Published:Updated:

தலைவனாகும் தகுதியை நீங்கள் வளர்த்துக்கொள்ளத் தயாராவது எப்படி?

தலைவனாகும் தகுதி
பிரீமியம் ஸ்டோரி
தலைவனாகும் தகுதி

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

தலைவனாகும் தகுதியை நீங்கள் வளர்த்துக்கொள்ளத் தயாராவது எப்படி?

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
தலைவனாகும் தகுதி
பிரீமியம் ஸ்டோரி
தலைவனாகும் தகுதி

தலைவர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் உருவாகி சிறந்த தாக்கத்தை மக்களுடைய வாழ்க்கையில் / நிறுவனங்களுடைய வாழ்க்கை யில் உருவாக்கிவிட்டுச் செல்கின்றனர். வெற்றிகரமான தலைவர்களிடம் ஒரு சில குணாதிசயங்களும் பண்புகளும் இருக்கவே செய்கின்றன. இந்தப் பண்புகளைப் பெறுவதும் மேம்படுத்திக்கொள்வதும் எப்படி என்பதைப் பற்றிச் சொல்லும் புத்தகத்தைதான் நாம் இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.

புத்தகத்தின் பெயர்: The Leader’s Mind
ஆசிரியர்: Jim Afremow PhD, Phil White
பதிப்பகம்:‎ HarperCollins Leadership
புத்தகத்தின் பெயர்: The Leader’s Mind ஆசிரியர்: Jim Afremow PhD, Phil White பதிப்பகம்:‎ HarperCollins Leadership

தலைவர்கள் உருவெடுக்கின்றனர்...

‘‘தலைவர்கள் பிறப்பதில்லை; அவர்கள் உருவெடுக்கின்றனர். மற்ற விஷயங்களைப்/துறைகளைப் போலவும் கடின உழைப்பின் மூலமே ஒரு தலைவர் உருவெடுக்கிறார். அந்தக் கடின உழைப்பே தலைமை எனும் நிலையை அடைய நாம் கொடுக்க வேண்டியவிலை’’ என்று வின்ஸ் லம்பார்டி எனும் அமெரிக்காவின் சிறந்த கால்பந்து பயிற்சியாளர் கூறியுள்ளார்.

ரியோகான் எனும் ஜென் குரு ஒருவர், கடல் சீற்றம் ஒன்று நடந்து முடிந்த பின்னால் கடற்கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அவர் நடந்துசெல்லும் பாதையில் கடல் சீற்றத்தால் கரை ஒதுங்கிய நட்சத்திர மீன்கள் வெயிலின் கொடுமையில் சிக்கி உயிரைவிடும் நிலையில் இருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து கடலுக்குள் போட்டுக்கொண்டிருந்தார். அருகே இருந்த மீனவர் ஒருவர், ‘‘கடல் சீற்றத்தால் கரை ஒதுங்கிய எல்லா நட்சத்திர மீன்களையும் உங்களால் காப்பாற்றிவிட முடியாது. அப்படி இருக்க, சில மீன்களை மட்டும் எடுத்து மீண்டும் கடலில் விடுவதால் என்ன பிரயோஜனம் ஏற்பட்டுவிடப் போகிறது’’ என்று கேட்டார். ரியோகானோ கையில் வைத்திருந்த நட்சத்திர மீனைக் கடலுக்குள் போட்டு, ‘‘இதன் வாழ்வில் நான் ஒரு வித்தியாசத்தை உண்டு பண்ணிவிட்டேனே, அதுவே போதும்’’ என்று சொல்லிவிட்டு, அடுத்த நட்சத்திர மீனைக் கையில் எடுத்து கடலில் போட ஆரம்பித்தாராம். எது ஒருவரைத் தலைவனாக்குகிறது, தலைவர்கள் தலைவர்களாகத் திகழ என்ன செய்கின்றனர் என்பதை நாசூக்காக சொன்னபடி ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.

நம்பிக்கை இழக்காத தலைவர்கள்...

எல்லா தலைவர்களுமே அவர்களைச் சுற்றியுள்ள பல்வேறு நபர்களும் உத்வேகம் பெறுமளவுக்கான காரியங்கள் பலவற்றையும் செய்கின்றனர். ஆனால், இதில் எது மக்களிடம் பெரும் உத்வேகத் தீயை உருவாக்கி, இவரைப் போல நாமும் இருக்க வேண்டும் என நினைக்க வைக்கிறது எனப் பல்வேறு தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் நாம் கண்டறிந்தது என்னவெனில், ஒவ்வொரு தலைவருமே தங்களுடைய பேச்சும் செயல்பாடுகளும் மற்றவர்களிடம் எந்த மாதிரியான பாதிப்பை உருவாக்குகிறது (தனித்தனி நபர்களாகவும் கூட்டமாகவும்) என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர். இதனாலேயே வெற்றி, தோல்வி என்ற இரண்டு சூழ்நிலைகளிலும் சமநிலையில் இருக்கவும், பெரும் சரிவால் உருவான சோகமான சூழ்நிலையிலும் நம்பிக்கையுடன் செயல் படவும், தங்களிடமும் தங்களைச் சார்ந்தவர்களிடமும் இருக்கும் கடைசித் துளி ஆற்றலைக்கூட சிறப்பான முறையில் ஆக்கபூர்வமாக உபயோகித்துக்கொள்ளவும் அவர்களுக்கு உதவுகிறது. இதுதான் தலைவர்களின் தாத்பரியமே. இதைத் தலைவர்கள் பயிற்சியின் மூலம் பெற்றுள்ளனர். இதை நீங்களும் நிச்சயமாகத் திட்டமிட்டு பயிற்சிகளின் மூலம் பெறவும் வளர்த்தெடுக்கவும் முடியும்’’ என்கிறார், இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள்.

தலைவனாகும் தகுதியை நீங்கள் வளர்த்துக்கொள்ளத் தயாராவது எப்படி?

தலைவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள்?

தீயணைப்பு வீரர்களோ, விமானப் பணிப்பெண்களோ, மருத்துவர்களோ, செவிலியர்களோ என எந்த விதமான குழுக் களானாலும் சரி, அதன் தலைவர்கள் எப்படி அந்தக் குழுவை வளர்த்தெடுத்து சிறப்பாகச் செயல்பட வைக்கின்றனர் என்பதை இந்தப் புத்தகத்தில் விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர். இந்தப் புத்தகம் எட்டு அத்தியாயங்களாக பிரித்து எழுதப்பட்டுள்ளது. ஒவ்வோர் அத்தியாயத்திலும் குறிப்பிட்ட தலைவர்களின் குணாதிசயங்கள் மற்றும் சிறப்பியல்புகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன.

முதலாவது அத்தியாயத்தில் நிக் பீட்டர்ஸ் எனும் அமெரிக்க தீயணைப்பு அதிகாரியின் செயல்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. ‘‘தலைவன் என்றாலே முடிவுகளை எடுக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். அதாவது, முடிவுகளை எடுத்து (Executive Decisions) அதைக் கீழே உள்ள பணியாளர்களைச் செயல்படுத்தச் சொல்வதுதான் தலைமைப்பதவி என நினைக்கிறோம். ஆனால், முடிவுகளை எடுக்கும்போது நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் என்னென்ன என்று நாம் சிந்திக்க வேண்டும். பீட்டர்ஸ் செய்யும் தீயணைப்பு வேலையில், காற்றடிக்கும் திசை, வானிலை, தீயணைப்பு உபகரணங்களில் ஏற்படும் சேதங்கள் மற்றும் கோளாறுகள் போன்ற பல விஷயங்கள் என் கட்டுப்பாட்டில் இல்லாதவை. தீயிலிருந்து காப்பாற்றப்பட வேண்டியது தனிநபர் சொத்துகள், வீடுகள், காடுகள் மற்றும் உயிர்கள் எனப் பல்வேறு விதங்களாக உள்ளன. இதுவும் கிட்டத்தட்ட அவர் கட்டுப்பாட்டில் இல்லாதவைதான். ஒரு தலைவனுக்கு இதுபோன்ற கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களே ஸ்ட்ரெஸை உருவாக்குவதாக இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட கட்டுப்படாத விஷயங்களை ஏதாவது செய்து கட்டுப்படுத்த முடியாது இல்லையா? அப்படி எனில், அதை நினைத்து, ஸ்ட்ரெஸ் ஆவதற்கு பதில் அதை அப்படியே விட்டுவிடுவதுதானே ஏனைய விஷயங்களைச் சிறப்பாக செய்வதற்கு வழிவகை செய்வதாய் இருக்கும். இதை விட்டுவிட்டு இதனால் ஸ்ட்ரெஸை உருவாக்கிக்கொண்டால் ஏனைய திட்டமிடுதல்களையும் அது பாதித்துவிடும்.

ஒரு தலைவனாக ஒரு ஸ்ட்ராங்கான மற்றும் தடைகளைக் கண்டு சோர்ந்துவிடாமல் அவற்றை எதிர்த்துப் போராடும் குணத்தைக் கொண்ட குழுவை உருவாக்குவதுதான் நம் தலையாய கடமை. மேலும், ஒவ்வொரு தீயணைப்பு நடவடிக்கைக்குப் பின்னாலும் என்ன திட்ட மிடப்பட்டது, என்ன நடந்தது, ஏன் அது அப்படி நடந்தது, அடுத்த முறை நாம் செய்ய வேண்டியது என்ன என்ற மறுபரிசீலனையையும் ஒரு தலைவனாய் பீட்டர்ஸ் செய்துகொண்டே இருந்தார். இவை அனைத்தும் எல்லாத் துறையிலும் இருக்கும் தலைவர்களுக்கும் அவர் களைப் பின்பற்றுபவர் களுக்கும் பொருத்தமானதாக இருக்கும்’’ என்கிறார்கள் ஆசிரியர்கள்.

உங்கள் செயலே உங்கள் ஸ்டேட்மென்ட்...

அடுத்தபடியாக, ஸ்டீவ் கெர் எனும் பேஸ்பால் பயிற்சியாளர் ஒரு தலைவராக உருவெடுத்த விதத்தைத் தெளிவாக விளக்குகிறது. தந்தையின் இழப்பு, ஒரு பேஸ்பால் வீரனாகக்கூட (அப்புறம்தானே கோச்) யாராலும் அங்கீகரிக்கப் படாத நிலை, உடல் ரீதியான பிரச்னைகள் எனப் பல்வேறு தடைகளையும் தாண்டி இவர் ஒரு சிறந்த பயிற்சியாள ராகவும் தலைவராகவும் உருவெடுத்துள்ளார். ஒரு தலைவராக நீங்கள் எதிர் கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்துமே நீங்கள் யார் என்பது குறித்த ஒரு ஸ்டேட் மென்டாக உருவெடுக் கின்றன என்று சொல்லும் அவர், அவருடைய வாழும் சூழ்நிலையில் எதிர்கொண்ட நிகழ்வுகள் சார்ந்த அனுபவத் தைக் கொண்டு நமக்கு கூறுகிறார்.

எதிர்கொள்ள வேண்டிய கேள்விகள்...

ஒரு தலைவராக அவர் உருவெடுத்த விதத்தை விரிவாகக் கூறியுள்ள ஆசிரியர்கள் தலைவராக நினைக்கும் நம் முன்னால் பின்வரும் கேள்விகளை வைக்கின்றனர். அந்தக் கேள்விகள் பலப்பல. அவற்றில் சில கேள்விகள் இதோ...

உங்களுக்கு நெருக்கமான வர்கள் இறந்துபோனபோது நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியமான வாழ்க்கைப் பாடம் என்ன, உங்களை மற்றவர்கள் குறைவாக எடை போடும்போது எப்படி நீங்கள் எதிர்வினையாற்றினீர்கள், உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் புரொஃபஷனல் வாழ்க்கை யில் நீங்கள் எதிர்கொண்ட மிகப் பெரிய தடை எது, நீங்கள் இதுவரை சந்தித்ததில் எந்தவொரு தலைவர் உங்கள் மனதில் நீங்கா இடம் பிடித் துள்ளார், உங்கள் குழு உறுப்பினர்களுக்கு நீங்கள் அவர்களுடைய நல்வாழ்வை விரும்புகிறீர்கள், உங்கள் குழுவில் இருக்கும் வளர்ந்து வரும் தலைவர் யார், அவரிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொண்ட விஷயம் என்ன, இன்றைய சூழ்நிலையில் உங்கள் முன்னே இருக்கும் முக்கியமான தடைகள் என்னென்ன, அந்தத் தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்ற எப்படி முயல்வீர்கள், நிச்சயமற்ற சூழல் ஒன்றை எதிர்கொள்ள எந்த விதமான மாற்றங்களை நீங்கள் உங்களிடத்தில் செய்துகொள்வீர்கள், நீங்கள் பெற்றிருக்கும் மூன்று முக்கியமான குணாதிசயங்கள் என்னென்ன என பல கேள்விகள் தருகிற விடைகள் தலைமைப் பதவியை நோக்கி நாம் செல்ல மிக மிக உதவும்’’ என்கிறார்கள் ஆசிரியர்கள். அது எப்படி சாத்தியம் என்பதையும் அடுத்த ஓர் அத்தியாயத்தில் விளக்கியுள்ளனர்.

மென்டார்ஷிப்பின் அவசியம்...

ஒருவர் தலைவராக உருவெடுக்கத் தேவையான மென்டார்ஷிப்பின் அவசியத்தையும் தெளிவுபடுத்து கிறது இந்தப் புத்தகம். ‘‘பெரும்பாலான தலைவர்கள் தங்களுடைய ரோல் மாடல்களே தாங்கள் ஒரு தலைவராகத் திகழக் காரணம் என்கின்றனர். ஒரு சிலரே அதிர்ஷ்டத்தின் காரணமாகவோ, தாங்கள் எடுத்த அதிரடி முடிவுகளின் காரணமாகவோ தலைமைப் பதவிக்கு வந்தோம் என்று கூறுவதை நாம் காண்கிறோம். எனவே, நல்லதொரு மென்டார் ஒருவரைத் தலைவராக நினைப்பவர்கள் கொண்டிருக்க வேண்டும்’’ என்கிறார்கள் ஆசிரியர்கள்.

லீடர்ஷிப் குறித்த பல்வேறு புத்தகங்கள் இருக்கிறபோதிலும், பலதரப்பட்ட துறை களில் செயல்பட்ட தலைவர் கள் பலருடைய அனுபவத்தைத் தொகுத்து அதிலிருந்து தலைவராக நினைப் பவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங் களைப் பட்டியலிட்டிருக்கும் இந்தப் புத்த கத்தை அனைவரும் ஒருமுறை படித்துப் பயன்பெறலாம்.