Published:Updated:

மகத்தான வெற்றியைத் தரும் மனிதர்களைக் கையாளும் கலை!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட்

மகத்தான வெற்றியைத் தரும் மனிதர்களைக் கையாளும் கலை!

செல்ஃப் டெவலப்மென்ட்

Published:Updated:
செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் ‘த ஆர்ட் ஆஃப் பீப்பிள்’ என்கிற புத்தகத்தை எழுதிய டேவ் கெர்பன் என்பவர் சாதாரண மானவர் அல்லர். அமெரிக்கன் ஐடல்’ (American Idol) எனும் உயரிய விருதைப் பெற்றவர். லாஸ் ஏஞ்சலில் உள்ள ஒரு முக்கிய டெலிவிஷன் நிறுவனத்தின் ஷோ ஒன்றை 30 எபிசோடுகளுக்கு மேல் நடத்தியதால், உலகமே அவரைத் தெரிந்து வைத்திருந்தது.

புத்தகத்தின் பெயர்: 
The Art of People
 ஆசிரியர்: Dave Kerpen
பதிப்பகம்:‎ Penguin
புத்தகத்தின் பெயர்: The Art of People ஆசிரியர்: Dave Kerpen பதிப்பகம்:‎ Penguin

என்றாலும், டேவ் மனதில் ஒரு விஷயம் உறுத்திக்கொண்டே இருந்தது. வெற்றி பெற்ற மனிதர்கள் பலரும் மனிதர்களைக் கையாளும் கலையில் பலவீனமாக இருக்கிறார்களே, என்ன செய்து இந்தப் பிரச்னையின் தீவிரத்தை அவர்களை உணர வைக்கலாம் என்பதுதான் அந்த விஷயம். காரணம், நீங்கள் எந்த அளவுக்கு மனிதர்களைப் புரிந்து வைத்திருக்கிறீர்கள், எந்த அளவுக்கு நீங்கள் மனிதர்களுடன் சிறப்பான தொடர்பை வைத்திருக்கிறீர்கள், எந்த அளவுக்கு உங்களுக்கு வேண்டிய விஷயங்களை பிறர் உங்களுக்காகச் செய்து தரும் அளவுக்கான நிலையில் இருக்கிறீர்கள் என்பதே உங்களுடைய வெற்றியை நிர்ணயிப்பதில் முக்கியமான அம்சங்களாக உள்ளன. வாழ்க்கையில் வேலை, கரியர், வாழ்க்கை என அனைத்திலும் மனிதர்களும் அவர்களுடன் நீங்கள் கொண்டிருக்கும் சிறியதும் பெரியதுமான தொடர்புமே வெற்றிக்கு வழிவகை செய்கிறது.

மனிதர்களைக் கையாளும் கலை...

‘‘மனிதர்களுடன் சரியான தொடர்பு இல்லாவிட்டால், வாழ்க்கை யில் நாம் என்னதான் வெற்றியின் உச்சத்தைத் தொட்டாலுமே ஏதோ ஒரு வெற்றிடத்தில் வாழ்வது போன்ற மனநிலையையே கொண்டிருப்பார்கள் என்பதே நிஜம். இதனாலேயே மனிதர்களைத் திறம்படக் கையாள்வது அவசியம் ஆகிறது.

மேலோட்டமாகப் பார்த்தால், நான், நான் என்ற குணாதிசயம் கொண்டு யாருக்காகவும் எதற்காகவும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளமல் வாழ்கிற மனிதர்களே பெரும் வெற்றியையும் பெரிய பதவியையும் அடைவதைப் போன்ற தோற்றம் நமக்குக் கிடைக்கும். ஆனால், பணியிடம், வீடு மற்றும் வாழ்க்கை என்ற மூன்றிலும் நினைத்ததை நடத்தி வெற்றிகரமாக வாழ்கிற மனிதர்கள் தலைசிறந்த மனிதர்களைக் கையாளும் குணத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பதே நிஜம்’’ என்கிறார் ஆசிரியர்.

மகத்தான வெற்றியைத் தரும்
மனிதர்களைக் கையாளும் கலை!

உங்கள் வெற்றி நீங்கள் அடுத்தவருடன் பேணும் நல்லுறவில்...

ஒருவருடைய வெற்றியில் மனிதர்களின் பங்கு என்ன? உங்களைச் சுற்றி இருக்கும் நபர்கள் எந்த மாதிரியான தகுதியுடைவர்களாக (பதவி/அந்தஸ்து/பணவசதி போன்றவை) இருக்கிறார்கள் என்பது முதலாவது விஷயமாகும். மேலும், நீங்கள் அவர்களுடன் எந்த அளவுக்கு நல்லுறவை வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்களுக்காக எந்தெந்த விஷயங்களை, எந்த அளவிலான ஈடுபாட்டுடன் அவர்கள் செய்யத் தயாராக இருப்பார்கள் என்பது நிர்ணயம் செய்யப்படும். சுற்றி இருக்கும் நபர்களுடன் பெரிய அளவிலான உறவு இல்லாத சூழ்நிலையில் நீங்கள் எதிர் கொள்ளும் சின்னச் சின்ன சவால்களுமே பூதாகரமானதாகத் தோன்றும்.

உங்களுக்குத் தேவைப்படும் சின்னச் சின்ன உதவிகளைப் பெறுவதற்குக்கூட நீங்கள் மிகப் பெரிய அளவிலான முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும். இந்த மாதிரி சூழ்நிலையில், நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் மலையின் மீது எடையைத் தூக்கிச் செல்வதைப் போன்று கடினமானதாக இருக்கும். சுற்றியிருக்கும் நபர்களுடன் மரியாதை மற்றும் நம்பிக்கையுடன் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ளும் அளவுக்கான நல்லதொரு உறவைப் (கூட்டணியைப்போல்) பேணினால், அவர்கள் நாம் மலையின் மீது எடையைத் தூக்கிச் செல்ல கஷ்டப்படும்போது கொஞ்சம் கைகொடுத்து பொருள்களை எடுத்து வந்து உதவுவார்கள். இதனாலே நம்முடைய பயண மானது சுலபமானதாகவும் சுவையானதாகவும், வெற்றிகள் மகிழ்ச்சியைத் தரக்கூடியதாகவும் இருக்கிறது. இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மனித உறவுகளை சிறப்பாகப் பேணு வதற்கான 11 நடைமுறைகளை இந்தப் புத்தகம் விளக்கமாகச் சொல்கிறது.

உங்களைப் புரிந்துகொள்ளுங்கள்...

“மனித உறவுகளைப் பேணி வளர்க்க நினைக்கும் ஒருவர் முதலில் தன்னைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், மற்ற மனிதர்கள் பற்றிப் புரிந்து கொள்ளவும் அவருடைய நம்பிக்கையைப் பெற்று தனக்கு இசைவாகச் செயல்பட வைக்கவும் வேண்டுமெனில், முதலில் நாம் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றிய தெளிவு நமக்கு இருக்க வேண்டும். தன்னைப் போன்ற நிலைப்பாடுகளையே மற்றவர்களும் எடுப்பார்கள் என்பதை மனதில் கொள்ளவே இதை ஒருவர் முதலில் செய்ய வேண்டும்” என்கிறார் ஆசிரியர்.

“மனிதர்களுடன் உறவு கொண்டிருப்பதில் இன்னுமொரு முக்கியமான பிரச்னை, நமக்கு பிடிக்காதவர்கள் என்ற பிரிவில் இருப்பவர்கள் ஆவார்கள். சரியோ, தவறோ நம்மைச் சுற்றி இருப்பவர்களில் ஒரு சிலரை நமக்குப் பிடிப்பதில்லை. அதே போல், ஒரு சிலருக்கு நம்மையும் பிடிப்பதில்லை. நமக்குப் பிடிக் காத நபர்களுடன் நட்பு பாராட்டுவது நம்முடையை கட்டுப் பாட்டில் இருக்கும் விஷயம். அதனால் நம்மை நாம் எப்பாடு பட்டாவது மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது, நம்மைப் பிடிக்காதவர்களுக்கும் நம்மைப் பிடிக்க வைக்க முடியும் என்று நாம் முழுமையாக நம்புவதாகும். இப்படி சுயநிர்ணயம் (self-determination) செய்துகொள்வது என்பது நம்முடைய முயற்சிகளுக்கு கொஞ்சம் ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.

பிடிக்காதவர்களுடன் பேசுங்கள்...

இரண்டாவதாக, நம்மைப் பிடிக்காதவர்களைப் பற்றி நாம் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏன் அவருக்கு/அவளுக்கு நம்மைப் பிடிக்க வில்லை, அடிப்படைக் காரணங்கள் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள கொஞ்சம் நேரமும் வாய்ப்பிருந்தால் கொஞ்சம் பணமும் (அவருடன் சேர்ந்து காபி, டின்னர் போன்றவை சாப்பிடச் செல்லுதல் போன்றவற்றுக்கானது) செலவிட்டு அது குறித்து நாம் தெரிந்துகொண்டு அதற்கேற்ப நாம் நடந்துகொள்ளலாம். ஒரு டின்னரிலோ, காபி குடிக்கும் நேரத்திலோ நம்மால் ஒருவர் குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது. என்றா லும் ஓரளவுக்கு நமக்கு அவரைப் பற்றி புரியும்.

இது போன்ற சந்திப்புகள் நிகழும்போது நம்மைப் பற்றி பெரிய அளவில் பேசாமல் அவர்களைப் பற்றி அவர்களே பேசுவதற்கான வாய்ப்பு களையே நிலைக்கச் செய்ய வேண்டும். ஒருவேளை, நம்மைப் பற்றி பேசுவதற்கான கேள்விகள் கேட்கப்படும் சூழ்நிலையிலுமே மிகவும் குறைந்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டு அவர்கள் குறித்த தகவல்களையே மிக அதிகமாகத் தெரிந்துகொள்ள முயல வேண்டும்” என்கிறார் ஆசிரியர்.

காது கொடுத்துக் கேளுங்கள்...

“இதில் முக்கியமான விஷயம், உங்களை மற்றவர் கள் மதிக்க வேண்டும் எனில், அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும்” என்கிறார் ஆசிரியர். “மனிதர் கள் அடுத்தவர்களைவிட தங்களைப் பற்றித்தான் அதிகமாக கவலைப்படு வார்கள். அதே போல், அவர் களைப் பற்றித்தான் பேச முயல்வார்கள். எனவேதான், மனிதர்களைப் பேச சொல்லிக் கேட்பதே வியா பாரம், வாழ்க்கை உள்ளிட்ட அனைத்து மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங் களிலும் அவர்களைப் புரிந்து கொள்வதற்கு சிறந்த வழி முறையாகும்.

உலகில் பெரும்பாலான மனிதர்கள் தனிமையில்தான் இருக்கின்றனர். எனவே, அவர்கள் பேசுவதை நீங்கள் கேட்டால் அவர்களுடன் நீங்கள் உறவை ஏற்படுத்திக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். ஏனென்றால், அவர்கள் தனியாக இருப்ப தாக உணர்ந்துகொண்டிருக் கும் வேளையில் அவர்கள் பேசுவதைக் கேட்பதே அவர் களுடன் இணைந்து செயல் பட (நட்புடன் இருப்பதற்கான) முதல்படியாக இருக்கும்.

அதேபோல், அவர்கள் பேசும்போது காதுகளால் கேட்பதைவிட கண்களால் கேளுங்கள். முகபாவனைகள், உடல் அசைவுகள் மற்றும் தோரணைகள் போன்றவை வார்த்தைகள் சொல்லாத பல்வேறு விஷயங்களைத் தெளிவுபடுத்துவதாக இருக்கும்” என்கிறார் ஆசிரியர்.

அறிவுரைகளை அள்ளி வீசாதீர்கள்...

“ஒவ்வொரு மீட்டிங்கின்போதும் காபி, தண்ணீர் போன்றவற்றை பெற்றும் தந்தும் பழகுங்கள்” என்று சொல்லும் ஆசிரியர், இதனால் உருவாகும் பலன் களையும் தெளிவுபடுத்தியுள்ளார். “அதே போல, அறிவுரைகளை வழங்குவது என்பது வேஸ்ட்டான விஷயம் என்று நாம் நினைக்கிறோம். அறிவுரையை வழங்குவது தவறு. ஏனென்றல், உலகில் இலவசமாக அளவின்றி கிடைக்கும் ஒரு விஷயம் அது என்று நாம் நினைக்கிறோம். இதன் மற்றொரு பக்கத்தைப் பார்த்தால், இதை எப்படி நமக்கு சாதகமாக உபயோகித்துக்கொள்வது என்பது நமக்குப் புரியும். அறிவுரை சொன்னால், நம்மில் பெரும்பாலானவர் களுக்கு அது பிடிக்காது. சரி. அப்புறம் எதற்கு பிரச்னைகளை ஒருவரிடம் சொல்கிறோம். ஏனென் றால், பிரச்னைகளை யாரிடமாவது சொன்னால் நம்மை நாம் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என்பதனால்தான். எனவே, மற்றவர் களை அவர்களது பிரச்னைகளை சொல்லவிடுங்கள். அப்படிச் சொன்ன பின்னால் அறிவுரைகளை அள்ளி வீசாதீர்கள். பிரச்னைகளைக் கேட்க ஆள் இருப்பதையே பெரும்பாலும் மனிதர்கள் விரும்பு கின்றனர்” என்கிறார் ஆசிரியர்.

எப்படி மற்றவர்களுடன் நம்மை இணைத்துக் கொள்வது, பழக ஆரம்பிக்கும்போது முதலில் கேட்க வேண்டிய கேள்வி என்ன, எப்படி மனிதர்கள் மத்தியில் செல்வாக்கை உருவாக்குவது, மனிதர் களின் மனதை எப்படி மாற்றுவது, மனிதர் களுக்கு எப்படி கற்றுத் தருவது, பிரச்னைகளை எப்படி பேசித் தீர்ப்பது, எப்படி அடுத்தவர்கள் ஊக்கம்பெறும் வகை யில் நடந்துகொள்வது, எப்படி அடுத்தவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விளக்கமாகச் சொல்லித் தரும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை அவசியம் படிக்கலாம்.