூறியுள்ளார். “பெண்கள் எந்த சூழ்நிலையிலும் தொடக்க நிலையில் (beginners) இருக்கும் நபருடைய மனநிலையில் (எக்ஸ்பர்ட்டாக இருந்தால் புதிய வற்றைத் தெரிந்துகொள்வது கடினம் என்பதால்) இருந்துகொண்டு, கற்றுக்கொள்ள வேண்டியவற்றை உடனுக்குடன் கற்றுக்கொண்டு, வாய்ப்புகளை வரவேற்று கையில் எடுத்துக்கொண்டு, இழப்புகளில் இருந்து பாடங்கள் கற்றுக்கொண்டு, எதிர்கொள்கிற தடைகள் அனைத்தையும் தாண்டி, முயற்சிகள் எல்லாம் ஒட்டுமொத்தமாகத் தோற்று ஒன்றுமே இல்லாமல் போனாலும் அந்த ஒன்றுமில்லாத நிலையில் இருந்து மீண்டும் எழுந்து வந்து முன்னேற கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் ஆசிரியை.

“மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையைப் பெண்கள் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஆசிரியை, இதில் முதலில் மறந்து மன்னிக்க வேண்டியது தங்களுடைய சொந்த தவறு களைத்தான் என்கிறார். மன்னிப்பது என்பது ஏதோ ஒரே ஒருமுறை நிகழும் நிகழ்வில்லை; அது தொடர்ந்து நடக்க வேண்டிய ஒரு விஷயம் என்றும் கூறுகிறார். ஏனென்றால், மறப்பதும் மன்னிப்பதுமே அதிகாரத் தைத் திரும்ப பெறுவதற்கான வழி என்கிறார். அதே போல், வெற்றி என்பது தனிநபர் ஒருவர் பெறுகிற விஷயமில்லை. வெற்றிகள் என்பது பலபேர் சேர்ந்து பெறுவதுதான். எனவே, சரியான கூட்டாளி களை உருவாக்கிக்கொள்ளுங்கள்” என்கிறார் ஆசிரியை.

தேவையையும் அவற்றைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.நவீன கார்ப்பரேட் உலகில் பெண்கள் அவர்களுக்குரிய அங்கீகாரத்தையும் நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவியையும் பெறுவதற்குத் தேவைப் படும் முக்கிய விஷயங் களைக் கூறும் இந்தப் புத்தகத்தை பெண்கள் அனைவரும் ஒரு முறை படித்துப் பயன் பெறலாம்.