Published:Updated:

வெற்றிக்கு வழிவகுக்கும் நிறுவனக் கலாசாரத்தை வளர்த்தெடுக்கும் சூட்சுமங்கள்!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

வெற்றிக்கு வழிவகுக்கும் நிறுவனக் கலாசாரத்தை வளர்த்தெடுக்கும் சூட்சுமங்கள்!

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

ஒரு நிறுவனத்தின் கலாசாரம் என்பது எங்கே இருந்து உருவாகிறது என்கிற கேள்வி உங்கள் மனதில் இருந்திருக்கும். அது மட்டுமல்ல, அந்தக் கலாசாரம் எப்படி பரவுகிறது, அதை எப்படி மாற்றி அமைப்பது என்ற கேள்விகள் எல்லோருடைய மனதிலும் தோன்றவே செய்யும்.

புத்தகத்தின் பெயர்:
 The Culture Playbook
ஆசிரியர்: 
Daniel Coyle
பதிப்பகம்:‎ 
Cornerstone Press
புத்தகத்தின் பெயர்: The Culture Playbook ஆசிரியர்: Daniel Coyle பதிப்பகம்:‎ Cornerstone Press

கலாசாரம் எப்படி உருவாகிறது?

ஒரு நிறுவனம் எந்த மாதிரியானது (ஆப்பிள், டிஸ்னி, யுஎஸ் மெரைன் காப்ஸ் போன்ற) என்பதில் இருந்துதான் கலாசாரம் என்பது தோன்றுகிறது என நம்மில் பலரும் நம்புகிறோம். இதன் அடிப்படையில் பார்த்தால், உங்களு டைய குழுவின் கலாசாரம் நிலையானது (fixed) என்றே நீங்கள் முடிவு செய்ய வேண்டியிருக்கும். மேலும், அந்தக் கலாசாரம் என்பது பணிபுரிகிற அனைவரின் டி.என்.ஏ-விலேயே நிலை கொண்டிருப்பதைப் போன்ற தோற்றத்தையே நாம் ஊர்ஜிதம் செய்துகொள்வோம்.

இதுதான் நிறுவனம் மற்றும் அதில் பணி புரியும் தனிநபர் மற்றும் குழுக்களின் கலாசாரம் குறித்த ஒரு பொதுப் புத்தியாக இருக்கிறது. ஆனால், உங்களுடைய நடவடிக்கைகளே உங்களுடைய கலாசாரமாக மாறுகிறது என்பதே என்னுடைய கோட்பாடு என்று சொல்லி புத்தகத்தை ஆரம்பிக்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். அதாவது, ‘‘கலாசாரம் என்பது நீங்கள் யார் (ஆப்பிள், டிஸ்னி, கூகுள் போன்ற பெரும் அடையாளம்) என்பதிலிருந்து உருவாவதில்லை. மாறாக, நீங்கள் என்ன மாதிரியான செயல்களைச் செய்கிறீர்கள் என்பதில் இருந்தே உருவாகிறது. அதனாலேயே கலாசாரம் என்பது ஒரு பணியாளராக உங்களுக்குக் கிடைக்கும் பரிசு அல்ல. நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு திறன் (skill) என்கிறேன். மனிதர்கள் கொண்டிருக்கும்

எந்த ஒரு திறனையும் போல, இந்தத் திறனிலும் ஒருவர் சிறந்து விளங்க முடியும். அல்லது மோசமான திறனைக் கொண்டவராகவும் இருக்க முடியும்’’ என்கிறார் ஆசிரியர்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் கலாசாரத்தையும் அதனுள் இயங்கும் குழுக்களின் கலாசாரத் தையும் ஆராய்ந்து அதிலிருந்து பெறப்பட்ட நுண்ணறிவைக் கொண்டு எழுதப்பட்டது இந்தப் புத்தகம். தவிர, இந்த மே மாதம்தான் இந்தப் புத்தகம் வெளியாகி இருக்கிறது. தற்போது வாசகர்கள் பலரும் சுடச்சுட வாங்கிப் படிக்கும் இந்தப் புத்தகத்தில் உள்ள முக்கியமான விஷயங்களை இனி நாம் பார்ப்போம்.

சிறந்த கலாசாரத்தை உருவாக்க நினைத்தால், நீங்கள் மூன்று முக்கியமான விதிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

வெற்றிக்கு வழிவகுக்கும் நிறுவனக் கலாசாரத்தை வளர்த்தெடுக்கும் சூட்சுமங்கள்!

சிறந்த கலாசாரத்தை உருவாக்கும் மூன்று பெரும் விதிகள்...

முதலாவது விதியாக ஆசிரியர் கூறுவது, உங்கள் நிறுவனம் அதற்கென ஒரு கலாசாரத்தை உருவாக்கி முன்னேற்றம் காண நினைத்தால், உங்கள் கலாசாரம் எந்த இடத்தில் இருக்கிறதோ, அந்த இடத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான். சிறந்த கலாசாரம் கொண்ட இடங்களில் உராய்வுகள் ஏதும் இல்லாமலும், மகிழ்ச்சி எக்கச்சக்கமாகவும், கருத்து வேறுபாடுகள் சற்றும் தலைதூக்காமலும், தொட்டதெல்லாம் துலங்கும் வண்ணமும் செயல்படுவதாக இருக்கும் என்று நாம் கற்பனை செய்துகொள்கிறோம். இது உண்மையில்லை. சிறந்த கலாசாரத்தைக் கொண்டு இயங்கும் இடங்களில் அதிகப்படியான உராய்வுகளும், எக்கச்சக்கமான கருத்து வேறுபாடுகளும், அவர்கள் ஈடுபடும் விஷயங்களில் பல்வேறு விதமான தோல்விகளையும் சந்திக்கவே செய்கின்றனர். இதனாலேயே நீங்கள் இந்த ‘டென்ஷன் ஃப்ரீ’ கலாசாரத்தை உருவாக்க நினைக்கிறீர்கள். இல்லாத ஒன்றை நீங்கள் உருவாக்க நினைத்து, தோல்வி அடையும்போது விரக்தியே மிஞ்சும். ஏனென்றால், சிறந்த கலாசாரம் கொண்ட குழுக்களுக்கு நடக்கும் இந்தவித விஷயங்கள் அனைத்தும் அவற்றிடையே இன்னமும் ஒற்றுமையை அதிகரிக்கவும், கற்றுக்கொள்ளும் திறனை அதிகரிக்கவும், தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுவதாகவும் இருக்கிறது.

இரண்டாவது, இதைச் செய்ய வேண்டும் என்பது போன்ற கட்டளைகளை இடாமல், இந்த இடத்தைச் சென்றடைய வேண்டும் என்பதற்கான உரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும். ஒரு சில தலைவர்கள் அல்லது குழுக்கள்,

சிறந்த கலாசாரத்துடன் திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் மேலிருந்து கட்டளையிட்டால் (top down) அது நடந்துவிடும் என்று நினைக்கின்றனர். அதுவும் முழுக்க முழுக்க தவறான ஒன்றே. சட்டத்துக்குக் கட்டுப்பட்டு கலாசாரம் உருவாவ தில்லை. கலாசாரம் என்பது அனைவரும் ஒருங்கிணைந்து உருவாக்கினால் மட்டுமே உருவாகும். எனவே, உங்களுடைய நடவடிக்கைகள் அனைவரையும் சிந்திக்க வைப்பதாகவும் உங்களுடைய உரையாடல்கள் கலாசார ரீதியாக எதை நோக்கி நிறுவனம் பயணம் செய்கிறது என்பதைப் புரிய வைப்பதாகவும் இருக்க வேண்டும்.

மூன்றாவதாக, இதுதான் கலாசாரம் என்பது போன்ற தெளிவாக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள் எதுவும் இல்லை என்பது. ஏனென்றால், கலாசாரம் என்பது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். அதனால் கலாசாரத்தில் தொடர்ந்து தேவையான மாறுதல்களைச் செய்வதும், எதிர் கொள்ளும் சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் அனுசரிப்பதும், கலாசாரத்தை மேலும் ஸ்திரமானதாக மாற்ற உதவும் நடவடிக்கைகளை எடுப்பதும் அவசியமான ஒன்றாகும்.

செயல்பாட்டு ரீதியிலான மாற்றங்கள் அவசியம்...

கலாசாரம் என்பது செயல்பாட்டு ரீதியிலான தொடர் பரிமாற்றங்களை (continual exchange of three key behaviours) கொண்டதொரு விஷயமாகும். நல்லதொரு நிறுவனக் கலா சாரத்தை வளர்க்க நினைப்ப வர்கள் முதலில் நிறுவன ஊழியர்கள் அனைவரின் மத்தியிலும் பாதுகாப்பு உணர்வை வளர்த்தெடுக்க வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர், அதற்கான வழிகளை யும் விளக்கியுள்ளார். இதை ‘குரூப் கெமிஸ்ட்ரி’ எனக் குறிப்பிடும் ஆசிரியர், இது சிறப்பாக இருக்கக் காரணம், ஏதோ மாயாஜாலமான விஷயம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், நாம் எல்லோரும் ஒன்று என்கிற எண்ணத்தின் மூலமே இது உருவாகும் என்கிறார் அவர்.

இதை உறுதிசெய்ய நாம் அனைவரும் இணைந்து செயல் படுகிறோம், நம்முடைய எதிர் காலம் என்பது நாம் அனை வரும் இணைந்து கொண்டுவரும் விஷயம்தான். நான் மற்றவர்கள் நலம் குறித்து அக்கறை கொண் டவன், நீங்கள் அனைவரும் இங்கே நடக்கும் விஷயம் குறித்து விவாதிக்கலாம். நீங்கள் எங்கள் அனைவருக்கும் முக்கியமான வர்கள் என்பது போன்ற தெளிவான மெசேஜ்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

இது நம்முடைய இடம் என்ற உணர்வு மேலோங்கும்போது, நம்முடைய மூளை எச்சரிக்கை யாக இருக்கும் நிலையில் இருந்து மாறி, அனைவருடனும் இணைந்து செயல்படும் நிலைக்குத் தானாகச் செல்கிறது. இப்படி அனைவருடனும் இணைந்து செயல்படும் நிலையில், குழுவினரிடத்தில் நல்லதொரு கலாசாரம் உருவாகவே செய்கிறது என்கின் றன ஆய்வு முடிவுகள். குறிப்பாக, பணியாளர்கள் தங்களின் வேலை குறித்த விமர்சனங்களை வெளிப் படையாகக் கூற முடியும் என்ற சூழ்நிலை நிலவும்போது கற்றல், புதுமைகளை உருவாக்குதல் மற்றும் செயல்திறன் அதிகரித்தல் என்பது சுலபமாகவும் அதிவேக மாகவும் நடக்க ஆரம்பிக்கிறது.

அனைவரும் பாதுகாப்பாக உணர நம்முடைய முகத்தின் பங்களிப்பு மிகவும் அதிகமானது. ஏனென்றால், முகம் ஒரு கதவைப் போன்றது என்று சொல்லும் ஆசிரியர், இந்தக் கதவை நீங்கள் திறந்தும் வைக்கலாம்; மூடியும் வைக்கலாம். புருவத்தின் ஏற்ற இறக்கம், கண்தரும் சுகமான நேர் பார்வை, எனர்ஜி போன்றவை முகத்தில் இருந்து மற்றவர்கள் பெருகிற விஷயங்களாகும். இவற்றை சரியாகச் செயல்படுத்

தினாலே பாதுகாப்பு குறித்த பல விஷயங்களை மற்றவர்கள் சரிவர புரிந்துகொள்ளும்படி நீங்கள் செயல்படலாம் என்கிறார் ஆசிரியர்.

வீக்கான கலாசாரத்தில்தான் தோல்விகளை மூடிமறைக்க முயல் வார்கள். தலைசிறந்த கலாசாரத் தில் ‘நாங்கள் சந்தித்த தோல்விகள்...’ என்பதைப் பெருமையாகப் பட்டியலிடுவார்கள். அதிலிருந்து அவர்கள் கற்றுக்கொண்டது என்னென்ன என்பதையும் கூடவே சொல்லி மகிழ்வார்கள். இதனாலேயே சிறந்த கலாசாரத்தை வளர்த்தெடுக்க நீங்கள் நினைத் தால், தோல்விகளைப் பட்டிய லிட்டு அழகு பார்ப்பதற்கான

ஒரு சுவரை எழுப்புங்கள் (நோட்டீஸ் போர்டாகக்கூட இருக்கலாம்!). அதேபோல், அவ்வப்போது ஒவ்வொரு பணியாளரும் அந்தச் சூழ்நிலையில் எவ்வாறு உணர்கிறார் (மனநிலையில் இருக்கிறார்) என்பதையும் காதுகொடுத்துக் கேளுங்கள் என்கிறார் ஆசிரியர்.

‘‘ஒருவர் பணியைவிட்டு விலகுகிறார் எனில், அதை மிகுந்த கவனத்துடன் கையாண்டு பழகுங்கள். பணியை விட்டு விலகும்போது காட்டப்படும் பரிவே சிறந்த கலாசாரம் தழைத்தோங்க வழிவகை செய்வதாக இருக்கிறது. பணியிலிருந்து விலகுபவரிடம் இருந்து உங்கள் நிறுவனம் நிறையவே உபயோகமான விஷயங்களைக் கிரகித்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதனாலேயே அவர்களை மிகவும் சிரத்தையுடன் கையாள வேண்டியது அவசியம்’’ என்று ஆசிரியர் சொல்லும் வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை.

60 நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு கூறியுள்ள ஆசிரியர், இறுதியாக இவை அனைத்தையும் நீங்கள் செய்து முடித்தபின் நாளடைவில் கலாசார மாறுதல் நடைபெறு வதை நீங்கள் கண்கூடாகப் பார்ப்பீர்கள் என்று கூறி, புத்தகத்தை நிறைவு செய்கிறார். நிறுவனங்களின் வெற்றியில் அங்கே நிலவும் கலாசாரத்தின் பங்களிப்பு அதிக அளவிலானது. அந்தக் கலாசாரத்தை வளர்த்தெடுப்பது எப்படி என்பதை அனைவருக்கும் எளிதில் புரியும்படி பல்வேறு உதாரணங்களுடன் 60 அறிவுரைகளை கூறியிருக்கும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படித்து பயன் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism