நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

நம் மகிழ்ச்சியைக் குறைக்கும் செல்போன்கள்... ஜாலியாக இருப்பது எப்படி?

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட்

மனிதர்கள் எல்லோருமே எல்லாவற்றையும் மிகவும் சீரியஸாக அணுகுகிற காலம் இது. தன்னை மறந்துகூட அவர்கள் சிரிப்பது அபூர்வமாக இருக்கிறது. இந்த நிலையில், ‘‘மனிதனின் அத்தியாவசியத் தேவைகளான நாம் சாப்பிடும் உணவு, தங்கும் இருப்பிடம், வாழும் வாழ்க்கை என்பதுடன், ஃபன் என்ற ஒன்றையும் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்று சொல்லி ஆரம்பிக்கிறது இந்த வாரம் பார்க்கவிருக்கும் புத்தகம்.

புத்தகத்தின் பெயர்: The Power of Funஆசிரியர்: Catherine Priceபதிப்பகம்:‎ Bantam Press
புத்தகத்தின் பெயர்: The Power of Funஆசிரியர்: Catherine Priceபதிப்பகம்:‎ Bantam Press

நீங்கள் வயிறு குலுங்க சிரித்தது எப்போது..?

நீங்கள் எப்போது ஜாலியாக (குலுங்க குலுங்க சிரித்து, வேடிக்கை விளையாட்டுடன்) இருந்தீர் கள் / நேரத்தை செலவிட்டீர்கள், சமீபத்தில் எப்போது நீங்கள் கலகலவென சிரித்து ஜாலியாக இருந்த சமயம் எது, அவர் என்ன நினைப்பாரே, இவர் என்ன நினைப்பாரே என்றெல்லாம் நினைக்காமல், இயல்பாக சிரித்து மகிழ்ச்சியாக இருந்தது எப்போது, எதிர்காலம் பற்றியோ, கடந்த காலம் பற்றியோ எந்தக் கவலையும் இல்லாமல், நிகழ்காலத்தை நன்கு ரசித்து சந்தோஷமாக இருந்த தருணம் எது, கடைசியாக எந்தத் தருணத்தில் நீங்கள் குடும்பம் அலுவலகம் குறிக்கோள் என்கிற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல் சுதந்திரமாக இருப்பதைப்போல் உணர்ந்திருந்தீர்கள்’’ எனப் பல கேள்விகளை இந்தப் புத்தகத்தின் தொடக்கத்திலேயே எழுப்புகிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியை.

மேற்சொன்ன கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன? உங்கள் நண்பருடன் சிரித்து மகிழ்ந்திருந்தபோது அப்படி இருந்திருக்கலாம். நீங்கள் ஏற்கெனவே அறிந்திராத புதிய இடங்களுக்குச் சென்றிருந்த போது அப்படி இருந்திருக்கலாம். உங்களுக்குள் இருக்கிற கோபக்கார அந்நியன் திடீரென வெளியாக, மற்றவர்கள் உங்களை சமாதானப் படுத்த, அந்த சந்தோஷத்தில் நீங்கள் கொஞ்சம் திளைத்திருக்கலாம். ஏதாவது ஒரு விஷயத்தைப் புதிதாக செய்ய முயலும்போது இருந்திருக்கலாம்.

‘‘இதில் எந்தவிதமான நடவடிக்கையாக இருந்தாலும் அதில் இருக்கும் ஒரே ஒரு விஷயம், நீங்கள் வெளிப்படையாகவோ, மனதுக்குள்ளேயோ சிரித்ததுதான் இல்லையா... அப்போது உங்களைக் கட்டிப்போட்டிருக்கும் பொறுப்புகளில் இருந்து நீங்கள் விடுதலை பெற்றதைப் போன்று உணர்ந்திருப்பீர்கள். அந்தத் தருணம் முடிந்த பின்னால் உங்கள் மனதில் எனர்ஜி கூடியிருக்கும். கொஞ்சம் தெளிவானதைப்போலவும் புத்துணர்ச்சி அடைந்ததைப் போலவும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

மகிழ்ச்சியைக் கெடுக்கும் செல்போன்...

இப்போது இன்னும் கடினமானதொரு கேள்வி? இந்த மாதிரி நான் சமீபத்தில் இருந்ததே இல்லை என்கிற நபரா நீங்கள்? அப்படி எனில், நானும் உங்களுடன் இருக்கிறேன் என்று சொல்லும் ஆசிரியை, அதற்கான காரணமாகக் கூறுவது ஸ்மார்ட்போனைத்தான். ‘‘என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் குழந்தை பெற்று வளர்க்கும் போது பச்சிளம் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு ஸ்மார்ட் போனில் எதையோ தேடிக்கொண்டிருந்ததாகவும், திடீரென்று எதேச்சையாகக் குழந்தையைப் பார்க்க அது அவரை நோக்கி சீரியஸான ஒரு பார்வையைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அந்த நிமிடம்தான் அவருடைய வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது. இதன் மூலமே ‘ஹெள டு ப்ரேக் அப் வித் யுவர் போன்’ என்ற புத்தகத்துக்கான ஆய்வை நான் செய்ய ஆரம்பித்தேன். இந்த ஆராய்ச்சியின்மூலம் நான் ஸ்மார்ட் போனில் இருந்து என்னை விடுவித்துக்கொண்டேன்.

நானும் என்னுடைய கணவரும் ஸ்மார்ட்போனிடம் இருந்து திட்டமிட்ட 24 மணிநேர பிரேக்கை (வாராந்தரமாக வெள்ளி இரவு முதல் சனி இரவு வரையில்) எடுத்துக்கொள்வோம். அதன் மூலம் எங்களுக்கு அதிகப்படியான நேரம் கிடைத்ததை உணர்ந்தோம். பரபரப்பான வாழ்க்கை சற்று மெதுவாகி சுவாரஸ்யமாக உருவெடுத்தது. ஸ்மார்ட்போனும் ஆப்களும் எங்களைக் கட்டிப்போடுவதை நாங்கள் திட்டமிட்டு தவிர்த்த படியால், வாழ்க்கையில் இருக்கிற ஏனைய விஷயங்களை எங்களால் உருப்படியாக அனுபவிக்க முடிந்தது. நீங்களும் இந்த அனுபவத்தைப் பெற வேண்டும் எனில், போனில் இருந்து உங்களை விடுவித்துக்கொண்டால் மட்டுமே சாத்தியம்’’ என்கிறார் ஆசிரியை.

நம் மகிழ்ச்சியைக் குறைக்கும் செல்போன்கள்... ஜாலியாக இருப்பது எப்படி?

வாழ்க்கையை மாற்றி அமைப்பது எப்படி?

‘‘இரண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகப் பேராசிரியர்கள் எழுதிய ‘டிசைனிங் யுவர் லைஃப்’ என்ற புத்தகத்தைப் படித் தேன். அதில் நம்முடைய வாழ்வை டிசைன் (இன்ஜினீயரிங்) கொள்கைகள் ரீதியாக வடிவமைத்துக்கொள்வது எப்படி என்று சொல்லப்பட்டிருந்தது. அதில் ஒரு பயிற்சிக்கான கேள்வித்தாளும் இருந்தது. உங்கள் வசம் அன்பு, வேலை, ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு (கேளிக்கை/நகைச்சுவை) என்ற நான்கு டேங்குகள் இருக்கிறது. இதை சமஅளவில் நிரப்புவதுதான் உங்களுடைய வாழ்நாள் முழுவதுமான கடமை.

இதை எப்படி சரிவர செய்வீர்கள்? எப்படி இந்த நான்கு டேங்குகளையும் சரியான அளவில் நிரப்புகிறீர்கள் என்பதுதான் மேட்டரே. எந்த டேங்க்கில் குறைவான அளவு இருக்கிறதோ, அந்த டேங்க்கின் மீது நீங்கள் கவனம் வைக்க வேண்டும் என்றது அந்தப் புத்தகம். இதில் விளையாட்டு என்று குறிப்பிடப்படுவது, எந்தவித லாப நோக்கமும் இல்லாமல் சும்மா ஜாலியாகவும் ஜாலிக்காவும் செய்யப்படும் விஷயங்களாகும். இந்த டேங்குகளை எப்படி அளவீடு செய்வது என்பதை பயிற்சிக்கான கேள்வித்தாள் விளக்கியது. அந்தக் கேள்வித்தாளை வைத்துக்கொண்டு என்னுடைய வாழ்வில் இந்த நான்கு டேங்குகளும் எந்த அளவுக்கு நிரம்பியுள்ளது என்று தெரிந்துகொள்ள உடனடியாக பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொண்டு அந்தக் கேள்வி களுக்கான விடையை எழுதினேன். அன்பு, வேலை, ஆரோக்கியம் என்ற மூன்று டேங்குகளும் நன்றாகவே நிரம்பியிருந்தன.

ஆனால், மகிழ்ச்சி தரும் விளையாட்டு (கேளிக்கை/நகைச்சுவை) என்பது கிட்டத் தட்ட காலியாகத்தான் இருந்தது. இந்த டேங்க்தான் மற்ற டேங்குகளைவிட முக்கியமான ஒன்றாக இருக்கிறது. வருத்தப்படாமல் மற்ற டேங்குகளை நிரப்ப விளையாட்டு (ஃபன் – கேளிக்கை/நகைச்சுவை) என்ற டேங்கே உதவியாக உள்ளது. இந்த டேங்கைத் தேவையான அளவு நிரப்பா விட்டால் மற்ற டேங்குகளை நிரப்புவதற்கு நாம் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வருத்தத் துடன் சுமக்கிற பாரமாகத் தான் இருக்கும்’’ என்கிறார் ஆசிரியை.

உயிர்ப்புடன் வைத்திருக்கும் உண்மையான ஃபன்...

“நிஜமான ஃபன் (ஜாலி யான ரீதியில் நோக்கம் இல்லாமல் செய்யப்படும் நடவடிக்கைகள்) நம்மைப் பற்றி எந்த முன்முடிவுகளும் இல்லாமல் செய்கிற விஷய மாகும். முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் செய்யும் செயலில் முழுமையான கவனத்துடன் நம்மை மறந்து செய்கிற விஷயங்களே ஃபன் என்றழைக்கப்படும் விஷயங்களாகும். இது ஒரு நகைச்சுவை. விளையாட்டுத் தனமான கிளர்ச்சிக்குணம். மகிழ்ச்சியுடன் மற்றவர் களுடன் செயல்பட ஒரு வாய்ப்பு. விட்டுக் கொடுத்தலால் கிடைக்கும் பேரின்பம் இதில் கிடைக்கும். வேடிக்கை விளையாட்டுகளில் நாம் மற்றவர்களுடன் ஈடுபடும் போது நாம் தனியாக இருப்ப தாக உணர்வதில்லை. ஏக்கமும் மன அழுத்தமும் நம்மிடையே அந்தச் சூழலில் இருப்பதில்லை. இதில் ஈடுபடும் வேளையில் நம்மீது நாம் கொண்டிருக்கும் சந்தேக மும், நம் வாழ்வு குறித்து நம் மனதில் இருக்கும் இனம் புரியாத கிலேசமும் முற்றிலு மாக மறந்துபோகும். இதனாலேயே நாம் ஈடுபட்ட மற்றும் அனுபவித்த உண்மை யான ஃபன் என்பது நம் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துவிடுகிறது. இதனா லேயே உண்மையான ஃபன் என்பது நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது” என்று சொல்கிறார் ஆசிரியை.

உண்மையான ஃபன்னைக் கண்டறிவது எப்படி?

இந்த உண்மையான ஃபன்னைக் கண்டறிவது எப்படி என்று கேட்கும் ஆசிரியை அதற்கான விளக்கத்தையும் சொல்லி யுள்ளார். ஆசிரியையின் வாழ்வில் அவர் சென்ற கிட்டார் கற்றுத்தரும் பயிற்சிப் பள்ளி உண்மையான ஃபன்னுக்கு வழிவகுத்து தந்த விஷயங்களில் ஒன்று என்ற உதாரணத்தைத் தந்துள்ள அவர், ‘‘எனக்கு கிட்டார் வகுப்பு உண்மையான ஃபன்னைத் தரும் விஷயங் களில் ஒன்றாக இருந்தது எனில், உங்கள் ஒவ்வொருவருக்கும் நிஜமான ஃபன்னைத் தருவதாக என்ன மாதிரியான விஷயங்கள் இருக்கும், இவற்றைக் கண்டுபிடிக்க ஏதும் அளவு கோல்கள் உள்ளனவா” என்று கேட்டு, அதற்கான விடையையும் தந்துள்ளார்.

‘‘சரியான புரிந்துகொள்ளல்கள் கொண்டிருக்கும் நண்பர்களுடன் / உறவினர்களுடன் பொழுதைப் போக்கும்போது அது உருவாகிறதா எனில், அதற்கான விடை இல்லை என்பதே ஆகும். பல முறை புதிதாக அறிமுகமாகும் நபர்களுடனேயே நிஜமான ஃபன் கொண்ட தருணங்கள் நமக்குக் கிடைக்கும். நல்லதொரு ஃபன் கிடைக்கும் இடம் (அலுவலகம், உணவகம், விளையாட்டுத்திடல் என்பது போன்ற) என்பது முக்கியமில்லை. நடக்கும் சூழலே நல்லதொரு ஃபன்னை உருவாக்க காரணியாக இருக்கிறது. சரியான மனிதர்கள் மற்றும் சூழல்களே தலைசிறந்த ஃபன்னை வழங்குவதற்கான காரணிகளாக இருக்கின்றன’’ என்கிறார் ஆசிரியை.

நம்மில் பலரும், ‘‘ஃபன் முக்கியம் என்று செயல்பட ஆரம்பித்தால், பிழைப்பை யார் பார்ப்பது’’ என்று சொல்லித் திரிகிறோம். ஒரு சிலரோ, பொய்யான ஃபன்னில் (கேளிக்கை சந்தோஷங்கள்) ஈடுபாட்டுடன் இருப்பதைப்போல் காட்டிக்கொண்டு திரிகின்றனர். இது பிஞ்ச்-வாட்சிங் (binge watching) போன்ற நேரத்துக்குக் கேடான ஒன்றாகும். ஒவ்வொருவரும் அவருக்குப் பிடித்த ஃபன்னைக் கண்டறிந்து அதில் ஈடுபட்டால் சிறப்பான பலனை பெற்று வாழ்வில் வெற்றிபெறலாம் என்று சொல்லி முடிகிறது இந்தப் புத்தகம்.

ஃபன் என்பது மனித வாழ்க்கையை விருத்தி அடையச் செய்யும் ஒன்று என்பதை அடித் துச் சொல்லும் இந்தப் புத்தகம், எப்படி நாம் ஒவ்வொருவரும் நம் மனதை இலகுவாக்கி சக்தியூட்டும் ஃபன்னைக் கண்டறிந்து அதில் நம் மனதை ஈடுபடச் செய் வது என்பதை தெளி வாகவும் எளிய நடை யிலும் விளக்கும் இந்தப் புத்தகத்தை நாம் அனைவரும் படிக்கலாம்.