Published:Updated:

முடக்கும் மனச்சோர்வு... விடுபட வைக்கும் ‘7E’ தீர்வுகள்..! பணியிடத்தில் எனர்ஜியைச் சீராக்குங்கள்...

பணியிடத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
பணியிடத்தில்...

M B A B O O K S

முடக்கும் மனச்சோர்வு... விடுபட வைக்கும் ‘7E’ தீர்வுகள்..! பணியிடத்தில் எனர்ஜியைச் சீராக்குங்கள்...

M B A B O O K S

Published:Updated:
பணியிடத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
பணியிடத்தில்...

அலுவலகத்தில் உங்களிட மிருந்து எக்கச்சக்கமான விஷயங்களை எதிர்பார்ப்ப தாகவும், எக்கச்சக்கமான விஷயங்களைச் செய்து முடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும் இருந்தால், ‘என்னடா இது பெரும் பிரச்னையாக இருக்கிறதே...’ என்று நீங்கள் மனரீதியாகப் பெரும் சோர்வடைந்துவிடுகிறீர்கள் (burnout).

உங்களுடைய வேலை உங்களைப் பெரிதாக சாதிக்கச் சொல்லும் ரகத்தில் இல்லாமலும் பெரிய அளவிலான சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாக இல்லாமலும் இருந்தால், ‘என்ன வேலை இது... உப்புச்சப்பில்லாமல் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் ரகத்தில் இருக்கிறதே...’ என்று குமைந்து போவீர்கள்.

நிறைய கட்டுப்பாடுகள் இருந்தால் அதைக் கண்டு பயப்படுவதும் கவலைகொள்வதும், கட்டுப்பாடுகளே இல்லை என்றால் வெறுப்படைவதும் மனித இயல்பு. இந்த நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதற்கான கவலைகொள்ளத் தேவையில்லை. உலகில் பெரும்பான்மையானவர்கள் இந்த மாதிரியான மனநிலையிலேயே வாழ்ந்துவருகின்றனர்.

‘‘நம் அனைவருமே வாழ்வில் பெரும் வெற்றி பெற வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகிறோம். ஏனென்றால், அதிக வெற்றி என்பது அதிக மகிழ்ச்சியைத் தரும் என்று நாம் நம்புகிறோம். ஆனால், நிஜத்தில் அது தலைகீழாக இருக்கிறது. அதிக வெற்றி என்பது அதிக மகிழ்ச்சியைக் கொண்டுவருவதில்லை. கவலை களையே கொண்டுவருகிறது. பெரிய சாதனையாளர்களுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் ஆலோசகராக (சைக்காலஜிஸ்ட் மற்றும் கோச்) தொடர்பில் இருக்கும் நான் கண்டுணர்ந்த முக்கியமான விஷயம் இதுதான்’’ என்று சொல்லி இந்தப் புத்தகத்தை ஆரம்பிக்கிறார் ஆசிரியை.

பணியிடத்தில்...
பணியிடத்தில்...

‘‘பெரிய வெற்றி வேண்டும், பெரிய வெற்றி வேண்டும்...’ என்று சொல்லி அதை அடைந்த பின்னரும் தீராத வேட்கையுடன் தொழிலை மாற்றிக் கொண்டு முயற்சிகள் பலவும் செய்தவர்களிடமுமே மகிழ்ச்சியின் அளவு என்னவோ குறைவாகத்தான் இருந்தது. ஏனென்றால், அவர்களுக்கு எப்போதுமே சாதிக்க வேண்டிய ஒன்று என்பது கைவசம் இருந்து உறுத்திக்கொண்டேயிருந்தது. அதனாலேயே அவர்களின் நிலைமை சாதாரண மனிதர்களைவிடவும் பரிதாபகரமானதாகவும் அதிக மனச்சோர்வுடனும் கூடியதாக இருந்தது’’ என்கிறார் ஆசிரியை.

ஒருவரின் மனதினுள் அவர் ஏற்படுத்திக்கொள்ளும் மாற்றமே அவரை நிறைவுடன் இருக்கச் செய்கிறது. ஒருவர் தன்னுடைய தேவை, தகுதி, திறமை மற்றும் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் என்ற மூன்றுக்கும் ஏற்ற மாதிரியான மனநிலையைக் கொண்டிருந்தால் (அல்லது மாற்றி அமைத்துக் கொண்டால்) மட்டுமே அவருடைய வளர்ச்சியையும் வெற்றியையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதை விட்டுவிட்டு, தேவை, தகுதி, திறமை, எடுக்க முடிந்த நடவடிக் கைகள் என எதற்கும் ஒவ்வாத மனநிலையில் (எக்கச்சக்கமான முன்னேற்றம் அடைய வேண்டும் என்று) இருந்தால் அதுவே மனச் சோர்வுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

