Published:Updated:

கடினமான வேலையைச் சுலபமாக்கும் ஸ்மார்ட் வொர்க் சூட்சுமம்!

ஸ்மார்ட் வொர்க்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்மார்ட் வொர்க்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

கடினமான வேலையைச் சுலபமாக்கும் ஸ்மார்ட் வொர்க் சூட்சுமம்!

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
ஸ்மார்ட் வொர்க்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்மார்ட் வொர்க்

இன்றைய இளைஞர்கள் வேலை பார்க்க சங்கடப்படுபவர்கள், சோம்பேறிகள், நிறுவனம் வழங்கும் அனைத்து செளகரியங் களும் கட்டாயம் தர வேண்டும் என உரிமை கொண்டாடும் மனநிலையில் இருப்பவர்கள் என்றுதான் நம்மில் பலரும் நினைக்கிறோம். அதே சமயம், இன்றைய இளைஞர்களே ‘பர்ன்அவுட்’ (burnout) என்னும் வேலைப்பளுவால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அதிகம் பாதிப்படைந்த நபர்களாகவும் இருக்கிறார்கள்.

புத்தகத்தின் பெயர்: Working Hard, Hardly Working
 ஆசிரியர்: Grace Beverley
பதிப்பகம்:‎ Penguin
புத்தகத்தின் பெயர்: Working Hard, Hardly Working ஆசிரியர்: Grace Beverley பதிப்பகம்:‎ Penguin

கஷ்டப்பட்டு வேலை பார்த்தல், கடினமான வேலையை சுலபமாகப் பார்த்தல் என்கிற இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை இன்றைய இளைஞர்கள் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், இதன்மூலம் தங்களுக்குப் பிடித்த மான வேலை தொடர்பான வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

இரு பெரும் பிரிவுகளாக எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் முதல் பிரிவில் கஷ்டப்பட்டு உழைப்பது குறித்த விஷயங்களும், இரண்டாவது பிரிவில் கடினமான வேலைகளை எப்படி எளிதாகச் செய்வது என்பது குறித்த விஷயங்களும் தரப்பட்டுள்ளன.

உறுதியான நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்...

‘‘இன்றைய இளைஞர் சமுதாயமானது குறிக்கோள்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏதாவது ஒரு குறிக்கோளுடன் தான் இன்றைய இளைஞர்கள் செயல்படுகிறார்கள். அது மட்டுமல்ல, மனசாட்சியின் கட்டுப்பாடு அதிக அளவில் கொண்ட சமுதாய மாகவும் இன்றைய இளைஞர் சமுதாயம் இருக்கிறது. எந்த மாதிரி ஒரு விஷயத்தை செய்கிறோம் என்பதைவிட, செய்யும் காரியத்தின் உபயோகம் மற்றும் நோக்கத்தை (purpose) அவர்கள் கருத்தில் கொண்டே ஒவ்வொரு வேலையையும் செய்கின்றனர். அவர்கள் செய்யும் எல்லா வேலைகளிலும் காரண காரியம் இன்றி செய்வ தில்லை என்றாலும், குறைந்தபட்சம் எங்கெல்லாம் முடிகிறதோ, அங்கெல்லாம் இதைச் செய்கின்றனர் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

இதில் நோக்கம் (purpose) என்கிற வார்த்தையை கூகுளில் தேடினால் இரண்டு விதமான அர்த்தங்கள் கிடைக்கின்றன. ‘ஒரு காரியத்தைச் செய்வதற்கான காரணம்’ என்பது ஓர் அர்த்தம். கூகுள் சொல்லும் இன்னொரு அர்த்தம், ‘ஒரு மனிதனின் உறுதியான நம்பிக்கை’ என்பது. எனவே, purpose என்பதை இலக்கு சம்பந்தப்பட்ட விஷயமாகவும், செயல்முறை சம்பந்தப்பட்ட விஷயமாகவும் வகைப்படுத்தலாம்’’ என்கிறார் புத்தகத்தின் ஆசிரியை.

பிழைப்பா, பிடித்தமானதா..?

வேலைக்குப் போய் ஷிஃப்ட்டுகளில் வேலை செய்து மாதாந்தர பில்களைச் செலுத்தி அன்றாட செலவுகளைச் செய்த பின்பு நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க நேரம் வேண்டும் என்று இன்றைய இளைஞர்கள் நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும். பிடித்ததைச் செய்ய வேண்டும் என்று ஏக்கப் பெரு மூச்சுவிடும் நாம், ஏன் தொடர்ந்து பிடிக்காத வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறோம்?

இந்த பிரச்னையைத் தவிர்க்க நம்முடைய பெற்றோர்களிடம் இருந்து சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் என்ன செய்தார்கள் என்று ஆராய்ந்தால், அவர்கள் பார்க்கும் வேலையில் அவர்களுக்குப் பிடித்ததைப் பிரியமுடன் செய்து வந்திருப்பார்கள். இதனாலேயே அவர்களுடைய பிழைப்பும் ஓடியது. அவர்களால் பிரியமானதையும் செய்ய முடிந்தது என்கிறார் புத்தகத்தின் ஆசிரியை.

கடினமான வேலையைச் 
சுலபமாக்கும் ஸ்மார்ட் வொர்க் சூட்சுமம்!

மாற்றத்துக்கான இரண்டு படிநிலைகள்...

சரி, இன்றைக்கு நீங்கள் இருக்கும் நிலையை நம்மால் மாற்ற முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் முடியும் என்பதே இந்தக் கேள்விக்கான பதில், இதற்கு நீங்கள் இரண்டு படிநிலைகளாகச் செயல்பட வேண்டியிருக்கும்.

முதல் படிநிலை: உங்களுடைய தற்போதைய சூழலைக் கொஞ்சம் கூர்ந்துநோக்கி ஆராய்வது. நீங்கள் மகிழ்ச்சியுடன் செய்யும் விஷயங்கள் (அதற்காக செலவிடும் நேரம்) என்னென்ன என்று பார்க்க வேண்டும்.

நீங்கள் செய்வதில் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் எது என்று சிந்திக்க ஆரம்பித்தவுடன் முதலில் உங்கள் நினைவுக்கு வருவது எது என்று பார்க்க வேண்டும். பணிபுரியும் இடத்தில் என்றைக்கெல்லாம் ஒரு நாளானது சந்தோஷமாக வேலை செய்து முடித்திருக்கிறோம், அப்படி சந்தோஷமாக வேலை செய்து முடித்த நாளில் நீங்கள் என்னென்ன விஷயங்களைச் செய்தீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். அல்லது, அலுவலகத்தை விட்டுக் கிளம்பும்போது என்றைக்கெல்லாம் அலுத்துக் களைத்து, எரிச்சலுடன், மன அமைதி கெட்டு இருந்தீர்கள், அந்த நாளில் உங்களை எது அந்த நிலைக்குக் கொண்டு வந்தது என்றும் யோசித்துப் பாருங்கள்.

இரண்டாவது படிநிலை: உங்களுக்கு இருக்கும் வேறு மாற்று ஆப்ஷன்கள் என்னென்ன? இப்போதிருக்கும் வேலையில் நீங்கள் மகிழ்ச்சியுடன் செய்யும் விஷயத்தை இன்னும் அதிகரிக்க முடியுமா என்று பார்ப்பது.

இதை எப்படி செய்வது என்பதற்குப் பின்வரும் விஷயங்கள் உதவிகரமாக இருக்கும். உங்களுடைய திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிகளை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மகிழ்ச்சியாகச் செய்யும் விஷயங்களில் அதிக அளவிலான பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி அதிக பொறுப்பை எடுத்துக்கொள்ளும் காலகட்டத்தின் ஆரம்ப நாள்களில் உடனடியாகக் கொஞ்சம் அதிக அளவிலான வேலைப்பளு இருக்கவே செய்யும். இந்தப் பொறுப்பை எடுத்த பின்னால் அதை உடனடியாக உதறிவிட முடியாது. அதனால் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்முன், அதை உங்களால் திறமையாகச் செய்து முடிக்க முடியுமா என்று தீவிரமாகச் சிந்தித்து முடிவெடுப்பது அவசிய மாகும்.

மேலே சொன்னவற்றைச் செய்த பின்னும், நீங்கள் உங்களுடைய திறனை முழுமையாக உங்கள் வேலையில் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை எனில், நீங்கள் அந்த நிறுவனத் தில் இருந்து விலகி வேறு நிறுவனத்தில் வேலைக்குச் சேர வேண்டியதுதான்’’ என்கிறார் புத்தகத்தின் ஆசிரியை.

ஸ்மார்ட்டாக வேலை செய்தால்...

நாம் அனைவருமே கட்டாயம் ஏதாவது ஒரு வேலையைப் பிழைப்புக்காக செய்தே ஆக வேண்டும். அந்த வேலையை நாம் எந்த அளவுக்கு ஸ்மார்ட்டாக செய்து முடிக்கிறோமோ, அந்தளவுக்கு நம்முடைய கரியரும் நன்றாக இருக்கும்.

ஸ்மார்ட் வொர்க் என்பது என்ன? அதிக அளவிலான திறமையைக் காட்டி, உற்பத்தித் திறனைப் பெருக்கி, பெரும் பயன் அடைவது. அப்படி என்றால், ஸ்மார்ட்டாக வேலை பார்த் தால், நமக்குப் பிடித்ததை செய்வதற்கு அதிக நேரம் கிடைக்கும் இல்லையா என்று நீங்கள் கேட்டால், அதுதான் இல்லை. ஸ்மார்ட் டாக வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றாலே நீங்கள் கஷ்டப் பட்டு வேலை பார்க்க வேண்டியது இல்லை என்பது கிடையாது. ஏனென்றால், ஸ்மார்ட்டாக வேலை பார்ப்பது கடினமான ஒன்றாகும். இதற்கு நீங்கள் உங்களைப் பற்றி முழுமை யாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, ஸ்மார்ட் டாக வேலை பார்க்க வேண்டும் என்றால், நீங்கள் செய்யும் விஷயங்கள் உங்களுக்குக் கட்டாயம் பிடித்த ஒன்றாக இருக்க வேண்டும்.

சரி, எப்படியோ ஸ்மார்ட் டாக வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டோம் என்று வைத்துக்கொள்வோம். அதன் பின்னால் வாழ்க்கை ஆட்டோ-பைலட் மோடில் சிக்கல் ஏதும் இல்லாமல் போக ஆரம்பித்துவிடுமா என்று வேண்டும் என்று கேட்டால், அதுதான் இல்லை. ஏனென்றால், நமக்குப் பதவி உயர்வு வேண்டும். நிறைய சம்பளம் வேண்டும். நிறைய சேமித்து சீக்கிரமே ரிட்டையர் ஆக வேண்டும் என்பது போன்ற குறிக்கோள்கள் வேறு இருக்கிறதே என்று கிண்டலாகக் கேட்கிறார் ஆசிரியை.

புரொடக்டிவிட்டி என்பது என்ன?

இதில் புரொடக்டிவிட்டி என்பது வெறுமனே வேலைகளைப் பட்டியலிட்டு வைத்துக்கொண்டு, அவற்றைச் செய்து முடிக்க முடிக்க டிக் அடிப்பது இல்லை. நாம் செய்யும் வேலையால் யாருக்காவது ஏதாவது பிரயோஜனம் உண்டா என்றெல்லாம் பார்க்காமல், வேலை முடிந்ததா, இல்லையா என்றே பார்க்கும் குணாதிசயம் மிகவும் மோசமானது. இது போன்ற வேலை முடிக்கும் நடைமுறையானது நமக்கு எந்தவிதமான நிஜமான முன்னேற்றத்தையும் தர வாய்ப்பில்லை. இதனாலேயே புரொடக்டிவிட்டி என்பது வேலையைப் பட்டியலிட்டு முடித்த பின்னால் ‘டிக்’ அடித்துவிட்டு, வீட்டுக்கு நிம்மதியாகக் கிளம்புவதல்ல என்கிறார் ஆசிரியை.

என்ன செய்ய வேண்டும்?

இந்த பிரச்னையை சரிசெய்ய நீங்கள் சரியான வேலைகளின் பட்டியலைக் கையில் வைத்திருக்க வேண்டும். அந்தப் பட்டியலில் இருக்கும் வேலைகள் உங்களுக்குப் பிடித்தமானதாகவும், நீண்ட நாள்கள் அடிப்படையில் உங்கள் கனவுகளை மெய்ப்பிக்க உதவுவதாகவும் இருக்க வேண்டும் என்கிறார்.

புரொடக்டிவிட்டி என்பதை ஒவ்வொருவருக்கும் தகுந்தாற்போல் மறுசீரமைப்பு செய்துகொள்வது எப்படி, நமக்குத் தேவையான எல்லாவற்றையும் ஒருங்கே பெறுவது எப்படி போன்றவற்றையெல்லாம் தனித்தனி அத்தியாயங்களில் விளக்கமாக இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பது சிறப்பான விஷயம் ஆகும்.

இந்தப் புத்தகம் கொஞ்சம் கடினமான நடையில் எழுதப்பட்டு இருந்தாலுமே இன்றைய இளைஞர்களுக்கு தேவையான மிகவும் அத்தியாவசியமான கருத்துகளையும் நடை முறைகளையும் இந்தப் புத்தகத்தில் விளக்க மாகச் சொல்லப்பட்டுள் ளதை மறுக்க முடியாது. முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் அனை வரும் இந்தப் புத்தகத்தை ஒரு முறை கட்டாயம் படித்து பயன் பெறலாம்.