Published:Updated:

ஏற்றம் தரும் மாற்றங்கள்... செய்ய வேண்டிய எளிய வழிமுறைகள்..!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

ஏற்றம் தரும் மாற்றங்கள்... செய்ய வேண்டிய எளிய வழிமுறைகள்..!

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

எல்லா விஷயங்களிலுமே நமக்கு நல்லதே நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், நாம் நினைப்பதற்கு மாறாகத்தான் பல விஷயங்கள் நடக்கின்றன. இதற்கான காரணம் என்ன என்கிற கேள்வியுடன் ஆரம் பிக்கிறது இந்தப் புத்தகம். இதன் ஆசிரியர் புகழ் பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியர். அங்கு பிஹேவியரல் டிசைன் லேப்பை நிறுவியவரும் இவரே.

புத்தகத்தின் பெயர்: Tiny Habits
 ஆசிரியர்: BJ Fogge
பதிப்பகம்:‎ Penguin Random House UK
புத்தகத்தின் பெயர்: Tiny Habits ஆசிரியர்: BJ Fogge பதிப்பகம்:‎ Penguin Random House UK

நம் மீதே பழிபோட்டுக்கொள்வது சரியா..?

நாம் செய்ய விரும்புவது (நினைப்பது) ஒன்றாகவும், நாம் செய்வது (நாம் நடந்து கொள்வது) ஒன்றாகவும் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறபோதிலும் இதற்கெல் லாம் நாம்தான் காரணம் என்று (சோம்பேறித் தனம்/மனோதிடம் என) நம் மீதே பழிபோட்டுக் கொள்கிறோம். உதாரணமாக, நமது உடல் இளைக்க வேண்டும் என நினைக்கிறோம். அதற்குத் தேவையான உடற்பயிற்சியை நீதானே செய்ய வேண்டும். அதைச் செய்யாமல் எப்படி எடை குறையும் என்று நம் மீது நாமே பழியைப் போட்டு குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிக்கொள்கிறோம். உண்மையில், இது போன்ற விஷயங்களுக்கு நாம் காரணமே இல்லை. அது ஒரு தவறான கற்பிதம்தான். இதை உதாரணம் மூலம் பார்ப்போம்.

தவறு யார் மீது..?

உங்கள் வீட்டில் பயன்படுத்துவதற்காக டிராயர்கள் உள்ள ஒரு டேபிளை வாங்குகிறீர்கள். அந்த டிராயரைப் பொறுத்துவதற்கான நடைமுறையைச் சொல்லும் கையேடு ஒன்றும் தரப்பட்டுள்ளது. அதன்படி, நீங்கள் பொருத்த முயலும்போது டிராயர் அந்த டேபிளில் பொருந்த மாட்டேன் என்கிறது. ‘என்னடா இது, நம்மால் டேபிளில் ஒரு டிராயரைப் பொறுத்த முடியவில்லையே...’ என்று வருத்தப்படுவீர்களா அல்லது சரியான நடைமுறைக் கையேடு தரப்படவில்லை என்று கோபப்படுவீர்களா? நிச்சயமாக, அந்த டேபிளை உற்பத்தி செய்து விற்பனை செய்த நிறுவனத்தின் மீதுதானே கோபப்படுவீர்கள்? அதே சமயம், டிராயரை மாற்ற முயற்சி செய்யும்போது, அது நடக்காமல் போனால், உற்பத்தியாளர் மீது பழிபோடாமல் நம் மீது சுலபமாகப் பழியைப் போட்டுக் கொள்கிறோம்.

நம்மீது நாமே பழிபோட்டுக்கொள்வது சுலபம் என்பதால், நம்மை நாமே சுலபத்தில் பழிச்சொல்லுக்கு ஆளாக்கிக்கொள்கிறோம். ‘இன்னும் கொஞ்சம் அதிகமாக முயற்சி செய்திருக்க வேண்டும்; நம்முடைய ஒட்டுமொத்த கவனமும் சிரத்தையும் இருந்தால் இந்த மாற்றத்தை நம்மால் கொண்டு வந்திருக்க முடியும்’ என்றெல்லாம் நாம் கூறிக்கொள்கிறோம்.

‘‘இது முழுக்க முழுக்க தவறான ஒன்று. பிரச்னை நாம் இல்லை. நம்முடைய அணுகுமுறைதான் பிரச்னை. அதாவது, இது ஒரு டிசைன் பிரச்னையே தவிர, தனிநபர் பிரச்னை அல்ல. முன்னேற்றத்துக்கான மாற்றங்களைக் கொண்டு வருவதும், நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்டுவருவதும் நல்ல அணுகுமுறை மூலம் செய்யப்பட்டால் மிகமிக சுலபமான ஒன்றே’’ என்று கூறும் ஆசிரியர், அதற்கான விளக்கங்களையும் ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்ட முடிவுகளையும் இந்தப் புத்தகத்தில் விளக்கமாகக் கூறியுள்ளார்.

இந்த அணுகுமுறையானது மனித சைக்காலஜி எப்படி வேலை செய்கிறது என்பதையும், மாற்றத்தை சுலபமாக கொண்டுவரும் அடிப்படைக் குணத்தைக் கொண்டதாகவும், தவறான யூகங்கள் மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்காததாகவும் இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.

ஏற்றம் தரும் மாற்றங்கள்... செய்ய வேண்டிய எளிய வழிமுறைகள்..!

மாற்றம் எப்படி வரும்..?

மாற்றம் என்று நினைத்தவுடனேயே நம்மால் சுலபத்தில் அடைய முடியாத இலக்குகளை நாம் நிர்ணயித்துக்கொள்வதும் மாற்றத்துக்கான முயற்சியில் நாம் முழுமையாகத் தோல்வி அடைவதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. மாற்றம் என்று நினைக்கும்போதே பழக்கவழக்கங்கள் என்பது மாற்றத்தைக் கொண்டுவருவதில் மிக மிக முக்கியமான அங்கம் வகிக்கும் என்று நமக்கு நன்றாகத் தெரியும். கெட்ட பழக்க வழக்கங்களை அறவே ஒழிக்க முடியாவிட்டாலும் நமக்கு இருக்கும் பழக்கவழக்கங்களில் கெட்டவையின் எண்ணிக்கை குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இது நமக்கு முழுமையாகப் புரிந்திருக்கிறபோதிலும், இதன் அனுகூலங்களை நாம் உணர்ந்திருக்கிறபோதிலும், நம்மால் பழக்கவழக்கங்களில் மாறுதல்களைக் கொண்டு வர முடிவதே யில்லை. காரணம், தவறான மனநிலையே என்பதை என்னுடைய ஆராய்ச்சிகள் மூலம் நான் கண்டுபிடித்துள்ளேன் என்கிறார் ஆசிரியர்.

முன்னேற உதவும் மூன்று விஷயங்கள்...

முன்னேற்றத்துக்கு உதவும் பழக்கவழக்கங்களை வடிவமைக் கவும், நம்முடைய நடத்தையை மாற்றவும் பின்வரும் மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

* உங்களைக் குறித்து நீங்களே எடை போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

* உங்களுடைய அபிலாஷைகளை சிறுசிறு நடத்தைகளாக கூறு போட வேண்டும்.

* நம்முடைய தவறுகளையும் அதிலிருந்து நாம் கற்றவற்றையும் உபயோகித்து முன்னேற்றப்பாதையில் பயணிக்க வேண்டும்.

மேலே சொன்னவை அனைத்தும் உள்ளுணர்வினால் நாம் பெற முடிந்த விஷயங்கள் இல்லை. இவை மூன்றையும் நடைமுறைப்படுத்துவது எல்லோருக்கும் சுலபமான ஒன்றாக இருக்காது. நம்மை நாமே குறை சொல்லிக்கொள்வதுதான் சுலபமாக நாம் அனைவரும் வைத்திருக்கிற பழக்கவழக்கமாகும்.

பனிமலையில் சறுக்கி விழுவது போல...

நம்மை நாமே குறையாக நினைத்துக்கொண்டு செயல் படும் வேளையில், நம்மைச் சுற்றியிருப்பவர்களில் யாரா வது நீங்கள்தான் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கான முயற்சிகளை சரியாக எடுப்ப தில்லை என்றோ, ஊக்குவிக்கிறேன் பேர்வழி என்று உங்களை முன்னேற்ற உங்களைத் தவிர யார் நடவடிக்கை எடுக்க முடியும் என்றோ நம்மிடம் யாராவது கேட்டுவிட்டால் போதும், பனிமலையில் ஏறும்போது ஒரு சிறுகீரல் விழுந்த பனியில் கால்வைத்து விட்டால் அதில் இருந்து சறுக்கி மலையின் அடிவாரம் வரை வந்து விழுந்துவிடுவோமோ அதே போல், நாமும் முன்னேற்றப் பாதையில் மேலே ஏறிச் செல்ல முடியாமல் சறுக்கி பாதாளத்தில் விழுந்துவிடு வோம்’’ என்கிறார் ஆசிரியர்.

‘டைனி ஹேபிட்ஸ்’ எனும் சின்னச் சின்ன பழக்கங்கள் என்ற பாதையை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது பனியில் தோன்றும் இது போன்ற கீரல்கள் எல்லாம் வேகமாகப் பெய்யும் பனி மழையால் (சின்னச் சின்ன பழக்கவழக்கங்கள் எனும் பனிமழை) மூடப்பட்டுவிடும். நீங்கள் போகும் பாதையே நிரந்தரமான முன்னேற்றத் துக்கான பாதையாகிவிடும் என்கிறார் ஆசிரியர்.

இந்தப் புத்தகம் கூறுகிற சிஸ்டமானது 40,000-க்கும் மேற்பட்ட நபர்களிடம் சோதித்துப் பார்க்கப்பட்ட ஒன்று என்றும் கூறுகிறார்.

கூறு போட்டு ஆராயுங்கள்...

எந்த நடத்தையை (behaviour) மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர் களோ, அந்த நடத்தையைக் கூறுபோட்டு சிறியதாக் குங்கள். பின்னர், கூறு போடப்பட்டவற்றுள் எவை உங்களுடைய தற்போதைய வாழ்க்கையில் இயல்பாகவும் சுலபமாகவும் ஒன்றிப்போகிற குணாதிசயம் கொண்டது என்று பாருங்கள். அது எந்த இடத்தில் உங்களுடைய வாழ்வில் ஒன்றிப்போகிறது என்பதையும் பார்த்து அந்த குணாதிசயத்தை வளர்த் தெடுப்பதற்கான முயற்சி களையும் செய்யுங்கள். இதுதான் ‘டைனி ஹேபிட்ஸ்’ என்னும் நடைமுறை என்று கூறும் ஆசிரியர், இவை குறித்து விளக்கமாகப் பல்வேறு உதாரணங்கள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகள் வாயிலாக இந்தப் புத்தகத்தில் விளக்கியுள்ளார்.

‘‘நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும் மாற்றத்தை நீங்கள் கொண்டு வர விரும்பினால், சிறிய அளவில் ஆரம்பியுங்கள். அதுவே உங்களை வெற்றிப்பாதையில் பயணிக்க வைக்கும்.

நேரமின்மை என்பது நம் அனைவருக்குமே இருப்பதால், சிறிய அளவிலான மாற்றத்துக்கான முயற்சிகளை இருக்கும் நேரக் கெடுபிடிக்குள் நம்மால் செய்யமுடியும். பெரிய மாற்றத்தைச் செய்ய வேண்டும் எனில், இன்றைக்கு இருக்கும் சூழலில் முடியாது. ‘இன்னும் கொஞ்ச நாளாகட்டும்; இந்த புராஜெக்ட் முடியட்டும்’ என்பது போன்ற சாக்குபோக்குகளை நாம் சுலபத்தில் கண்டுபிடித்துச் சொல்லிவிடுவோம். அதே சமயம், சிறிய மாற்றத்துக்கான முயற்சிகளை இன்றே நம்மால் செய்ய முடியும்.

சின்னச் சின்ன முயற்சிகளை செய்யும்போது நாம் தோல்வி அடைந்தாலுமே அதைக் கண்டு துவளாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்வோம். அதனால் சின்னச் சின்ன முயற்சிகள் பாதுகாப்பானவையும் ஆகும். சின்னச் சின்ன முயற்சிகள் பெரியதாக வளர்ச்சி அடையும். எல்லா கோடுகளும் ஒரு சிறு புள்ளியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டவைதான் என்பதைப்போல. மேலும், சிறுமுயற்சிகள் செயல் நோக்கத்தையோ (மோட்டிவேஷனையோ) அல்லது மன உறுதியையோ நம்பி செய்யப்படும் விஷயம் இல்லை. இது ஒரு மிக முக்கியமான விஷயமாகும் என்கிறார் ஆசிரியர்.

மனித நடத்தையை நிர்ணயிக்கும் விஷயங்களை (components) நீங்கள் புரிந்துகொண்டு அவற்றை எப்படி அனுசரித்து நடைமுறைப்படுத்துவது என்பதைப் புரிந்துகொண்டால், உங்களால் உங்கள் நடத்தையை மாற்றியமைக்கும்போது வரும் சவால்களை சுலப மாகக் கையாள முடியும் என்கிறார் ஆசிரியர்.

மாற்றத்தைக் கொண்டு வர நாம் அனவருமே விரும்பு கிறோம். அதைக் கொண்டுவருவது எப்படி என்பது குறித் தும் அதற்கான எளிய நடைமுறைகள் குறித்தும் விளக்கமாகச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படித்து மாற்றத்தை அவர்களுடைய வாழ்க்கையில் கொண்டு வந்து அதன்மூலம் கிடைக்கும் பயன்களைப் பெறலாம்.