‘‘நீங்கள் பணியிடத்தில் எந்தப் படிநிலையில் இருந்தாலும் சரி, நீங்கள் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்ற மனநிலையில் உங்களை இருத்திக்கொண்டே இருப்பது என்பது கொஞ்சம் சாத்தியப்படாத விஷயம்தான். ஏனென்றால், உங்கள் எண்ணத்துக்கு எதிரான தடைகள் பலவும் உங்கள் பணியிடத்தின் உள்ளேயும் வெளியேயும் இருந்து தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் இந்தவித தடைகளாலேயே நீங்கள் மனச் சோர்வை அடைந்துவிடுவீர்கள். தடைகள் அதிகமாகும்போது மனச் சோர்வு தோன்றுவது இயல்பான தொரு விஷயம். இங்கேதான் உங்கள் மனநிலை மிக முக்கியமான பங்களிப்பைச் செய்கிறது. சரியான மனநிலையில் நீங்கள் இருந்தால் மட்டுமே மனச்சோர்வைத் தவிர்த்து, வெற்றிகரமாக உங்களால் தொடர்ந்து செயல்பட முடியும்.

தவறான மனநிலையைக் கொண்டு செயல்படும் நபர்களே மனச்சோர்வின் உச்சத்துக்குச் சென்றுவிடுகின்றனர். மனச்சோர்வு என்பது நம்மை அறியாமலேயே நமக்குள் வந்துவிடுகிற ஒரு விஷயமாகும். நம்மில் பலரும் நாம் மனச்சோர்வு அடைந்துள்ளோம் என்று தெரியாமலேயே செயல்பட்டுக் கொண்டிருப்போம். மனச்சோர்வு என்பது மெள்ள மெள்ள நம்முள் குடிகொள்ள ஆரம்பிக்கும்போது, நாம் மனச்சோர்வு அடைந்துள்ளோம் என்பது நமக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது. ஆனால், மனச்சோர்வில் இருக்கிறோம் என்பதை நாம் புரிந்துகொண்டுவிட்டால் அதிலிருந்து வெளிவருவது என்பது சுலபமானதே.

ஸ்ட்ரெஸ் என்னும் மனச்சோர்வு நம் செயல்திறனைப் பெருமளவில் குறைக்க வல்லது. ஸ்ட்ரெஸைத் தவிர்க்க நம்முடைய எனர்ஜி லெவலின்மீது நாம் எப்போதும் அதிக கவனம் கொண்டிருக்க வேண்டும். நம்மிடம் இருந்து நிர்வாகத்தின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும் போதும், நம்முடைய பணியிடத்தில் எக்கச்சக்கமான பொறுப்புகள் நம்மீது திணிக்கப்படும்போதும், ஒரு காரியத்தில் இருந்து மற்றொரு காரியத்துக்கு மாறு வதற்கு இடையே இருக்கும் அவகாசம் மிகமிகக் குறைவாக ஆகிறபோதும் அலுவல் ரீதியான ஸ்ட்ரெஸ் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக ஆரம்பிக்கிறது. மேலும், அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் அதே வேளையில், அதற்கான சுதந்திரம் தரப்படாதபோது அதிவேகமாக ஸ்ட்ரெஸ் என்பது நமக்கு வந்துவிடுகிறது’ என்று சொல்லும் ஆசிரியர் அதைத் தவிர்ப்பதற்காக ஏழு விஷயங்களில் கவனம் செலுத்தச் சொல்கிறார்.

புத்தகத்தின் பெயர்:
The 7E Solution to Burnout 
ஆசிரியர்:
Sharon Grossman
 பதிப்பாளர்:
Warrior Pub
புத்தகத்தின் பெயர்: The 7E Solution to Burnout ஆசிரியர்: Sharon Grossman பதிப்பாளர்: Warrior Pub

உணர்வுசார் நுண்ணறிவு, அதிகாரம் பெறுதல், ஈடுபாடு, செயல்திறன், தேவைப்படும் விளைபயனைத் தரும் ஆற்றல், முயற்சி, தீர்க்கமான ஞானம் பெறுதல் (7E’s - Emotional Intelligence, Empowerment, Engagement, Efficacy, Energy, Effort, Enlightenment) போன்றவற்றைக் கொண்டிருந்தலே மனச்சோர்வி லிருந்து நம்மை காத்துக்கொள்ளத் தேவையானவை’’ என்று சொல்லும் ஆசிரியை, இவை ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்க மாக எடுத்துச் சொல்கிறார்.

உணர்வுசார் நுண்ணறிவே நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங் கள் நம்மை எப்படிப் பாதிக்கிறது என்பதை உணரவும் அதற்கேற்ப சரியான நுட்பத்துடன் நம் செயல்பாட்டை அமைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இந்த உணர்வுசார் நுண்ணறிவை அதிகரித்துக்கொள்வதன் மூலமே உங்களுடைய அலுவலக அனுபவங்களை உங்களால் சரளமாகப் புரிந்துகொண்டு அதற்கு ஈடுகொடுத்து நடக்க முடியும்.

அடுத்து, அதிகாரம் பெறுதல். நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங் களுக்கு நாம் எப்படி உணர்வு ரீதியாக எதிர்வினை ஆற்றுகிறோம் என்பது முக்கியமான விஷயம். நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த மறுநிமிடமே நாம் நம்முடைய சக்தியின் மீது சர்வ வல்லமையையும் பெற்றுவிடுகிறோம். எந்த மாதிரி நாம் எதிர்வினை ஆற்றும்போது ‌நாம் சக்தியை இழக்கிறோம், எந்த மாதிரியான எதிர்வினைகளில் நாம் சக்தியைப் பெறுகிறோம் என்பதை நாம் தெரிந்துகொள்வதன் மூலம் மனச்சோர்வை தவிர்க்கும் உத்தியை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம்.

சக்தியை இழக்கும் விஷயங் களைத் தவிர்க்க ஆரம்பிக்கும் நாம், அதிக எனர்ஜியுடன் இருப்பதால், நம்முடைய பணி யிடத்தில் அதிக ஈடுபாட்டுடன் இயங்குமாறு நம்மால் செயலாற்ற முடியும். குறைந்த ஈடுபாட்டுடன் செயல்படும் சாத்திக்கூறுகளைத் தவிர்ப்பதால், நம்முடைய செயல்பாடு அதிகத் திறன் கொண்டதாக மாறிவிடுகிறது.

நாம் என்ன விளைவுகளை உருவாக்க நினைத்தோமோ, அதை உருவாக்குவதால் (Efficacy) புதிய ஆற்றலையும் நாம் பெறுகிறோம். எப்படி என்கிறீர்களா?

நம்முடைய எனர்ஜி என்பது அதிகரிப்பதால், நாம் நினைப்பதை நம்மால் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கை நம்முள்ளே உருவாக ஆரம்பிப் பதால். இதனாலேயே நாம் அதிக அளவிலான ரிஸ்க் உள்ள காரியங்களில்கூட நம்பிக்கையுடன் இறங்கி வெற்றி கொள்கிறோம். இப்படிப்பட்ட ஆற்றலைப் பெறுவதாலேயே நாம் அதிக திறன் கொண்டவர் களாகவும், துணிந்து நடவடிக்கை எடுப்பவர்களாகவும் மாறுகிறோம்.

எனர்ஜி எனும் சக்திக் குறைபாடே மனச்சோர்வு எனும் நிலைக்கு நம்மைக் கொண்டு செல்கிறது. சோர்விலிருந்து வெளியே வருவதற்கு அதிக அளவிலான எனர்ஜியே தேவைப் படுகிறது. சக்திக்குறைவு என்கிற பிரச்னை நம்மை ஆட்கொள்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நம் மனநிலையை மாற்றி அமைத்துக்கொண்டாலே நம்மால் எனர்ஜியைச் சீராக நிர்வகித்து நீண்ட நாள்களுக்கு அதிக செயல்திறனுடன் செயல்படும் வகையில் பணியிடத்தில் நடந்துகொள்ள முடியும்.

முயற்சிகளில் சில கடுமையானவை யாகவும் சில ஸ்மார்ட்டானவையாகவும் இருக்கின்றன. கடுமையான முயற்சிகளைத் தவிர்த்து ஸ்மார்ட்டான முயற்சிகளைச் செய்ய ஆரம்பிக்கும்போதே நமக்கு வெற்றி என்பது கைகூடுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

‘‘இறுதியாக மனச்சோர்வில் இருந்து தப்பிக்க தீர்க்கமான ஞானம் கொண்டி ருப்பதும் அவசியம். ஏனென்றால் நாம் ஞானத்தைப் பெறுவதற்கு நிறைய சிந்தனை செய்வோம். அப்படிச் சிந்திக்கும் வேளையில் நம்முடைய நோக்கம் என்ன, அந்த நோக்கத்தை நிறைவேற்ற நமக்குத் தேவையானவை என்னென்ன என்பன போன்றவற்றை நாம் ஆழ்ந்து சிந்திக்கின்ற வேளையில் நமக்குத் தெளிவு பிறக்கிறது. இவை அனைத்தும் நமக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டால் அலுவலகத்தில் ஒரு சமச்சீரான வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிடுவோம். சமச்சீரான வாழ்க்கையில் மனச்சோர்வு என்பதற்கு இடமே இருக்காது இல்லையா?’’ என்று கேட்கிறார் ஆசிரியை.

ஸ்ட்ரெஸ் குறித்து புரிந்துகொள்ளவும், அதைத் தவிர்ப்பது எப்படி என்பதை அறியவும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படித்துப் பயன்பெறலாம்.

பிட்ஸ்

ந்தியாவின் ஏற்றுமதி 2021 மார்ச் மாதத்தில் 60.29% அதிகரித்து உள்ளது. அதேநேரத்தில், 2020-21-ம் நிதி ஆண்டில் ஏற்றுமதி 7.26% குறைந்து உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism