Published:Updated:

வருத்தம் என்பதை வரவிடாமல் மனநிறைவுடன் வாழும் வழிகள்!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

வருத்தம் என்பதை வரவிடாமல் மனநிறைவுடன் வாழும் வழிகள்!

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

வாழ்க்கையில் ஏழை முதல் பணக்காரர் வரை வருத்தம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. மார்ஷல் கோல்டுஸ்மித் எனும் உலகின் முன்னணி எக்ஸிகியூட்டிவ் கோச் எழுதிய `தி இயர்ன்ட் லைஃப்’ எனும் வருத்தத்தை நெருங்கவிடாமல் மனநிறைவுடன் இருப்பது எப்படி என்பதைச் சொல்லும் புத்தகத்தைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.

புத்தகத்தின் பெயர்:
 The Earned Life 
ஆசிரியர்: 
Marshall Goldsmith
பதிப்பகம்:‎ 
Penguin Business
புத்தகத்தின் பெயர்: The Earned Life ஆசிரியர்: Marshall Goldsmith பதிப்பகம்:‎ Penguin Business

வருத்தப்படும் நிலை யாருக்கும் வரக்கூடாது...

சிறு வயதில் படிப்பில் ஆர்வமில்லாமல் திரிந்து அமெரிக்க ராணுவத்தில் பயிற்சிக்கு சேர்ந்து ஜெர்மனியில் அமைந்துள்ள கேம்ப்பில் பணிபுரிந்து அமெரிக்கா திரும்பினார் ரிச்சர்ட்.அவர் ஒரு டாக்சி நிறுவனத்தில் டிரைவராகப் பணியாற்றும்போது, ஏர்போர்ட்டில் ஜெர்மனியில் படித்துவிட்டுத் திரும்பி வரும் ஒரு பெண்ணை பிக்அப் செய்து அவளுடைய வீட்டில் விடுவதற்காகச் சென்றார். போகும் வழியில் பெரிய டிராஃபிக் ஜாம். அந்தச் சமயத்தில் இருவரும் பல்வேறு விஷயங்கள் பற்றிக் கருத்து பரிமாறிக்கொள்ள, அவர்கள் சிந்தனை ஒரே மாதிரி இருப்பதை உணர்கின்றனர்.

சிறிது நேரத்துக்குப் பின் டிராஃபிக் ஜாம் சரியாகி அந்தப் பெண்ணை அவர் வீட்டுக்கு கொண்டுபோய் சேர்த்தால், அந்தப் பெண்மணி மிகப் பெரிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று ரிச்சர்ட்டுக்குத் தெரிகிறது. எதற்கும் இருக்கட்டும் என்று தன்னுடைய கம்பெனியின் கார்டைக் கொடுத்துவிட்டு, ‘‘ஏர்போர்ட்டுக்குப் போக வேண்டும் எனில், என்னைக் கூப்பிடுங்கள்’’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்.

அந்த வார இறுதியில் அந்தப் பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்தது. ‘‘கேஷுவலான ஒரு சந்திப்புக்கு வரும்படி அழைத்திருந்தாள் அந்தப் பெண். காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் ரிச்சர்ட். அந்தப் பெண் வசிக்கும் வீட்டுக்குப் பக்கத்தில் போனவுடன் ஒரு யோசனை. ‘‘அவள் இருக்கும் இடம் எங்கே, நான் எங்கே, அவளுடைய வசதி என்ன, என் வசதி என்ன, நமக்கும் அவளுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாதே’’ என்று நினைத்து யோசிக்க, அதுவே தயக்கமாக உருவாகி, அந்தப் பெண்ணைச் சந்திக்காமல் திரும்பி விட்டாராம்.

‘‘அதன் பின்னர் 40 வருடங்களாக நான் அந்தப் பெண்ணை சந்திக்கவில்லை. என் கோழைத்தனம் (அந்தஸ்து இல்லை, பணம் இல்லை என்ற தாழ்வுமனப்பான்மையால் உருவான எண்ணம்) என்னை அந்தச் செயலை செய்ய வைத்தது. இன்றுவரை நான் திருமணம் செய்துகொள்ளாமல் தனிமனிதனாகவே வாழ்கிறேன்’’ என்று இந்தப் புத்தகத்தின் ஆசிரியரிடம் வருத்தப்பட்டாராம் ரிச்சர்ட்.

‘‘சரிசெய்யவே முடியாத மிகப்பெரும் வருத்தம் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. எவ்வளவு பெரிய மனோதத்துவ நிபுணராலும் இதை சரி செய்ய முடியாது. இதை சொன்ன பின் எனக்குப் பேச வார்த்தை வரவில்லை. இந்த வருத்தத்தின் ஆழத்தைப் பாருங்கள். இதனால் தான் சொல்கிறேன், வருத்தம் (regret) என்பது யாருக்கும் வந்து விடவே கூடாது’’ என்று என்று சொல்லி புத்தகத்தை ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

வருத்தம் என்பதை வரவிடாமல்
மனநிறைவுடன் வாழும் வழிகள்!

மனநிறைவும் வருத்தமும்...

மனநிறைவு இல்லாத நிலையிலேயே வருத்தம் என்பது உண்டாகிறது. குறிப்பாகச் சொன்னால், மனநிறைவும் வருத்தமும் இரண்டு முனையில் எதிரெதிரே இருக்கிற இரண்டு துருவங்களாகும். மனிதர்களாகிய நம்மைப் பின்வரும் ஆறு விஷயங்களே மன நிறைவடையச் செய்கின்றன: குறிக்கோள், அர்த்தம், சாதனை, உறவுகள், ஈடுபாட்டுடன் இருத்தல் மற்றும் மகிழ்ச்சி என்பவையே அவை. நம்முடைய வாழ்க்கையே இந்த ஆறு விஷயங்களை மையமாக்கியே நடந்துசெல்கிறது.

இந்த உலகில் நாம் தேர்ந்தெடுத்து செய்யும் மற்றும் எடுக்கும் ரிஸ்க்குகளுக்கு ஏற்ற அளவிலான நம்முடைய மனதில் நாம் நிர்ணயம் செய்துகொள்ளும் பலாபலன்கள் மற்றும் ரிவார்ட்டுகள் கிடைக்க வேண்டும் என்று நாம் தீர்மானித்துக்கொண்டு செயல்படுகிறோம். இதில் நாம் மேலே சொன்ன ஆறு விஷயங்களும் உள்ளடங்க வேண்டும் என்றும் நினைக்கிறோம். ஒருவேளை, நாம் எதிர்பார்த்த பலாபலன்களும் ரிவார்டுகளும் கிடைத்துவிட்டால், இந்த உலகம் ரொம்ப நியாயமாகச் செயல்படுகிறது என்று சொல்லி பாராட்டி மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்.

இதற்கு முற்றிலும் எதிராக இருக்கும் வருத்தம் என்பது எதிர்பார்த்த பலாபலன் கிடைக்காத சூழலில் உருவாகிறது. வருத்தம் என்றால் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால், நாம் முன்னொரு காலத்தில் தேர்ந்தெடுத்து செய்த விஷயத்துக்குப் பதிலாக வேறொன்றைச் செய்திருக்கும் பட்சத்தில் இன்றைக்கு இருக்கும் நிலையைவிட நம்முடைய நிலை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று நாம் நினைக்கும் சூழலில் உருவாவதுதான் என்கிறார் ஆசிரியர்.

மேலும், வருத்தம் என்பது நம்முடைய நிலைமைக்கு அடுத்தவர்களே காரணம் என்னும் சைத்தானின் கற்பனைக்கு செயல்வடிவம் கொடுப்பதாகும். ஏனென்றால், நம்முடைய செயல்களுக்கும் அதனால் வரும் விளைவுகளுக்கும் நாம்தான் காரணம். நம்முடைய தேர்வுகளே அவை என்பதை நாம் உணர்வதில்லை. மேலும், நாம் வேறு விஷயத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருப்போம் என்ற வளமான கற்பனையும் நம்முடன் இந்தவித சூழ்நிலையில் சேர்ந்துகொண்டு நம்மை பாடாய்ப் படுத்துகிறது. இதனால்தான் சொல்கிறேன், வருத்தம் என்பது அதுவாக உங்கள் வாழ்க்கைக்குள் புகுவதில்லை. நீங்கள்தான் அதை உங்களுடைய வாழ்க்கைக்குள் அழைத்து வருகிறீர்கள். இதில் கொடுமை என்னவெனில், வருத்தத்தில் S, M, L, XL, XXL என்று பல்வேறு சைஸ்கள் இருப்பதுதான்’’ என்று கிண்டலடிக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர்.

வருத்தங்களிலிருந்து மீள்வது எப்படி?

‘இன்றைக்கு மதியம் நமக்கு பிடித்த உணவில்லையே’ என்பது போன்ற வருத்தத்தை எல்லாம் விட்டுவிட்டு நம்முடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடுகிற, மாற்றியமைக்க முடியாத விளைவுகளைத் தரக் கூடிய வருத்தங்களை எப்படித் தவிர்ப்பது (நம்மை வந்தமடை யாமல் இருக்கச் செய்வது) என்பதைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

அதற்காக, ‘நான் பள்ளியில் சரியாகப் படிக்கவில்லை; அதனால் இன்றைக்கு கஷ்டப்படுகிறேன்’ என்பது போன்ற வருத்தத்தைச் சரிசெய்ய முடியுமா’ என்று கேட்கக்கூடாது. நீங்கள் வயது முதிர்ந்தவராக மனமுதிர்வுடன் தேர்ந்தெடுத்து செய்யும் காரியங்களில் இருந்து வருத்தம் உருவாகாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்பதைத் தான் சொல்லித் தர முயல்கிறேன் என்கிறார் ஆசிரியர்.

வருத்தங்களைத் தவிர்ப்பது எப்படி என்றவுடன் இது ஒரு வருத்தத்துக்கான மருந்தைத் தரும் புத்தகம் என்று நினைத்து விடாதீர்கள். வருத்தம் என்பது நமக்கு முன்பின் தெரியாத நபர். அவர் வந்து நம் வீட்டுக் கதவைத் தட்டும்போது வரவேற்று கதவைத் திறந்துவிடாமல் இருப்பது எப்படி? அதாவது, மனநிறைவுடன் வாழ்ந்து வருத்தத்தை வரவேற்காமல் இருப்பது எப்படி என்பதைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

மனநிறைவு என்பதே இந்தப் புத்தகத்தின் உட்கருத்து. நம் தகுதிக்கேற்ற வாழ்க்கையை வாழ்கிறோம் என்ற மனநிறை வைப் பெற்றால், அதுவே வருத்தம் என்பது நம்மை அண்டவிடாமல் செய்யும் இல்லையா? அதைத்தான் கற்றுத் தருகிறது இந்தப் புத்தகம்.

தகுதி/ரிஸ்குக்கு ஏற்ப முடிவெடுங்கள்...

நம்முடைய நோக்கத்துக்கேற்ற வகையிலான தேர்ந்தெடுத்தல் களைச் செய்தும் ரிஸ்க்குகளை எடுத்தும் வாழ முயலும்போது தேர்தெடுத்த அந்தப் பாதை வாழ்வில் நம்மைக் கொண்டு போய் சேர்க்கக்கூடிய இடம் மற்றும் அதில் இருக்கும் ரிஸ்க்கு களின் காரணமாக என்னென்ன முடிவுகளை எல்லாம் நாம் எட்டலாம்/கஷ்டங்களை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை முழுமையாக உணர்ந்து கொண்டு இருக்கும்பட்சத்தில் நமக்குக் கிடைப்பது என்னவாக இருந்தாலும் வருத்தம் என்பது நமக்கு இருக்கவே இருக்காது என்பதுதான் ஆசிரியர் சொல்ல வரும் தகவல். ஏனென்றால், நாம் எதிர்பார்த்தவற்றில் ஏதாவது ஒன்றுதான் (நல்லது முதல் கெட்டது வரை) நமக்குக் கைகூடி வந்திருக்கும். அந்த நிலையில், நாம் நம் தகுதிக்கேற்ற விஷயத் தையே பெற்றுள்ளோம் என்ற மனநிறைவுடன் நாம் இருப்போம் இல்லையா? இதைச் செய்ய நினைக்கும் நீங்கள் மூன்று முக்கிய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

தலைசிறந்த விஷயங்களைத் தேர்தெடுக்க விரும்பும் நாம் தேர்ந்தெடுக்கும் அந்த விஷயங்களில் உள்ள நல்லது, கெட்டது குறித்த அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு அதில் எவ்வளவு தூரத்துக்கு நாம் பயணம் செய்ய முடியும், அந்தப் பயணம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அந்தக் காரியத்தில் இருக்கும் ரிஸ்க்குகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மால் இயன்ற அளவுக்கு முழுமுயற்சியையும் அதற்காகச் செய்ய வேண்டும். தேர்ந்தெடுத்தல், ரிஸ்க்குகளைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் முழுமையான முயற்சி என்ற மூன்றையும் சரியான அளவில் சேர்க்கும்போது அதனால் வரும் விளைவுகளை நாம் மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ளவே செய்வோம். இப்படி நாம் செயல்படும்போது தேர்வு, ரிஸ்க் மற்றும் முயற்சிக்கான சரியான பலனை நாம் பெற்றிருக்கிறோம் என்பது நம்முடைய மனதுக்குத் தெளிவாகப் புரியும். அப்படிப் புரிவதனாலேயே நமக்கு வருத்தம் என்பது துளியும் இருக்காது என்கிறார் ஆசிரியர்.

15 அத்தியாயங்களில்...

15 அத்தியாயங்களாகப் பிரித்து எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது (7 அத்தியாயங்கள்) மற்றும் தகுதிக்கேற்ற வாழ்க்கையைப் பெறுவது என (8 அத்தியாங்கள்) இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஏக்கங்களும் அதனால் வரும் வருத்தங் களும் மலிந்துள்ள இன்றைய உலகில் மனநிறைவே வாழ்வின் அருமருந்து என்பதைச் சொல்லி அதை அடையும் வழிகளையும் தெளிவாக விளக்கியிருக்கும் இந்தப் புத்தகத்தை அனைவரும் படித்துப் பலன் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism